Total Views: 201
அத்தியாயம் 19
அறைக்குள் நுழைந்தவளை பின்னிருந்து அணைத்தான் இந்தர்.
அவனின் அந்த திடீர் செயலில் அதிர்ந்தவள் கத்தப்போக அவனோ தன் மறுகையால் அவள் வாயை மூடினான்.
இல்லையில்லை அவளது மென்னிதழ்களை தடவிக் கொண்டு இருந்தான்.
"மாமா.. உங்களுக்கு நேரமாகுது..." என்க.
"என்னைய மயக்கறதுக்குதான இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு இங்கயும் அங்கயும் நடந்து என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்க.. நான் ஒன்னும் உங்கிட்ட மயங்கமாட்டேன்..." என அவள் பின் கழுத்தில் தன் உதடுகளால் கோடிழைத்தான்.
அவளது கழுத்தோரத்தில் இருந்த பூனை முடிகள் சிலிர்க்க அதன்மீது தன் உதடுகளை வைத்து உரசினான்.
அவளது உடலின் சிலிர்ப்பு அவனுக்கு மோகமுட்களை தோற்றுவிக்க அவளை பின்னிருந்து அணைத்தபடியே கட்டிலில் சாய்ந்தான்.
"மாமா..." என அவள் அழைத்த குரலை அப்படியே தன் உதட்டுக்குள் விழுங்கிக் கொண்டவன் அதன்பின் அவளை பேசவே அனுமதிக்கவில்லை.
அதன்பின் அங்கு கேட்டது எல்லாமே இன்ப முனங்கல்களே...
அவளால் அவனை வெறுக்கவும் முடியவில்லை.
வேண்டாம் என ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை.
இருமனநிலைகளில் இருந்தவளின் கவனம் அவனிடம் இல்லை.
அவளது கன்னத்தை அழுத்தி பிடித்து தன் கண்களை பார்க்க செய்தவன் "எங்கூட இருக்கும்போது உன் நெனைப்பு எங்கடி இருக்கு...?" என அவள் நெஞ்சில் நஞ்சை ஏற்றினான் இந்தர்.
"மாமா..." என அவள் அதிர்ந்து அழைக்க.
"என்கூட இருக்கும்போது உனக்கு வேற எந்த நினைப்பும் இருக்க கூடாது புரியுதா...?" என்றவன் அவள் இதயத்தில் கைவைத்து "இங்க எப்பவும் என் நெனைப்புதான் இருக்கனும் ஏன்னா உன்னால நான் பாதிக்கப்பட்டு இருக்கேன் அதுக்கு பழிவாங்கவும் செய்வேன் எப்ப என்ன செய்வானோன்னு எப்பவும் என்னைய நினைச்சிட்டே இருக்கனும்... இது உனக்கு நான் கொடுக்கும் தண்டனை..." என்க.
அவனை விநோதமாக பார்த்தாள் அவள்.
அதன்பின் அவளிடம் மூழ்கியவன் அரைமணிநேரம் கழித்தே அவளை விடுவிக்க போ என தள்ளிவிட்டு பாத்ரூமினுள் நுழைந்து கொள்ள அவளோ எந்த எதிர்வினையும் காட்டாமல் அப்படியே படுத்து இருந்தாள்.
உடுத்தி இருந்த ஆடைகள் அனைத்தும் ஆளுக்கொரு திசையில் கேட்பாரற்று கிடந்தது.
அந்த காபி ஷாப் காலையிலயே பரபரவென இருக்க.
வர்ஷினியின் அறைத் தோழிகள் இருவரும் அவர்களது பக்கத்து அறை தோழியும் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்க.
"ஹாய் லேடிஸ் எனக்காக ரொம்ப நேரம் வெய்ட் பண்றீங்க போல..." என்றபடி வந்து அமர்ந்தான் சுந்தர்.
.உனக்கு பங்க்ட்சுவாலிட்டியே இருக்காதாடா...?" என கீர்த்தனா கேட்க.
"நோ டார்லிங்.. ஒரு அழகான பையன தேடி பொண்ணுங்கதான் வரனும் அவங்கதான் அவனுக்காக வெயிட் பண்ணனும் அந்த அழகான பையன் வெய்ட் பண்ண மாட்டான்..." என்க.
கீர்த்தனா தூவென அவனை பார்த்து துப்ப.
அவனோ "ஹேய் வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்..?"என அவன் கேட்க.
"ச்சீ அடங்கு எதுக்கு வர சொன்னோம்னே இல்லாம நீபாட்டுக்கும் உளறிட்டு இருக்க.." என கீர்த்தனா கூற.
"கீது என்னடி இப்படி அசிங்கப்படுத்துற..?" என அவன் கேட்க.
"முதல்ல கூலிங்க்ளாஸ கழட்டுடா கடுப்பேத்திக்கிட்டு.." என்றாள் கீர்த்தனா.
"ஓகே..." என்றவன் கண்ணாடியை கழட்டிவிட்டு "இப்ப சொல்லுங்க இவ்வளவு காலையிலயே என்ன வரசொல்ல வேண்டிய அவசியம் என்ன..?" என அவன் சீரியஸ் மோடிற்கு செல்ல.
கீர்த்தனா அவளது போனில் இருந்து இந்தரின் திருமணப் புகைப்படங்களை காட்டினாள்.
"இது இந்தரோட கல்யாண போட்டோ ஏன் இதுக்கு என்ன...?" அவன் கேட்க.
"நிஜமா அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா பிரதர்.."என வர்ஷியின் அறைத்தோழி கேட்க.
அவள் தன்னை பிரதர் என அழைத்ததில் நொந்தவன் அப்படியே முகத்தில் காட்டினான்.
"பிரதர் உண்மைய சொல்லுங்க..." என அவள் அருகில் இருந்தவள் கேட்க.
"ம்ம்ம்ம்...என பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் "இதுல டவுட்டு என்ன உங்களுக்கு நான்தான் இந்த போட்டோவ எடுத்தேன்..." என்க.
"இது வர்ஷினிக்கு தெரியுமா..?" என கீர்த்தனா கேட்க.
"இல்ல அவகிட்ட இன்னமும் சொல்லல... இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு போவோம் இல்ல அப்ப சொல்லிக்கலாம்... இது ஒரு பெரிய விஷயம்னு காலையிலயே வர சொன்னீங்களா... நான் என்னமோ உங்க மூணு பேருல யாரோ ஒருத்தர் என்னைய லவ் பன்றீங்க... அத சொல்லத்தான் வர சொன்னீங்க போலன்னு ஒரு ஆர்வத்துல வந்துட்டேன்... ஏன்டி கீது இத நீ ஹாஸ்பிடல்லயே கேட்க மாட்டீயா... என கேட்டவன் நான் கிளம்பறேன் காலையிலயே டென்ஷன் பண்ணிட்டு..." என்றபடி எழப்போனவனின் கையை அழுத்தி அமரவைத்தாள் கீர்த்தனா.
அவளது கரம் தன் கரத்தின் மேல் இருப்பதை ஒருநிமிடம் கண்டவன் "இந்தருக்கு கல்யாணம் ஆகிடுச்சு கீது... அவன் அத்தை பொண்ணோட இப்ப எதுக்கு இத கேட்டுட்டு இருக்கீங்க..." என அவன் கேட்க
"வர்ஷினி இந்தர லவ் பன்றா தெரியும்தான...?" என அவள் கேட்க.
"ம்ம்ம்ம் அவன் மேல அவளுக்கு ஒரு க்ரஷ் இருக்குன்னு தெரியும்..." என்றான் அவன்.
"நீ பைத்தியம்தான்டா அவளுக்கு அவன் மேல க்ரஷ்லாம் இல்ல ரொம்ப சீரியஸாவே அவன லவ் பண்ணிட்டு இருக்கா..." என்க.
"ஏ...அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னா இந்தர் எங்கிட்ட சொல்லி இருப்பான்...." என்றான் அவன்.
"இது இந்தருக்கே தெரியாதுடா முட்டாள் இந்தர்கிட்ட இன்னைக்குத்தான் சொல்லலாம்னு பிளான் பண்ணியிருக்கா..." என்க.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை மறைத்து
"அதெல்லாம் இந்தர் பாலிஸ்டா டீல் பண்ணி அவகிட்ட சொல்லி புரிய வைப்பான்..." என்க.
"ம்ம்ம் அவள பத்தி உனக்கு தெரியல சுந்தர் அவளுக்கு ஒரு பொருள் வேணும்னு தோணிட்டா அதை அடையாம அவவிட்டது இல்ல..."என கீர்த்தனா கூற.
"ஆமா பிரதர் கீது சொல்றது உண்மைதான் அவளுக்கு ஒரு பொருள் வேணும்னா அதுக்காக எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டா பொருளா இருந்தா பரவால்ல ஒன்னு இல்லனா இன்னொன்னு வாங்கிக்கலாம் ஆனா இந்தர் ஒரு மனுஷன் அவன வேணும்னு அவ ஆசைப்படறா அவன் இன்னொரு பொண்ணுக்கு சொந்தம்னு தெரிஞ்சா அந்த பொண்ண கொலை பண்ணவும் தயங்க மாட்டா அவ யாரோட பொண்ணுன்னு தெரியும் இல்ல..."என அவள் கேட்க.
அவர்கள் பேசுவது அவனுக்கு புதிதாக இருந்தாலும் காரணம் இல்லாமல் இந்த பெண்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பது புரிய அதுவரை இருந்த விளையாட்டுத் தனத்தை ஒதுக்கிவிட்டு சீரியஸாக கேட்க ஆரம்பித்தான்.
"இந்தருக்கும் அந்த பொண்ண கட்டிக்க ஆசைப்பட்டு கட்டிக்கிட்டாரா..?" என கேட்க.
"என்ன இப்டி கேட்டுட்ட அவனும் அந்த பொண்ணு அருவியும் சின்ன வயசுல இருந்தே ஒருத்தர ஒருத்தர் விரும்பி இப்ப பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க இன்னும் சொல்லப் போனா அவங்க சந்தோஷமா வாழவும் ஆரம்பிச்சுட்டாங்க..."என சுந்தர் கூற.
"சுத்தம் இனி இந்தருக்கு ஏழரைதான்..." என கீர்த்தனா கூற.
"ஏய் வாய மூடுடி அவனும் அந்த பொண்ணும் எத்தனை தடங்கல தாண்டி இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டாங்க தெரியுமா இப்டி அபசகுனமா பேசற..." என அவன் சற்றே கோபக்குரலில் கூற.
"நாங்க உனக்கு உண்மைய சொல்லி இந்தர இந்த இக்கட்டுல இருந்து காப்பாத்துன்னு சொல்றோம்..." என கீர்த்தனா கூற.
"ஆமா பிரதர் இதுல இருந்து இந்தர எப்படியாவது காப்பாத்துங்க அவளால பாதிக்கப்பட்டது என் குடும்பமா இருக்கட்டும் இன்னொரு குடும்பம் பாதிக்கப்படக்கூடாது பிரதர் ப்ளீஸ் அவளும் அவ அப்பாவும் ரொம்ப மோசமானங்க அவங்களால இந்தருக்கும் இந்தர் குடும்பத்துக்குமே கூட ஆபத்து வர வாய்ப்பு இருக்கு..."என்க.
"ஆமா பிரதர் அவ சொல்றது உண்மைதான் அவ அண்ணனும் அவளால பாதிக்கப்பட்டு இருக்காரு இப்ப அவரு உயிரோடவே இல்ல.." என்க.
"என்ன சொல்றீங்க நீங்க...?" என்றபடி அதிர்ந்து பார்த்தான் சுந்தர்...