இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 43 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 29-07-2024

Total Views: 525

"மாமா.... நிஜமா... என்னை மன்னிச்சிட்டியா...?" என கேட்டவளின் வாயிலேயே ஒன்று வைத்தான் இந்தர்.

"எத்தன தடவடி கேப்ப...?" என கேட்க.

"என்னமோ நீ எங்கிட்ட நல்லா பேசறத என்னாலயே நம்ப முடியல... கனவு மாதிரி இருக்கு...." என்க.

"நம்புடி... நான்தான் உன் மாமன் இப்ப உன் புருஷன்...." என அவன் கூற.

"மாமா... எனக்கு ஒரு ஆசை..." என அவள் கேட்க.

அவள் விரல்களில் முத்தமிட்டு கொண்டு இருந்தவன் தலை நிமிர்ந்து அவளை பார்க்க.

"உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா....?!" என கேட்டாள் அவள் குரலில் சற்று தயக்கம் இருக்க.

அவளை முறைத்தபடியே எழுந்தவன் கட்டிலில் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்து கொண்டான்.

"நான் உன் மடியில படுத்தேன் இல்ல.... உங்கிட்ட அனுமதி கேட்டனா...?" என கேட்க.

"இல்ல...." என்றாள் அவள்.

"நான் எந்த உரிமையல உன் மடியில படுத்தேன்....?" என அவன் மீண்டும் கேட்க.

"நான் உங்க பொண்டாட்டிங்கிற உரிமைல..." என்றாள் அவள்.

"அப்ப நீயும் அந்த மாதிரிதான உரிமையை எடுத்துக்கனும்...?!" என அவன் கேட்க.

அவன் மடியில் இருந்து எழுந்தவள் "இல்ல மாமா... நாம இன்னும் பழைய விஷயங்கள பத்தி பேசி சரி பண்ணிக்கல... அதும் இல்லாம எப்பவும் என்னை பார்த்தா திட்டிட்டே இருப்பீங்க... உங்களுக்கு என்மேல இருந்த கோபம் போய்டுச்சின்னு நான் எப்படி நம்பறது மாமா...?"  என அவள் கேட்டதில் அவளை மெய்மறந்து பார்த்தான் அவன்.

"இவ்ளோ பேசுவியாடி நீ...?" என கேட்க.

"ஏன்...?" என அவள் கேட்கும் முன் அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டிருந்தான்.

அவளோ கண்களை விரிக்க
அவள் இதழ்களை விடுவித்தவன் "முட்டக் கண்ணை வச்சு முழிக்காதடி... எத்தன கிலோ அரிசி கொட்டலாம் உன் கண்ணுல...?" என கேட்க.

"நீ இன்னும் மாறவே இல்ல மாமா...." என்றாள் அவள்.

அவளை மீண்டும் மடியில் கிடத்தியவன் அவள் புருவங்களை நீவிவிட்டான்.

"மாமா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல...?" என கேட்க. 

"அந்த பேச்ச விடு... நீ என்னை மறந்துட்டன்னு நான் நினைச்சேன்..." என அவள் கூற.

"அது என் உயிர் இருக்கவரைக்கும் நடக்காத காரியம்..." என்றான் அவன்.

அவன் மடியில் படுத்தபடி "வாய்லயே ஒன்னு வச்சா சரியாப்போகும் உனக்கு... இப்பதான் கொஞ்சம் நல்லா பேசற... இப்பகூட ஏன் இந்த மாதிரி அபசகுனமா பேசற...?" என அவள் கேட்க.

"சும்மாடி.. உன்னவிட்டு எங்க போவேன்...?" நான் என கேட்க.

"ஏன் அப்பறம் ஊருக்கு வரவே இல்ல... ஒவ்வொரு தடவையும் மாமா கார் வரும்போது... நீ வந்துருக்கியான்னு பார்த்துட்டு இருப்பேன்... தேடுவேன்... ஆனா இத்தன வருஷத்துல ஒருநாள் கூட நீ என் கண்ணுல படவே இல்ல தெரியுமா...?" என கேட்க.

"நான் வரலன்னு உனக்கு யாரு சொன்னா...?" என அவன் கேட்க.

வேகமாக அவன் மடியில் இருந்து எழுந்தவள்  "நீ என்ன சொல்ற சக்கரவர்த்தி மாமா... ஊருக்கு வரார்னு வாசு சொன்னா... நீ வந்து இருப்பியோ என்னவோன்னு அடிக்கடி வாசு வீட்டுக்கு வருவேன் தெரியுமா...?"என கேட்க.

"ஆமா.. வருவ.. ஆனா... உள்ள வர மாட்ட.. மாடியில இருக்கனா இல்லையான்னு பார்த்துட்டு... அப்படியே மேடம் திரும்பி போய்டுவீங்க.. அப்படித்தான...?" என அவன் கேட்க.

"அது எப்படி உனக்கு தெரியும் நான் இங்க வந்து உள்ள வராம போறது...?" என அவள் கேட்க.

"ம்ம்ம்ம்.... பார்த்துருக்கேன்...." என்றான் அவன்.

"அப்ப என்னை அலைய விடறதுல உனக்கு ஒரு சந்தோஷம் இல்லையா...?" என அவள் கேட்க.

"ஆமாடி.. என் அழகி..." என அவள் கன்னத்தை பிடித்து கிள்ளியவன் மீண்டும் மடியில் படுக்க வைத்து கொண்டே "நான் அடிக்கடி வரல ஒரு ரெண்டு மூணுதடவ வந்துருக்கேன் அவ்ளோதான்... அப்போதான் நீ என்ன தேடறது தெரிஞ்சிது..." என அவன் முடிக்க.

"என்ன தவிக்கவிட்டு பாக்கறதுல அப்படி என்ன உனக்கு சந்தோஷம்...?" என அவள் கேட்க.

"அப்படி இல்ல நான் மட்டும் ஆசை வளர்த்துக்கிட்டா எப்படி... உன் மனசுலயும் என்ன இருக்குன்னு எனக்கு தெரியனும் இல்ல அதான்..." என அவன் முடிக்க.

"நான் உன்ன தேடறது பார்த்து... நீ ரசிச்சியா...?" என அவள் கேட்கும் போதே குரல் கமறி கண்ணில் கண்ணீர் திரள.

"ஏய்.. லூசு...பைத்தியமாடி... நீ.. உன்ன அழ வச்சிட்டு நான் மட்டும் எப்படி சந்தோஷமா இருப்பேன்... நீ என்ன தேடும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா... அதை வார்த்தைல சொல்ல முடியாது.. அருவி.... அனுபவிக்கனும்... நாம ஒருத்தர காதலிக்கிறோம் அப்டிங்கிறதவிட...காதலிக்கப்  படறோம்ங்கிறது ஒருவிதமான ஃபீல்டி... உனக்கு சொன்னா புரியாது..." என்றான் அவன்.

"போ... நீ சொல்றது எதும் புரியல... ஆனா நீ என்ன மனசுக்குள்ள இம்புட்டு ஆழமா வச்சிருப்பேன்னு நான் சத்தியமா நினைச்சு பாக்கல... எவ்ளோ சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கு தெரியுமா... இப்படியே செத்துட்டாகூட சந்தோஷமா இருக்கும்...."என அவள் முடிக்க.

"ஓங்கி அறைஞ்சா பல்லெல்லாம் கொட்டிடும் பார்த்துக்க... இப்பதான் கொஞ்சம் சரி ஆகி இருக்கோம்... அதுக்குள்ள என்ன வார்த்தை பேசற உனக்கு வாய் அதிகம்டி அருவி..." என்க.

"இல்ல மாமா இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு...." என்க.

அவன் மடியில் படுத்திருந்த அவள் முகத்தை திருப்பி அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் அவள் இதழில் முத்தமிட்டவன் "நம்புடி... நான் உன் மாமன்தான்... நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு... இப்ப உன் பக்கத்துலதான் இருக்கேன்..." என்க.

அவனை பார்த்து சிரித்தாள்.

அந்த சிரிப்பில் அவள் இத்தனை நாட்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும் காற்றாய் பறந்ததுபோல இருந்தது.

வாசுவின் அறை

சுசிலா இன்னும் மயக்கத்தில் இருந்தாள்.

அவளின் தந்தையை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது அவனுக்கும் சக்கரவர்த்தி மற்றும் தர்மனுக்கும்.

"நாங்க இந்த ஊரவிட்டே போயிடுறோம்... எனக்கு என் பொண்ணு உயிருதான் முக்கியம்..." என திரும்ப திரும்ப கூறிய வேலுவை பார்த்து சக்கரவர்த்திக்கு கோபம் வர "வாய மூடு வேலு... இவ்ளோ ரிஸ்க் எடுத்து உன் பொண்ண காப்பாத்தி இருக்கிறது.... அவ உயிர மட்டும் காப்பாத்த இல்ல.... இந்த ஊரு மக்களோட நிம்மதிக்காகவும்தான்.... என்ன நினைச்சிட்டு பேசிட்டு இருக்க... நீயும் எங்க கூடவே சின்ன வயசுல இருந்து வளர்ந்தவன்தான... ஏன் உனக்கு அந்த வஜ்ரவேலுவ பத்தி தெரியாதா இல்லை... அவன் ஏன் இன்னும் என்ன உயிரோட விட்டு வச்சிருக்கான்னு தெரியாதா... கோவில்ல இருக்க புதையல மட்டும் எடுத்துட்டா... அவன் சுலபமா என்னையும் என் வம்சத்தையும் அழிச்சிடுவான்... நாங்கதான் சண்டை சண்டைன்னு காலத்தை ஓட்டிட்டோம்... எங்களுக்கு அடுத்து வர இளம் தலைமுறை பசங்களாவது சந்தோஷமா இருக்கனும்னு நான் என்னென்ன செஞ்சிட்டு இருக்கேன்னு தெரியுமா... ஏன் இப்படி கோழையாட்டம் பயந்து ஊரவிட்டு ஓடறேன்னு சொல்ற... சரி இந்த ஊர்ல ஒரு பிரச்சனை அதனால வேற ஊருக்கு போறேன்னு சொல்ற நீ போற அந்த ஊருலயும் ஏதாவது பிரச்சனைன்னா.... அடுத்த ஊருன்னு இப்படியே போய்ட்டே இருப்பியா....?" என கேட்க.

"இல்லைங்க ஐயா... என் உசிரே என் பிள்ளைங்க அவங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா... என்னால தாங்க முடியாது... மன்னிச்சிடுங்கய்யா... நான் கொஞ்சம் சுயநலமா யோசிச்சிட்டேன்... புள்ளைய  இப்படி பாக்கவும் மனசு பதறிடுச்சு...." என்க.

"உன் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது... வாசு அவள உயிரா விரும்பறான்...அவள உன்னைவிட கண்ணுல வச்சு பார்த்துப்பான்... அதுக்கு நான் பொறுப்பு..." என்க.

"ஐயா... நீங்க சொல்றது எனக்கு புரியல... அப்ப அந்த மகிழா புள்ள வாழ்க்கை என்ன ஆகறது.... அந்த புள்ளையும் என் புள்ள மாதிரிதானுங்க... அப்பா... அப்பான்னு... என் பின்னாடி சுத்திட்டு இருக்கும்... சின்ன புள்ளைல இருந்து... அது வாழ்க்கைய கெடுத்துதான் என் புள்ளைக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும்னா... அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எம்புள்ளைக்கு தேவையில்லைங்க..." என முடிக்க.

"வேலு... அவசரப்பட்டு வார்த்தைய விடாத... நீ நினைக்கிற மாதிரி அந்த மகிழா ஒன்னும் அவ்வளவு நல்லவ இல்ல... அவ இந்த ஊரையும் இந்த குடும்பத்தையும் பழி வாங்க வந்தவ...அது தெரிஞ்சே எப்படி நாங்க சும்மா இருப்போம் சொல்லு... இதுல தெரிஞ்சே என் பையன வாழ்க்கைய எப்படி நாங்களே கெடுப்போம் சொல்லு...." என தர்மன் கேட்க.

"சாமி நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலயே...?" என அவர் கூற.

"இப்போ சொல்றதுக்கு நேரம் இல்ல... கூடிய சீக்கிரமே உனக்கு எல்லாம் தெரிய வரும்... ஆனா ஒருவிஷயம் நினைவுல வச்சிக்க... இந்த வீட்டு மருமகளுங்கன்னா... அது அருவியும் சுசிலாவும்தான்... ஒருநாளும் அந்த குடி கெடுத்தவன் பொண்ணு எங்க வீட்டு மருமகளா ஆக முடியாது... நீயே இந்த கல்யாணம் வேணாம்னு தடுத்தாலும்...இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்....என கூறியதை நினைத்து இதழோரம் புன்னைத்து கொண்டான் வாசு......



Leave a comment


Comments


Related Post