Total Views: 180
அத்தியாயம் 25
சுசிலா பின்னிருந்து வாசுவை அணைக்க அதை எதிர்பாராதவன் அதிர்ந்து நிற்க.
இருள் தொடங்கிய நேரமாதலால் கூட்டமும் அதிகம் இல்லாமல் இருக்க அவளுக்கு வசதியாக போனது.
அவளின் எதிர்பாராத அணைப்பில் அதிர்ந்தவன் "ஏய் என்ன பன்ற...?" என திரும்ப,"ப்ளீஸ் அப்படியே இருங்க..." என்றாள் அவள்.
"எல்லாரும் நம்மளையே பார்ப்பாங்க முதல்ல தள்ளு..." என்றான் அவன்.
"யாரு பார்த்தா எனக்கு என்ன... நான் என் புருஷனத்தான கட்டிப்புடிச்சிட்டு இருக்கேன்..." என்க.
அவளின் வார்த்தைகள் அவனுக்குள் சாரலடித்தாலும் அவளது திடீர் மாற்றத்தில் அதிர்ந்து "என்ன பேச்சுலாம் ஒரு மாதிரி இருக்கு..." என்க.
"நான் சாரி சொன்னேன்..." என்றாள் அவள்.
"அத இப்படித்தான் கேப்பியா...?" என அவன் கேட்க.
அதன்பிறகு சுற்றம் உணர்ந்தவள் பட்டென அவனைவிட்டு விலகி நின்றாள்.
திரும்பி அவள் முகம் காண அவனது முகத்தை காண முடியாது அவளின் தலை தானாக தாழ்ந்தது.
அவனோ அவளை கண் எடுக்காமல் பார்க்க.
"ஏன் இப்படி பாக்குறீங்க..?" என அவள் உள்ளே சென்ற குரலில் கேட்க.
"ஒன்னும் இல்ல...என் பயந்தாங்கொள்ளி பொண்டாட்டி ஒருத்தி இருந்தா... அவள காணும்னு தேடிட்டு இருக்கேன்..." என்க.
அவளோ அணிந்து இருந்த சேலைத் தலைப்பை திருகியபடி தலை குனிந்து நின்றாள்.
"வா..." என அழைத்தவன் முன்னே செல்ல அவன் காலடியை தொடர்ந்து இவளும் சென்றாள்.
சற்று தொலைவில் ஒரு பழைய படகு நிற்க, அதன் அருகே சென்று கடல் அலையை பார்த்தவாறு அமர்ந்து கொண்டான் வாசு.
அவன் அருகில் சென்றவள் அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள, சற்றுநேரம் இருவருக்குள்ளும் அமைதியே நிலவ அவன்தான் அந்த அமைதியை கலைத்தான்.
"திடீர்னு என்ன...?" என அவன் கேட்க.
"அது... நீங்க முகம் திருப்பிக்கிட்டு போறது என்னால தாங்க முடியில.. நீங்க பேசாம போறது எ.. என... எனக்கு கஷ்டமா இருக்கு..." என்க.
"அதான் ஏன்னு கேட்டேன்..." என அவன் கேட்க.
"தெரியில..." என்ற ஒற்றை வார்த்தையில் பதில் உரைத்தாள் அவள்.
"ஓ...அப்போ எங்கிட்ட சொல்ல ஒன்னுமே இல்ல உனக்கு அப்படித்தான...?!" என அவன் கேட்க.
"அப்படி இல்லையே..." என்றாள் அவள்.
"நீயா பேசாம எதும் பண்ண முடியாது..." என்றான் அவன்.
அவள் அமைதியாக இருக்க அவனது பொறுமை எல்லை கடந்தது "ஏதாச்சும் பேசேன்டி... வாய்ல என்ன வச்சுருக்க... எப்போ பார்த்தாலும் தலை குனிஞ்சிக்க வேண்டியது..." என்றான் அவன்.
"மன்னிச்சிடுங்க..."என்றாள் அவள்.
அவனது பார்வை கூர்மையாக அவளை தாக்க.
"எல்லாத்துக்கும்தான்..." என்றாள் அவள்.
"அப்போ இத்தன நாளா என்மேல நம்பிக்கை இல்ல அப்படித்தான..."என அவன் கோபமாக கேட்க.
"ஐயோ அப்படி இல்ல என்னால உணர முடிஞ்சிது..." என்றாள் அவள்.
அவளது மனநிலை அவனுக்கு புரியத்தான் செய்தது.
அவளோ அவனிடம் வாய்விட்டு கேட்க தயங்கியபடி இருக்க அவனிடம் எப்படி இதைப்பத்தி கேட்பது என்ற எண்ணத்தில்தான் இத்தனை நாளாக ஒதுங்கியே இருந்தாள்,ஆனால் அவனது பாராமுகம் அவளை வருத்த என்ன ஆனாலும் இனி இவனோடுதான் தன்னுடைய வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தவள் இனி என்ன ஆனாலும் அவனுடன் மனதுவிட்டு பேசிவிட வேண்டும் என நினைத்தவள் இன்றைய நாளை அதற்கு வாய்ப்பாக மாற்றிக் கொண்டாள்.
சற்றுநேரம் அவனிடம் அமைதி.
பின் என்ன நினைத்தானோ "நிஜமா அன்னைக்கு உனக்கு எதும் ஆகல... ஆகவும் விட மாட்டேன் நான்... அப்படியே ஆனாலும் எனக்கு என் சுசியோட கள்ளங்கபடமில்லாத அன்புதான் வேணுமேத்தவிர... அவ உடம்பு இல்ல... இது என்னை பார்த்ததும் பயந்து நடுங்கி என் முகம் பாக்க வெட்கப்படுவாளோ அவதான் வேணும்... என்ன பார்த்ததும் அவ கண்ணு மட்டும் அதிர்ச்சியா விரிஞ்சு சந்தோஷத்துல ஒளிரும்... எனக்கு அதுதான் வேணும்... என்ன விரும்பனும்... என் காதல் புரியனும் என்னைக்கு அவளுக்கு புரிஞ்சு என்னை தேடி வராளோ அன்னைக்கு அவளுக்கும் எனக்குமான வாழ்க்கை தொடங்கும்... அவ என்னை ஏத்துக்கிற வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேனே தவிர... ஒரு நாளும் அவள நான் சந்தேகப்பட மாட்டேன்... அவளே அவள நம்பலனாலும் பரவால்ல... எனக்கு அவமேல எனக்கு நம்பிக்கை இருக்கு யாருக்காகவும் ஏன் அவளுக்காகவும்கூட அவளவிடற ஐடியா இல்ல... எனக்கு..." என தன் நீண்ட உரையை முடிக்க,அவன் காதலில் திக்குமுக்காடியவள் வேகமாக அவன் அருகில் சென்று அவனை அணைத்து இருந்தாள்.
அவர்களுக்கு சற்று தள்ளி அமர்ந்து இருந்த அருவியும் இந்தரும் அமைதியாக நேரத்தை கழித்தனர் கரையை வேகமாக வந்து தொடும் அலையை பார்த்தவாறு.
அந்த அலையை போலவே அவளது மனமும் குமிறிக்கொண்டு இருந்தது.
அவனும் அலையை பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.
எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பந்து அவள் முகத்தில் வேகமாக பட சட்டென சுதாரித்து அதை லாவகமாக தடுத்தவன் திரும்பி அவள் முகத்தை பார்த்தவன் "பந்து வந்து விழறதுகூட தெரியாம என்ன யோசனை..?" என அவளை உலுக்க.
அவனது உலுக்கலில் சுதாரித்தவள் அவன் முகத்தை பார்க்க "என்ன யோசனைலாம் பலமா இருக்கு என்னை எப்படி போட்டு தள்ளலாம்னு யோசிக்கிறியா...?" என கேட்க.
"உங்கள ஏன் நான் போட்டு தள்ளனும்...?" என அவள் கேட்க.
"இல்ல உன்னை ரொம்ப கொடுமை படுத்தறன்னோ..?!" என அவன் கேட்க.
"அதான் உங்க வாய்ல இருந்தே வந்துடுச்சே..." என அவள் கூற.
"இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சலிச்சிக்கிட்டா எப்படி..?" என அவன் கேட்க.
அவளோ அவன் கண்களை காண அதில் அவளால் எதையும் கண்டறிய முடியவில்லை.
"என்ன என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படுறியா..??" என கேட்க.
அவள் தலைகுனிந்து கொண்டாள்.
"நீ ரொம்பலாம் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க வேணாம்... நானே சொல்றேன் உன்னை பழிவாங்கதான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இத்தனை நாளா நான் பட்ட வலிக்கு நீ பதில் சொல்லனும்னு நினைச்சேன்... அதான்... தூரத்துல நீ இருந்தா... உன்ன பழிவாங்கறது எனக்கு ஈசி கிடையாது... பக்கத்துலயே வச்சிட்டா... எனக்கு நான் பட்ட அவமானம் நியாபகம் வரும் போதெல்லாம்... உன்ன கஷ்டப்படுத்தலாம்... அதுல எனக்கு ஒரு திருப்தி உண்டாகும்...அதுக்குதான் இத கட்டினேன்... என அவள் கழுத்தில் இருந்த தாலியை இழுத்து காட்ட.
அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
ஊரில் அவன் கொஞ்சியது என்ன இங்கு இவன் பேசுவது என்ன என அவளுக்கு தோன்ற.
"என்னய பழி வாங்கிட்டா நீ திருப்தி ஆகிடுவியா மாமா..?" என அவள் கேட்டாள்.
எத்தனை அடக்கியும் அழுகை வெளிவர அவளது குரல் மாற்றத்திலேயே அவள் அழுகிறாள் என தெரிந்து கொண்டவன் "அழுறியா... அழு நல்லா அழு... இது முடிவு இல்ல இது ஆரம்பம்தான் ஆமா கேட்கனும்னு நினைச்சேன் நீ இந்த மாசத்துக்கு இன்னும் தலைக்கு குளிக்கல இல்ல ஐ மீன் நீ இன்னும் பீரியட் ஆகல ரைட் எவ்ரி மந்த் செவன்டீன் இல்லான எய்ட்டீன் இந்த ரெண்டு டேட்ல நீ பீரியட் ஆகிடுவ ஆனா இந்த மந்த் நீ இன்னும் ஆகல இல்லையா..?" என அவன் கேட்க.
ஒவ்வொரு நாள் இரவும் தன்னை நெருங்கும் போதும் இதை நினைவில் கொண்டே தன்னை நெருங்கி இருக்கிறான் என்ற எண்ணமே அவளை சுக்கு நூறாய் உடைத்தது.
ஊரில் இருக்கும்போது காதலாக பார்ப்பதும் பார்வையில் அவளை துகிலுரிப்பதும் தனிமை கிடைக்கும் நேரத்தில் அவளை திக்குமுக்காட வைப்பதும் வாலிப பையன் போல அவள் பின்னே அலைந்ததும் அவள் நினைவில் வர உள்ளுக்குள் உடைந்தே போனாள் அவள்.
"என்ன அமைதியா இருக்க வீட்டுக்கு போனதும் முதல்ல செக் பண்ணி பாக்கனும்..."என அவன் கடமைக்கு கூற அவளுக்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை.
"அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் என்றவன் நீ இன்னைக்கு பாத்தியே வர்ஷினி என்னை கட்டிக்கிட்டு நின்னத அது ஒன்னும் சும்மா இல்ல அவளும் நானும் என நிறுத்தியவன் தலையை அழுந்தக்கோதி வேறுபுறம் பார்வையை செலுத்திக் கொண்டே அவளும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறோம் இடையில் நீ வந்துட்ட ஆனா ஒன்னும் பிரச்சனை இல்ல நீ அவள தனியா வீடு பார்த்து வச்சிக்கலாம்னு இருக்கேன்..." என அவன் கூறி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் அருவி.