Total Views: 226
அத்தியாயம் 14
அடுப்படியில் இருந்தார் அருணா.
"அக்கா..." என பத்மினி அழைத்தபடி வர அவரின் பின்னால் வந்த அருவியின் முகத்தை பார்த்து எதையும் அவரால் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மை.
பின்னே மங்கையவளின் நடிப்புதான் கைத்தேர்ந்த நடிப்பாயிற்றே.
"வாம்மா..." என அருணா புன்னகையுடன் அழைக்க "இந்த நேரத்துலயே இங்க என்னத்தை பன்றீங்க..?" என புன்னகை முகமாக கேட்கும் மருமகளிடம் அவரால் எந்த வேற்றுமையும் காணமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
"ஒன்னும் இல்லம்மா... சும்மாதான்.. ஆமா... நீ இன்னும் குளிக்கலயா...?" என கேட்க.
"இல்லத்த, அத்த வந்து கூப்டதும் அப்படியே எழுந்து வந்துட்டேன்...." என்க.
"அருவி, இன்னைக்கு அப்படிலாம் பண்ண கூடாது... சரியா... போ... போய் குளிச்சிட்டு அப்படியே உன் புருஷனையும் அழைச்சிட்டு வா... அவனையும் குளிக்க சொல்லு வீட்டுல எல்லோரும் வரதுக்கு முன்னாடி நீயும் சுசிலாவும் குளிச்சிட்டு வாங்க..." என்க.
"சரித்தை..." என்றவளிடம் "அருவி, சுசிலா ஏற்கனவே எழுந்து குளிக்க போய்ட்டா நீ சீக்கிரமா குளிச்சிட்டு உன் புருஷனையும் கையோட கூட்டிட்டு வா சாமி கும்பிடனும்..." என்க.
"ம்ம்ம்ம்..." என தலையாட்டிவிட்டு அவனது அறைக்கு திரும்பி நடக்க முற்பட காலே ஏறவில்லை அவளுக்கு.
விதி யாரைவிட்டது எத்தனை மெதுவாக நடந்தாலும் அறை வரத்தானே செய்யும் தங்கள் அறைக்குள் வந்தவள் கவிழ்ந்து உறங்கும் தன் கணவனையே பார்த்தாள்.
நேற்று இரவு அவன் பேசியது நினைவில் வர இது நிஜமாக இந்தர்தானா அல்லது அவன் உடம்பில் ஆவி ஏதாவது புகுந்து கொண்டதா என எண்ணியவளுக்கு நடக்கும் போது ஏற்பட்ட வலியே கூறியது அவன் பேசியது அத்தனையும் உண்மை என.
இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ இதற்குத்தான் தன்னை தனியாக விட்டு சென்றனர் போல தன் பெற்றோரும் தன் பாட்டியும் என எண்ணியவளுக்கு அவன் ஊரில் தன்னிடம் ஆசையாக நடந்து கொண்டது நினைவில் வந்து வெட்கப் பூக்களை பூக்க செய்தது என்னவோ உண்மை.
ஆனால் அவன் பேசிய கூரிய வார்த்தைகள் அவள் செவிப்பறையை தீண்ட தீப்பட்டதுபோல உணர்ந்தவள் தன் தலையை தட்டி இனி இதற்கு பழக வேண்டும் என எண்ணிய படி தன் பையை தேடி எடுத்து அதில் இருந்த ஒரு புடவையையும் துண்டையும் எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி சென்றவள் முன் திடுமென வந்து நின்றான் அவளது அசுரன்.
அவள் பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்து நெஞ்சில் கைவைத்து பார்க்க அவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளின் செவியை நன்றாகவே எட்டியது.
"என்ன ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்க போல என்னை எப்படி கொல்லலாம்னா...?"என அவன் கேட்ட வார்த்தை அவளுக்கு அதிர்ச்சியை கொடுக்க "மாமா... என்ன பேசற..?" என அவள் கேட்க.
"உன்னை நம்ப முடியாதுடி... ஏற்கனவே அதுக்கு நீ ட்ரை பண்ணவதான..?" என தன் நெற்றியில் இருந்த வடுவை தேய்த்தபடி அவன் கேட்க.
அவனின் எண்ணம் போவதை உணர்ந்தவள் "மாமா.. நிஜமா அது மாங்காய் பறிக்கதான நான் கல்லெறிஞ்சேன்... அங்க நீங்க இருப்பீங்கன்னு நான் நினைச்சே பாக்கல..."என்றாள்.
அவள் கண்களில் அத்தனை வலி அதை அவனிடம் கூறும் பொழுது.
எந்நேரமும் கண்ணில் இருந்து விழுந்து விடுவேன் என கண்ணீர் தயாராகி நிற்பதை கண்டவன் என்ன நினைத்தானோ "என்னை குளிக்க வை..."என்க.
அவள் புரியாமல் பார்த்தாள்.
அவள் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து "சொன்னது காதுல விழலயாடி... என்னை குளிக்க வைன்னு சொன்னேன்..." என்றவன் அவளு கையில் இருந்த டவலை பிடுங்க அவள் குளிப்பதற்காக எடுத்து வைத்திருந்த துணிகள் கீழே விழுந்தது.
அதை பார்த்து முகம் சுழித்தவன் "ஏன்டி என் மானத்தை வாங்கனும்னு முடிவு பண்ணிதான இந்த டிரஸ் எடுத்து வச்சிருக்க..." என கேட்க.
"ஏன் இந்த துணிக்கு என்ன..?" என அவள் கேட்டாள்.
"உன் மூஞ்சி மாதிரியே இருக்கு..." என்றான் அவன்.
அதில் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர "பிடிக்காத இந்த மூஞ்சியை ஏன் மாமா கட்டிக்கிட்டீங்க...?" என அவள் கேட்க.
"ஓ... என்னையே எதிர்த்து பேசுறியா...?" என்றவன் அவளை அருகில் இழுத்து அவள் தாடையை அழுத்தி பிடித்தான்.
அவன் அழுத்தி பிடித்ததில் அவள் வாய் ஓ வடிவில் இருக்க அதில் தன் உதடுகளை வைத்து அழுத்தினான்.
வாசுவின் அறை
சுசிலா குளித்துவிட்டு வர வாசு இன்னும் எழுந்திரிக்கவில்லை.
இரவு முழுவதும் அவள் பேசியது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தவன் விடியற்காலையில்தான் தன்னையும் மீறி உறக்கத்தை தழுவி இருந்தான்.
குளித்துவிட்டு தலையில் டவல் ஒன்றை கட்டிக் கொண்டு நின்றபடி அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள்.
"இந்த மைனருதான் எத்தனை அழுகு எந்த பிரச்சனையும் இல்லாம இந்த கல்யாணம் நடந்து இருந்தா இப்படியா இருந்து இருக்கும் எங்க வாழ்க்கை..." என நினைத்தவளுக்கு அழையாமலே நினைவு வந்தது நேற்று இரவு நடந்த விஷயங்கள்.
தன் காலில் விழுந்தவளை பார்த்து அதிர்ந்தவன் "ஏய் என்ன பன்ற எழுந்திரி..." என கூற.
"நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க...நான் கெட்டு போனவன்னு தெரிஞ்சும்..." என வார்த்தையை விட.
"சுசிலா..."என கத்தியபடி அவளை அறைய தூக்கிய கரங்கள் அந்தரத்தில் அப்படியே தொங்கியது.
"என்ன உளறிட்டு இருக்க... டயர்டா இருப்ப போய் படு..." என அவன் கூற.
"இல்ல இன்னைக்கே நான் பேசிடறேன்..." என அவள் கூற
"நீ ஒரு ஆணியும் பேச வேணாம் கண்டத பேசி என்னை டென்ஷன் ஆக்காம தூங்குன்னு சொன்னேன்..." என்க.
"நீங்க விரும்பலனாலும் நான் பேசிடறேன் சின்னய்யா..." என அவள் கூற.
"சுசிலா..." என அவன் பற்களை கடித்து கோபத்தை அடக்கியபடி அழைக்க.
"ஒரு பொண்ணு தான் கெட்டுப் போனவளா இல்லையான்னு தெரியாத அளவுக்கு முட்டாளா இருக்க மாட்டா..சின்னய்யா நானும் அதே மாதிரிதான் நீங்க எத்தனைதான் மூடி மறைச்சாலும் என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்க போல ஊருல நீங்க பன்ற வேலைய எல்லாத்துக்கிட்ட இருந்தும் மறைக்கிற மாதிரியே இதையும் மறைக்க முயற்சி பண்ணாதீங்க..." என்க.
"என்ன உளறிட்டு இருக்க...?"என அவன் கேட்டான்.
"சின்னய்யா புளிய மரத்துல ஒருத்தன் தூக்கு மாட்டி தொங்கிட்டு இருந்தானே அவன் கடன் பிரச்சனையால தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப் போய்ட்டான்னுதான ஊருல எல்லோரும் சொன்னாங்க ஆனா அது உண்மை இல்ல நீங்களும் உங்க கூட்டாளிகளும் சேர்ந்து கொன்னு அவன தொங்க விட்டீங்கன்னு எனக்கு தெரியும்..." என்க.
அவளை அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.
"என்னடி பேசிட்டு இருக்க...?" என அவன் கேட்க.
அவனது உரிமையான அழைப்பு அவளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும் தான் அவனுக்கு தகுதியானவள் இல்லையென என எண்ணியவள் அதை ஒதுக்கிவிட்டு ஆமா "சின்னய்யா அவன நீங்களும் உங்க ஆளுங்களும் கயித்துல கயிற கட்டி இழுத்து அவன கொன்னு நம்ம ஊருல நடுவுல இருக்க புளிய மரத்துல தொங்கவிட்டதுன்னு எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன்..." என்க.
அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "ஆமா நாங்கதான் கொன்னோம் அதுக்கு என்ன இப்ப அப்படி பண்ணலனா அவன் இந்நேரம் சக்கரவர்த்தி அப்பாவையும் ஏன் நம்ம குடும்பத்தையும் ஊரு மக்கள எல்லாத்தையும் கொன்றுப்பான் பரவால்லையா...?" என கேட்க
"ஐயோ..." என காதை மூடிக் கொண்டாள்.
அவள் அருகில் வந்தவன் அவள் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்துவிட்டு "மனசுல கண்டதையும் போட்டு குழப்பிக்காத நான் மட்டும்தான் உன் மனசுல இருக்கனும் உன் மேல எனக்கு எவ்ளோ ஆசைன்னு என்கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்க ஆனா இனி இந்த மாதிரி கெட்டுப்போனவ உங்களுக்கு பொருத்தம் இல்லாதவன்னு உளறிட்டு இருந்த எனக்கு கெட்ட கோபம் வரும்..." என்றவன் மேலும் "நீ தூங்கு நான் போய் கொஞ்ச நேரம் தோட்டத்துல இருந்துட்டு வரேன்..." என அவளை கடந்து செல்ல முற்பட.
"நான் சொன்னதுல என்ன தப்பு நான் உங்களுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவதான என்னையே விரும்பி கட்டிக்கிட்ட உங்களுக்கு என்கிட்ட கொடுக்க ஒன்னுமே இல்லையே இந்த உடம்ப இன்னோருத்தன் பார்த்த உடம்ப இந்த கெட்டுப் போனவ கூட வாழனும் உங்களுக்க தலையெழுத்தா... என்ன அதனால...?" என அவள் முடிக்க
"அதனால....?" என அவன் கண்கள் இடுங்கி கேட்க.
அவள் கூறிய வார்த்தையில் ஓங்கி அறைந்தவன் வேகமாக வெளியேற அவன் அடித்த அடியில் அறையின் ஒரு மூலையில் விழுந்து இருந்தாள் அவள்...