இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 59 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 28-10-2024

Total Views: 268

அத்தியாயம் 59

"நீ என்னப்பா சொல்ற...?" என ஒருவர் கேட்க.

"ஆமாம்பா...அந்த பொண்ணு வஜ்ரவேலுவோட இரண்டாவது பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணு...." என முடிக்க.

அங்கே பல அதிர்ச்சியான குரல்களை கேட்கவும் சுற்றி இருந்த மக்களுக்கு அதிச்சியும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

"அப்போ காளி...?" என அந்த பெரியவரே கேட்க.

"காளியம்மாவுக்கு அப்பறம்தான் மகிழாவோட அம்மாவ கட்டிக்கிட்டான்...." என்க.

"அப்போ அந்த பாலனும் மகிழாவும் வஜ்ரவேலுவோட பிள்ளைங்கதானா...?" என கேட்க

இது அருணாவிற்கும் பத்மினிக்கும்கூட புதுத்தகவல்.

இருவரும் அதிர்ச்சியாக சக்கரவர்த்தியையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"ஆமாம்பா.... இது உண்மைதான்...இது வஜ்ரவேலுவோட பசங்களுக்கு கூட இந்நேரத்துக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்...." என திகம்பரனையும் பரமனையும் பார்க்க.

அவர்களோ முதலில் தலைகுனிந்தவர்கள் பின்பு "ஆமாங்க... ஐயா சொல்றது உண்மைதான்....,இந்த விஷயம் இப்பத்தான் எங்களுக்கே தெரியும்...." என்றனர்.

"ச்சே.... அவனப்பத்திதான் நல்லாவே தெரியுமே...அவன் இந்தமாதிரி பண்ணலனாதான் ஆச்சர்யப்படனும்.... இதுக்கு எதுக்கு அவனப்பத்தி பேசனும்.... ஆமா.... இப்ப அவங்க எங்க....?"என கேட்க.

"என் காவலையும் மீறி.... வஜ்ரவேலு அவன் குடும்பத்தோட தப்பிச்சிட்டான்.... ஆனா.... அவன நான் விட மாட்டேன்... எனக்கும் அவனுக்கும் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு நிறைய இருக்கு...அவன தேடிட்டுதான் இருக்கேன்...." என முடிக்க.

சக்கரவர்த்தியின் இந்த வார்த்தைகள் இந்தருக்கு அதிர்ச்சி அளித்தது.

அவரின் வார்த்தைகளை அவன் கொஞ்சம்கூட நம்பவே முடியவில்லை.

இதில் ஏதோ சூட்சுமம் இருக்கும் என அவனால் தெளிவாக உணர முடிந்தது.

"அவளே போய்ட்டா... இப்ப எதுக்கு இவரு இங்க பிரசங்கம் பண்ணிட்டு இருக்காரு..." என நினைத்தவன் அருகில் புது மஞ்சள் கயிற்றோடு பார்க்கவே மங்களகரமாக இருந்த மனைவியை பார்க்க அத்தனை பரவசமாக இருந்தது.

எப்போது தனியாக மாட்டுவாள் என அவன் எதிர்பார்த்து கொண்டு இருக்க அவளோ அவன் பார்வையை உணர்ந்து தலைநிமிர்ந்து பார்க்க அவன் பார்வை அவள் முகத்தில் செம்மையை வரவழைக்க தலைதாழ்த்திக் கொண்டாள்.

"நிமிர்ந்து பாருடி..."என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற இப்போது நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் அவளை பார்க்க

அவளோ அவன் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் அவளை கவனித்து தன் ஒற்றை விழியை சிமிட்ட. அவளோ முகம் சிவந்து தலைகுனிந்து கொண்டாள்.

அவள் கையை பிடித்தவன் விடவே இல்லை.

இங்கு சுசிலாவும் வாசுவும் வேறுமாதிரியான மனநிலையில் இருந்தனர். 

அவனோ அவளை "எப்படி இந்த பிரச்சனையில் இருந்து சரிபண்ணுவது..." என எண்ணிக் கொண்டு இருக்க அவளோ "தனக்கு நடந்த இந்த திருமணம் உண்மைதானா இல்லை தான் கனவுலகில் இருக்கிறோமா...?" என எண்ணியபடி இருந்தாள்.

அவள் மனம் ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தது..

நேற்றுவரை இருந்த மனநிலை இன்று இல்லை

மனம் காரணமே இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்தது.

காரணம் அவளால் அறிய முடியவில்லை.

அவளின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை அறிந்தவன் அவள் கரத்தை பற்றி அவளை நிமிர்ந்து பார்க்க செய்தான்.

அவளோ பதறியபடி அவனை பார்க்க.

அவள் கண்களை பார்த்துக் கொண்டே நான் இருக்கிறேன் என சமிக்ஞை செய்ய அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன...?" சரி எனும் விதமாக அவள் தலை தானாக ஆடியது.

அவளின் புரிதல் அவனுக்கு மகிழ்வையே கொடுக்க.

அவள் கரத்தை அழுத்தி பிடித்து "என்றென்றும் நான் இக்கரத்தை விடமாட்டேன்..." என்ற செய்தியை அவளுக்கு கடத்தினான்.

அவளோ அமைதியாகவே இருந்தாள் .

"சரிப்பா... இதுக்கு இனி என்னதான் தீர்வு... உன் சின்ன வயசுல அவனால நீ படாத துன்பமா... உன் பெத்தவங்க வரைக்கும் உனக்கு வராத துன்பமாப்பா... அவன் போனா போய்ட்டு போறான்... விட்டது சனியன்னு விட்டுத்தள்ளு... இனி உன் புள்ளைங்களோட சந்தோஷத்த பாரு... இந்த ஊருக்கே தெரியும் அருவிய பத்தி சின்னவயசுல இருந்தே... அவ எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்ந்தான்னு... இனியாச்சும் அந்தப்புள்ள குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா இருக்கட்டும்...இனி ஆக வேண்டிய காரியத்த பாக்கலாம்...ஆமா... காளி கோவிலுக்கு வேற போகனுமே... உனக்கு அபிமான தெய்வமா இருந்தது அதுதான... எங்க எல்லோருக்குமே தெரியுமே.... அங்கயும் போய் ஒரு புஜை போட்டுட்டு அடுத்து ஆகவேண்டிய காரியத்த பாக்கலாம்...." என்க.

"ஆமா நானும் இன்னைக்கு நைட்டே கிளம்பனும்...அங்க எனக்கு நிறைய வேலை இருக்கு...." என்க.

"இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு போப்பா..." என்றார் பெரியவர் ஒருவர்.

"இருக்கட்டும்பா... பையனும் ஹாஸ்பிடல் போகனும்.... அருவியையும் மேல படிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்... அந்த வேலை எல்லாம் இருக்கு...நான் போய் முடிச்சிட்டு இங்கயே வந்து செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்...."என்க.

"அதுவும் சரிதான்... என்னதான் பொழைக்க போனாலும் கடைசியா சொந்த ஊருக்கு வந்துடனும்...." என்க.

"ம்ம்ம்... நான் திரும்ப வரவரைக்கும் இந்த பசங்க இந்த ஊருல எல்லா விஷயத்தையும் பார்த்துப்பாங்க..." என அவரது ஆட்களை காட்ட.

"இப்போதான் புரியுது... இந்த பசங்க எல்லாம் ஏன் ஊர் வேலைன்னா முன்னாடி நிக்குறானுங்கன்னு...என்றனர்.

"சரி... சரி... கிளம்புங்க... காளி கோவிலுக்கு போய்ட்டு... அப்படியே எல்லோருமே வீட்டுக்கு போய்ட்டு... விருந்தையும் முடிச்சிட்டு... அப்பறம் கிளம்பலாம்..."  என சக்கரவர்த்தி கூற.

சரி என்றபடி அங்கு இருந்த அத்தனை பேரும் சக்கரவர்த்தியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து காளியம்மன் கோவில் நோக்கி சென்றனர்.

வாசு எப்போதும் போல இருந்தாலும் இந்தர் என்னவோ கோபத்தில் இருந்தான்.

அருவியை மேற்கொண்டு படிக்க வைப்பது பற்றி அவனிடம் ஒரு வார்த்தைகூட அவர் அவனிடம் கூறவில்லை.

அது அவனுக்கு கடுப்பை கிளப்பியது.

அதனால் அவன் உம்மென இருந்தான்.

அவனின் இந்த திடீர் மாற்றம் அருவிக்கு சற்று கலக்கத்தை கொடுக்க அமைதியாக அவனுடன் நடந்தாள்.


அவர்கள் அங்கு செல்லும் முன்னே கோவில் அலங்காரமாக இருந்தது.

சக்கரவர்த்தியின் ஏற்பாடு என மக்கள் நினைத்திருக்க அங்கு காளி கோவிலை சுத்தம் பண்ணிக்கொண்டு இருக்க நீண்ட நாட்கள் கழித்து அவளை பார்த்ததும் சக்கரவர்த்திக்கு மனதில் ஒரு வலி.

எத்தனை முயன்றும் அதனை அவரால் மறுக்க முடியவில்லை.

முகத்தில் அதை காட்டாமல் இருக்க அவர் பெரும்பாடு படவேண்டியது இருந்தது.

காளியும் அவரை பார்த்துவிட்டு அமைதியாக ஒதுங்கி கொள்ள கோவில் பூஜையும் முடிந்து வீட்டிற்கு கிளம்பினர்.

விருந்தும் முடிந்து இரவு அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.

ஊரில் பலபேர் அவர்களை வழியனுப்ப வந்திருக்க இறுதியாக தன் இரு மகன்களோடு வந்து சேர்ந்தார் காளி.

இப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்க்கவில்லை.

ஆனால் இருவர் மனதிலும் ஏதோ ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது.

அருணா காளியை அணைத்து வரவேற்றவர் புதுமணப் பெண்களிடம் அழைத்துக் கொண்டு செல்ல அவர் காலில் விழுந்து வணங்கியவர்களை இருக்கரங்களாலும் அணைத்து கொண்டார் காளி.

பின் இருவருக்கும் தன் கழுத்தில் இருந்து இரண்டு செயினை கழட்டி இரு ண்களுக்கும் போட்டுவிட்டு வாழ்த்த மீண்டும் அவர் காலில் விழுந்து வணங்கினர்.

திகம்பரனுக்கு இந்நிகழ்வு இன்னும் வலியையே கொடுத்தது.

இந்தருக்குத்தான் அவர்கள் இங்கு வந்தது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அவன் முகத்தில் காலையில் இருந்த மகிழ்ச்சி ஏனோ இப்பபோது தொலைந்து இருக்க காரணம் புரியாமல் தவித்து போனாள் பெண்ணவள்.

வாசுவும் சுசிலாவும் எப்போதும் போலவே இருக்க.

காரில் ஏறப்போகும் நேரம் "மாமா... இருங்க நான் வந்துடறேன்..."என்றபடி வீட்டினுள் ஓடினாள் பெண்ணவள்.

அவளின் செய்கையை பார்த்தவன் பின்னாலே நகர்ந்து அவள் பின் போக "இதுங்க ரெண்டும் என்ன... தனியா பிளான் பண்ணி போகுதுங்க போல...?!" என குழம்பியபடி சுந்தர் நின்றிருந்தான்.





Leave a comment


Comments


Related Post