Total Views: 194
அத்தியாயம் 16
சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்று ஆளுக்கொரு இருக்கையில் அமர பெண்கள் நால்வரும் அடுக்களைக்குள் நுழைந்தனர்.
அங்கு ஏற்கனவே ஜானகி சமையல் வேலையில் இறங்கி இருக்க மற்ற நால்வரும் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர்.
அவர் எவ்வளோ தடுத்தும் கேளாதவர்கள் அவருடன் கலகலத்தபடி இருந்தனர்.
என்னதான் நன்றாக பேசி உரையாடினாளும் அருணாவிற்கு உள்ளுக்குள் இந்தருக்கும் அருவிக்கும் இடையில் ஏதோ சரியில்லை என்பது தெளிவாக உணர ஆரம்பித்தது.
காரணம் அவள் மறந்தும் அவன் கண்களை பார்ப்பதையும் தவிர்த்தாள் அவன் முன்னால் வருவதையும் தவிர்த்தாள்.
அவர்களை நோக்கும் போது ஏதோ சரியில்லை என்பதை உணர ஆரம்பித்தவருக்கு உள்ளுக்குள் அபாய மணி ஓசை கேட்டது.
கணவனின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் மகனின் வாழ்வும் சிறக்க வேண்டும் இதில் சிறிது கூட பிசிறு தட்டக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்க வாசுவின் முகமும் சரியில்லாமல் இருந்தது.
அவனை கண்ட இந்தர், "என்னடா... ஏன் ஒருமாதிரி இருக்க...?" என கேட்க.
அவன் கேள்வியில் சுதாரித்தவன் "நானா... அப்படி எதும் இல்ல இந்தர்... நீயும் அருவியும் ஓகேதான...?"என அவன் இவனை எதிர்கேள்வி கேட்க.
"எங்களுக்கு என்னடா... நாங்க ரெண்டு பேரும் ஆசைப்பட்ட வாழ்க்கை... எங்களுக்கு நல்லாவே போகுது... இதுக்கு மேலயும் போகும்..." என்க.
அவன் பதிலில் வாசுவுக்கு பரம திருப்தி அவன் கூற்றைக் கேட்டுக் கொண்டு வந்தவளுக்கோ அத்தனை வேதனையாக இருந்தது.
கணவனுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்தவளுக்கு அவன் வார்த்தைகள் காதில் விழ இனி தினமும் நடிக்க வேண்டும்,ஒவ்வொருவரிடமும் பொய் சொல்ல வேண்டும் இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என எண்ண தோன்றியது.
"ஏன்மா... கைல டீய வச்சிட்டு அங்கயே நிக்கிற... டீ ஆறிட போகுதும்மா... உன் புருஷன் வந்ததும் டீதான் கேட்டான்..." என தர்மன் கூற.
"இதோ மாமா..." என்றவள் அவன் கண்களை பாராமல் குனிந்த தலையோடு அவன் அருகில் வந்தாள்.
தர்மனின் குரலில் வாசுவும் இந்தரும் அவளை பார்த்தனர்.
"வாங்க அண்ணி... டீ உங்க புருசனுக்கு மட்டுமா இல்ல எனக்குமா...?"என வாசு கேட்க.
இந்தரோ ஒரு வார்த்தை பேசாமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
"நீ எனக்கு எப்பவும் மாமா பையன்தான் வாசு... எப்பவுமே போல பேர் சொல்லியே கூப்டு புதுசா அண்ணின்னு சொல்றது ஒருமாதிரி இருக்கு எனக்கு...?" என அவள் கூற.
"ஐயையோ... நான் இனி அப்படிலாம் கூப்ட மாட்டேன் சாமி... உன் புருஷன் என் முதுகுல டின்னு கட்டிடுவான்..." என பயந்தவாறு வாசு கூற.
"நீயாச்சு அவளாச்சு இதுல என்ன ஏன்டா இழுக்குற...?" என இந்தர் இப்போது நிஜமாகவே அவன் முதுகில் டின்னு கட்டினான்.
சிறியவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் சக்கரவர்த்தி பேப்பரில் கண்களை வைத்து இருந்தார்.
"பார்த்தியா அரு.. இல்லயில்ல அண்ணி... இதுக்கு முன்னாடி என்னைய டேய்னு கூட கூப்ட மாட்டான்... இன்னைக்கு அடிக்கவே செய்யறான்..." என அவளிடம் குறை கூற.
"நீயாச்சு அவங்களாச்சு இந்தா டீ எடுத்துக்க..." என அவனிடம் நீட்டினாள் கையில் வைத்திருந்த தட்டை.
வாசு எடுத்துக் கொள்ள அடுத்து அவனிடம் செல்ல வேண்டும் கால்கள் நகர மறுத்தது.
கடவுளே நேரம் பார்த்து இந்த காலு கூட போக மாட்டேங்குதே அதுக்கு வேற ஏதாச்சும் சொல்லுவானே என எண்ணியவள் மிகவும் பிரயத்தனப்பட்டு அவன் அருகில் சென்றாள்.
அவளின் ஒவ்வொரு அசைவும் அவன் கண்களுக்கு தப்பாது விழ என்கிட்ட வர அத்தனை தயக்கமா உனக்கு பேசிக்கிறேன் என நினைத்தவன் அவள் சற்று எட்டி நின்று நீட்டிய தட்டில் இருந்து இவன் சற்று முன்னால் குவிந்து டீ கப்பை எடுத்துக் கொண்டான்.
பார்வை அவளைவிட்டு இம்மியளவும் அகலவில்லை.
அவளோ அவன் கண்களை சந்திப்பதை முடிந்த அளவு தவிர்க்க இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு என்பதுபோல இருந்தது அவனது பார்வை.
மீண்டும் அவள் திரும்பி நடக்கையில் "அருவி... சுசிலாகிட்ட நேத்து ஒரு பைய கொடுத்து உங்க அத்தைக்கிட்ட கொடுக்க சொல்லி இருந்தேன் அத வாங்கிட்டு வாம்மா..." என தர்மன் கூற.
சுசிலாவின் பெயரை கேட்டதும் வாசுவின் முகம் மாறியது.
டீ குடித்து கொண்டு இருந்த இந்தரின் கண்களில் வாசுவின் முக சுணக்கம் தெளிவாக விழ இந்தரின் முகம் யோசனையை தத்தெடுத்தது.
வர்ஷினியின் ஹாஸ்டல்
இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தவள் அதிகாலை நேரமே எழுந்து மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டு இருக்க.
அந்த விடுதியின் வார்டன் அவளது அறைக்கே தேடிவந்தார்.
இருக்காதா பின்னே மத்திய அமைச்சர் மயில்வாகனின் மகள் வர்ஷினி என இங்குள்ள அனைவருக்கும் நன்றாக தெரியுமே அதனாலே யாரும் அவளுடன் வம்பு வைத்துக் கொள்வதில்லை.
அதும் இன்றி அந்த விடுதியில் அவளுக்கு ஏகபோக மரியாதை உண்டு காரணம் அவளது தந்தையின் செல்வாக்கு.
அவளின் அறைக்கு முன் நின்று கதவை தட்ட அவளோ எட்டிப்பார்த்தாள்.
"நீங்களா... என்ன வார்டன்...?" என கேட்க
"உனக்கு விசிட்டர்ஸ்மா அதான் நானே உன்ன அழைச்சிட்டு போலாம்னு வந்தேன்..." என வாயெல்லாம் பல்லாக கூற.
"ஓ... இதுக்குத்தான் இத்தனை அலப்பறையா... நான்கூட வேற என்னமோன்னு நினைச்சேன்.. ஆமா... யாரு வந்துருக்கா...?" என அவள் தெனாவட்டாக கேட்க.
"அது உங்கவீட்டு ட்ரைவர்..."என அவர் கூறிக்கொண்டு இருக்கும்போதே அவள் போன் சத்தமிட உள்ளே சென்றவள் போனை எடுத்து பார்த்தாள்.
அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிய ஆரம்பித்தது.
முகமே காட்டியது அவளது மகிழ்வை.
"வர்ஷினி பாப்பா... நீ இவ்ளோ சந்தோஷமா இருக்கறத பார்த்தா உன் அப்பாருதான் லைன்ல போல..." என அவர் கேட்க.
அவரை ஒருமுறை திரும்பி பார்த்தவள் "சொல்லுங்க டாடி..." என காதில் போனை வைத்தாள்.
அந்தப்பக்கம் கூறிய செய்தியில் சற்று முகம் சுணங்கியவள் "சரி டாடி வரேன்..." என வைத்துவிட "வார்டன் நானு இன்னைக்கு ஊருக்கு போறேன் வர ரெண்டு நாள் ஆகும்... என்க.
"சரிம்மா... சரிம்மா..." என அவர் கூறினார்.
"ம்ம்ம்...சரி நீங்க போய் என் ட்ரைவருக்கு கேன்டீன்ல டீ வாங்கி கொடுங்க..." என அவள் அலட்சியமாக கூற.
அவருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அவரோ இந்த ஹாஸ்டலில் மிலிட்டரி என பெயர் எடுத்து இருக்க ஒருத்தி அவருக்கே வேலை எய்தால் என்ன செய்ய முடியும் அவரது தேவைக்காக இவளிடம் பணிந்து போக வேண்டி இருக்கிறது.
எப்போதும் நேரான மரம்தான் சுலபமாக வெட்டப்படும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் வார்டன் வர்ஷினியின் அட்டூழிங்களுக்கு சற்று அடங்கித்தான் போவார்.
இன்று வர்ஷினி தனக்கு வைத்த வேலை சற்று அதிகப்படியோ என தோன்றியது அவருக்கு.
மற்றவர்கள் பார்த்தால் தன் நிலைமை என்ன ஆகுவது என ஒருகணம் அவர் யோசியாமல் இல்லை.
ஆனால் வர்ஷினியால் அவருக்கு காரியம் ஆகவேண்டி இருக்கிறதே அதற்காக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டி இருக்கிறது.
வர்ஷினி கூறியது போலவே அவளது ட்ரைவரை அழைத்துக் கொண்டு போய் டீ வாங்கிக்கொடுத்து காலை உணவையும் முடிக்க வைத்தே அழைத்து வந்தார்.
அதற்குள் வர்ஷினியும் வர இருவரும் கிளம்பினர்.
அங்கு அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் பாவம் பெண்ணவள் தன் தந்தையிடம் இன்று இந்தரை பற்றி கூறிவிட வேண்டும் என எண்ணியபடி மகிழ்வுடன் பயணம் செய்ய அங்கு வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நிச்சயத்தை ஏற்பாடு செய்திருந்தார் மத்திய அமைச்சர் மயில்வாகனன்....