இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 13-11-2024

Total Views: 339

அத்தியாயம் 1

விடியற்காலையில் சென்னை வந்து இறங்கினர்.

இரண்டு கார்களில் ஒன்றில் பெரியவர்களும் மற்றொன்றில் சிறியவர்களும் வந்து சேர்ந்தனர்.

வாட்ச்மேன் கதவை திறக்க உள்ளே சென்ற கார்களில் இருந்து அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். ஏற்கனவே உறக்கத்தில் இருந்ததும் வண்டியை மாற்றி மாற்றி ஓட்டியதும் என மிகவும் களைப்பாகவே இருந்தனர். அனைவரும் கீழே இருக்கும் அறைகளில் அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பிய சக்கரவர்த்தி அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.

பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் ஒரு அறையிலுமாக தூங்கினர்.

காலை பத்து மணி இருக்கும் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு அருணாதான் முதலில் விழித்தார்.

கதவை திறக்க வீட்டு வேலை செய்ய எப்போதும் வரும் பெண் இவர்கள் ஊரில் இருந்து வருகிறார்கள் என அறிந்து வந்திருக்க, அவரை வரவேற்ற அருணா அவரிடம் நலம் விசாரித்துவிட்டு முதலில் போய் பத்மினியையும் அருவியையும் எழுப்பினார்.

இருவரும் எழுந்து முகம் கழுவி வர நேற்றே மளிகை பொருட்கள் வாங்கி வைக்கும்படி வீட்டு வேலைக்காரப் பெண்ணிற்கு சக்கரவர்த்தி தகவல் கொடுத்து இருக்க அதன்படியே அவரும் எல்லாம் தயராக வைத்திருந்தார்.

"அடடே ஜானகிம்மா... முன்னாடியே வந்துட்டீங்களா...?" என அருணா கேக்க.

"இப்போதாம்மா வந்தேன்... ஆமா... எங்க எல்லோரும் இன்னும் எழுந்திரிக்கலயா என்ன...?" என அவர் கேட்டார்.

அருணாவிற்கு வீட்டு வேலைக்கு என கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவர்களிடம் வேலை செய்பவர்.

கணவர் இல்லாத ஜானகிக்கு ஐம்பது வயது கடந்து இருக்கும்.

சக்கரவர்த்தி கூட "ஜானகிம்மா...." என்றே அழைப்பார்.

இந்தர் மட்டும் "ஜானு...." என செல்லமாக அழைப்பான்.

ஜானகிக்கு ஒரே மகள்.

அவரையும் திருமணம் செய்து கொடுத்தவர் மாதத்தில் ஒருநாள் மட்டும் ஒருமணி நேர தூரத்தில் இருக்கும் தன் மகளை சென்று பார்த்துவிட்டு வருவார்.

இந்த முறை சற்று அதிக நாள் தங்கிவிட்டார்.

"இந்த இந்தர் பைய... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம... கண்ணாலம் கட்டிக்கிட்டான் பார்த்தியா அருணாம்மா...." என அவர் வருந்த.

"அதுக்கென்ன ஜானு... உன் முன்னாடி இன்னொரு தடவ கல்யாணம் பண்ணிக்கிறேன்...." என்றபடி இந்தரும் வந்தான்.

"இந்தர் தம்பி.... இந்த அம்மாவ இத்தன நாளா பாக்க வரல பார்த்தியா நீ..."என அவர் அவன் அருகில் சென்று வாஞ்சையாக அவன் கன்னம் வருட அவரின் கள்ளங்கபடமற்ற அன்பில் திளைத்தவன் அவரை அணைத்துக் கொண்டு "எங்க போனாலும் திரும்ப இங்க வந்துதானே ஆகனும்... உன்ன பாக்காம இருக்க முடியுமா ஜானு...." என அவரின் கன்னம் பிடித்து கொஞ்ச "அருணா...." என்ற சக்கரவர்த்தியின்  குரலில் இருவரும் பிரிந்தனர்.

"ஐயா..." என சக்கரவர்த்தியின் அருகில் சென்ற ஜானகியை "வாங்க ஜானகிம்மா... ஊருல உங்க பொண்ணு எப்படி இருக்காங்க....?" என கேட்க.

"உங்க புண்ணியத்துல நல்லா இருக்காங்கய்யா... நீங்க போன் போட்டதும் நான் நேத்தே வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டேன்னுங்க...." என்க.

"ம்ம்ம்ம்... சரிங்கம்மா... அருணா பொண்ணுங்கள எழுப்பி விடு.... காலையிலயே கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்...." என்க.

"சரிங்க...." என்றவர் அருவியும் சுசிலாவும் உறங்கும் அறைக்கு சென்றார்.

ஜானகி கிட்சென் பக்கமாக சென்றவரை "ஜானு... ஒரு காபி ப்ளீஸ்...." என இந்தர் கேக்க.

"இதோ தம்பி..." என்றவர் உள்ளே சென்றார்.

"கழுத வயசாகுது இன்னும் வயசுல பெரியவங்கள பேர் சொல்லி கூப்ட்டுட்டு இருக்கு...." என சக்கரவர்த்தி  கூற.

அது அவன் காதில் விழுந்தாலும் "சூ.. சூ..." என்றவன் "இந்த கொசு தொல்ல தாங்கல...." என முணுமுணுக்க "என்னடா தனியா பேசிட்டு இருக்க....?" என்றபடி வந்தார் அருணா.

"ஓ... அம்மா... எனக்கு டையர்டா இருக்கு... இன்னைக்கு ஒருநாள் மட்டும் எனக்கு ரெஸ்ட் கொடுங்களேன்..." என்றான் அருணாவின் தோளில் சாய்ந்தபடி.

அவரோ அவனை பிடித்து தள்ளிவிட்டவர் "இனி இந்த மாதிரி கொஞ்சல் எல்லாத்தையும் உன் பொண்டாட்டிகிட்ட வச்சிக்க... என்ன ஆளவிடு இனி உன் தொந்தரவுல இருந்து எனக்கு பெரிய விடுதலை...." என்க.

"அப்போ இத்தன நாளா உனக்கு நான் தொந்தரவா இருக்கேனா....?" என அவன் கேட்க.

"இத தனியா வேற உங்கிட்ட சொல்லனுமாடா...?" என்றபடி வந்தான் வாசு.

"அவன சொல்றியே நீ என்ன ஒழுங்கா... இத்தன வயசு ஆகுது இன்னும் உங்க அம்மா முந்தானைய புடிச்சிட்டு தூங்கறவன்தான நீ... என்னமோ அவன சொல்லிட்டு இருக்க... போங்க போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க கோவிலுக்கு போகனும்...." என்றபடி வந்தார் தர்மன்.

"எங்க போனாலும் ஒரு ஏழரை இருக்கத்தான்டா செய்யுது..." என முணுமுணுத்தனர் ஆண்கள் இருவரும்.

"என்னடா புலம்பிட்டு இருக்கீங்க... போங்க... நேரம் ஆச்சு...." என சக்கரவர்த்தி கூற.

"வாடா..." என்றபடி அவரை ஒரு பார்வை பார்த்தபடி வாசுவையும் அழைத்து சென்றான்.

அவர்கள் உள்ளே செல்லவும் பெண்கள் இருவரும் குளித்துவிட்டு வெளியில வரவும் சரியாக இருந்தது.

"என்னடா உன் பொண்டாட்டிய காணும்...?" என வாசு கேட்க.

"அங்க மட்டும் என்னவாம்... உன் பொண்டாட்டியும்தான் ஆளையே காணும்..." என்றான் இந்தர்.

"டேய்...அவங்க எப்பவோ குளிச்சிட்டு ரெடி ஆகிட்டாங்க... நீங்க ரெண்டு பேரும்தான் லேட்...சும்மா பேசிட்டு இருக்காம போய் கிளம்புங்கடா..." என்ற குரல் போர்வைக்குள் இருந்து வர "நாங்களே எழுந்துட்டோம்... உனக்கு இன்னும் என்னடா தூக்கம் வேண்டி இருக்கு...?" என்றபடி அவனை இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அடிக்க "ஐயோ..." கொலை... கொலை...." என கத்தினான் சுந்தர்.

கீழே வரை அவர்களது சத்தம் கேட்க.

எல்லோருமே பதறியடித்து ஓடினர் அவர்கள் அறையை நோக்கி.

அங்கே அவர்கள் கண்ட காட்சி திகைக்க வைத்தது.

சிறுபிள்ளைகள் மூவரும் அடித்து பிடித்து உருள சக்கரவர்த்திக்கு வந்ததே கோபம். 

அது இந்தரின் அறைதான்

சுந்தர் கீழே இருக்கும் அறையில் தூங்காமல் பாதி தூக்கத்திலேயே இந்தரின் அறையை வந்திருந்தான்.

தூக்கம் கலைந்து எழுந்தவன் வாசுவும் இந்தரும் உள்ளே வருவதை அறிந்து தூங்குவதுபோல நடிக்க தன் வாயே தனக்கு எதிரி என்பதுபோல வாய் விட்டு மாட்டிக்கொள்ள இதோ மூவரும் உருண்டு பிரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்த அருணாவும் பத்மினியும் "டேய் உங்க அப்பா வரதுக்குள்ள போங்கடா...." என்க.

அதை காதில் வாங்காமல் மூவரும் உருண்டு கொண்டிருக்க "டேய்...." என்ற சத்தத்தில் மூவரும் அலறியடித்து ஆளுக்கொரு திசையாக ஓடினர்.

அவர்களை பார்த்த பெரியவர்கள் "கல்யாணம் ஆகிடுச்சு.... இன்னும் அடிச்சிட்டு இருக்கானுங்க... அவனுங்கள என்னதான் பன்றது... இந்த சுந்தரும் அவனுங்க கூட சேர்ந்துட்டு ஒரே அழிச்சாட்டியம் பன்றானுங்க...அம்மாடி... பொண்ணுங்களா... இனி உங்கப்பாடுதான் திண்டாட்டம்... ஒருத்தனும் சொல்பேச்சு கேக்கமாட்டானுங்க... என்னதான் பண்ண போறீங்களோ..."என பத்மினி கூற பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

உங்களின் சிரிப்புக்கு ஆயுள் குறைவு என்பதுபோல அடுத்த பிரச்சனை ரெடியாகி வந்தது வர்ஷினி வடிவில்.......




Leave a comment


Comments


Related Post