Total Views: 290
அத்தியாயம் 58
அந்த ஊரில் இருக்கும் மிக பழமையான சிவன் கோவில் அது.
அதில்தான் இந்தருக்கும் வாசுவிற்கும் திருமணம் செய்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் தயாராக நின்றிருக்க உள்ளே சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்து கொண்டு இருந்தது.
பெண்கள் நால்வரும் ஒருபக்கமாக நின்றிருக்க தர்மனும் சக்கரவர்த்தியும் மற்றொரு பக்கம் நின்றுருந்தனர்,அவர்களுக்கு பக்கத்தில் வாசு, இந்தர் மற்றும் சுந்தர் இருவரும் நின்றிருக்க கண்களை மூடி ஆழ்ந்த பிரார்த்தனையில் இருந்தனர்.
ஊர்மக்களும் கைக்குவித்தபடி நின்று கடவுளை வணங்கிய வண்ணம் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வேண்டுதல் இருந்தாலும் கைகள் எண்ணவோ இறைவனை நோக்கித்தான் இருந்தது.
பூசாரி தட்டில் மஞ்சள் குங்குமம் பூக்கள் சகிதம் எடுத்துக் கொண்டு வந்தவர் சக்கரவர்த்தியின் முன் நீட்ட கண்களில் இருக்கரங்களையும் நீட்டி பூசாரி காட்டிய தட்டை தொட்டுக்கும்பிட தர்மனும் மற்றும் ஆண்கள் மூவரும் அதேமாதிரி செய்தனர்.
பின் பெண்களிடமும் காட்ட அவர்களும் தொட்டு வணங்கினர்.
அருவிக்கு இப்போதோ அப்போதோ என கண்ணீர் தயாராக இருந்தது.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.
அடிக்கடி இந்தரின் பார்வை அவளை தீண்டி சென்றது.
அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பது அவனுக்கு தெளிவாக தெரிய அவன் நெற்றியில் குழப்ப முடிச்சிகள்.
வாசு சுசிலாவை பார்த்தான்தான் ஆனால் அவள் முகத்தில் இருப்பதை அவனால் கண்டறிய முடியவில்லை.
அமைதியாக நின்று கொண்டான்.
சுந்தர்தான் "ஊர சுத்திப்பாக்க வந்தான்... வந்த இடத்துல கல்யாணத்த முடிச்சிட்டான்.... ம்ம்ம்... நானும் இருக்கேனே.... ஒரு தாவணி போட்ட பொண்ண கரெக்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணா ஒன்னுகூட செட் ஆகமாட்டிங்குது... கடைசிவரை நீ பிரம்மச்சாரிதான்டா...."என நினைத்தபடி இருக்க அருகில் இருந்த இந்தரோ கன்னத்தை தேய்ப்பதுபோல அவன் அருகில் குனிந்தான், "உன் மைன்ட்வாய்ஸ் எனக்கு கேக்குது மச்சி...அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும்... உனக்கு ம்ஹூம்...." என மெதுவாக கூற.
அவனை எரித்துவிடுவது போல பார்த்தான் சுந்தர்.
பின் மணமக்களை அழைத்த பூசாரி அருகருகே நிற்க வைத்து சாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட மலர்மாலையை கொடுக்க இருவரும் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் அவர்வர் இணையின் கழுத்தில் போட அவர்களும் அதேபோல செய்ய.
மாலையிடும்போது அருவியின் கண்கள் கலங்கி இருந்ததை கண்டவன் அவளை முறைக்க அவனை காணாமல் அவள் தலை தாழ்த்தி கொண்டாள்.
சக்கரவர்த்தி யின் முன் மாங்கல்யம் இருந்த தட்டை நீட்ட அதில் இருந்த அட்சதையை எடுக்க முயன்றவரை தர்மன்தான் தாலி எடுத்துக் கொடுக்குமாறு கூற முதலில் சிறிது தயங்கியவர் பின் முழு மனதோடு தாலியை எடுத்து ஆண்கள் இருவரிடமும் கொடுக்க அதை வாங்கியவர்கள் தங்களின் இணையின் கழுத்தில் கட்டினர்.
ஊர்மக்களும் வாழ்த்துக்களோடு அவர்கள் மேல் அட்சதை தூவி வாழ்த்தினர்.
திகம்பரனும் பரமனும் அட்சதை தூவினர்.
திகம்பரன் அட்சதை தூவியவன் சட்டென வேறு புறம் திரும்பி தன் புறங்கையால் கண்களை துடைத்தான்.
அவனின் கரத்தை அழுத்தி பற்றிய பரமன் கண்களால் ஏதோ கூற சட்டென முகத்தை மாற்றிக்கொண்டான்.
இந்தரின் கண்களில் அத்தனை காதல் இருக்க அதை கலங்கிய விழிகளுடன் கண்டாள் அருவி.
சுசிலா குனிந்த தலை நிமிரவில்லை.
இந்தரும் வாசுவும் தத்தம் தன் இணையரோடு இணைந்து கோவில் வாசலில் விழுந்து எழுந்தனர்.
அருவின் கண்களில் கண்ணீர்
இந்தரின் கண்களில் முழுக்க முழுக்க அவளுக்கான காதல்
முதன்முறை அவள் கழுத்தில் தாலி கட்டும் போது அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.
ஆனால் இப்போது அவனின் மனம் முழுவதும் அவளே நிறைந்து இருக்க முழுமனதாக அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
இத்தனை நாட்களா அவள் மஞ்சளை வைத்து கட்டிய தாலியைத்தான் அணிந்து இருந்தாள்.
இன்று அதே மஞ்சள் கயிறில் தங்கத்தால் ஆன தாலியை அவள் கழுத்தில் அணிவித்தான் இந்தர்.
ஏனோ இன்று மனம் நிறைவாக இருந்தது.
சிவனை வணங்கியவர்கள் இருவரும் வந்து சக்கரவர்த்தி அருணா கால்களில் விழுந்து வணங்க மனநிறைவோடு ஆசிர்வதித்தனர் பெரியவர்கள் இருவரும்.
இதற்கு முன் நடந்த திருமணத்தில் இந்த ஆசிர்வாதம் வாங்கும் படலம் எல்லாம் இல்லை அல்லவா!!
அப்போது தாலி கட்டியவுடன் அருவியை தனியாகவிட்டு அல்லவா சென்றான் இந்தர்.
பின் தர்மன் பத்மினி தம்பதியின் கால்களிலும் விழுந்து வணங்கியவர்கள் அங்கு இருந்த பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.
அந்த ஊர் மக்களுக்கு இந்தரின் திருமணம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் வாசு சுசிலாவின் திருமணம் குழப்பத்தையே கொடுத்தது.
யாருக்கும் சக்கரவர்த்தியை கேள்வி கேக்கும் தைரியம் இல்லை.
ஆனால் காரணம் இல்லாமல் ஆயிரம் முறை யோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார் என சுற்றிலும் நின்றவர்கள் அமைதி காத்தனர்.
சுந்தரும் தர்மன் பத்மினியின் அருகில் நின்றிருந்தான்.
பூசாரி நீட்டிய தட்டில் இருந்து திருநீறை வாங்கி தன் நெற்றியில் இட்டுக் கொண்டவர் சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டார்.
அதில் சில முகங்களில் குழப்பமும் சில முகங்களில் கேள்வியும் இருப்பதை புரிந்து கொண்டவர் அவர்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.
"இங்க வந்து எங்க பசங்களோட இந்த புது வாழ்க்கைக்கு ஆசிர்வாதம் பண்ணதுக்கு உங்க எல்லோருக்குமே என்னோட நன்றி..." என அவர் பேச
அவர்களை பார்த்து சிலர் முகம் சுழிக்க சிலரோ எப்போதும் போலவே இருந்தனர்.
இதுவரை சக்கரவர்த்தியை அவர்கள் பார்த்த பார்வையின் தாக்கம் இப்போது மாறி இருந்தது.
அவர்களையும் பார்த்து சக்கரவர்த்தி கைக்குவிக்க அவர்களும் அதிர்ச்சியுடன் கைக்குவித்தனர்.
பின்ரமற்றவர்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.
"இங்க எல்லோருக்கும் குழப்பம் இருக்கும்... மகிழா கழுத்துல வாசு கட்டின தாலியோட ஈரம் கூட காயல... அதுக்குள்ள இந்த பொண்ணு சுசிலாவுக்கு தாலி கட்டறான்னு குழப்பமா இருக்கும்..."என்க.
கூட்டத்தினர் அவர்களையே பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.
அங்கு நின்றிருந்த பெரியவர்களில் ஒருவர் மட்டும் "நீ சொல்றது சரிதான்பா சக்கரவர்த்தி... இந்த ஊருக்குன்னு சில சட்டதிட்டங்கள் இருக்கு... அது உனக்கு நல்லாவே தெரியும்... ஆனா எனக்கு என்னமோ நீயே அந்த சட்டத்த மதிக்கலையோன்னுதான் தோணுது... ஏன்னா.... அந்த புள்ள மகிழா வாசுமேல பழிய போட்டுச்சு... அது உண்மையா பொய்யான்னு கூட விசாரிக்காம... அந்த புள்ள கழுத்துல தாலி கட்ட சொன்ன.... சரி... அந்த புள்ளை வாழ்க்கைக்கு ஒரு வழியா இருக்கும்னு நாங்க நினைச்சோம்... ஆனா.... இப்ப அந்த மகிழாவ காணும்...வாசு பக்கத்துல சுசிலா இருக்கு.... இங்க என்ன நடக்குதுன்னு புரியல... உனக்கு தெரியாத விஷயம் இல்ல... உன் அப்பா காலத்துல இருந்து இப்ப உன் காலம் வரைக்கும் உங்க குடும்பம் இந்த ஊருக்கு ஒரு முன்னுதாரனமா இருக்கு... ஆனா... இப்ப நீங்களே இங்க இருக்க வாலிப பசங்கள தூண்டிவிடற மாதிரி ஆகாதாப்பா...?" என கேட்க.
"நீங்க சொல்றது சரிதான் பெரியப்பா...உங்க எல்லோருக்குமே தெரியும்... வாசுவோட கல்யாணம் எப்படி நடந்துச்சின்னு இல்லையா...?" என கேட்க.
"ஆமாம்பா..." என்றார் ஒருவர்.
"அது உண்மையில்ல..." என அருகில் இருந்த அவரது ஆள் ஒருவனை பார்த்து தலையசைக்க அவன் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.
அதை வாங்கியவர் "இது அந்த பொண்ணு மகிழாவுக்கும் வாசுவுக்கும் இடையில் எந்த தப்பும் நடக்கலன்னு ஆஸ்பத்திரியில எடுத்த டிஎன்ஏ டெஸ்ட்...."என்க.
ஊர் மக்களிடையே சலசலவென பேச்சு எழ "அப்பறம் அந்த பொண்ணு மகிழா குடும்பம் ஒன்னும் நம்ம ஊருக்கு பஞ்சம் பொழைக்க வந்த குடும்பம் இல்ல....என்க
"என்ன.... ..என்ன அப்படியா.... நிஜமாவா என அங்காங்கே குரல்கள் அதிர்ச்சியாக எழுந்தது....