Total Views: 354
அத்தியாயம் 46
"மச்சான்... நீ என்ன பன்ற ஐடியால இருக்க...?"என காளியம்மாவின் தந்தை கேட்க.
"ம்ம்ம்ம்... அத நான் செய்யும்போது நீயே பார்த்துக்க... இப்போதைக்கு எனக்கு உன் ஊருல தங்க இடம் அவ்ளோதான்..." என்றான் ராசாங்கம்.
"உனக்கு இன்னும் விநாயகம் பத்தி தெரியல... சின்னதா ஒரு சந்தேகம் வந்தாலும் கைல ஒரு தடி வச்சி இருக்கானே அதுலயே போட்டுடுவான்..." என்க.
"அதையும் பார்த்துடலாம்.. எனக்கு எப்பவுமே அவன் மேல உன் ஊரு மக்க கொடுக்கற மரியாதைய பார்த்து ஒரு இது...." என்க.
"ம்ம்ம்... எனக்கும்தான்... அவன் அளவுக்கு நானும்தான் சொத்து வச்சிருக்கேன்... ஆனா... ஊருல அவனுக்கு இருக்க மரியாத எனக்கு இல்ல அது என்ன ரொம்பவே வதைக்கிற விஷயமா இருக்கு..." என்க.
"விடு மச்சான்... அதான் நான் வரேன் இல்ல... இனி அவனுக்கு எறங்கு முகம்தான்... என்றவன் ஆமா... உம்ம சம்சாரம் என்ன சொன்னாக..." என கேட்க.
"அது என்ன உன் சம்சாரம் முறைக்கு உமக்கு தங்கச்சிதான..." என கேட்க.
"ஆமா...இல்ல அந்த விநாயகத்தோட ரத்தம்தான... அதான் நீ பன்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்றாகளா...?" என கேட்க.
"அவகிட்ட நான் எதும் சொல்றது இல்ல..." என்றான் அவன்.
"அது இருக்கட்டும்... உம்ம பொண்ண அந்த சக்கரவர்த்தி பயலுக்கு பேசி இருக்கிறீரு... அப்பறம் என் பையனுக்கும் தரேன்னு சொல்றீரு... ஒத்த பொண்ண ஆளுக்கு பாதியா பிச்சு தருவீகளோ...?!" என கேட்க.
"யோவ்... வாய மூடுயா... அவ உன் பையன் வஜ்ரனுக்குத்தான்... அந்த விநாயகம் போய்ட்டானா... அந்த குடும்பமே ஒன்னும் இல்லாம போய்டும்... இதுல எங்க நான் அவன் பையனுக்கு கொடுக்கறது... என் பொண்டாட்டி வாய அடைக்கறதுக்கும்... விநாயகத்தோட சம்பந்தின்னு ஊருல கிடைக்கிற மரியாதைக்காகவும்தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்... இல்லன்னா... நான் ஏன் இதுக்கு ஒத்துக்க போறேன் இங்க பாரும்யா... நான் எப்படினாலும் என் பொண்ண தங்கமாட்டம் வளக்கறேன்... உம்ம பையன் ஒழுங்கா பாத்துக்கல... அப்பறம்...இந்த கைலாசத்தோட வேற முகத்த நீ பார்ப்ப..." என்க.
"அதெல்லாம் நான் அவன சரி பண்ணிடுவேன்... நீரு முதல்ல உம்ம மகள சரி பண்ணும்... பாக்கற நேரம்லாம் அந்த அன்னத்தோடதான் சுத்திட்டு இருக்கு... அப்படியே அந்த அன்னபூரணி அவ மவனுக்கு இழுத்து போட்டற போறா... நீரூ வேறு அந்த விநாயகத்துக்கூட சம்பந்தம் பேசி இருக்கிறீரு...." என்க.
"யோவ் ராசாங்கம்... யார பத்தி என்ன வேணா சொல்லு... ஆனா எம்மவள பத்தி ஏதாச்சும் சொன்னீரு... ஒரே சீவுதான்..." என்க.
"இப்ப எதுக்கு இந்த பேச்சு... விடும் நேரம் வரும் போது பேசிக்கிடுவோம்..."என்க.
"ம்ம்ம்..." என்ற கைலாசம் "ஆமா... உம்ம மவன் எங்க இப்போல்லாம் இங்கன வரதே இல்லையே...?" என கேட்க.
"அதுவா.. ஏதோ இன்னைக்கு வெளியூருக்கு விளையாட போகனும்னு சொல்லிட்டு இருந்தான்..." என அவன் கூறி கொண்டு இருந்த நேரத்தில் இரண்டு ஊர் தள்ளி இருக்கும் ஒரு இடத்தில் சக்கரவர்த்தியும் வஜ்ரவேலுவும் சண்டை போட்டு மண்ணில் உருண்டு பொரண்டு கொண்டிருந்தனர்.
அது ஒரு பழைய கால கட்டிடம் போல இருக்க அங்கு இருந்த கிரவுண்ட்டில் இரண்டுபேர் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தனர்.
சுற்றிலும் மாணவர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்ததே தவிர அடித்துக் கொள்ளும் அவர்களை தடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது.
மாணவர்கள் வெள்ளை சட்டை காக்கி பேண்டிலும் மாணவிகள் ஊதா நிற தாவணியிலும் இருந்தனர்.
அடித்துக் கொள்ளும் இருவரின் சட்டைகளும் ஒரு பக்கமாக கிழிந்து தொங்கியது.
ஒரு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஒருவன் பத்தாம் வகுப்பு இருக்கும் இப்போதுதான் அரும்பு மீசை துளிர்விட ஆரம்பித்து இருந்தது.
வகுப்பறையில் இருந்து வெளியேறிய அவனை தேடி இரண்டு பேர் ஓடிவருவதை பார்த்து, "ஏலே... எதுக்கும்ல இப்படி ஓடிவருறீரு என்ன விஷயம்..?" என கேட்க.
அவன் முன்னால் மூச்சு வாங்கியபடி நின்றிருந்த இருவரும், "தர்மா... உன் அண்ணனும்... அந்த வஜ்ரம் பயலும் கிரவுண்ட்ல அடிச்சிக்கிடுறானுக..." என மூச்சிறைக்க கூற கையில் வைத்திருந்த புத்தகத்தை கீழே வீசிவிட்டு மைதானத்தை நோக்கி ஓடினான் தர்மன்.
வேகமாக ஓடி வந்தவன் கூட்டத்தை விலக்கிவிட்டு அடித்துக் கொள்ளும் இருவரிடமும் ஓடியவன் இருவரையும் பிடித்து தனித்தனியாக இழுக்க முற்பட இருவரும் பயங்கர ஆங்காரத்தில் இருந்ததால் அவனை தள்ளிவிட்டனர்.
மீண்டும் அவர்களை நோக்கி எழுந்து ஓடியவன் அவர்களுக்கு இடையில் மாட்டியதால் அவனுக்கும் இரண்டு அடிகள் கிடைத்தது.
தர்மன் இருவரிடமும் தனியாக போராடுவதை பார்த்த மற்ற மாணவர்கள் "ஏலே.. வாங்கல தர்மன் மட்டும் தனியா போராடுறான்... இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சே செத்துடுவானுக..." என கூறிவிட்டு அவர்களை நோக்கி ஓடியவர்கள் இரண்டு பேரையும் போராடி பிடித்து தள்ளிவிட்டனர்.
தர்மன் கோபமாக எழுந்தவன் வேகமாக தன் தமையனிடம் சென்று அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தான்.
அவனை எரிமலையாக பார்த்தான் சக்கரவர்த்தி.
"ஏம்ல நீ இப்படி இருக்க... உமக்கு எத்தன தடவ சொல்றது... யாருகூடவும் சண்டை போடாதன்னு... உன் மொரட்டு குணத்த எப்பத்தான் விடுவீரோ தெரியல... உம்மாலதான் அம்மையும் ஐயாவும் நிதமும் சண்டை போட்டுக்கிறாக..."என்க.
"வாய மூடும்ல... அவன் என்ன பண்ணான்னு தெரியுமா...?!" என கேட்க.
"அவன் என்ன வேணா பண்ணட்டும்ல... அத கேட்க பள்ளிக்கூடத்துல வாத்தியாருங்க இருக்காங்க... நீரு ஏம்ல அவன அடிக்கிற... இப்ப.. உடனே ஐயாவுக்கு செய்தி கொடுத்துடுவாக... உன்ன பள்ளிக்கூடத்துல இனி சேர்த்துக்க மாட்டாக..." என்க.
"நீ அமைதியா இரும்... ஏலே..." என அங்கு கோபமாக நின்றிருந்த வஜ்ரத்தை அழைக்க அவனோ சக்கரவர்த்தியை கொலை செய்யும் நோக்கோடு பார்த்துக் கொண்டு இருக்க "இன்னொரு தடவ அந்த புள்ளைக மேல தப்பா பட்டுச்சு பாக்க கண்ணு இருக்காது..." என்க.
"இதுக்கு நீ ரொம்ப அனுபவிப்பல..." என்க.
"போல உன்ன மாதிரி பொம்பள பொறுக்கி இல்லல... எனக்கு எதும் ஆகாது... நீ ஒழுங்கா இருக்க வழிய பாரும்..." என்க.
"அவள சொன்னா உமக்கு ஏம்ல பொத்துக்கிட்டு வருது... அவ என் மாமன் பொண்ணு... நான்தான் அவள கட்டிக்க போறவன்... நீ யாருல ஊடால...?" என்க.
"என்ன சொன்ன...?" என சக்கரவர்த்தி கேட்டான் கண்களிலும் வார்த்தையுலும்தான் எத்தனை ஆத்திரம் என அவனுக்கே தெரியாது.
"வேணா... சக்கர... ஐயாவுக்கு தெரிஞ்சா உன்ன பொலி போட்டுருவாரு..." என தர்மன் அவனை தடுக்க "ஏலே... விடும்ல மறுக்கா சொல்லு..." என மீண்டும் வஜ்ரத்தை கேட்க.
"ஏய்... ஒருதடவ என்னல... நூறு முற சொல்லுவேன்... அந்த காளி எம் மாமன் மவ... அவள எனக்குத்தான் பரிசம் போட்டுருக்காவ... எவனாவது அவள ஒரச நெனச்சா சங்க அறுத்துடுவேன்..." என்க.
பிடித்துக்கொண்டு இருந்தவர்களை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அவனை நெஞ்சிலே எட்டி உதைத்தான்.
பத்தடி தாண்டிப்போய் விழுந்தான் வஜ்ரம்.
"ஏய் காளி...." என அழைக்க அவளோ கூட்டத்தில் மறைந்து அழுது கொண்டிருந்தவள் மெல்ல வெளியே வந்தாள்.
"என்னட்டி சொல்றான் அவன்...?" என கேட்க.
அவனை பார்த்து பயந்தவள் வாய் திறக்காமல் நின்றிருந்தாள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்ட.
"சொல்லுட்டின்னு சொல்றேன் இல்ல..." என அவன் மீண்டும் கத்த அவன் குரலில் உடல் நடுங்கியவள் அப்படியே மடங்கி அமர்ந்து கொண்டு முகத்தை மூடியபடி அழ ஆரம்பிக்க.
"அவள ஏம்ல கேக்கற... நீ வா..." என தர்மன் அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
"விடும்ல... என அவன் திமிர "நீ இப்ப அமைதியா இருக்கல... நான் உங்கிட்ட எப்பவும் பேச மாட்டேன்ல..."என தர்மன் கூற அதன்பிறகே சக்கரவர்த்தி அமைதியானான்.
அதற்குள் பள்ளி முதல்வர் வந்து அத்தனை பேரையும் திட்டி நாளை பெற்றோர்களுடன் வர வேண்டும் என கத்திவிட்டு சென்றார்.
"இது உமக்கு தேவையால... ஏன் எப்பவும் அந்த சக்கர பய கூட வம்புழுத்துக்கிட்டே இருக்க... நீங்க ரெண்டு பேரும் உறவு முறைன்னு கேள்விப்பட்டோம்..." என்க.
"அவன் அப்பன் என் அப்பாவுக்கு எதிரில... அவன் எனக்கு எதிரி... என் மாமன் மவ காளி மேல... சின்னவயசுல இருந்து எமக்கு ஆசை... இடையல இவன் பூந்து அவ மனச கலைக்க பார்த்தா... நான் சும்மா விட்டுருவேனால...?" என்க.
"ஆனா... அவன் நல்லா படிக்கிறவன்... ஊருல அவன் அப்பா பெரிய ஆளு...அவங்கள மீறி உம்மால ஒன்னும் பண்ண முடியாது தெரியாதா...?!" என்க.
"வாய மூடும்ல... இன்னொருவாட்டி அவனப்பத்தி எங்கிட்ட பெருமையா பேசாதீரும்... கொரவலைய புடிச்சு கடிச்சுடுவேன்... என்னப்பபத்தி இன்னும் அவனுக்கு தெரியல... என் வழியில அடிக்கடி குறுக்க வரான்... அவன் குடும்பத்தையே ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்..." என்க.
"நீ அடங்கமாட்டல... நாங்க போறோம்..." என்றுவிட்டு மற்றவர்கள் கிளம்பிவிட அங்கு இருந்த மரத்தடியில் அவனும் அப்படியே அமர்ந்தான் சக்கரையிடம் அடிவாங்கியது வலி உயிர் போனது இதுக்கு நீ பதில் சொல்லனும்டா சக்கர என அவன்மீது வஞ்சம் கொண்டான் வஜ்ரம்.
தர்மனும் சக்கரையும் வீடு வந்து சேர அதற்குள் தகவல் விநாயகத்திற்கு பரிமாறப்பட்டு இருந்தது.
தனது பெல்ட்டால் அடி விளாசி தள்ளிவிட்டார் விநாயகம்...