இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2 -3 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 20-11-2024

Total Views: 287

அத்தியாயம் 3

சற்றே புகழ் வாய்ந்த முருகன் ஆலயம்தான் அவர்கள் சென்றது.

காரில் இருந்து அனைவரும் இறங்கி உள்ளே நுழைய முற்பட்டனர்.

வாசலை கடக்கும்போது சக்கரவர்த்தி கால் தடுமாறி விழப்போக இந்தர் அவரை தாங்கி பிடித்தான்.

"பார்த்து வர மாட்டீங்களா..??" என கடிந்தவன் அவரை நேரே நிற்க வைத்து கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்க்க "எனக்கும் ஒன்னும் இல்லடா..." என அவர் கூறிய பிறகே சற்று நிதானித்து முன்னோக்கி சென்றான்.

அதன்பிறகு மறந்தும் அவரை காணவில்லை அவன்.

உள்ளே சென்றவர்கள் பூஜைக்கு கொடுத்துவிட்டு கண்மூடி கடவுளை தொழுதபடி இருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான வேண்டுதல் இருந்தது.

புது மணமக்களுக்கு மாலை கொடுத்து மாற்றிக் கொள்ள பூசாரி கூற அதன்படியே நால்வரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

அருவியின் உள்ளம் விரும்பியவனையே மணந்துவிட்ட நிறைவில் இருந்தது.

அவளோ "முருகா... என் மாமா இப்படியே எப்பவும் இருக்கனும்...  எங்க வாழ்க்கை இதுக்கு மேலயாச்சும் நிம்மதியா கழியனும்...."என வேண்டுதல் வைக்க.

நீ கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டால் பிறகு நான் எதற்கு என கேட்டாரோ என்னவோ.... முருகன்...

அவள் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை போலும் "இன்னும் நீ பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது பெண்ணே... இதுவரை நீ பட்ட துன்பங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லை..." என்பது போல இருந்தது அவரது பார்வை.

ஏனோ அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

மனமுவந்து வேண்டியவள் தன் அருகில் நின்று சாமி கும்பிடும் கணவனை காதலோடு பார்த்தாள். 

குடும்பத்தினர் அனைவரும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கினர்.

சக்கரவர்த்தி அடிக்கடி இந்தரின் முகம் பார்த்தார்.

அவன் முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை.

"இவன் மனசுல ஏதோ இருக்கு... எதையோ மறைக்கிறான்...ஆனா... யார்ட்டயும் சொல்ல மாட்டானே என்ன செய்ய...?"என யோசித்தபடி இருக்க.

அருணாவோ அவரிடம் கடிந்து கொண்டார்.

"கோவிலுக்கு வந்து கூட என்ன யோசனை... மனசார சாமிய கும்பிடுங்க... எந்த சஞ்சலமும் இருக்காது..." என அவர் நெற்றியில் திருநீறு பூசிவிட.

அமைதியான புன்னகை முகத்தோடு இருந்த முருகனை பார்த்தவர்  "இதுவரைக்கும் நீ கொடுத்தது எல்லாமே போதும்... எங்கிட்ட இருந்து நீ எடுத்துக்கிட்டதும் போதும்... இதுக்குமேல இழக்கிறதுக்கு என்கிட்ட ஒன்னுமே இல்ல... இந்த சின்னப்பசங்க எத்தனையோ துன்பத்துக்கு பின்னாடி இப்பதான் வாழ்க்கைல ஒன்னு சேர்ந்து இருக்காங்க... அவங்க வாழ்க்கைல திரும்ப திருவிளையாடல் பண்ணிடாத முருகா... நான் உன்னைத்தான் நம்பி இருக்கேன்..." என நீண்ட வேண்டுதலை வைத்தபிறகே அவர் கை கீழே இறங்கியது.

அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு ஒரு ஓரமான இடத்தை தேடி அமர்ந்தனர்.

கோவில் என்றும் பாராமல் இந்தர் அருவியை பார்வையாலே சிவக்க வைத்து கொண்டு இருந்தான்.

அவள்தான் அவன் பார்வையை தவிர்க்க படாதபாடு படவேண்டியது இருந்தது .

"ஏன்டா... என்னடா... உன் பொண்டாட்டிய இந்த பார்வை பார்க்கற... இது கோவில்டா..." என சுந்தர் கூற.

"தெரியும் வாயமூடு..." என்றவன் இப்போதும் அவளை துகிலுரிப்பதை நிறுத்தவில்லை.

சற்றுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்களிடம் ஆளுக்கொரு வாழைப்பழத்தை பிரித்து கொடுத்தார் பத்மினி.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.

அருணாதான் திரும்பி பார்த்தார்.

சற்று தூரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்க அதை சுற்றி ஒரு திட்டும் கட்டியிருந்தனர்.

அதில் ஒரு வயதான பெரியவர் காவி உடையோடு கண்களை மூடி அமர்ந்து தியானத்தில் இருந்தார்.

பின் என்ன நினைத்தாரோ அருணா என அழைக்க.

அவரோ முதலில் கவனிக்கவில்லை.

மீண்டும் அழைக்க "பத்மினி, யாரோ என்ன கூப்பிடற மாதிரி இருக்கு...."என்க.

"இங்க யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா என்ன...?" என அவர் கேட்க.

"ம்ம்ம்ம்... இருக்காங்கதான்... வாரம் வாரம் வெள்ளிக் கிழமை ஆனா நானும் உன் மாமாவும் இந்த கோவிலுக்கு வருவோம்... உன் மாமாவுக்கு இது ரொம்பவே இஷ்ட தெய்வம்..." என்க.

"அவருக்கு எந்த சாமியத்தான் பிடிக்காது.,

நம்ம ஊருல இருக்க காளி கோவில்ல இருந்து... ஐயனார் கோவில் வரைக்கும் அவருக்கு பிடிச்ச சாமிங்கதான இருக்கு..." என்க

"நக்கலா... அண்ணனுக்கு பக்தி அதிகம்..." என்றார் தர்மன்.

"ஆமா அதனாலதான் கொலை எல்லாம் அவரால ஈசியா பண்ண முடியுது..." என்றான் இந்தர்.

"இந்தர்.. இங்க வந்து என்ன பேச்சு... அமைதியா இரு..."என அவனை அடக்கிய அருணா குரல் வந்த திசையில் பார்க்க அங்கு அவரையே பார்த்தபடி தன் நீண்ட வெண்தாடியை தடவியபடி வா தலையசைக்க.

அருணாவோ "பத்மினி, அங்க பாரு அந்த சாமிதான் கூப்புடறாரு... நான் போய் என்னென்னு கேட்டுட்டு வரேன்..." என எழ முற்பட.

"அண்ணி.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்... ஒவ்வொரு கோவில்லயும் இந்த மாதிரி நூறு பேரு காவி வேட்டி கட்டிக்கிட்டு ஊர ஏமாத்ததான் இருப்பாங்க... நாம நல்லாவே இருந்தாலும்  எதையாச்சும் சொல்லி நம்ம மனச கலைச்சிடுவாங்க நீங்க போக வேணாம்..."என்க.

"ஆமா அருணா தர்மன் சொல்றத கேளு..." என்றார் சக்கரவர்த்தியும்.

"உங்களுக்கு நல்லாவே தெரியும் அந்த சாமியார பத்தி... இங்க எல்லோருமே அவர நல்லமாதிரிதான் சொல்லுவாங்க... பத்மினி, வா நாம போய் கேட்டுட்டு வரலாம்..." என்க.

"சரி.. நீங்க இங்கயே இருங்க நாங்க போய் கேட்டுட்டு வரோம்..." என்றவர்கள் அவர்களின் பதிலை எதிர்பாராமல் சென்றனர்.

திரும்பி வரும்போது மனக்குழப்பத்தோடு வருவார்கள் என தெரிந்தால் அந்த சாமியாரிடம் சென்றிருக்க மாட்டார்களோ.... என்னவோ....?!"

அந்த தனியார் மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் இரண்டாவது தளத்தில் இருந்த கடைசி அறையில் பாட்டு சத்தம் அதிகமாக கேட்க "வர்ஷூ... ஏன்டி இப்படி காலையிலயே சாக அடிக்கிற... நைட் டூட்டி பாத்துட்டு வந்து கொஞ்ச நேரம்தான ஆகுது... தூங்க விடுடி ப்ளீஸ்..." என்றாள் அந்த அறையில் உறக்க கலக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருத்தி.

வர்ஷினியோ "இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டி தன்ஷி...ஏன் சொல்லு...?" என கேட்க.

பக்கத்து கட்டிலில்  போர்வையை தலைக்கு முக்காடு போல போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்த ஒருத்தியோ "ஏன்... நீ இன்னைக்கு இந்த ஹாஸ்டல விட்டு போறியா...?" என கேட்க.

அவளை பார்த்து முறைத்த வர்ஷினி "நீயெல்லாம் ஒரு ப்ரண்டாடி... இன்னைக்கு இந்தர் ஹாஸ்பிடல்லுக்கு வந்துடுவான்... நான் நாளைக்கு அவன என் அப்பாகிட்ட கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்... இதுக்குமேல அவன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது... அதான் இந்த மகிழ்ச்சி... அதானாலதான் ஹேப்பியா இருக்கேன்... நீ சொன்ன மாதிரி கூடிய சீக்கிரம் இந்த ஹாஸ்டலவிட்டு  போகத்தான் போறேன்... அதுவும் இந்தர கல்யாணம் பண்ணிட்டு போதுமா..., என மீண்டும் பாடலுக்கு ஏற்றவாறு டான்ஸை தொடர "கடவுளே இவளுக்கு ஆளு செட்டானதுக்கு எங்களுக்கு தண்டனையா...." என அந்த அறையில் இருந்த இரு பெண்களும் பார்த்துக் கொண்டு  இருந்தனர்.

பக்கத்து அறையில் இருந்த ஒருத்தி "ஏய்... என்னடி... இவ்ளோ சத்தமா பாட்டு போட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க.... நாங்களாம் தூங்க வேணாமா...." என்றபடி வர்ஷினி அறைக்குள் நுழைய அங்கு வர்ஷினி ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து "என்ன ஆச்சு இவளுக்கு ஏன் வலிப்பு வந்தவ மாதிரி ஆடிட்டு இருக்கா..." என அரை தூக்கத்தில் இருந்த ஒருத்தியிடம் கேட்க.

அவளோ இந்தரை பற்றி கூற பக்கத்து அறை பெண்ணுக்கோ சந்தேகமாக இருந்தது.

"நீ எந்த இந்தர சொல்ற...?" என கேட்க.

"ஏன்... நம்ம ஹாஸ்பிடல்ல எத்தன இந்தர் இருக்காரு... ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் இந்தர் இருக்காரே... அவரத்தான் சொல்றா...." என்க.

"ஏய் இருடி...." என்றவள் வேகமாக அவளது அறைக்கு சென்று போனை எடுத்து வந்து காட்டினாள்.

இருவரும் பார்த்து அதிர்ச்சியாக வர்ஷினியை பார்த்தனர்.

சுந்தரும் வர்ஷினியின் பக்கத்து அறை பெண்ணான கங்காவும் ஒரே டிபார்ட்மென்ட் என்பதால் நன்கு பழக்கம் எனவே சுந்தர் வைத்திருந்த இந்தரின் கல்யாண போட்டோக்களை அவன் தனது ஸ்டேட்டஸில் வைத்திருக்க அதை டவுன்லோட் பண்ணி வைத்தாள் கங்கா.

இப்போது வர்ஷினியை பற்றி கேள்விப்பட்டு அவளது அறைத் தோழிகளிடம் அதை காட்ட அறைத் தோழிகளோ அருவியை நினைத்து பாவப்பட்டனர்.

ஏனென்றால் வர்ஷினி எந்த அளவிற்கு நல்லவளோ அதே அளவிற்கு கெட்டவளும் கூட.

தனக்கு பிடிக்காதவர்களுக்கு அவள் கொடுக்கும் தண்டனை வித்தியாசமாக இருக்கும்.

தன் வழியில் குறுக்கு வருபவர்களை சத்தமே இல்லாமல் காலி செய்வதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

இதில் வர்ஷினியின் கையில் மாட்டி சின்னாபின்னமாகப் போகிறாளா இல்லை அவளை எதிர்த்து தன் காதலை காத்துக் கொள்வாளா கிராமத்து பெண்ணான அருவி......


Leave a comment


Comments


Related Post