இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-29 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 09-01-2025

Total Views: 178

அத்தியாயம் 29

இரவு மணி பதினொன்று போல இருக்கும் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு பெண்கள் இருவரும் வந்து ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்க்க காரில் இருந்து இந்தர் இறங்குவது தெரிந்தது.

"அக்கா இந்தர்தான் வரான்... கூடப்போனவங்க யாரையும் காணும்.." என பத்மினி கேட்க.

"இரு பத்மா அவன் உள்ள வரட்டும்..." என்றார் அருணா.

காலிங்பெல்லை அவன் அழுத்தும் வேகத்தில் தெரிந்தது அவன் கோபமாக இருக்கிறான் என.

கதவை திறந்தவரை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் சட்டை மடிப்பை வெளியே எடுத்துக் கொண்டு மேலே ஏற "இந்தர் எங்க நீ மட்டும்தான் வந்துருக்க வாசு அருவி எல்லாரும் எங்க..?" என கேட்க.

"வருவாங்க..." என்றவன் மேலே ஏற.

"நில்லுடா..." என்ற கர்ஜனை குரல் கேட்டு திரும்பாமல் அப்படியே நின்றவன் "பீச்ல என்ன நடந்துச்சு...?" என கேட்க.

அதற்குள் "ஏங்க என்ன ஆச்சு ஏன் இப்படி இந்த நேரத்துக்கு கத்திட்டு இருக்கீங்க..?" என கேட்க.

"நான் கத்தறனா உன் பையன் என்ன பண்ணிட்டு வந்து நிக்கிறான்னு தெரியுமாடி...?" என கத்தி கேட்க.

"ஏங்க என்ன ஆச்சு ஏன் மாமா இப்படி கோபமா இருக்காரு இந்தர் அப்பா கோபப்படற மாதிரி என்னப்பா பண்ண ஏன்பா இப்படி ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கீங்க...?" என பத்மினி கேட்க.

"பத்மா நீ கொஞ்சி கேக்கற மாதிரியான வேலைய சார் பண்ணல..." என சக்கரவர்த்தி கூற.

"மாமா ஏன் இவ்ளோ கோபம் நான் பேசிட்டு சொல்றேன் அவன எதுவும் சொல்லாதீங்க மாமா...." என்க.

"பத்மா நீ அமைதியா இரு..." என்றவர் அவன் முன்னால் வந்து நிற்க.

"சுசிலா சொன்னது எல்லாம் உண்மையா..?" என கேட்க.

அவனோ இப்போதும் அதே அழுத்தத்தோடு நின்றிருக்க.

"சொல்லுடா எதுக்கு வாசுவ அடிச்ச...?"என கேட்க.

பெண்கள் இருவருக்கும் அதிர்ச்சி.

அருணா சக்கரவர்த்தியின் அருகில் வந்தவர் "என்ன சொல்றீங்க இந்தர் வாசுவ அடிச்சானா ஏதாச்சும் நம்பற மாதிரி சொல்லுங்க..?" என்க.

"நான் என்ன பைத்தியமா அருணா உன் பையன் இன்னைக்கு பண்ணிட்டு வந்திருக்க காரியத்தை கேட்டா நீயே அவன மன்னிக்க மாட்ட..." என்க.

"ஏங்க நெஞ்செல்லாம் பதறுதே என்னென்னு சொல்லுங்க நீங்க இப்படி கோபப்படற அளவுக்கு அவன் என்ன பண்ணான் வாசு எங்க..??என அவனை தேட அவனோ கேட்டிற்கு முன்னால் நின்றிருந்தான் உடன் சுசிலாவும்.

அவர்கள் அருகில் சென்றவர் "சுசிலா ஏன் இங்கயே நின்னுட்டு இருக்கீங்க உள்ள வராம பனியில உடம்புக்கு முடியாம போய்ட போகுது வாசு பனி உனக்கு சேராதுன்னு தெரியும்தான அப்பறம் எதுக்கு உள்ள வராம இங்க நின்னுட்டு இருக்க ஆமா கிட்ட வா..." என அவன் கன்னத்தை பிடித்து பார்க்க அங்காங்கே நகக்கீறல்களும் வலப்பக்க கன்னம் வீங்கியும் இருக்க வாசு என அதிர்ந்தவர் "என்னடா ஆச்சு ஏதாச்சும் வாய தொறந்து சொல்லுங்களேன்டா ஏன் அமைதியா இருந்து சாகடிக்கிறீங்க அருவி எங்கடா...?" என கேட்க.

அவளோ காரைவிட்டு இறங்காமல் இருந்தாள்.

சுசிலாவின் பார்வை காரை பார்க்க.

அருணாவின் பார்வையும் அங்கே சென்றது.

"அங்க என்ன..?" என காரின் அருகே சென்றவர்.

காரினுள் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டு இருந்தாள் அருவி.

பத்மா வெளியே வந்து பார்த்தவர் "அக்கா என்ன ஏதோ முனியடிச்ச மாதிரி இருக்குங்க எல்லாமே ஏங்க நீங்கதான் லொட லொடன்னு பேசுவீங்களே நீங்களும் இன்னைக்கு அமைதியா இருக்கறது பார்த்தா ஏதோ பெருசா நடந்துருக்கு போலவே..." என்க.

"அத உன் பெரிய பையன்கிட்ட கேளு..." என்க.

"எதுக்கு அவன ரெண்டு பேரும் மாத்தி மாத்தி திட்டிட்டு இருக்கீங்க நான் கேக்கறேன்..." என்றவர். 

"இந்தர் அப்பா என்ன சொல்றாங்க நீயும் வாசுவும் சண்டை போட்டுக்கிட்டீங்கன்னு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு உன்னையும் அவனையும் எங்களுக்கு தெரியாதா என்ன...?" என கேட்க.

"பத்மா அவன கொஞ்சிட்டு இருக்க இது நேரம் இல்ல அவன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்னு கேட்டு சொல்லு..."என சக்கரவர்த்தி கேட்க.

"அங்க என்ன கேக்குறீங்க என்னய கேளுங்க நீங்க கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் என்றவன் ஆமா சுசிலா சொன்னது எல்லாம் உண்மைதான் இப்ப அதுக்கு என்ன பண்ணனும் அவள பார்த்தாவே எரிச்சலா இருக்கு இன்னும் கொஞ்ச நாள் அவ என் பக்கத்துல இருந்தா நானே அவள கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் போய்டுவேன் அவள பார்த்தாவே எனக்கு பிடிக்கல போதுமா அவன் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசனான் அதான்..." என அவன் இழுக்க.

"அதனால வாசுவையும் அருவியையும் சேர்த்து வச்சு பேசுனியா...?" என கேட்க.

"ஆமா இதுல என்ன இருக்கு அவமேல கட்டின புருஷன் எனக்கு இல்லாத அக்கறை அவனுக்கு எதுக்கு அதான் அப்படி பேசினேன்..." என அலட்சியமாக பதில் கூற.

அவன் கன்னத்தில் இடியென விழுந்தது ஒரு அறை.

அவன் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க அங்கு அருணா ருத்ரகாளியாய் நின்றிருந்தார்.

"யார பார்த்து என்ன சொல்லிட்டு இருக்க தொலைச்சிடுவேன் ராஸ்கல் நானும் போனா போகுதுன்னு விட்டுட்டு இருந்தா நாளுக்கு நாள் உன் தொல்லை அதிகமாத்தான் ஆகுது இப்ப என்னடா உனக்கு பிரச்சனை அருவி உன்ன அவமானப்படுத்திட்டா அவ்ளோதான எங்களுக்கு இல்லாத அவமானமா உனக்கு நாங்களே அத மறந்துட்டோம் ஏன்னா அண்ணன் தங்கச்சி உறவுன்றது அவ்வளவு சீக்கிரம் முடியற உறவு கிடையாது உன் மாமா பண்ண தப்புக்கு அருவி அம்மா என்ன பண்ணுவான்னு நாங்களே அத பெருசா எடுத்துக்கிறது இல்ல உனக்கு என்னடா பெரிய இவனாட்டம் உன்னால எப்படிடா அப்படி யோசிக்க முடிஞ்சிது ச்சே நீ என் பையனே இல்ல நீ என் வயித்துல பிறந்துவனா இருந்து இருந்தா ஒரு பொண்ண பத்தி தப்பா பேசி இருக்க மாட்ட.." என்றவர் கணவனின் அருகில் சென்றவர் "என்னைய மன்னிச்சுடுங்க நீங்க அவன கண்டிச்சு வைன்னு சொன்னீங்க நான்தான் கேக்கல..." அதுக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டான் அவன் என அழுகு.

"நீ எதுக்கு அழற அருணா என் விதி அப்படி இருக்கு..." என்றவர் "என் கண்ணு முன்னாடி வராத இனி எப்பவுமே உன்னைய பாக்க நான் விரும்பல இனி ஒரு நிமிஷம்கூட நீ இங்க இருக்க கூடாது இனி நொடி இங்க நிக்க உனக்கு தகுதி இல்ல வெளிய போடா..."என்க.

"அண்ணா அவசரப்படாதீங்க..." என்றார் தர்மன்.

"இதுக்குமேல பொறுமையா இருக்க என்ன இருக்கு இனி இவன் என் மூஞ்சில முழிக்க கூடாது தர்மா இங்க இருந்து போக சொல்லு இனி அருவிதான் எங்க வாரிசு அவதான் நாளைக்கு எங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுனா பாக்கனும்..." என்க

அருணா இன்னும் கத்தி அழத்தொடங்கினார்.

யாராலும் அவரை தேற்ற முடியவில்லை.

பெற்ற மகன் கற்சிலை போல் நின்றான் அவன் தாய் அழுவதை பார்த்து.

பத்மா இன்னும் இந்தர் பேசிய அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை

தர்மனும் அமைதியாக நிற்க

அருணா அழுவதை தாங்கிக் கொள்ள முடியாத வாசு உள்ளே ஓடிவந்தவன் "அம்மா எதுக்கு அழறீங்க இப்ப என்ன நடந்துப் போச்சு அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதே  இல்லையா என்ன சின்னவயசுல நாங்க அடிச்சிக்கல இப்ப அடிச்சிக்கிறோம்னு நினைச்சிக்குங்க அருவியவும் என்னையும் சேர்த்து வச்சு பேசினா அது உண்மையாகிடுமா என்ன வேணாம் நீங்க அழக்கூடாது..." என அவரின் முகம் தாங்கி கண்ணீரை துடைத்துவிட அவனை அணைத்து கொண்டு மேலும் அழ ஆரம்பித்தார் அவர்.







Leave a comment


Comments


Related Post