Total Views: 241
அத்தியாயம் 55
"வேணாங்க... இது பாவம்.... உங்கக்கூட இத்தன வருஷம் குடும்பம் நடத்தி இருக்கேன் ஆனா உங்களோட இந்த குணம் எனக்கு தெரியாமையே போய்டுச்சு.... விநாயகம் அண்ணா நமக்கு எத்தனையோ உதவி செஞ்சிருக்காரு... ஏன்...உங்க அப்பா முடியாம கெடந்தப்ப அவருதான நமக்கு பண உதவி செஞ்சி காப்பாத்தினாரு அதெல்லாம் மறந்துடுச்சா...?" என காளியின் தந்தை கேட்க.
"ஆமாம்பா... இப்படி பண்ணாதீங்க... உங்கள பாக்கவும் நீங்க பேசறத கேக்கவும் பயமா இருக்குப்பா...." என காளியும் கூற "ச்சீ... வாய மூடுங்க.. ரெண்டு பேரும் டேய்..." என கத்த மேலும் இருவர் ஓடி வந்தனர்.
"இவளுங்கள அந்த அறைக்குள்ள போட்டு மூடுங்க... எல்லாத்தையும் முடிச்ச பிறகு வெளிய அழைச்சிக்கலாம்...." என்றவர் "தொரைய புடிங்கடா... இளங்காளை வேற... ரொம்ப துள்ளும்...."என சக்கரவர்த்தியை காட்ட மூவர் வந்து அவனை பிடிக்க முற்பட அவர்கள் மூவரையும் பிடித்து தள்ளியவன் அங்கிருந்து ஓட எத்தனிக்கும் வேளையிலும் திரும்பி தன் உயிரானவளை பார்த்தான்.
"நீ போய் அத்தையும் மாமாவையும் காப்பாத்து மாமா...." என அவள் கூறியதும் கைலாசத்திற்கு வந்த கோபத்தில் "அவள என் கண்ணு முன்னாடியே காட்டாதீங்கடா இழுத்துட்டு போங்க...." என கத்த.
அவனின் அடியாட்களும் அவன் கூறியது போலவே செய்தனர்.
அப்போது வெளியில இருந்து இன்னொருவன் ஒரு வெள்ளை நிற கேனோடு வந்தான்.
"ஐயா... நீங்க சொன்ன மாதிரியே இவனுக வயலுல எல்லாமே கஞ்சா செடிய பதுக்கி வச்சிட்டேன்.... சாராயத்தையும் அவங்க தோப்பு வீட்டுக்குள்ள போட்டு மூடிட்டேன்....அடுத்து என்ன பண்ணனும்...?" என கேட்க.
"ம்ம்ம்ம்... இந்த தொரைக்கு நாம காய்ச்சின சாராயத்துல கொஞ்சம் ஊத்திவிட்டுட்டு அப்படியே அந்த கஞ்சாவும் போட்டுவிடுங்க..."என்க.
ராசாங்கமோ "சரியா சொன்னீங்க மச்சான்..."என கைத்தட்ட.
"ம்ம்ம்ம்... கொஞ்சம் அமைதியா இரும்... காரியம் முடியற வரைக்கும் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்கக்கூடாது...." என்க.
"நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம் மச்சான்..." என்க.
"ம்ம்ம்ம்... டேய்... என்ன என் வாய பார்த்துட்டு இருக்கீங்க சொன்னத செய்ங்கடா..."என கத்த.
உடனே சக்கரவர்த்தியை பிடித்து அவன் திமிற திமிற அவன் வாயில் சாராயத்தையும் கஞ்சாவையும் புகட்டி விட ஒருகட்டத்திற்கு மேல் முடியாதவன் விழுங்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் மயங்கி விழ இவன தூக்குங்கடா என்றவன் ஜன்னல் வழியே வேண்டாம் என கத்திய மகளையும் மனைவியையும் ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து செல்ல அவன் பின்னால ராசாங்கமும் சென்றான்.
வஜ்ரவேலுவிற்கு மருத்துவம் பார்க்க சென்றுவிட்டனர்.
இப்போது கைலாசமும் ராசாங்கமும் சென்றது சக்கரவர்த்தி யின் பெற்றோரையும் அவன் உடன்பிறந்தவனையும் கொல்ல.
ஏற்கனவே ஆட்கள் அனுப்பி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
விநாயகம் வீட்டில்
"எங்கடா பெரியவன காணும்...?" என அன்னம் கேட்க.
"அவன் இங்கதாம்மா பக்கத்துல போய் இருக்கான் வந்துடுவான்..." என்றான் தர்மன்.
"ஏன்டா சின்னவனே... திரும்ப ஏதும் பண்ணல இல்ல... அவன்...?" என கேட்க.
"அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல... வந்துடுவான்... நீ கவலைப்படாத..." என்க.
"என்னவாம்..." என்றபடி வந்தார் விநாயகம்.
"ம்ம்ம்ம் ஒன்னும் இல்லைங்க..." என அவர் தடுமாற.
"ஏன் அன்னம் தடுமாறுற...உன் பெரிய பையன் வீட்டுல இல்ல அப்படித்தான...?" என அவர் கேட்க.
இருவரும் பதில் கூறாமல் விழித்தபடி நின்றிருந்தனர்.
சூழ்நிலையை சரியாக்கும் பொருட்டு "ஏங்க சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா...?" என அன்னம் கேட்க.
"வேணாம்மா மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு...." என தன் சிறிய மகனை பார்க்க அவனோ அவரின் எண்ணம் புரிந்தவனாக உள்ளே செல்ல எத்தனித்தான்.
அவரின் இதழோரம் புன்னகை
பின்னே பார்வையை வைத்தே தன் மனதை படித்து விடுகிறானே என பெருமையாக நினைத்துக் கொண்டவர் "சின்னவனே..." என அழைக்க அவரும் "ஐயா..." என்றபடி அவர் அருகில் வந்தான்.
"நாளைக்கு நீங்க பெரியவனா ஆனாலும் உன் அண்ணனையும் அண்ணன் குடும்பத்தையும் விட்டுர கூடாது கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்கனும்..."என்க.
"சரிங்கயா..." என்றவன் உள்ளே சென்றான்.
"இப்போ எதுக்கு அவன்கிட்ட இப்படியெல்லாம் பேசுறீங்க...?" என அன்னம் கேட்க.
"கிட்ட வா அன்னம்..." என்றார் அவர்.
இருவரும் தாழ்வாரத்தில் இருக்க சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார் விநாயகம்.
"ஏங்க...என்ன ஆச்சு... இன்னைக்கு உங்களுக்கு வெளிய இருக்கோம் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க...?" என்க.
"யாரும் இல்ல... நீ வா..." என்றவர் அவரின் கரத்தை பிடித்துக் கொண்டு "எனக்கு என்னமோ மனசுக்கு ஒருமாதிரி இருக்கும்மா... பெரியவனுக்கு ஏதோ ஆபத்து இருக்குமோன்னு தோணுது... இப்பலாம் ஊருக்குள்ள தேவையில்லாத சில வேலைகள் எல்லாம் நடக்குது... அதெல்லாம் மனசுக்கு உறுத்தலாவே இருக்கு... இத்தன நாளா காப்பாத்தி வச்சிருந்த அத்தனையும் இப்ப ஒன்னும் இல்லாம போய்டும் போல..." என்க.
"ஏன் இப்படிலாம் பேசுறீங்க... நாம கும்புடுற அந்த ஆத்தா நம்மள கைவிட மாட்டா... நீங்கதான சொல்லுவீங்க உங்க பெரிய பையன் ராசாவாட்டம்னு... அவனால எந்ந பிரச்சனையா இருந்தாலும் சரு பண்ண முடியும்னு... இப்ப எதுக்கு அவன பத்தின கவல உங்களுக்கு...நீங்கவேணா பாருங்க... உங்க ஆசைப்படி அவன் நல்லாவே படிச்சு பெரிய டாக்டாராகி இந்த ஊரே பெருமையா பேசற மாதிரி இந்த ஊருக்கு மருத்துவம் இலவசமா பார்ப்பாங்க நீங்க மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம வாங்க சாப்பிட..." என்க.
"சின்னவன் சாப்ட்டானா...?" என அவர் கேட்க.
"ம்ம்ம்ம்... சாப்ட்டான்ங்க நீங்க வாங்க..."என்க.
"ம்ம்ம்ம்... நீ போ நான் வரேன்..." என்றவர் நாற்காலியில் நன்றாக சாய்ந்து துக்க வீட்டில் நடந்த விஷயத்தை யோசித்து பார்த்தார், கைலாசத்தையும் ராசாங்கத்தையும் தனியாக அழைத்த விநாயகம் "உங்கள பத்தி எல்லாம் தப்பு தப்பா கேள்விப்படறேன் மாப்பிளை சேர்க்க சரியில்லைன்னு நினைக்கேன்... இது இந்தமாதிரி திரும்ப கேள்விப்பட்டா இந்த விநாயகத்தோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும்..."என்க
"நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க மச்சான்..." என்றார் கைலாசம்.
"ம்ம்ம்ம்..." என அவர் முன் தன் வலக்கரத்தை நீட்டியவர் "நானே கண்ணால பார்த்தேன்... மாப்பிளை நாளைக்கு நாம சம்மந்தி ஆகப்போறோம் கொஞ்சம் யோசிங்க..." என்றபடி ராசாங்கத்தை பார்த்தார்.
அவனோ அவரை பார்த்து நடுங்கியபடி நின்றான்.
விநாயகம் அந்தப்பக்கம் சென்றவுடன் "என்ன மச்சான்... என் முன்னாடியே உங்கள மெரட்டிட்டு போறான் நீங்களும் பவ்யமா பேசுறீங்க..." என கேட்க.
"நான் கேட்டது என்ன ஆச்சு...?" என கேட்டார் கைலாசம்.
"எல்லாம் ரெடிதான்..." என அவன் கூற.
"ம்ம்ம்ம் வா..." என்றவன் அப்போதே விநாயகத்தின் குடும்பத்தையே அழிக்க திட்டமிட அவர்களின் திட்டத்திற்கு வாகாக மாட்டினான் சக்கரவர்த்தி.
அதன்பிறகே அவர்களை நோட்டமிட ஆட்கள் அனுப்பியதும் இங்கு வந்து சக்கரவர்த்தியிடம் பேசியதும்.
"மச்சான்... என அழைத்தபடி உள்ளே வந்தார் கைலாசம்.
அவர் பின்னால் ராசாங்கம்
"என்ன இந்த நேரத்துல...?" என அவர் கேட்டுக்கொண்டே இருக்கையில் இருந்து எழ அவர் எதிர்பாராத நேரம் கையில் மறைத்து வைத்திருந்த விஷம் தடவிய கத்தியால் அவரின் கழுத்தில் ஒரே கோடுதான்.
ரத்தம் பீறிட்டு அடித்தது
உணவு உண்ண அழைக்க வந்த அன்னம் "என்னங்க..." என அழைத்தபடி ஓடி வர அவளை பிடித்துக்கொண்ட ராசாங்கம் "மச்சான் இவ...?" என கேட்க.
"அவ கையால நான் நிறையதடவ சாப்ட்டு இருக்கேன் அதனால நீயே முடுச்சிடு..." என்க.
அவனும் அன்னம் துள்ள துள்ள அவரது கழுத்தையும் அறுத்து இருந்தான்.
இது எதுவும் தெரியாமல் தர்மன் உறக்கத்தில் இருக்க சக்கரவர்த்தியோ போதையில் மயங்கி கிடந்தான் ஒரு அறையில்...