Total Views: 498
அத்தியாயம் 60
உள்ளே சென்றவள் நேராக தங்கள் அறையை நோக்கி செல்ல அவனும் பூனை நடை போட்டு அவள் பின் சென்றான்.
அறையினுள் சென்றவள் அவனது கட்டிலுக்கு அடியில் எதையோ தேடியபடி இருந்தாள்.
அவள் பின்னிருந்து எட்டி பார்த்தவன் என்னத்த அப்படி தேடிட்டு இருக்கா என நினைத்துக் கொண்டே அவளை பின்னிருந்து அணைக்க அதில் அதிர்ந்தவள் பதறியபடி திரும்பி பார்க்க அவளின் மணாளன்தான்.
"நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா...?!" என அவள் நெஞ்சில் கைவைத்து கூற.
"நடிக்காதடி... நான் வருவேன்னு உனக்கு தெரியாதா...?!" என அவன் கேட்க.
அவளோ முகம் செம்மை பூச தலைகுனிய.
அவளை கையணைப்பிலேயே வைத்திருந்தவன் "சரி சொல்லு... என்ன தேடி வந்த..??!" என கேட்க.
"ம்ம்ம்ம்.....என் மாமாவ தேடி வந்தேன்...." என்றாள் அவள்.
"உன் மாமனா....அது நான்தானே.... நான்தான் உன் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருந்தனே... அப்பறம் ஏன் இங்க தேடிட்டு வந்த...?!" என கேட்க.
அவளோ அவன் கையில் இருந்து விலகி அவன் கட்டிலில் போட்டு இருந்த தாவணியை எடுத்து காட்டினாள்.
"இது நீங்க எனக்காக எடுத்து கொடுத்த தாவணி.... நீங்க எங்கூட இல்லாதப்ப நான் இதுக்கூடதான் பேசிட்டு இருப்பேன்.... துணி எடுத்து வைக்கும் போது இத மறந்துட்டேன்... அதான்...இப்ப எடுத்துட்டு போக வந்தேன்...." என்க.
அவன் உள்ளுக்குள் சாரல் அடித்தாலும் "ஏன்டி... இது எடுத்து பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்... இன்னுமா இத பத்திரமா வச்சிருக்க...?!" என கேட்க.
"ஆமாம்...அன்னைக்கு இதப்பார்த்துட்டுதான சந்தோஷப்பட்டீங்க.... இப்போ என்னமோ தெரியாத மாதிரி பேசுறீங்க....?!" என அவள் கேட்க.
"அப்போ நான் கூட இல்ல... இத வச்சிருந்த... இப்போதான் நான் உங்கூடவே உன்னை ஒட்டிக்க நான் இருக்கேனே... அப்பறம் எதுக்கு இது... இத தூக்கி போட்டுட்டு என்னய கட்டிக்கடி...." என மேலும் அவளை தன்னோடு நெருக்க
"மாமா... கீழ போலாம்... எல்லாரும் தேடுவாங்க...நம்ம ரெண்டு பேர் மட்டும் இல்லனா... என்ன நினைப்பாங்க பெரிய மாமா...?!" என அவள் கூற.
"வாய மூடுடி... எனக்கு வில்லன் வெளியலாம் இல்ல.... உன் பெரிய மாமாதான்... என்னோட பெரிய எதிரியே... காலையில இருந்து உன்ன தனியா பார்க்கவே முடியல... கல்யாண புடவைல எவ்ளோ அழகா இருந்த தெரியுமா... என் கண்ணே பட்டுடும் போல இருந்துச்சு..." என்க.
"பொய் சொல்லாதீங்க மாமா... நான் உங்களவிட கலர் கம்மி... வெள்ளை வேட்டி சட்டைல ராஜா கணக்கா நீ இருக்க... உன் பக்கத்துல கூட நான் நிக்க முடியாது தெரியுமா...?!" என அவள் கேட்க.
"இன்னொரு தடவ இப்படி பேசினா... பல்ல தட்டி கைல குடுத்துடுவேன் பார்த்துக்க... ஏன்டி... எலுமிச்சை கலர்ல இருக்க நீ கலர் கம்மினா... அப்போ கலர் கம்மியா இருக்க சுசிலாலாம் என்ன சொல்லுவா... சரி அதவிடு.... இப்ப எனக்கு ஒன்னு கொடு... நாம கீழ போலாம் இல்லனா... உன் பெரிய மாமா காணும்னு தேடுவாரு... அதோட திட்டவும் செய்வாரு..."என்க.
"என்ன தரட்டும்..?!" என அவள் கேட்க.
"தெரியாத மாதிரியே நடிக்காதடி...அழகி... சீக்கிரம்... சீக்கிரம்...! என அவன் தன் உதடுகளை தொட்டு காட்ட.
"மாமா கிளம்புற நேரத்துல... என்ன இது..?!"என அவள் கேட்க.
"நீ காலையிலயே கைல மாட்டி இருந்தா... இன்னைய நாளைக்கானத நான் வட்டியோட வாங்கியிருப்பேன்... ஆனா... நீதான் என் கைல மாட்டவே இல்லையே... அதான்... இப்போ நேரம் கிடைக்கும் போது வசூல் பன்றேன்... இதுல என்னடி இருக்கு..?!" என அவன் கேட்க.
"மாமா எல்லாம் ஊர்ல போய் பார்த்துக்கலாம்... இப்போ நீங்க வாங்க... நாம கீழ போலாம்..." என அவள் கூற.
"முடியாது... நான் கேட்டது கொடுத்தா கீழ போலாம்... இல்லன்னா..." என்றவன் கட்டிலை நோக்கி சென்று படுத்துக்கொள்ள அவளோ அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
"மாமா,என்ன பன்றீங்க...?" "கிளம்புற நேரத்துல மாமா தேட ஆரம்பிச்சிட்டாரு போல..." என அவள் கூற.
"அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது...நான் கேட்டத நீ கொடுக்கல.... அதான் படுத்துட்டேன்... நீ கொடு நாம கீழ போலாம்..." என்க.
"ஐயோ மாமா... ஏன் இப்படி அடம்புடிக்கிற..?!" என அவள்
கேட்க.
"எனக்கு வர வேண்டியத நான் வசூல் பன்றேன்... இதுல என்ன இருக்கு...?!" என அவன் சாதாரணமாக கேட்க.
"மாமா ப்ளீஸ்... வா போலாம்... எல்லாருமே நம்பள பத்தி என்ன நினைப்பாங்க...?" என அவள் கேட்க.
"என்னவோ நினைச்சிட்டு போகட்டும்... எனக்கு அதப்பத்தி கவலை இல்ல.... இப்ப நீ தரீயா... இல்ல... நான் தூங்கட்டுமா.... எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..." என ஆவென கொட்டாவி விட.
"மாமா... உன்ன வச்சிட்டு..." என அவள் கூறி முடிக்கும் முன் கதவு தட்டும் ஓசை கேட்டது.
அவள் பதறி திரும்பி பார்க்க அவனோ அலட்டாமல் படுத்துக் கொண்டு விசிலடித்தான்.
"மாமா..." என பற்களை கடித்தவள் இப்ப "நீ வர்றீயா இல்லையா...?" என அவள் கேட்க.
"நான்தான் என் முடிவ சொல்லிட்டேன்... இனி...உன் விருப்பம்..." என அவன் இப்போது நன்றாக கால்மேல் கால்போட்டு ஆட்டிக்கொண்டு இருந்தான்.
மீண்டும் மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்டது.
"ஏன்டி கல்யாணம் ஆன அன்னைக்கே என் பேச்ச கேக்க மாட்டேன்ற... அப்பறம்... எப்படி காலம் முழுக்க என் சொல்பேச்சு கேப்ப... ஒரு குழந்தை வேணும்னா உங்கிட்ட ரொம்ப கெஞ்சனும் போலவே... ரொம்பவும் கெஞ்ச விடுவ போல இருக்கு..." என அவன் பேசியபடி இருக்க.
இப்போது கதவு தட்டும் ஓசையுடன் கூடவே சக்கரவர்த்தியின் குரலும் கேட்டது.
"அருவி..." என்ற அவரின் குரலில் அதிர்ந்தவள் "போச்சு... போச்சு... கிளம்பற நேரத்துல இதுங்க ரெண்டும் கதவ சாத்திக்கிட்டாங்கன்னு என்னய ஏதாச்சும் சொல்ல போறாங்க..." என அவள் புலம்ப
"இவ்ளோ நேரம் இப்படி புலம்பிட்டு இருக்கறதுக்கு... நான் கேட்டத அப்பவே கொடுத்து இருந்தா... இப்ப இவ்ளோ பயப்படாம கிளம்பி இருக்கலாம் இல்ல... இதுல... என் தப்பு ஒன்னும் இல்லப்பா..." என அவன் நிறுத்த "டேய் வாங்கடா வெளியில நேரமாச்சு...இப்போ கிளம்பினாதான் காலையில அங்க போய் சேர முடியும்..." என சுந்தர் கத்த.
" ஐயோ... ஐயோ... என் மானமே போச்சு..." என்றவள் வேகமாக அவன் அருகில் வந்து அவன் வாயோடு வாய் வைக்க அவனோ அதில் லயித்தவன் அவள் வேலையை இப்போது தனதாக்கி கொண்டான்.
நீண்ட நெடிய முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ இப்போது வெளியில் நிற்பவர்களின் குரல் அதிகமாக கேட்க சட்டென விலகியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிதுநேரம் நிற்க.
அவன் கடித்ததில் அவள் உதட்டில் சிறிது ரத்தக்கசிவும் இருந்தது.
அது அவளுக்கு எரிச்சலை தர "ஸ்ஸ்ஸ்... ஆவெங்க...
"என்னடி ஆச்சு...?" என்றபடி அவள் அருகில் வந்தான்.
"மாமா போதும் வாங்க... போலாம்...மாமா இதுக்குமேல இருந்தா கண்டபடி திட்டுவாரு..." என்றவள் வெளியேற போக.
" ஏய் இருடி உதட்ட நல்லா துடைச்சிட்டு போ..." என்றான்.
அவளோ அவனை திரும்பி முறைத்துவிட்டு புறங்கையால் உதட்டை துடைத்துக் கொண்டே கதவை திறக்க மொத்த குடும்பமும் அங்கு நின்றிருந்தது.
அனைவரும் அவர்களை பார்த்து முறைக்க.
தலைகுனிந்தபடி அவள் யாரையும் பார்க்காமல் ஓடி காளியின் பின்னால் மறைந்து கொள்ள அவள் உதட்டை துடைத்தபடி ஓடி வருவதையும் முகம் செம்மையுற்று காணப்படுவதையும் அங்கு தன் அன்னைக்கு எதிரே நின்று இருந்த திகம்பரனுக்கு நன்றாகவே தெரிய கைகளை இறுக்கி மூடியபடி நின்றிருந்தான்.
"வயசுதான் ஆகுது..."என்றபடி சக்கரவர்த்தி அவனை முறைத்து விட்டு முன்னால் நடக்க "ஏன்டா மானத்த வாங்கற...?" என்றபடி அருணாவும் அவர் பின்னால் சென்றார்.
"சரி... சரி...இங்க என்ன கூட்டம்... சின்னஞ்சிறுக அப்படிதான் இருக்குங்க... போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க..."என கூட்டத்தை கலைக்கும் வேலையை பார்த்தான் சுந்தர்.
அனைவரும் அவ்விடம் விட்டு அகல இப்போது வாசுவும் சுந்தர் மட்டுமே கைகளை கட்டியபடி அவனை முறைத்துபடி நின்றிருந்தனர்.
இந்தர் அவர்களை மேலும் கீழும் பார்க்க "தூ...." என துப்பியவர்கள் அவனை இருபுறமும் பிடித்து ஆளுக்கு ஒரு மூலையில் மொத்த "விடுங்கடா..." என கத்தினான் இந்தர்.
"உனக்கு அதுக்குள்ள அவசரமாடா..?" என இருவரும் மீண்டும் அடிக்க வர.
"இப்ப கீழ வர்றீங்களா... இல்லையாடா..."என கீழே இருந்து சக்கரவர்த்தி குரல் கொடுக்க "ஐயோ வந்துருங்கடா..." என்றபடி ஓடினான் இந்தர்.
இரண்டு கார் நின்றிருந்தது.
ஒன்றில் சிறியவர்களும் இன்னொன்றில் பெரியவர்களும் ஏறுவதற்கு நின்றவர்கள் அனைவரிடமும் விடை பெற பத்மினிதான் அழுதுகொண்டே இருந்தார்.
அவரை சமாதானம் செய்து அழைத்து செல்ல அவர்களுக்கு போதும் போதும் என்றானது.
வாசுவும் சுசிலாவும் சிறிது காலம் சென்னையில் தங்க வேண்டும் என சக்கரவர்த்தி கூற முதலில் தயங்கினாலும் பின் தன் மகளின் மனமாற்றம் முக்கியம் என எண்ணிய வேலுவும் சம்மதிக்க இதோ அவர்களும் சென்னை பயணம்.
சுந்தர் சிறியவர்கள் காரில் ஏறப்போக "விவஸ்தை இல்லாம இப்படி புதுசா கல்யாணம் ஆனவங்க கூட வர்றியே... உன்னலாம்..."என இந்தர் முறைக்க "என் தங்கச்சிங்களுக்கு நான்தான்டா பாதுகாப்பு... போங்கடா..." என்றபடி அவன் ஏறிக்கொள்ள அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வண்டியும் கிளம்பியது.
மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் சென்னையை நோக்கிய அவர்களது பயணம் நீடித்து இருக்குமா....?!!"
காண்போம் பாகம் இரண்டில்......
பாகம் 1 முற்றும்