இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 50 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 02-09-2024

Total Views: 617

அத்தியாயம் 50

வாசலில் சைக்கிள் சத்தம் கேட்டதும் உள்ளே இருந்து வேகமாக ஓடி வந்தார் அன்னபூரணி.

முகம் அழுது அழுது வீங்கி இருக்க வாசல்படியில் நின்று தன் மூத்த மகனை காண அவனோ சைக்கிளை நிறுத்திக்கொண்டு இருந்தான்,அருகில் தர்மன் நின்றிருக்க அவனை பார்த்ததும் இன்னும் அழுகை அதிகம் ஆனது பின்னே சொன்னமாதிரியே அவன் தமையனை அழைத்து வந்துவிட்டானே என்ற மகிழ்ச்சியில் வந்த கண்ணீர்.

"ராசா...." என என அன்னம் அழைக்க குரலை கேட்டு நிமிர்ந்தவனின் கண்களில் கண்ணீர் தழும்ப மிகவும் முயன்று அதை உள்ளிழுத்துக் கொண்டான்.

"அம்மா... ஏன் முகமெல்லாம் வீங்கி இருக்கு...?" என கேட்க.

அவன் அருகே ஓடியவர் அவன்  கைக்கால்கள் என அனைத்தையும் மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இப்போது கன்னத்தை தடவியவர் "அம்மா மேல கோபமாயா...?" என கேட்க.

"எதுக்கும்மா...?" என அவன் கேட்க.

"உன் ஐயா உன்ன அடிக்கும்போது நான் தடுக்கலயே...?" என கூற.

"அதவிடுங்கம்மா.... ரொம்ப பசிக்குது.... என்ன சமைச்சு இருக்கீங்க...?"என கேட்க.

"ஐயோ ராசா பசியிலயா இருந்தீரு....இதோ ஒரு நிமிஷம்யா உனக்கு பிடிக்கும்னு... வஞ்சிரம் மீனு காலையில வாங்கிட்டு வந்தாரு உன் ஐயா.... உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருந்தேன்.... அதுக்குள்ள என்னென்னமோ நடந்துட்டு... சரி.. வாயா... போய் மொகம் அலம்பிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..." என்றவர் "சின்னவரே..நீயும் போய் அண்ணன்கூட மொகம் அலம்பிட்டு வாயா..." என்றவாறு தன் பின் கொசுவத்தை இழுத்து சொருகிக் கொண்டு உள்ளே ஓடினார்.

வாசலில் நடக்கும் கூத்தை கண்டும் காணாமலும் சாய்வு நாற்காலியில் கண்களை மூடிய வண்ணம் அமர்ந்து இருத்தார்.

அவருக்கு முன்னமே தெரியும் தர்மன் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அத்தனை சீக்கிரம் முடிக்காமல்விட மாட்டான் என.

எங்கு சுற்றினும் திரும்பி வரும்போது தன் தமையனோடுதான் வருவான் என.

எனவே அவன் அந்தப்பக்கம் கிளம்பியதும் இந்தப்பக்கம் அவரது ஆள் ஒருவரை அவனை பின் தொடர அனுப்பிவிட்டார்.

அவரும் அவனை தொடர்ந்து வந்து ஐயனார் கோவிலில் இருவரையும் கண்டதையும் தகவல் கூறிவிட இப்போதுதான் சற்று மனநிம்மதியாக இருந்தது.

எனவே சற்று நேரம் கண்களை மூடலாம் என மூடியிருந்தார்.

உள்ளே சென்றவன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் பின்னால் தர்மனும் சென்றான்.

கைக்கால்களை அலம்பிவிட்டு இருவரும் நடுக்கூடத்தில் வந்து அமர அவர்களுக்கு தட்டினை எடுத்து வைத்தவர் "டேய்...சின்னவனே...உன் ஐயாவையும் கூப்டுடா..." என்க.

அவனோ அவரை திரும்பி பார்த்தவன் "நீங்க அப்பறமா சாப்புடுங்க... பசிக்குது... சாப்பாட்ட போடுங்க..." என்க.

அவரையும் இவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உணவு பரிமாற ஆரம்பித்தார்.

சக்கரவர்த்தி உண்ணுவதை ஆசையாக பார்த்தார் அன்னம்.

"ஏம்மா அப்படி பாக்குறீங்க..." என தர்மன் கேட்க.

"உன் அண்ணன நினைச்சு... உன் ஐயா... பெரிய கனவெல்லாம் கண்டு வச்சிருக்காவ...." என்க.

  வாய்க்கு அருகில் சென்ற சக்கரவர்த்தியின் கரம் அந்தரத்தில் தொங்கியது. 

அவன் தலையை வருடியவர் "கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தையே இல்லாம இருந்த நாங்க போகாத கோவில் இல்ல.. பாக்காத ஜோசியம் இல்ல... பண்ணாத வேண்டுதல்  இல்ல... பத்து வருஷம் கழிச்சுதான் உன் அண்ணன் பிறந்தான்... நாங்க அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே கிடையாது... இந்த ஊரே அவங்களுக்கு ஒரு தலைவன் பொறந்துட்டான்னு கொண்டாடினாங்க... அப்போ இருந்து இப்போ வரைக்கும் உன் அண்ணனா ஒரு மரியாத இந்த ஊருல... உங்க ஐயாருக்கு அப்பறம் இந்த ஊர பாதுகாக்க போறது உன் அண்ணன்னுதான் எல்லோருமே நம்புனாங்க... இப்போ வரைக்கும் நம்பறாங்க... ஏன் சொல்லு...?!" என கேட்க.

"உன் அண்ணன் அந்த பெருமாளோட நட்சத்திரத்துல பிறந்தவன்... இந்த உலகையே காக்கற கடவுள் அவரு... அப்பறம்... உங்க ஐயாமேல அவங்களுக்கு இருந்த மரியாதைதான் காரணம்...."

"இந்த வீட்டுக்கு வந்த யாரும் பசியா போயிருக்க மாட்டாங்க... உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல... இந்த ஊருல உங்க ஐயாவுக்கு இருக்க மரியாதைய நீங்களே கண்ணால பாத்து இருக்கீங்க... அப்படிபட்டவரு பையன் தினமும் யார் கூடவாச்சும் சண்டை போட்டுட்டு இருந்தா... உங்க ஐயாவோட மரியாத என்ன ஆகறது... இந்த குடும்பத்தோட கவுரவம் என்ன ஆகறது... இந்த ஊர் மக்கள் பெரியவரு மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா... அவரு பொறந்த உடனே அவங்களுக்கான தலைவர் பொறந்து இருக்காருன்னு கொண்டாடி இருப்பாங்க... அது இப்ப இல்லன்னு தெரிஞ்சா அவங்க எல்லோரும் என்ன நினைப்பாங்க... இதெல்லாம் ஏன் பெரியரு யோசிக்கல..." என தர்மனை பார்த்து கேட்க.

அவனோ உணவை உண்டு கொண்டே தாயையும் தன் தமையனையும் பார்த்தான்.

இது அனைத்தையும் கேட்டபடி இருந்தாலும் அப்பா மகன் இருவரும் எதுவுமே கூறவில்லை.

"பெரியவரே..." என அழைக்க அவனோ நிமிர்ந்து தன் தாயை பார்க்க.

"இந்த ஊரோட எதிர்காலம் நீ... உன் ஐயாவுக்கு அப்பறம் நீ இந்த ஊர கட்டிக்காப்பாத்த போற அடுத்த தலைமுறை நீதான்... அதும் இல்லாம உன் ஐயா உன்னையும் உன் தம்பியையும் நம்பி பெரிய பொறுப்பு ஒன்னு வச்சிருக்காரு... உன் படிப்பு முடியவும் அத உங்கக்கிட்ட சொல்லுவாரு... அதுக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரோட நல்லது கெட்டதுல முன்ன நிக்கனும்னு அவரு நினைக்கிறாரு.... உங்களுக்கான வேர் தொடங்கின இடம் இந்த பூமி இதுல எந்த கெட்டதுக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் ஏன் நயவஞ்சகத்துக்கும் இடம் இருக்காது... இருக்கவும் கூடாது...." என ஒரு பெரிய பிரசங்கத்தையே நடத்தி முடிக்க இருவருக்கும் ஒன்றுமட்டும் நன்றாக புரிந்தது  தங்களால் ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டும் என புரிந்தது.

தங்களுக்கு தெரியாமல் என்ன ரகசியம் இந்த ஊருல இருக்கும் என யோசித்தபடி உண்டுவிட்டு உறங்க சென்று உடனே உறங்கியும் விட்டனர்.

அவர்கள் உறங்கியதும் அவர்களது அறைக்கு சென்ற விநாயகம் கள்ளங்கபடம் இல்லாமல் உறங்கிக்கொண்டு இருக்கும் தன் புதல்வர்களை பார்த்தவர் இவர்களுக்கான சோதனை காலம் இனிதான் ஆரம்பம் என நினைத்துக் கொண்டார்.

அன்னபூரணி கூறிய நம்பிக்கை, நயவஞ்சகம் போன்றவற்றால் தங்கள் பெற்றோர்களை இழக்க போகிறோம் என அறியாமல் இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அடுத்த நாளே தங்களுக்கான எமன் பெட்டி படுக்கையோடு வந்து சேர்ந்தான் அந்த ஊருக்கு.

அடுத்த நாள் செவ்வனே விடிய எப்போதும்போல கிளம்பி பள்ளிக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக காளி இனி பள்ளிக்கு வர மாட்டாள் என்ற செய்தி கிடைக்க உள்ளுக்குள் நொறுங்கி போனான் சக்கரவர்த்தி.

தர்மன் கூறிய ஆறுதல் மொழிகள் எதுவும் எடுபடவில்லை.

வீட்டுக்கு வந்து தாயிடம் கூறினால் தாயும் இன்னைக்கு கோவிலுக்கு போக அவள் வரவில்லை என்று கூற ஏதோ பிரச்சனை என்றுமட்டும் புரிந்தது அவர்களுக்கு.

இதற்கு இடையில் ராசாங்கம் குடும்பத்தோடு வந்து இறங்கி இருக்க தங்கள் குடும்பத்திற்கான எமன் என தெரியாமல் அவனை அழைத்து விருந்தோம்பி அவனுக்கு ஒரு வீட்டையும் தயார் செய்து கொடுத்தார் விநாயகம்.

யாரையும் எளிதில் எடைபோடும் அவர் ராசாங்கத்தின் நடிப்பில் ஏமாந்து போனார் என்றுதான் வேண்டும்.

அடுத்த நாளே பிரச்சனையை கிளப்பி இருந்தான் ராசாங்கம் மறைமுகமாக கைலாசமும் அவனுக்கு சப்போர்ட் செய்ய முதன் முறையாக என்ன முடிவெடுப்பது என தெரியாமல் தடுமாறி நின்றார் விநாயகம்.


Leave a comment


Comments


Related Post