இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-8 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 02-12-2024

Total Views: 181

அத்தியாயம் 8

"இந்தர் வந்துட்டியா...?" என பின்னால் இருந்து கேட்ட தாயின் குரலில் அப்படியே இருக்கையில் சாய்ந்து இருந்தவன் தலையை தாழ்த்தி பார்க்க அவன் அன்னையும் அவன் மனையாளும் தலைகீழாக தெரிந்தனர்.

தலைக்கு குளித்துவிட்டு கூந்தலை விரிய விட்டிருந்தவள் இடையில் ஒரு கிளிப்பையும் மாட்டி இருந்தாள்.

புது மஞ்சள் தாலி அவள் கழுத்தில் பளீரென தெரிய அவனையும் மீறி மனதினுள் இதம் பரவுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை.

"ச்சே... இந்த மானங்கெட்ட மனசுக்கு என்னதான் வேணும்னு தெரியல... எப்போ அவள பார்த்தாலும் தானா அவபக்கம் சாய்ஞ்சிடுது.... இதுல இருந்து முதல்ல வெளியில வரனும்..."என நினைத்தான்.

 அவன் மனையாளின் புத்தம் புது பூ போன்ற தோற்றம் அவனுள் சிலபல வேதியல் மாற்றங்களை செய்தது.

"தலைய ஏன்டா அப்படி வச்சிருக்க.... எப்படி பார்த்தாலும் உன் பொண்டாட்டி அழுகுதான்... நேராவே பாரு... நாங்க யாரும் எதும் சொல்ல மாட்டோம்..." என அவர்களுக்கு பின்னால் வந்த பத்மினி கூற.

அவர் சொன்னதும் நேராக அமர்ந்தவன் "ஏன்டா....வாசு நீ எப்படி இந்த சித்திய சமாளிக்கிற...?" என கேட்க.

"ம்ம்ம்... நீ எப்படி சக்கர அப்பாவ சமாளிக்கிறியோ அப்படித்தான்...." என்றான் அவன்.

அவனை பார்த்து முறைத்தவன் "என்னம்மா பண்ணிட்டு இருந்தீங்க...?" என அருணாவை பார்த்து கேட்க.

"அது உம் பொண்டாட்டிக்கும் சுசிலாவுக்கும் கைக்கு மெகந்தி போட்டுட்டு இருந்தோம்... இதோ இது நல்லா இருக்கா பாரு..." என அவள் கையை பிடித்து இழுத்து அவன் முன் நீட்ட அவனோ வெட்கத்தில் சிவந்து இருந்த அவள் முகத்தையும் நன்கு சிவந்து இருந்த அவள் கையையும் பார்த்தவன் "நல்லாவே சிவக்கலம்மா..." என்க.

நன்கு சிவந்து இருந்ததை பார்த்து கரத்தை ஏன் இப்படி கூறுகிறான் என அவளும் மற்றவர்களும் அவனையே பார்க்க அவனின் பார்வையோ அவள் முகத்தில் இருந்தது.

இப்போது அவள் நிமிர்ந்து அவனை பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் போல ஒற்றை கண்ணை சிமிட்ட அதில் இன்னும் சிவந்து போனாள் அவள்.

சுசிலா அவளை பார்த்து சிரிக்க வாசுவும் "டேய்... இங்கதான் எல்லோருமே இருக்கோம்... கொஞ்சம் அடக்கிவாசி... நாங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்கதான்..." என்க.

"உன் பொண்டாட்டிய நீ சைட் அடிச்சிக்கோ... நான் வேணாம்னா சொன்னேன்..." என்க

"டேய்...பெரியவங்க நாங்களும் இங்கதான்டா இருக்கோம்... பார்த்து இருங்க..." என்க.

இப்போது ரெண்டு பேர் வாயும் அமைதியானது.

அப்போது வாசலில் சத்தம் கேட்க.

அனைவரின் பார்வையும் குரல் வந்த திசையில் பார்த்தது.

சுந்தர்தான் காரை நிறுத்திவிட்டு அவனது தந்தையை அழைத்துக் கொண்டு கையில் ஒரு பெரிய பையுடனும் வந்து சேர்ந்தான்.

"ஏம்மா... ஒரு வீட்டுக்குதான மளிகை சாமான் வாங்க சொன்னீங்க... ஏதோ நாலு குடும்பத்துக்கு வாங்கின மாதிரி இருக்கு.. நீங்க கொடுத்த லிஸ்ட்..." என்க.

"டேய்... இப்பவே ட்ரெயினிங் எடுத்துக்கடா ..."என கூறினார் மதனகோபாலன் சுந்தரின் தந்தை.

"வாங்கண்ணா... எப்படி இருக்கீங்க...?" என அருணா வாசல்வரை வந்து வரவேற்றார்.

"ம்ம்ம்.. எனக்கு என்னம்மா நான் நல்லாத்தான் இருக்கேன்... இதோ இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிட்டா.. எனக்கு நிம்மதியா இருக்கும்... ஏன்டா இந்தர்.. போன இடத்துல நீ கல்யாணம் பண்ணிட்ட மாதிரி... இவனுக்கும் ஏதாவது பிடிச்சு போட்டுட்டு வந்துருக்கலாம் இல்ல...என் வேலையில பாதி குறையுமே..." என கேட்க

அதற்குள் புது மணப்பெண்கள் இருவரும் ஜோடியாக அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

அவர்களை மனதார வாழ்த்தியவர் "சுந்தர் நீ எப்ப இந்த மாதிரி ஜோடியா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவ...?" என கேட்க.

"நேரம் கூடி வந்தா அவன் மட்டும் ஏன் தனியா இருக்க போறான்.. அவனுக்கும் சீக்கரம் ஒரு கால்கட்டு போட்டுட வேண்டியதுதான்..." என பத்மினி கூற பின் நலம் விசாரிப்புக்கு பின் அவர்கள் பேச்சு ஊரைப்பற்றி திருமணம்பற்றி என திரும்ப அதில் சுவாரசியம் கூடியது பெரியவர்களுக்கு.

இந்தரின் பார்வை அவனின் மனையாளைவிட்டு நொடி நேரமும் பிரியாமல் உரச அவனின் பார்வையை தாங்க முடியாமல் அவள்தான் நெளிந்தபடி இருந்தாள்.

"அடடே வாங்க கோபால்.. என்ன இந்த பக்கம் ஆளையே காணும்..." என வாசலில் இருந்து வந்த குரலில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே தர்மனும் சக்கரவர்த்தியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

"வாங்க மச்சான் இப்பத்தான் தங்கச்சிக்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்..." என்க.

"ம்ம்ம்ம்... ஒரு சின்ன வேலை கோபால் மாமா அதான் நானும் தர்மனும் போய்ட்டு வந்தோம்.. சரி ஏதாச்சும் சாப்ட்டீங்களா..?" என கேட்க.

"மச்சான் இப்பதான் நானும் உள்ள நுழையறேன்..." என்க.

"சரி...சரி... அருணா ஜானகிம்மா எங்க சாப்பாடு ரெடிதான..?" என கேட்க.

"எல்லாம் ரெடிதான் நீங்க வந்ததும் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்..." என்க.

"பசியோடு இருப்பாங்க...வா முதல்ல சாப்பாடு எடுத்து வை..." என்றவர் தானே அடுப்படிக்கு சென்று உணவு பாத்திரங்களை கொண்டு வந்து வைக்க அதன்பின் ஆளுக்கொரு பாத்திரமாக கொண்டு வந்து வைத்தனர்.

மணமக்களுக்கு முதலில் தலைவாழை இலையிட்டு உணவு பதார்த்தங்களை பரிமாறினார் ஜானகி.

மற்றவர்களுக்கும் உணவு பரிமாற ஆண்கள் முதலில் சாப்பிடட்டும் என அருவி கூறியதை யாரும் ஏற்கவில்லை.

"இந்த விருந்தே உங்களுக்குதான... நீங்கதான புதுப்பொண்ணு மாப்பிளை... நீங்க ரெண்டு பேரும் ஜோடியா ஒரு இலையில உக்காருங்க.. வாசுவும் சுசிலாவும் ஒரு இலையில உக்காரட்டும்..." என ஜானகி கூற அதற்கு மேல் மறுத்து பேச தோன்றாமல் அவள் அவன் அருகே அமர்ந்தாள்.

அவள் அருகில் அமர்ந்ததும் காதை தேய்ப்பதுபோல் அவள் அருகில் குனிந்தவன் "என் பக்கத்துல உக்காந்து சாப்பிட உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்காடி..?" என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற.

அவளுக்குத்தான் தூக்கிவாரிப்போட்டது.

"மாமா என்ன பேசுறீங்க... அப்படிலாம் இல்ல... பெரியவங்க சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்பறமா நாம சாப்பிடலாம்னு நினைச்சேன்.. அவ்ளோதான்..." என்க.

அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் குனிந்து இலையில் பரிமாறப்பட்ட உணவை கண்டு அதில் இருந்த இனிப்பை அவள் பக்கமாக நகர்த்தி வைக்க அவள்தான் அவனை அதிர்ச்சியாக பார்த்த வண்ணம் இருக்க சாப்பிடு என அவளிடம் கண்ஜாடை காட்ட மெதுவாக உணவில் கைவைத்தாள் அவள்.

உள்ளுக்குள் ஏதோ உடைவது போல இருந்தது அவளுக்கு.

உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

"மாமா..." என அவனை மெதுவாக அழைக்க அவனோ அவளை திரும்பி பாராமலே "ம்ம்ம்ம்..."என்க.

"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க... என்மேல ஏதாச்சும் கோபமா...?" என கேட்க.

"போடிங்க... உன்மேல என்னடி கோபம்...?" என்றான் அவன்.

"இல்ல... இன்னைக்கு உங்க முகமே சரியில்லை... அதான் கேட்டேன்...." என அவள் கூற

"ஒன்னும் இல்லடி... நான் நல்லாத்தான் இருக்கேன்... இப்பவும் வயிறு புல்லா சாப்பிடுவேன்... நைட்டும் மொத்தமா சாப்பிடுவேன்... பயமா இருக்கு அது இதுன்னு ஏதாச்சும் கதை சொன்ன... அப்ப நான் டென்ஷன் ஆகிடுவேன்... பாத்துக்க எத்தனை வருஷ ஏக்கம் தெரியுமாடி...?" என அவள் காதோரம் கிசுகிசுக்க.

"மாமா என்ன பேச்சு இது எல்லோரும் நம்மளத்தான் பாக்குறாங்க..." என்றாள் அவள் காதுமடல் சிவப்பதை மறைக்க முடியாமல் தோற்றவள் அதன்பின் அவனிடம் வாய் கொடுக்கவில்லை.

சுந்தர்தான் "ஏன்டா இனி தினமும் பேசிக்கதான போறீங்க... அப்பறம் இப்ப என்ன ஒருத்தர் காத ஒருத்தர் கடிச்சிட்டு இருக்கீங்க...போதும் எல்லாத்தையும் இன்னைக்கே பேசி தீர்த்துட்டா அப்பறம் பேசறதுக்கு ஒன்னுமே இருக்காது கொஞ்சம் பொறுமையா இருங்க..." என்க.

அவனை ஒரு பார்வை பார்த்தவன் "நீ சொல்றது சரிதான்..." என்க.

"போதும் சாப்பிடும்போது என்ன பேச்சு..."என்ற சக்கவர்த்தியின் அதட்டலில் அத்தனை பேர் வாயும் கப்பென அடங்கியது.

பின் சாப்பிட்டு எழுந்தவர்களை போய் ரெடியாக சொல்ல,பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் ஒரு அறையிலும் தயாராக ஒருவழியாக இரு ஜோடிகளும் அவரவர் அறைக்குள் விட்டுவிட்டு பெரியவர்கள் அவரவர் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

சுந்தரும் அவனது தந்தையும் விடைபெற்று சென்றிருந்தனர்.

இந்தர் வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது இந்த நாளுக்காகத்தானே...

இதோ அவளும் அவனது அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

கதவு திறந்து வந்தவளிடம் கைநீட்ட அவனது கையில் தான் வைத்திருந்த பால் சொம்பை நீட்ட அதை வாங்கி அங்கிருந்த டீபாயில் வைத்தவன் "இது யாருக்குடி வேணும்...?"என அவள் கரம்பிடித்து தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.


Leave a comment


Comments


Related Post