இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-27 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 07-01-2025

Total Views: 182

அத்தியாயம் 27

"ஹலோ சக்கரவர்த்திங்களா..?' என்ற அழைப்பில் யோசனையான சக்கரவர்த்தி, "ஆமா... நான்தான் நீங்க...?"என கேட்க.

"சுரேந்தர்ங்கிறது...?" என எதிர்முனையில் கேட்க.

"என் பையன்தான்ங்க நீங்க யாருங்க..?" என அவர் மீண்டும் சற்று கோபமாக கேட்க.

"சார் இந்த குரல உசத்தற வேலைலாம் வேணாம்... நான் போலிஸ்  ஸ்டேஷன்ல இருந்து கூப்படறோம்..." என்க.

சற்று பதட்டமானவர் "சார்... இந்தர் என் பையன்தான் சார்..." என்க.

"வாசுங்கிறது..." என மீண்டும் கேட்க.

"அவனும் என் பையன்தான் ரெண்டு பேருக்கும் இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு அவங்கவங்க பொண்டாட்டிய கூட்டிட்டு பீச் போனாங்க சார்..." என கூற.

"இங்கதான் இருக்காங்க... கொஞ்சம் நீங்க வந்துட்டு போங்க..." என கூற.

உள்ளுக்குள் அதிர்ந்தாலும் "சார் பெருசா ஏதும் பிரச்சனையா...?" என கேட்க.

"எல்லாமே போன்லதான் கேப்பீங்களோ நேர்ல வாங்க சார்..." என்றவர் என போலிஸ் ஸ்டேஷன் அட்ரஸையும் கூறிவிட்டு போனை கட் செய்ய.

"தர்மா..." என்றபடி வேகமாக கீழே இறங்கியவர் டைனிங் டேபிளில் அருணாவும் பத்மினியும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து "பத்மா..." என அழைக்க "சொல்லுங்க மாமா தூங்க போறேன்னீங்க இன்னும் தூங்காம என்ன பன்றீங்க...?" என பத்மினி கேட்க.

"தர்மா எங்கம்மா...?" என கேட்க.

"அவரு இப்பதான் தூங்கறேன்னு போறேன்னு சொன்னாரு மாமா... கூப்பிடட்டுமா...?" என கேட்க.

"ம்ம்ம்ம் கூப்டு...." என்றவர் கார் சாவியை எடுக்க.

"இப்ப எதுக்குங்க கார் சாவிய எடுக்கிறீங்க...?" என அருணா கேட்க.

"நானும் தர்மனும் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரோம்மா நீங்க கதவ சாத்திட்டு உறங்க போங்க... ஜானகி எங்க...?"என கேட்க.

"அவங்க மாத்திரையை போட்டுட்டு தூங்க போய்ட்டாங்க இந்த நேரத்துல வெளிய போகனுமா என்ன நாங்களே போன பிள்ளைங்கள இன்னும் காணும்னு இருக்கோம் இதுல நீங்களும் வெளிய போறேன்னு சொன்னா என்ன பன்றது....  என அருணா கேட்க.

"போனதும் வந்துடறோம்மா..." என்றவர் பொறுமையின்றி "தர்மா...." என அழைக்க.

"இதோ வந்துட்டேண்ணா..." என சட்டையை மாட்டிக் கொண்டே வந்தவர் "என்னண்ணா என்ன ஆச்சு...?" என கேட்க.

அவர் கண்களால் ஏதோ சைகை செய்ய.

அதை புரிந்தவர் "சரி நீங்க தூங்குங்க நாங்க வந்துடுறோம்..." என்றுவிட்டு தர்மன் முன்னால் போக பெண்கள் இருவரையும் பார்த்துவிட்டு "பத்திரம்...." என கூறியவர் வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

போலிஸ் கூறிய அட்ரஸிற்கு அரைமணி நேரத்தில் அடைந்தனர்.

உள்ளே நுழைந்தவரின் கண்களுக்கு முதலில் தென்பட்டது அழுகிய முகத்தோடு இருந்த சுசிலாதான்.

காரில் வரும்போதே போலிஸ் கூறியதை தர்மனிடம் கூறி இருந்தார்.

"அண்ணா சுசிலா அங்குட்டு நிக்கிறா பாருங்க..." என அவள் நின்ற இடத்தை காட்ட.

அவ்விடம் நோக்கி வேகமாக நடந்தனர் இருவரும்.

வெளியே போட்டிருந்த பெஞ்சில் முந்தானையை வளைத்து போர்த்தியபடி குளிருக்கு நடுங்கியபடி அமர்ந்து இருந்தாள் அவள்.

அருகில் சென்றவர்கள் "அம்மா சுசிலா..." என சக்கரவர்த்தி அழைக்க அவரின் குரல் கேட்டதும்தான் உயிர் வந்தது அவளுக்கு.

"என்னம்மா... என்ன ஆச்சு ஏன் இங்க இருக்கீங்க எங்க அவனுங்க..?" என கேட்க.

அவளோ அவர்களை கண்டதும் அழுகை பெருக்கெடுத்து இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள் "அழாதம்மா அவனுங்க எங்க..?" என தர்மன் கேட்க.

உள்ளே  என கையை காட்டினாள் அவள்.

உள்ளே செல்ல முற்பட்டவர்கள் அழாத "ஆமா நீ இங்க இருக்க அருவி எங்க..?" என கேட்க.

அவளுக்கு இன்னும் அதிகம் அழுகை வர தேம்ப தொடங்கினாள்.

வார்த்தையே வரவில்லை அவளுக்கு.

அவள் தேம்பிக் கொண்டே பேசியதில் அவள் கூறுவது அவர்களுக்கு தெளிவாக புரியவும் இல்லை.

தர்மனோ "அழுகாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுமா..." என கூற.

"அத இங்க கேளுங்க சார்..." என்ற குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர்.

போலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் நிற்க.

"சார் நான்தான் சக்கரவர்த்தி சக்கரவர்த்தி க்ரூப் கம்பெனியோட ஒனர்..."என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள.

"சார் உங்கள தெரியாமையா நீங்க இந்த ஊருல பெரிய ஆளாச்சே ஆனா பையன்தான் சரியில்லை சரி சரி இன்ஸ்பெக்டர்.. உங்களுக்காக காத்துட்டு இருக்காரு இந்த கேஸ முடிச்சிட்டுதான் நாங்க வீட்டுக்கு போக முடியும்..."என்க.

"சரிங்க சார்..."என்றவர்கள் சுசிலாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல.

அங்கு இன்ஸ்பெக்டரின் இருக்கையில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஆள் அமர்ந்து இருக்க அவருக்கு ஒருபக்கம் இந்தரும் மறுபக்கம் வாசுவும் நின்றிருந்தனர்.

இருவரது முகமும் வீங்கி இருந்தது.

"என்ன ஆச்சு இவனுங்களுக்கு..." என யோசித்தவர் "சார்..."என அழைக்க.

"நீங்க..." என அவர் கேள்வியாக நோக்க.

"நான் சக்கரவர்த்தி இது என் தம்பி..." என தர்தமனையும் அறிமுகப்படுத்த "ஓ... சார் நீங்களா...?" என அவர் எழுந்து நின்று சக்கரவர்த்திக்கு கைக்கொடுக்க.

"நீங்க..." என சக்கரவர்த்தி யோசனையாக கேட்க.

"சார் என்னைய தெரியலயா நான் விக்ரம் உங்க ட்ரஸ்ட் மூலமாத்தான் நான் படிச்சு இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன்..." என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

"மன்னிச்சுக்குங்க தம்பி எனக்கு நினைவு இல்ல இவங்க ரெண்டு பேரும் என் பசங்கதான்..." என்க.

"ஓ... என்றவன் சார் மன்னிச்சுடுங்க உங்க ரெண்டு பசங்களும் பீச்சுல ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க அங்க இருக்கவங்க விலக்கியும் ரெண்டு பேரும் அடங்கல அங்க ரவுண்ட்ஸ் போன கான்ஸ்டபிள்ஸ்தான் பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்தாங்க..." என்க.

"சார் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் நீங்க சொல்றதுக்கு நூறு பர்சென்ட் வாய்ப்பே இல்ல..." என தரமன் கூற.

"சார் அப்ப நாங்க பொய் சொல்றோமா..."என்றவர் கையில் இருந்த மொபைலை காட்ட அதில் இருவரும் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் அடித்துக் கொண்டு இருப்பதை கண்டு அவர்களது கண்களை அவர்களாலே நம்ப முடியவில்லை.

அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க சிறியவர்கள் இருவரும் தலையை குனிந்து இருந்தனர்.

இவர்களுக்கே இப்படி என்றால் வீட்டில் உள்ள பெண்கள் பார்த்தால் என்ன ஆகும் என தெரியவில்லை என தர்மன் நினைக்க.

"என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்..." என சக்கரவர்த்தி நினைத்தார்.

"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க நீங்க அடிச்சிக்கிட்டீங்கங்கிறத எங்களாலேயே நம்ப முடியலையே உங்க அம்மாங்க ரெண்டு பேரையும் நினைச்சு பாருங்க..." என தர்மன் கேட்க.

இருவரும் அப்போதும் அமைதியாக இருந்தனர்.

"சரி எதுக்காக அடிச்சிக்கிட்டீங்கன்னு கேக்கல... அருவி எங்க சுசிலா மட்டும் இருக்கா..." என வாசுவிடம் சக்கரவர்த்தி கேட்க.

"அவள காணும்பா..." என்றான் வாசு.

பெரியவர்கள் இருவரும் அதிர்ச்சியாக.

"என்னடா சொல்றீங்க எங்கடா அருவி நீங்க எல்லோருமே ஒன்னாதான வந்தீங்க நீங்க மூணு பேரும் இருக்கீங்கன்னா அவ எங்க போனா இவன் அவக்கூட ஏதாச்சும் சண்டை போட்டானா..." என சக்கரவர்த்தி கேட்டார் அவரது பொறுமை எல்லை மீறியிருந்தது.

"அப்பா..." என அங்கு நடந்ததை கூறினான் வாசு.

அவன் கூறியதை கேட்டதும் வேகமாக எழுந்தவர் இந்தரின் கன்னத்தில் ஓங்கி அறைய தர்மன் அமைதியாக நின்றார்.

முதன் முதலாக இந்தரின் மேல் கோபப்பட்டு இருக்கிறார் தர்மன்.

அவனை சக்கரவர்த்தி அடிப்பதை  வேடிக்கை பார்த்தார் தர்மன்.

அருவியோ இருட்டில் எங்கே போவது என தெரியாமல் அந்த ஊரின் எல்லையை தாண்டி சென்று கொண்டிருந்தாள்....



Leave a comment


Comments


Related Post