இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-22 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-01-2025

Total Views: 185

அத்தியாயம் 22

அருணா அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியாகி நிற்க.

"உள்ள வரலாம்மாம்மா...?" என திகம்பரன்தான் முதலில் கேட்டான்.

"யாரும்மா...?" என சக்கரவர்த்தியும் கேட்டுக் கொண்டே வந்தவர் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து ஒருநிமிடம் அதிர்ந்தவர் உடனே சுதாரித்து "வாங்க... வாங்கப்பா..."என அழைக்க அவர்கள் இருவருக்கும் அவரை பார்த்து புன்னகைக்க தர்மசங்கடமாக இருந்தாலும் வலிய புன்னகைத்துவிட்டு அவரை பார்த்து சிரித்தனர்.

"ஏன் அங்கேயே நிக்குறீங்க உள்ள வாங்க..."என தர்மனும் அழைக்க.

சற்று தயங்கியபடியே உள்ளே நுழைந்தனர்.

பத்மினிதான் "ஏம்பா எப்படி வீட்டு அட்ரஸ் கண்டுபிடிச்சி வந்தீங்க...?" என கேட்க.

"அது வந்தும்மா... முதல்ல கடைக்கு போனோம் அங்கதான் வீட்டு அட்ரஸ் கேட்டுட்டு வந்தோம்..." என பரசுராம் கூற.

அருவியோ உள்ளுக்குள் பயந்து நின்றிருந்தாள்.

சுசிலாவிற்கும் கூட அவர்களை பார்த்து பயம்தான்.

பின்னே ஊரில் பல அடிதடிகளை அவளது கண்களால் பார்த்து இருக்கிறாளே அதும் திகம்பரன் என்றால் அவளுக்கு இன்னும் உடல் நடுக்கம் கொள்ளும் அவனை இத்தனை அருகில் பார்ப்பாள் என அவள் நினைத்து பார்த்ததே இல்லை  அவளும் பயத்துடனே நிற்க.

திகம்பரனின் கண்கள் மறந்தும் அருவி இருந்த பக்கம் திரும்பவில்லை.

அவள் இன்னொருவனின் பொருள் ஆனப்பிறகு அவளை நினைத்து பார்ப்பது தவறு என அவன் எண்ணியவன் அதன்பிறகு அவளை மனதால் நினைத்து பார்க்கவே இல்லை.

இன்றும் அவன் கண்களுக்கு முன்னால் அவள் இன்னொருவனின் மனைவியாக நிற்கையில் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்.

இதுவே அவன் முன்பிருந்த பழிவெறி பிடித்த திகம்பரனாக இருந்து இருந்தால் இந்நேரம் அவளை கவர்ந்து சென்று இருப்பான்  ஆனால் அவன் எப்போது காளியம்மாளின் கதையை கேட்டானோ அப்போது இருந்து தன் அன்னையின் உன்னதமான காதலை உணர்ந்து கொண்டவன் அவர்களது காதலுக்கு முன்னால் தன் காதல் கால் தூசிக்கு பெறாது என நினைத்து அன்றோடு அவனின் இத்தனை வருட காதலையும் குழி தோண்டி புதைத்தவன் அன்றோடு அவளை பற்றிய எண்ணத்தை கைவிட்டான்.

"ஏன் நின்னுட்டே இருக்கீங்க உக்காருங்க தம்பி..." என அருணா கூற.

"இல்லம்மா... இங்க ஒரு கேஸ் விஷயமா இங்க வந்தோம்... அதான் உங்களையும் அப்படியே பார்த்துட்டு போலாம்னு...." என பரசுராம் இழுக்க அவன் தலையை தடவிய அருணா "அதனால என்னப்பா... இது உங்க வீடு மாதிரி எப்ப வேணா நீங்க இங்க வரலாம் உரிமையா இருக்கலாம் நாங்க என்ன சொல்ல போறோம் சரி வாங்க வாங்க சுசி இந்த வாசு எங்க போனான் இன்னும் வரல பாரு நீ போய் கெஸ்ட் ரூம காட்டுமா நீங்க குளிச்சிட்டு வாங்கப்பா சாப்பிடலாம்...." என்க.

"இல்லம்மா நாங்க கிளம்பறோம்..." என்றான் பரசுராம்.

திகம்பரன் வாயே திறக்கவில்லை.

சக்கரவர்த்தி இவர்களது உரையாடலில் கலந்து கொள்ளாமல் வெறும் பார்வையாளராகவே இருந்தார்.

"என்னை அம்மான்னுதான கூப்ட்ட உன் அம்மாவ பாக்க வந்தா இப்படித்தான் வந்த வாசல்லயே நின்னு பார்த்துட்டு போவியா பரவால்ல நீ என்மேல வச்சிருக்க பாசம் என பொய்யாக கோபிக்க திகம்பரன்தான் ஐயோ அம்மா என்ன பேசுறீங்க இப்ப உங்களுக்கு என்ன நாங்க இங்க சாப்பிடனும் அவ்ளோதான சரி சாப்படறோம்..."என்க.

"ஓ... பரவால்லயே சார் வாய திறந்து பேசறாரு சாப்பிடறது மட்டும் இல்ல ரெண்டு நாளைக்கு இங்க தங்கிட்டுதான் போகனும்..." என்க.

"இல்லம்மா அம்மா அங்க தனியா இருப்பாங்க..." என்றான் பரசுராம்.

"ரெண்டு நாளைல உங்க அம்மா ஒன்னும் தேஞ்சிட மாட்டாங்க எங்க வீட்டுக்கு சொந்தம்னு இதோ இவங்கள தவிர யாரும் வந்தது இல்ல இப்போ வீடு நிறைய சொந்தம் இருக்கறத பார்க்கறதுக்கே எவ்ளோ சந்தோஷமா இருக்கு பேசிட்டே இருக்காம போய் குளிச்சிட்டு வாங்க சுசிலா போம்மா..." என அவளை விருந்தினர் அறையை காட்ட சொல்ல அவளோ திகம்பரனை நினைத்து உள்ளுக்குள் பயந்து கொண்டே செல்ல அப்போதுதான் உள்ளே வாசு
 வந்தான்.

பத்மினிதான் "எங்கடா போன போனா போன இடம் வந்தா வந்த இடம் ஆமா எங்கேயாச்சும் போனா சொல்லிட்டு போறது இல்ல அங்கதான் அப்படி இருந்த இங்க வந்துமா...." என்க.

"அம்மா... போதும் தாளிக்கிறத நிறுத்து... இங்க பக்கத்துலதான் போய்ட்டு வந்தேன்... இது உங்களுக்குத்தான் புது இடம்... இந்த ஊரு எனக்கு பழக்கப்பட்ட இடம்தான் ஆமா யாரு வந்து இருக்காங்க வாசல்ல புதுசா ரெண்டு செருப்பு கிடக்குது..." என கேட்க.

தர்மனோ "திகம்பரனும் பரசுராமும் வந்து இருக்காங்க..." என்க.

வாசுவின் முகம் மாறியது.

"என்னப்பா சொல்றீங்க அவனுங்க எதுக்கு இங்க வந்தானுங்க...?"என கேட்க.

"ஏதோ கேஸ் விஷயமா வந்து இருக்கானுங்க உனக்கு என்னடா பிரச்சனை போ போய் குளிச்சிட்டு இந்தர் வரசொன்னான் இல்ல போய் கிளம்பு...." என்க.

"சரி நீங்களே ஒத்துக்கிட்டபிறகு எனக்கு என்ன..." என்றபடி கண்களை சுழலவிட அவன் தோளில் இடித்த பத்மினி "என்னடா யார தேடற...?" என கேட்க.

"யாரையும் இல்லையே...?" என்றான் அவன்.

"ம்ம்ம்ம்... அவ திகம்பரனையும் பரசுராமுக்கும் கெஸ்ட் ரூம காட்டப்போய் இருக்கா..."என்க.

"நான் ஒன்னும் அவள தேடலையே..." என அவன் தன் கெத்து குறையாமல் கூற.

"போதும் போதும் வழியுது துடைச்சிட்டு போய் கிளம்புங்க.." பத்மினி ஓட்ட.

"ச்சே... நீயெல்லாம் என்ன கலாய்க்கிற பாரும்மா... அதான் என்னால தாங்க முடியல..." என்றபடி தன் வலக்கரத்தை நெற்றியில் குத்தியபடி அவன் மேலே செல்ல அவர்களின் உரையாடலை கேட்டபடி வந்த சுசிலாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னே அவள்மேல் இருந்த கோபம் குறைந்துவிட்டது என்றுதானே அர்த்தம் அதனால்தான் அவளை தேடி இருக்கிறான் என்று எண்ணியவளின் முகம் பிரகாசமாக இருக்க அருவிக்கு அவள் முகம் காண காண அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

பின் உணவு உண்ணும் இடத்திற்கு வந்தவர்களுக்கு உணவை பரிமாறியவர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சியாக பேசி ஒருவரை ஒருவர் வாரியபடி பேசி சிரிக்க இதை பார்க்க பார்க்க எத்தனை அழகான குடும்பத்தை அழிக்க இருந்தோம் என திகம்பரனுக்கு உள்ளுக்குள் குற்றவுணர்ச்சியாக இருந்தது.

ஊரில் எப்போதும் முறைத்துக் கொண்டே திரியும் வாசுகூட சினேகமாக சிரிக்க உள்ளுக்குள் உடைந்தே போனான்.

பின்பு அவர்கள் இந்தரை காண கிளம்ப பரசுராமையும் திகம்பரனையும் அழைத்தான். 

அவர்களோ புதிதாக திருமணம் ஆனவர்கள் நீங்க தனியா போய்ட்டு வாங்க என்றுவிட.

பின் அருவி, சுசிலா மற்றும் வாசு மட்டும் கிளம்பினர்.

மருத்துவமனைக்கு சென்று ரிசப்ஷனில் சென்று அவர்கள் காத்திருக்க முக்கியமான கேஸில் இருந்த இந்தர் ஒரு அரைமணி நேரம் ஆகும் என கூற அவர்களோ அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

இந்தர் கூறியது போல அரைமணி நேரத்தில் வந்தவன் அருவியை பார்த்து அசந்துதான் போனான்.

வீட்டுக்கு போற வரைக்கும் தாங்காது போல என்ன இவ நாளுக்கு நாள் அழகாயிட்டே போறா இப்படியே நீ பிளாட் ஆனா அவள எப்படிடா பழி வாங்கறது இந்தர் என்றபடி அவர்கள் அருகில் செல்ல "ஒரு டென்மினிட்ஸ்டா வாசு ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடறேன்..." என்க.


"சீக்கிரமா வாடா..." என்றான் வாசு.

வாசுவின் அருகில் அமைதியாக நின்றிருந்த அருவியை கண்களால் விழுங்கியபடி அவன் அறைக்கு செல்ல முற்பட "ஹாய் இந்தர்...எங்கடா போன என்னையவிட்டு... உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா.... ஐ லவ் யூ டா செல்லம்..." என்றபடி அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை இறுக்கி அணைத்து இருந்தாள் வர்ஷினி.

அருவி கண்களோ தெறித்து விழும் அளவில் இருக்க மற்ற இருவரும் உறைந்து போய் நின்றிருந்தனர்..... 



Leave a comment


Comments


Related Post