Total Views: 191
அத்தியாயம் 15
வாசுவின் அறை
சுசிலா பேசியதில் ஆத்திரமுற்றவன் "நீ என்ன பைத்தியமாடி...?" என கேட்க.
"இல்ல அதுவந்து..." என அவள் பேசி முடிக்கும் முன் "வாய மூடுடி... முதல்ல உனக்கு தெரியுமா... அந்த காட்டுல என்ன நடந்துச்சுன்னு... எதும் தெரியாம ஏதாச்சும் உளறிட்டு இருந்த...இங்க என்ன நடக்கும்னே தெரியாது..." என அவன் ஆத்திரமாக பேசினான் வாசு.
அவன் கோபத்தில் அரண்டு விழித்தாள் அவள்.
அவனுக்கு கோபம் வரும் என அவளுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவள் மீதும் இத்தனை கோபம் கொள்வான் என இன்றுதான் அறிந்து கொண்டாள்.
அவளை காணும் போதெல்லாம் அவன் கண்கள் கனிந்து உதட்டில் தானாக உறையும் புன்னகையோடுதான் இதுவரை கண்டு இருக்க முதன் முறையாக அவன் கோபம் அவளுக்கு பயத்தையும் உடல் நடுக்கத்தையும் கொடுத்தது.
அவளின் அரண்ட தோற்றத்தை கண்டவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிதானமாக அவள் அருகில் செல்ல அவளோ இரண்டடி பின்னால் சென்றாள்.
ஆனாலும் அவன் விடாமல் அவள் அருகே செல்ல "என்னை பார்த்தா எப்படி இருக்கு...?"என கேட்க.
அவளோ புரியாமல் பார்த்தாள்.
"என்னய பார்த்தா சிங்கம் புலி மாதிரியா இருக்கு... இத்தன பயந்து சாகற... நானும் மனுஷன்தான்... உன்னைய கடிச்சு தின்னுட மாட்டேன்... முதல்ல உன் மனசுல நமக்கு கல்யாணம் ஆகிடுச்சி... நான் உன் புருஷன் அப்டிங்கிறத ஏத்திக்க... அப்பறம் என்னய பார்த்தா உனக்கு பயம் வராது... என்றவன் நீ நினைச்சிட்டு இருக்க மாதிரி அன்னைக்கு ஒன்னும் நடக்கல..." என்க.
அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
அவளை மிக அருகில் நின்றவனின் எண்ணம் தறிகெட்டு ஓட தன்னை முயன்று அடக்கியவன் "நீ மனசு விட்டு பேசுடி அப்போதான என்னால எதும் செய்ய முடியும்...நீயா ஒன்னு நினைச்சிட்டு என்னையும் போட்டு உசுர வாங்காத..." என்க.
"இல்ல என்னால உங்களுக்கு துரோகம் பண்ண முடியாது... என்னைய அத்துக்கட்டிட்டு நீங்க இன்னொரு கல்யாணம்..." என முடிக்கும் முன் அவளை ஓங்கி அறைந்து இருந்தான் வாசு.
அவன் அடித்த அடியில் ஒரு மூலையில் சென்று விழ அவள் அருகில் கோபமாக சென்றவன் "என்னை பார்த்தா எப்பிடிடி இருக்கு உங்களுக்கு... ஆள் ஆளுக்கு என் வாழ்க்கைய கூறு போட்டு விக்குறீங்க... ஒருத்தி செய்யாத தப்புக்கு தண்டனை வாங்கி கொடுத்தா... நீ உன்னைதான் நான் உயிரா நினைக்கிறேன்னு தெரிஞ்சும் இன்னொரு வாழ்க்கைய பாருன்னு சொல்ற... உங்களுக்கு நான் என்ன விளையாட்டு பொருளாடி... அவளோட காரியத்துக்காக கட்டிக்கிட்டு ஊருல எனக்கு கெட்ட பேர வாங்கி வச்சிட்டு போனா... நீ... ச்சே இந்த பொம்பளங்கள நம்ப கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது... இனி என் கண்ணு முன்னாடி நீ வரவே கூடாது... அப்படி வந்தா நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்... என்னைய புரிஞ்சிக்காதவ எனக்கு தேவையே இல்ல...
உங்க ரெண்டு பேருக்கும் என் வாழ்க்கை வெளையாட்டா போச்சு இல்ல... இனி எக்காரணம் கொண்டும் என் கண்ணு முன்னாடி வந்துடாத..." என்றவன் அவளை திரும்பியும் பாராமல் வெளியேற போகும் அவனையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள் .
இந்தரின் அறை
அருவியின் உதட்டோடு தனது உதடுகளை வைத்து அழுத்தியவன் மெல்ல அவளை நகர்த்திக்கொண்டு பாத்ரூமினுள் நுழைந்தான்.
அவள் சுதாரிக்கும் முன் அவன் தேவையை தீர்த்துக்கொண்டே வெளியேற அவன் செய்த செயல்களினால் அவள் கண்களில் தாராளமாக தண்ணி கொட்டியது.
அவனோ அவளை ஒரு அலட்சிய பார்வை பார்த்தவன் "என்னமோ யாரோ ஒருத்தன் உன்ன ரேப் பண்ண மாதிரி பில்டப் கொடுக்கற...உன்ன கட்டிக்கிட்டவன்கிட்டதான ப...த உலகத்துல நடக்காததா... புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்னு உனக்கு தெரியாதா..." என அவன் கேட்க.
அவளோ எதுவும் பேசாமல் அவனை வெறித்து பார்த்தாள்.
கண்ணாடி முன் நின்றிருந்தவன் அவள் கண்களில் வரும் கண்ணீரை பார்த்து உள்ளுக்குள் திருப்தியுடன் அவள் அருகில் நெருங்கி அவள் காதோரமாக குனிந்தவன் "ஒருவேல என் பெர்மாமன்ஸ் பத்தலயோ...?!" என கேட்க.
ஏற்கனவே அவனின் அதிரடி செயலால் தொடை ரெண்டும் வலியை கொடுத்து அவளை அசையவிடாமல் செய்திருக்க இவனின் இந்த பேச்சு அவளை இன்னும் அச்சம் கொள்ளவே செய்தது.
அவனை அதிர்ந்து பார்த்தவளை கண்டு திருப்தியுற்றவன் கையில் வைத்திருந்த ஈர டவலை அவள்மீது தூக்கியெறிந்துவிட்டு "போய் ரெடியாகி கீழ போ... இல்லனா கூப்டுவாங்க..."என்றுவிட்டு கண்ணாடி முன் நின்று தன் தலையை வாரத் தொடங்கினான்.
அவள் மனமோ வெம்பித் தவித்தது.
கணவன் மனைவிக்குள் சகஜம்தான் ஆனால் காதல் என்ற ஒன்று இல்லாமல் வெறும் கடமைக்காக என அவனோடு ஒன்ற முடியவில்லை.
அவளை வார்த்தைகளால் வதைத்து அவன் திருப்தியுறுவதை காண மனம் நொந்து போனது.
இதற்காகவா இத்தனை போராட்டம் என அவள் மனம் வேதனை கொள்ள அமைதியாக அமர்ந்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் "நான் கீழ போறேன்... நீ உன் ட்ராமவ எல்லாம் முடிச்சுட்டு வா..." என்று விட்டு கீழே இறங்கி இருக்க.
அவள்தான் மனம் குமுறி அழ ஆரம்பித்தாள்.
எவ்வளவு நேரம் அழுதாளோ கீழே இருந்து பத்மினியின் குரல் கேட்டபிறகே சுயம் தெளிந்தவள் பட்டென எழுந்து கண்களை அழுத்தி துடைத்துவிட்டு தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
மேனியில் தண்ணீர் பட்ட இடமெல்லாம் எரிந்தது.
கடுஞ்சொற்களால் அவளை வதைத்தது போதாது என மேனியிலும் அவனால் உண்டான காயங்கள் அதிகளவு இருக்க அருவிக்கு உடல் காயத்தைவிட மனக்காயமே அதிக வலியை தந்தது.
எத்தனை ஆசை எத்தனை கனவு அத்தனையும் ஒருநொடியில் ஏமாற்றத்தை கொடுக்க இந்த துயரத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை.
தன் வேதனைகளை கொட்டவும் ஆளின்றி தவித்தாள் மாது.
"என்னடா நீ மட்டும் வர எங்க உன் பொண்டாட்டி...?" என தர்மன் கேட்க.
மேலே திரும்பி பார்த்தவன் "வருவா.. அம்மா எனக்கு ஒரு டீ.." என குரல் கொடுத்தான்.
"இனிமே ஏன் அண்ணிய தொந்தரவு பன்ற... அதான் உனக்குன்னு ஆள் வந்தாச்சு இல்ல இதுக்கு மேலயாச்சும் அவங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடு இந்தர்..." என காலையிலயே தர்மன் ஆரம்பிக்க அவனோ அவரை முறைத்து பார்த்தான்.
"ஆத்தி இவன் என்ன இப்படி பாக்குறான் இவன் பார்வையே சரியில்லை தர்மா வாய கொடுத்து வாங்கி கட்டிக்காத..." என நினைத்தவர் அதன்பின் வாயை கப்பென மூடிக்கொண்டார்.
அவரின் நிலை பத்மினிக்கு தெளிவாக புரிய மெல்ல அவர் அருகில் வந்தவர் "அவன்கிட்ட வாங்கிக்கலனா தூக்கமே வராதே...." என திரும்ப அங்கு அப்போதுதான் சுசிலாவும் வந்து சேர்ந்தாள்.
"என்னம்மா நீ மட்டும் வர..?" என பத்மினி கேட்க அவரு வராரு அத்தை என்றவள் கிட்செனுக்குள் நுழைந்து கொண்டாள்
சற்றுநேரம் கழித்து அருவி வர வாசுவும் வந்தவுடன் அருணா பூஜை அறைக்கு அனைவரையும் அழைத்தவர் பூஜை செய்து சாமி கும்பிட்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்தவரின் கண்களில் விழுந்தது அருவின் கைகளில் இருந்த சிறு காயமும் அவள் கண்கள் அழுது சிவந்ததுக்கான அடையாளமும் தன் கணவனை திரும்பி பார்க்க அவரோ இன்னும் கண்திறக்கவில்லை.