Total Views: 185
அத்தியாயம் 20
பெண்கள் மூவரின் வார்த்தைகளை கேட்ட சுந்தர் சற்றுநேரம் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
கீர்த்தனாதான் "டேய் சுந்தர்... என்ன அமைதியா இருக்க... இன்னைக்கு ஹாஸ்பிடல் வரதானே... ஏற்கனவே டைம் ஆகிடுச்சு.. இப்படியே எவ்ளோ நேரம் பேசாம இருப்ப.. எனக்கும் டைம் ஆகுது அவளுங்க ரெண்டு பேருக்கும் ஆபிஸ் இருக்குடா..."என்க.
"வர்ஷினிக்கு இந்தர் மேல ஒரு க்ரஷ் இருக்குன்னு தெரியும் கீது.. ஆனா நீங்க சொல்றத பாத்தா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. ஏன்னா.. அருவி கள்ளங்கபடம் இல்லாத அன்பான பொண்ணு...இந்தரும் அவளும் சின்னவயசுல இருந்தே லவ் பண்ணி எத்தனையோ பிரச்சனைகளை தாண்டி இப்பதான் ஒன்னு சேர்ந்து இருக்காங்க... அவங்க வாழ்க்கைல ஏதாச்சும் பிரச்சனைனா இந்தர் அப்பா சும்மா விட மாட்டாரு அவரப்பத்தியும் உங்களுக்கு தெரியாது.. ஆனா.. அவர தாண்டிதான் எந்த பிரச்சனையா இருந்தாலும் இந்தர தொடனும் ஆமா நீங்க ஏதோ உங்க அண்ணா அவளால பாதிக்கப்பட்டாருன்னு சொன்னீங்களே என்ன அது..?" என கேட்க.
"அது இவளோட பேர் வனிதா இவளும் இவ அண்ணன்னு ரெண்டு பேருதான் இவங்க வீட்டுல அவ அப்பா ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாரு அவ அம்மா வீட்டுலதான் இருப்பாங்க அன்பான குடும்பம்தான் இவங்களோடது ஆனா என்னைக்கு வர்ஷினியோட கண்ணு இவ அண்ணா மேல பட்டுதோ அப்போ புடிச்சது சனி இவங்களுக்கு..." என கீர்த்தனா கூற.
"ஏன்டி நீட்டி முழக்குற.. என்னென்னு சொல்லு..." என்றான் அவன்
கீர்த்தனாவிற்கோ அவன் பேச்சில் சற்று கோபம் ஏதோ உரிமைப்பட்டவன் போல டி போட்டு பேசுகிறானே என நினைத்தவள் அவனை முறைத்துவிட்டு "வர்ஷினியும் இவ அண்ணனும் ஒரே காலேஜ்தான், பர்ஸ்ட் இயர் MBBS படிக்கும்போது அவன லவ் பன்றேன்னு டார்ச்சர் பண்ணி அது கடைசியில அவ அப்பாவுக்கு தெரிஞ்சு அவரு யார் என்னென்னு யோசிக்காம அவ அண்ணாகிட்ட விசாரிக்காம அவன அடிச்சு போட்டுட்டாரு இப்ப அவரு உயிரோடு இல்ல..." என கீர்த்தனா கூறியதும் அதிர்ந்தவன் "அந்த ஆளு என்ன பைத்தியமா...?" என கேட்டான் அவன்.
"அது முடிஞ்சு போன விஷயம் இறந்து போன அவ அண்ணா இனி உயிரோட வரப்போறது இல்ல... அந்த மயில்வாகனன் பொண்ணு மேல இருந்த தப்ப மறைக்க ஆக்சிடென்ட்டுன்னு கேஸ் க்ளோஸ் பண்ணிட்டாங்க... இவளுக்கு வர்ஷினி இப்ப இந்தர் பின்னாடி சுத்தரான்னு தெரிஞ்சதும் அவ அண்ணா மாதிரி இந்தரையும் ஏதாச்சும் பண்ணிடுவாளோன்னு ஒரே பயம் எங்கிட்ட புலம்பிட்டே இருந்தா அதான் என்ன பன்றதுன்னு யோசிச்சு சரி இத உங்கிட்ட ஷேர் பண்ணனும்னு வந்தோம்..." என்க.
"இந்தர்ட்ட இதப்பத்தி சொல்லியே ஆகனும்... இல்லனா அவன் வாழ்க்கைய அவ ஒருவழி பண்ணாலும் ஆச்சர்யத்துக்கு இல்ல ஆமா உன்னோட அண்ணாவுக்கு அவமேல ஏதும் விருப்பம் இருந்துச்சா என்ன...?" என அவன் கேட்க.
அதுவரை அமைதியாக இருந்த வனிதாவோ "இல்லண்ணா... அந்த மாதிரி எதுவும் இல்ல அப்படி இருந்து இருந்தா எங்க அண்ணன் எங்க வீட்டுல சொல்லி இருப்பான் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நாங்க கேட்டோம்... அவன் அந்த மாதிரி என்னத்துல நான் அவகூட பழகலன்னு அடிச்சு சொன்னான் வர்ஷினி கூட எப்பவும் கார்ட்ஸ் இருப்பாங்க முன்னாடிலாம் அவங்கள தாண்டி அவகூட பேசறது அத்தனை சுலபம் கிடையாது ஆனா ஏன் என் அண்ணாவ அப்படி பண்ணாங்கன்னு தெரியல எங்க அம்மா அப்பா அண்ணன் இறந்ததுல இருந்து மனசு உடைஞ்சு போய்ட்டாங்க அத மறந்து என்மேல அவங்க கான்சன்ட்ரேசன கொண்டு வர எனக்கு நிறைய மாசம் தேவைப்பட்டுச்சி..." என கண்களில் நீரோடு அவள் முடிக்க.
கீர்த்தனாவும் அவள் அருகில் இருந்த தோழியும் அவள் கையை பிடித்து ஆறுதல் படுத்த "நான் இந்தர வார்ன் பன்றேன் அவ இதுவரைக்கும் அவன்கிட்ட அவ மனச பத்தி பேசல அப்படியே சொன்னாலும் அவன் ஏத்துக்க மாட்டான் ஏன்னா அருவிய தவிர வேற யாரும் அவ மனசால நினைச்சு கூட பாக்க மாட்டான்..." என்க.
"அது நல்லதுதாண்ணா இவகிட்ட அவரு மாட்டாம இருக்கனும் அதான் நல்லது..." என கீர்த்தனா கூற.
"கவலைப்படாத..." என்றவன் இந்தருக்கு அழைக்க அப்போதுதான் அருவியுடன் கூடலை முடித்து குளிக்க கிளம்பியவன் போன் சத்தத்தில் திரும்பி வந்து பார்த்துவிட்டு இவன் எதுக்கு இப்ப கால் பன்றான் என நினைத்தவன் அதை அட்டென்ட் செய்து காதுக்கு வைத்து "சொல்லுடா கிளம்பற நேரத்துக்கு எதுக்கு கூப்பிடற...?" என கேட்க.
"கிளம்பிட்டியா..?" என கேட்டான் அவன்.
"ம்ம்ம்..." என இவனும் கட்டிலில் படுத்திருந்த அருவியை பார்த்துக் கொண்டே கூற.
"சரி நானும் வந்துடுறேன் சேர்ந்தே போகலாம்..." என்க.
"சரி வா..."என்றுவிட்டு கட்டிலில் கண்களில் கண்ணீரோடு வெற்றுமேனியில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
"அவன் கிளம்பிட்டானாம் நானும் அவன்கூட போய் ஜாயின் பண்ணிக்கிறேன் கீது நீ ஹாஸ்பிடல்தான வர..?" என கேட்க.
"வரனும் ஆனா இவளுங்களுக்கு ஆட்டோ புடிச்சு கொடுத்துட்டு அப்பறம்தான் வரனும்..." என்க.
"நானே ட்ராப் பன்றேன் வாங்க..." என்றுவிட்டு முன்னால் நடக்க அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அவனை பின் தொடர்ந்தனர்.
அவன் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.
அவன் கூறியது போலவே வனிதாவையும் அவள் தோழியையும் ஆட்டோ ஒன்றில் ஏற்றிவிட்டு கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு காரை எடுத்தவனின் முகம் யோசனையில் இருப்பது கண்ட கீர்த்தனா என்ன ஆச்சு என கேட்க.
"இல்ல அவ அப்பா ஏற்கனவே ஒரு கிரிமினல்னு எல்லோருக்கும் தெரியும்... கொலை பன்றதுலாம் அவனுக்கு ரொம்ப சாதாரணம்... வர்ஷினி அவன எதும் பண்ணாம பார்த்துக்கனும் இதுல அந்த குடும்பத்தோட மொத்த சந்தோஷமும் அடங்கி இருக்கு ஆனா உங்களுக்கு எப்படி அவன காப்பத்தனும்னு தோணுச்சு..." என கேட்க.
"இதுல என்ன இருக்கு இந்தர் ரொம்ப நல்லவன்... எனக்கு கூட ஒரு தாட் இருந்துச்சு அவன மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சா நல்லா இருக்கும்னு பட் பரவால்ல அவன் நல்லா இருந்தா போதும் நாமலாம் ஒரு உயிர காப்பாத்தற டாக்டர்ஸ் நம்ம கண்ணு முன்னாடி ஒரு குடும்பமே அழிஞ்சு போகும்போது அத காப்பத்ததான தோணும் இந்த படிப்பும் நம்ம பண்பாடும் நமக்கு அதத்தான சொல்லி கொடுக்குது வர்ஷினி மாதிரி ஒரு சைக்கோக்கிட்ட இருந்து இந்தர காப்பத்தனும்னு தோணுச்சு அதான் வேற ஒன்னும் இல்ல.." என்க.
"ஏன் நான்லாம் உங்கண்ணுக்கு தெரியவே மாட்டேனா..?" என சுந்தர் கேட்க.
"ஏன் தெரிய மாட்ட நல்லாவே தெரியற.."என அவள் கூற.
"நான் அத சொல்லடி..." என்றான் அவன்.
அவன் டி போட்டு பேசியதில் கோபமுற்றவள் "ஏய்...என்ன நீ ஏதோ உரிமை இருக்கறவன் மாதிரி டி போட்டு பேசிட்டு இருக்க நானும் முன்னாடி இருந்து பாக்கறேன் சரி அவளுங்க முன்னாடி உன்ன திட்டக்கூடாதுன்னு அமைதியா இருந்தேன்..." என்க.
"உரிமை உள்ளவனா மாறிடலாம்னு இருக்கேன்..." என்றான் அவன்.
அவனின் வார்த்தை புரிய "என்ன உளறிட்டு இருக்க..?" என அவள் கேட்டாள்.
கண்கள் அவனின் முகத்தை ஆழ்ந்து கவனிக்க அவன் முகம் எதையும் பிரதிபலிக்காமல் "நான் சீரியஸாதான் சொல்றேன் கீது... இது ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லனும்னு நினைப்பேன் ஆனா சரியான டைம் கிடைக்கல பட் ஐம் சீரியஸ் கீது உன்கைய உரிமையா பிடிச்சிக்கிற உரிமைய எனக்கு குடுப்பியா..??" என கேட்க.
அவளோ கண்களில் கண்ணீர்த் துளிகளுடன் பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்....