இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அத்தியாயம் 2 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 15-11-2024

Total Views: 308

அத்தியாயம் 2

சக்கரவர்த்தியின் குரலில் அவரவர் அறையை நோக்கி ஓடினர்.

ஆண்களின் இந்த செயல் சுசிலாவிற்கும் அருவிக்கும்  சிரிப்பை வரவழைத்து இருந்தது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு சுசிலாவின் உதடு சிரிப்பால் வளைந்தது கண்டு அங்கு இருந்த அனைவருக்கும் ஒருவித நிம்மதி தோன்றியது.

பத்மினிதான் "சுசிலா... நீ இப்படியே சிரிச்சிட்டே இருக்கனும்..." என்க.

அவளோ "ம்ம்ம்ம்..." எனும்விதமாக தலையசைத்தாள்  அப்போதுகூட வாய் திறந்து பேசினாள் இல்லை.

"சரி..சரி.. நீங்களும் போய் கிளம்புங்கம்மா... நேரமா போய்ட்டு வந்துடலாம்..." என தர்மன் கூற.

"ம்ம்ம்ம்.. சரிங்க..." என்ற பத்மினி  சுசிலாவையும் அருவியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்கள் சென்றதும் "அருணா..." என சக்கரவர்த்தி அழைக்க "சொல்லுங்க..." என்றபடி அவர் அருகில் வந்தார்.

"உன் பையன கவனிச்சியா..?" என அவர் கேட்க.

"ஏன் அவனுக்கு என்ன...?" என தர்மன் கேட்க.

"அவன்கிட்ட ஏதோ வித்தியாசம் இருக்குடா..." என சக்கரவர்த்தி கூறினார்.

அருணாவோ "உங்களால அவன எதுவும் சொல்லாம இருக்க முடியாதா... எப்பவும் ஏதாச்சும் சொல்லிட்டு... அவனே இப்போதான் பழசெல்லாம் மறந்துட்டு அருவிகூட சந்தோஷமா இருக்கான்.... அது பொறுக்கலயா உங்களுக்கு... போங்க...ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க...." என்றபடி சென்றுவிட்டார்.

அருணாவின் இந்த பேச்சு தர்மனுக்கே சற்று அதிகப்படியாகத்தான் தோன்றியது.

"என்னண்ணா எப்பவும் என் பொண்டாட்டிதான் இப்படி பேசுவா...இப்ப அண்ணியும் ஆரம்பிச்சிட்டாங்க பாரு.... அவ ஓதம் இங்க அடிக்குது போல..." என்க.

தர்மா "உன் பையன் மேல ஒரு கண்ணு வை..." என்றார் சக்கரவர்த்தி.

"இந்தர் இப்போதான் சந்தோஷமா இருக்கான்... நீங்க எதையும் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காதீங்க... இனிமேலாச்சும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்..." என்க.

"எனக்கு மட்டும் ஆசை இல்லையாடா...?" என சக்கரவர்த்தி கேட்க.

"அவன் பழசெல்லாம் மறந்துட்டாண்ணா... நீயே பாக்கறதான... அருவிய எப்படி தாங்குறான்னு...." என தர்மன் கேட்க.

"அதான்டா எனக்கு சந்தேகமா இருக்கு..." என்றார் அவர்.

"நீங்க எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க.... அவங்க ரெடியாகறதுக்குள்ள நாமளும் போய் தயாராவோம்... இல்லனா... நம்மள உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க..." என்ற தர்மன் சக்கரவர்த்தியின் மனநிலை புரியாமல் சென்றுவிட்டார்.

ஆனால் அப்போதே சற்று கவனித்து இருந்தால் இந்தரின் இன்னொரு முகத்தை கண்டிருப்பர்.

அவர்கள் அறியும் நேரம் அத்தனையும் கைமீறி சென்று இருக்குமோ என்னவோ யாரறிவர்??!!

தன் அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

மனதில் ஏதோ ஒரு நிம்மதி ஓடி வந்து குடிகொண்டது.

இந்த உலகத்திலேயே உனக்கு மிகவும் பிடித்த இடம் எது என அவனிடம் கேட்டால் யோசிக்காமல் பதில் அளிப்பான் அவனது அறைதான் என.

இன்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவனது அறையில் அடி எடுத்து வைத்தான்.

ஜன்னல் கதவை திறந்தவன் அங்கிருந்து வரும் சுகந்தத்தில் திளைத்தான்.

அருணாவிற்கும் சக்கரவர்த்திக்கும் தோட்டம் என்றால் அத்தனை பிரியம்.

பார்த்து பார்த்து செதுக்கி இருந்தனர்.

அவர்களின் பிரம்மாண்ட வீட்டை சுற்றி அத்தனை அழகாக இருந்தது அவர்களது தோட்டம்.

காலை எழுந்ததும் அங்கிருந்து வரும் பூக்களின் வாசனையை நுகர்ந்த பிறகுதான் அடுத்த வேலையை பார்ப்பான் இந்தர்.

இன்றும் அதையே செய்ய வாசு அவன் பின்னே வந்தவன் "நீ இன்னும் இத மறக்கலடா..." என்க.

"ம்ம்ம்ம் ஆமா...நான் எதையுமே மறக்கல..." என ஒரு மாதிரிக் குரலில் கூற.

அது வாசுவிற்கு வித்தியாசமாகப்பட்டது.

"இந்தர்... என்ன பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு... நீ நல்லாதான இருக்க... ஒன்னும் பிரச்சனை இல்லதான..." என கேட்க.

நொடியில் முகபாவனைகளை மாற்றினான் இந்தர்.

வாசுவின் முதுகில் அடித்தவன் "டேய்... எனக்கு என்னடா பிரச்சனை வரப்போகுது... அப்படியே வந்தாலும் அந்த பீம்பாய் நீ அப்பறம் தர்மனப்பா நீங்களாம் சும்மா விட்டுருவீங்களா என்ன...?!" என கேட்க.

"உன் முகமே இன்னைக்கு சரியில்லை... கோவிலுக்கு போய்ட்டு வந்து நல்லா தூங்கி ரெஸ்ட் எடு..." என்க.

"என்ன ரெஸ்டா போடாங்க..." என்றான் அவன்

"என்னடா ஏன் அப்படி சொல்ற...?" என அவன் கேட்க.

"ச்சே... நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ண...சுத்த வேஸ்ட்டுடா...?" என்றான் இந்தர்.

"டேய் தடிமாடு... அதுக்கும் நீ சொல்றதுக்கும் என்னடா சம்பந்தம்..??" என கேட்க.

"இதுக்கூடவா புரியல... இன்னைக்கு நைட் உனக்கும் அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பன்றாங்கடா.... அதத்தான் அந்த டாக் சொல்லிட்டு இருக்கு..." என்றபடி சுந்தர் உள்ளே வந்தான்.

வாசுவிற்கு விஷயம் புரிய அவன் முகம் சற்று வெட்கத்தில் திளைக்க.

"டேய் வெக்கப்பட்டுராதடா... எல்லாமே உன் பொண்டாட்டிக்கிட்ட வச்சுக்க... நாங்க பாவம்... எங்கக்கிட்ட வேணாம்..." என்றான் சுந்தர்.

"வாய மூடுடா..." என்றான் இந்தர்.

வாசுவின் முகம் சற்று குழப்பமடைந்தது.

அவனையே பார்த்து கொண்டு இருந்த இந்தர் அவன் தோள்மேல் கைவைத்தான் "நீ எதுக்கும் கவலப்படாத எல்லாம் சரியாகும்..." என்க.

"இப்ப எனக்கு இருக்க முக்கிய வேலையே அவள சரிபன்றதுதான்டா...மத்தது எல்லாம் அப்பறம்தான்..." என்க.

"இந்த புது இடம் அவ பழசு எல்லாத்தையும் மறக்க வைக்கும்... நாமளும் அவ சரியாக மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கனும்... அவ மனசுவிட்டு பேசினாவே எல்லாம் சரியாகிடும்டா... நீ வேணா பாரு..." என்க.

"ம்ம்ம்ம்... எனக்கும் அந்த நம்பிக்கை இப்போலாம் வர ஆரம்பிச்சுடுச்சு... அருவி ஒருத்தி போதும் அவள சரி பண்ண..." என வாசு கூற.

அருவியின் பெயரை கேட்டதும் இந்தரின் முகம் சுருங்கியது.

அதை மறைக்க சட்டென வேறு புறம் திரும்பி கொண்டான்.

வாசுவோ "இந்தர்.. எப்போ ஹாஸ்பிடல் வர ஐடியா உனக்கு..." என கேட்க.

"ம்ம்ம்ம் இன்னைக்கு கோவிலுக்கு கட்டாயம் வந்தேதான் ஆகனும்னு அம்மா சொல்லி இருக்காங்க.. சோ... இன்னைக்கு இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளையில இருந்து வந்துடுவேன்... நீயும் எங்கூட சேர்ந்து நிறைய லீவு போட்டுட்ட... டீன்கிட்ட எப்படியும் வாங்கதான் போறோம்... நல்லவேளை கம்பெனிக்கு நீ இருக்க...அது கொஞ்சம் நிம்மதியா இருக்கு..." என இந்தர் கூற.

"உன்கூட சேர்த்து திட்டு வாங்கறதுல உனக்கு எவ்வளோ சந்தோஷம்.... ஆனா உன்ன மாதிரி ஒரு நல்லவன நான் பார்த்ததே இல்லடா சாமி.... நான் இன்னைக்கு போய் அப்பாவ பார்த்தே ஆகனும்.... இல்லனா கோவிச்சிப்பாரு... நான் அவர்கூட இருந்ததவிட உங்கூடதான் அதிக நேரம் இருக்கறனாம் புலம்புறாரு...." என சுந்தர் கூற.

"ஏய்... இரு... இன்னைக்கு கோவிலுக்கு போய்ட்டு... ஈவினிங் போல நானும் வரேன்... ரெண்டு பேரும் சேர்ந்தே போய் அப்பாவ பார்ப்போம்..." என இந்தர் கூற.

"ஆமா... அவன் சொல்றதும் சரிதான் சாயங்காலம் சேர்ந்தே போகலாம்...." என்க.

கீழே இருந்த தர்மனோ "டேய் பசங்களா... ரெடியா...?" என கத்தி கேட்க.

"ரெடிப்பா..." என்றபடி மூவரும் கீழே இறங்கினர்.

மூவரும் மெருன் நிற முழுக்கை சட்டையயும் வெள்ளை வேட்டியும் கட்டியிருக்க அத்தனை அற்புதமாக இருந்தது.

அருவி அவள் கணவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க அவளின் பார்வையை உணர்ந்தவன் யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்சிமிட்ட அவளுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென இருந்தது.

முகம் செந்தூரம் பூசிக்கொள்ள அதை மறைக்க அரும்பாடு பட்டாள்.

ஜானகிதான் "வீட்டுக்கு வந்ததும் திருஷ்டி சுத்தி போடனும் பிள்ளைங்களுக்கு...." என்க.

"அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்... நேரமாச்சு கிளம்புங்க..." என பின்னிருந்து சக்கரவர்த்தி கூற.

"வந்துட்டாரு மிலிட்டரி...." என முணுமுணுத்தபடி வீட்டில் இருந்து கோவிலுக்கு கிளம்பினர்.

போகும்போது இருக்கும் மகிழச்சி வரும்போது இருக்குமோ என்னவோ?????





Leave a comment


Comments


Related Post