Total Views: 180
அத்தியாயம் 24
இந்தரின் பேச்சு ஒன்றும் அத்தனை இனிப்பாக இல்லை வாசுவிற்கு.
"இந்தர், இது விளையாட்டு இல்ல.. வாழ்க்கை அவளப்பத்தி உனக்கு நல்லாவே தெரியும் நீ மட்டுமே உலகம்னு நம்பி வாழறவ அவள ஏமாத்திடாத..." என்க.
"டேய்... உன்னைவிட அவ மேல எனக்கு நிறைய அக்கறை இருக்கு.... அவள கஷ்டப்படுத்த நினைக்க மாட்டேன்... நீ எங்கள பத்தி கவலைப்படாம உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழற வழிய பாரு.... உன் சந்தோஷத்துல நம்ம குடும்ப நிம்மதி இருக்கு..." என்க.
"நீ சொல்றது சரிதான்... நீ சொன்ன வார்த்தை உனக்கும் பொருந்தும்.... அருவியோட சந்தோஷத்துலதான் நம்ம குடும்பத்தோட நிம்மதி இருக்கு..." என்றான் அவனும் விடாமல்.
"சரி...சரி... போதும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக்கிட்டது... அங்க பாரு உன் பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் மூஞ்ச தூக்கிட்டு இருக்காங்க... வா போவோம்..." என வாசுவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
பெண்கள் இருவரும் அவர்களை முறைத்த வண்ணம் இருக்க "ஏய் என்னடி என்னைய முறைக்கிற... அவன்தான் வழவழன்னு பேசிட்டு இருந்தான்..." என்க.
"நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்கிறதுக்கு எதுக்கு எங்கள கூட்டிட்டு வந்தீங்க...?" என அருவி கேட்க.
அவள் வார்த்தையில் "அருவி பேக் டூ பார்ம்..." என்றான்.
"என்ன சொன்னீங்க...?"என அவள் அதற்கும் எகிறிக் கொண்டு வர.
"ஏய்... ஏய்... நீ ரிலாக்ஸ் ஆகிட்டன்னு சொன்னேன்டி..." என்க.
"சரி நீங்க ரெண்டு பேருமே தனியா பேசிட்டு இருங்க... நாங்க ரெண்டு பேரும் போய் அலையில விளையாடுறோம்..." என்றவள் சுசிலாவின் கையை பிடித்துக் கொண்டு நகர "ஏய் இருடி நானும் வரேன்..." என்றுவிட்டு அருவியின் பின்னால் ஓடினான்.
சுசிலாவும் வாசுவை பார்த்து முறைத்துவிட்டு நகர.
"என்ன இவகூட முறைச்சிட்டு போறா...இந்த அருவி கூட சேர்ந்து இவளுக்கும் கொழுப்பும் கூடிப்போச்சு... வாயும் கூடிப்போச்சு..." என் கண்ணு முன்னாடி முழிக்காதன்னு சொல்லியும் கொஞ்சம்கூட பயப்படாம முறைச்சிட்டு போறா பாரு..." என நினைத்தவனுக்கு இந்தரை நினைத்து யோசனையாக இருந்தது.
"இவன் என்ன ஐடியாவுல இருக்கான்னு தெரியலயே..." என நினைத்தவன் "வீட்டுக்கு போனதும் சக்கரவர்த்தி அப்பாகிட்ட சொல்லனும்..." என நினைத்தவன் அவர்கள் மூவரின் பின்னால் நடக்க.
அவர்கள் மூவரும் அலையில் காலை வைத்து நனைத்தபடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
சுசிலாவும் அருவியும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நனைத்து கொண்டு இருக்க.
"பக்கத்துல நான் இருக்கேன் என்னைய விட்டுட்டு அவ கூட்டாளி கைய பிடிச்சுட்டு இருக்கா பாரு..." உள்ளுக்குள் பொறுமியவன் தான் அணிந்து இருந்த பேன்டை முழங்கால் வரை மடித்துவிட்டவன் ஒரே இடத்தில் நின்று தங்களை நோக்கி வரும் அலையை வேடிக்கை பார்த்தபடி இருக்க அவர்கள் அருகில் வந்து நின்றான் வாசு.
இருபெண்களும் புடவையில் இருக்க ஒருகையை கோர்த்துக் கொண்டும் மறுகையால் புடவையை தூக்கியபடி இருக்க இந்தரின் கண்கள் ஆர்வமாக அவளது கொலுசு அணிந்த கெண்டைக்காலை பார்த்தான்.
அவனது எண்ணம் தாறுமாறாக செலல பின்னந்தலையை தட்டி உலுக்கியவன் "இந்தர் அவ பக்கத்துல இருந்தாலே உன் எண்ணம் போற போக்கே சரியில்லை... நீ எப்படி இவள விட்டுட்டு இருப்ப இதுல அவள டைவர்ஸ் பன்ற எண்ணத்துல வேற இருக்க...உன்னைலாம் வச்சிட்டு..." என நினைத்தவனின் தோளில் வந்து இடித்தாள் அருவி.
அலை ஒன்று வேகமாக வர அருகில் வருமுன் பின்னால் நகர இருந்தவள் தடுமாறி அவனின் தோளில் இடிக்க அவனோ அவள் தடுமாறி விழாமல் தாங்கி பிடித்தவனின் கண்கள் அவள் கண்களையே காண அவர்களை கவனித்த வாசு சுசிலாவை ஜாடை காட்டி அழைக்க அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.
தத்தி என உதட்டசைத்தவன் அவர்கள் இருவரையும் காட்ட அதன்பிறகே அவளுக்கு உரைத்தது.
மெல்ல இருவரும் அவர்களைவிட்டு ஒதுங்கி சென்றனர்.
இப்போது இந்தரும் அருவியும் ஒருவரை பார்த்தபடி நின்றிருந்தனர்.
ஒருவரின் கண்களில் இருந்து மற்றொருவர் பார்வையை பிரிக்காமல் இருக்க.
ஒருவரின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என பார்வையாலேயே ஊடுருவி தெரிந்து கொள்ளும் ஆர்வம் போலும்.
ஒருவரை ஒருவர் ஆழ்ந்து நோக்கியபடி இருக்க.
பலமாக வீசிய காற்று சில்லென அவர்கள் முகத்தில் பட அதன்பிறகே இருவரும் இருந்த நிலையை உணர்ந்து அருவிதான் பட்டென விலகினாள்.
அப்போதும் அவள் தடுமாறி விழப்போக சட்டென அவள் இடையில் கைக்கொடுத்து தாங்கிப்பிடிக்க அவன் கைப்பட்ட இடம் குறுகுறுக்க உடல் சிலிர்த்தது அவளுக்கு.
அவளை நேராக நிற்க வைத்தவன் "உன்ன யாருடி புடவ கட்டிட்டு வர சொன்னது என்ன டெம்ப்ட் பண்ணனும் உனக்கு அதானே..." என கேட்க.
அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.
"என்னடி முறைப்பு இடுப்பு தெரியற மாதிரி புடவை கட்டறது கால் தெரியமாதிரி புடவைய தூக்கிட்டு ஓடி விளையாடறது இப்போ கீழ விழறமாதிரி என்ன கட்டிப்புடிக்கனும் அதான உன் எண்ணம் என்னைய மயக்கி உன் கைக்குள்ள வச்சிக்கனும் இல்ல..." என கேட்க.
அவளோ "இவன் என்ன பைத்தியமா...?" என்ற ரேஞ்சில் பார்த்தாள்.
எதேச்சையாக நடந்ததை எல்லாம் நான் வேணுமென்றே செய்தது போல பேசுகிறானே என நினைத்தவள் அமைதியாக அவனைவிட்டு விலகி நடக்க.
அவனின் பேச்சிற்கு பதில் கூறாமல் அவள் செல்வது அவனுக்கு கோபத்தை உண்டு பண்ண "ஏய் நில்லுடி..." என்றபடி ஈரமணல் காலில் புதைய வேகமாக நடந்தான்.
"ஏய்..." என அவளது பின்னலை பிடித்து இழுத்தவன் "நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கும் பதில் பேசாம போனா என்னடி அர்த்தம்...?" என்க.
"நீ கேக்கற கேள்வியே அபத்தமா இருக்குன்னு அர்த்தம்..." என்றாள் அவள்.
"என்னை எதிர்த்து பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு...?" என கேட்க.
"உண்மைய பேச தைரியம் எங்க இருந்து வரணும்...?" என்க.
"அப்படி என்ன உண்மைய பேசிட்டீங்க மேடம்..." என்றவன் சுசிலாவும் வாசுவும் சென்ற திசையை பார்க்க அவர்களோ சற்று தூரமாக நடந்து சென்றனர்.
இருவரின் கரங்களும் கோர்த்து கொண்டு சென்றது அவன் கண்களுக்கு பட அவன் கண்களில் மகிழ்ச்சியும் இதயத்தில் நிம்மதியும் பரவ இப்போது அருவியிடம் கொஞ்சம் விளையாட எண்ணம் கொண்டான்.
அவன் விளையாட்டு பின்னால் அவனுக்கே விபரீதத்தில் கொண்டு போய் முடிக்கும் என பாவம் அவனுக்கு தெரியவில்லை.
அருவியையும் இந்தரையும் விட்டு சென்ற சுசிலாவும் வாசுவும் சற்றுநேரம் அமைதியாக செல்ல ஒரு குட்டிக்குழந்தை அவர்கள் காலிற்கு இடையில் ஓடி வந்து விளையாட இருவரும் அக்குழந்தையை ஒன்றாக தூக்க குனிய இருவரின் தலையும் இடித்துக் கொண்டது.
இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவ.
குழந்தை அவர்களிடம் இருந்து தப்பித்து மீண்டும் ஓடியது.
இருவரின் கவனமும் விலக மீண்டும் அமைதியே ஆட்சி செய்தது இருவர்களிடமும்.
சுசிலாதான் மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.
"சாரி..." என அவள் ஒருவாரு கூறி முடிக்க.
அவளை மெல்ல திரும்பி பார்த்தவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க "நான் பேசினது தப்புதான் நான் அப்படி பேசி இருக்க கூடாது..." என்க.
அவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்கும் முன் அவன் முதுகில் தலையை வைத்து பின்னிருந்து அணைத்து இருந்தாள் சுசிலா.