இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-33 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 13-01-2025

Total Views: 175

அத்தியாயம் 33

தலைவலி உயிரை கொன்றது இந்தருக்கு,இன்னும் எத்தனை இதயத்தை நொறுக்க போகிறேன் என எண்ணயவன் தலையில் கையை வைத்து இருக்கையின் பின்னால் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

கடவுளே இது அனைத்தையும் சரி பண்ணும் ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியபடி அமர்ந்து இருந்தவன் முன்னால் டீயின் மணம் நாசியில் நுழைந்து இழுக்க சட்டென கண்களை திறந்து பார்த்தவனின் கண்முன்னால் ஆவி பறக்க டீ இருந்தது.

 உள்ளுக்குள் மகிழ்ந்தவனுக்கு அதன்பின் வருத்தமும் உண்டானது அருவி என் வாழ்க்கைல வராமலே இருந்து இருக்கலாம் என நினைத்தவனின் பார்வை சுற்றிலும் அவளை தேடியது.

அவளோ அவன் கண்களுக்கு அகப்படவில்லை.

தான் இவ்வளவு பேசியும் தன்னைவிட்டு அகலாமல் இருக்கும் அவள் அன்புக்கு தான் கொடுக்கும் தண்டனை மிக அதிகம் என எண்ணியவன் அவள் வைத்திருந்த டீயை கையில் எடுத்தவன் பின் என்ன நினைத்தானோ அதை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் பழையபடியே சோபாவில் சாய்ந்து கொள்ள இதை பார்த்தவளுக்கு இன்னும் வலித்தது.

என்னதான் அவன் அவளை தவறாக பேசினாலும் சற்று கோபம் குறைந்ததும் கீழே இறங்கி வந்தவளுக்கு அவன் அமர்ந்திருந்த தோற்றம் வருத்தத்தை கொடுக்க உடனே எதையும் யோசியாமல் டீயை போட்டு அவன் முன் வைத்தவள் அவன் கண்ணை திறந்து பார்க்கும் முன் அவ்விடம் விட்டு அகன்று இருந்தாள்.

அவன் குடிக்கிறானா என்பதை மறைந்து இருந்து பார்த்தவளுக்கு அவன் எடுத்துவிட்டு மீண்டும் வைத்ததை பார்த்து மேலும் வருத்தமே மிஞ்சியது.

எதும் பேசாமல் மீண்டும் அவளது அறைக்குள்ளே அடைந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ காலிங்பெல் ஓசை கேட்டு எழுந்தவன் எழுந்து சென்று கதவை திறக்க அங்கு சுந்தர் நின்றான். 

அவன் கண்கள் அனலை கக்கியபடி இருந்தது.

"நீயா..." என்றவன் கதவை திறந்துவிட்டு உள்ளே செல்ல "நில்லுடா..." என்றவன் அவன் முன்னால் வந்து நின்றான்.

"என்னடா பண்ணி வச்சிருக்க ரெண்டு நாள் ஊருல இல்ல குடும்பத்தையே சிதைச்சு வச்சிருக்க..?" என கேட்க.

"அது என் பிரச்சனை நீ எதுக்கு வந்த....?" என இந்தர் கேட்க.

"எப்போல இருந்து உன் என் பிரச்சனைன்னு தனியா பிரிஞ்சுது...?" என சுந்தர் கேட்க.

"இனி எல்லாமே அப்படித்தான்..." என்றவன் மாடியேறப் போக நான் "கேக்கறதுக்கு பதில் சொல்லிட்டு போடா..."என்றான் சுந்தர்.

இந்தரோ, "உனக்கு என்ன வேணும் இப்ப ஏன் இங்க வந்துருக்க வந்த வேலை என்னவோ அத முடிச்சிட்டு கிளம்பு..." என்க.

"நான் உங்கிட்டதான் பேச வந்துருக்கேன்..." என்க.

"இங்க பாரு இந்தர் நீ ரொம்ப ஓவரா போற இது நல்லதுக்கு இல்ல..." என்றான் அவன்.

"எனக்கு எல்லாம் தெரியும் உன் வேலைய பாரு.. இனி என் விஷயத்துல நீ தலையிடாத இங்க வர வேலையும் வச்சிக்காத..." என்றான் அவன் கண்களை நேராக பார்க்காமல்.

"அத என்னை பார்த்து சொல்லு..." என்றவன் மீண்டும் அவன் முன்னால் சென்றான்.

"உனக்கு என்னடா வேணும் உங்க யாரையும் பார்க்க பிடிக்கல போதுமா அப்படியே போகும்போது அவ.. அதான்... உன்னுடைய  தங்கச்சி அவளையும் சேர்த்து கூட்டிட்டு போய் ஊருல விட்ரு..." என்க.

"நான் ஏன் அவள கூட்டிட்டு போகனும் அவ புருஷன் நீ இருக்கும்போது..." என்க.

"இனி அவ என் பொண்டாட்டியும் இல்ல நான் அவ புருஷனும் இல்ல..." என்க.

"இந்தர் என்ன பேச்சு பேசிட்டு இருக்க அவ காதுல கேட்டா என்ன ஆகும் பாவம்டா உனக்கு ஏதோ பிரச்சனைன்னு வாசுவும் உன் பொண்டாட்டியும் நம்பிட்டு இருக்காங்க அவங்க நம்பிக்கைய கெடுத்துடாதா..." என்க.

"சுந்தர் காலையிலயே என்னய டென்ஷன் பண்ணாத அவள கொண்டு போய் ஊருல விட்டுட்டு வா..."என்க.

"நான் என்ன நீ வச்ச வேலைக்காரனா நீ நில்லுன்னா நிக்கவும் உக்காருன்னு சொன்னா உக்காரவும் அதுசரி உன் பொண்டாட்டிய உன் தம்பிக் கூடவே சேர்த்து வச்சு பேசின இப்ப நான் ஊருக்கு கூட்டிட்டு போனா என்கூட சேர்த்து வைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்...?" என கேட்க.

"சுந்தர்..."என கர்ஜித்தவன் அவனின் சட்டையை பிடித்து இருந்தான்.

"என்ன கோபம் வருதா அதே மாதிரிதான் வாசுவுக்கும் கோபம் வந்துருக்கும்...ச்சே... நீ இப்பிடி மாறுவன்னு யாரும் நினைச்சுக்கூட பார்த்து இருக்க மாட்டாங்க..."என்க.

"டேய் உன் வியாக்கனம்லாம் தேவையில்ல அவள கூட்டிட்டு போக முடியுமா முடியாதா...?" என கேட்க.

"அவள ஊருக்கு அனுப்பிட்டு நீ இங்க தனியா என்ன பன்ற ஐடியா..." என கேட்க.

"நான் ஏதோ பன்றேன் அதுல உனக்கு என்ன பிரச்சனை நான் இன்னொரு கல்யாணம்கூட பண்ணிக்குவேன் அது என் பிரச்சனை உனக்கு அது தேவையில்லை..." என்க.

"பைத்தியம் மாதிரி பேசாத அருவி இருக்கும்போது இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா அதுக்கு நாங்க விடுவோமா...?" என கேட்க.

"நீ விட்டா என்ன விடலனா என்ன அவள டைவர்ஸ் பண்ணிட்டு நான் இன்னொரு கல்யாணம் பன்ற ஐடியால இருக்கேன் பொண்ணு கூட ரெடி உனக்கு தெரிஞ்சவங்கதான்..." என்க.

"உளறிட்டு இருக்காத இந்தர்..." என்றான் அவன்.

"இதுல உளற என்ன இருக்கு நான் வர்ஷினிய கட்டிக்க போறேன் இனி என் வாழ்க்கை வர்ஷினியோடதான்..."என்க.

வர்ஷினியின் பேரை கேட்டதும் எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ சுந்தருக்கு "இந்தர் வேணாம் நீ என்ன பேசிட்டு இருக்க வர்ஷினிய கட்டிக்க போறேன்னு சொல்ற உனக்கு பைத்தியம்தான் பிடிச்சு இருக்கு போயும் மோசு அவதான் கிடைச்சாளா அவளப்பத்தி உனக்கு என்ன தெரியும் அவ ஒரு கொலைகாரி அவள ஏற்கனவே ஒருத்தன் லவ் பண்ணி அது அவ அப்பாவுக்கு தெரிஞ்சு அவன உயிரோட எரிச்சு விட்டுட்டான் அவ அப்பன்காரன் அப்படி ஒருத்தி உனக்கு வேணுமா...?" என கேட்க.

"இதுல இனி பேச ஒன்னும் இல்ல நானும் வர்ஷினியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் நாளைக்கே அருவிக்கும் எனக்கும் டைவர்ஸ் அப்ளை பண்ண போறேன்..." என்க.

"அப்ப ஏற்கனவே அவளுக்கே தெரியாம அவகிட்ட டைவர்ஸ்க்கு கையெழுத்து வாங்கி வச்சிருக்கியே அது...?" என சுந்தர் கேட்க.

இந்தர் அதிர்ந்து பார்த்தான்.

"அந்த வக்கீல் அப்பவே சொல்லிட்டான் நான்தான் நம்பாம இருந்தேன் ஆனா நீ சொல்றது பேசறது பார்த்தா நீ முன்னாடியே பிளான் பண்ணிதான் அருவி கழுத்துல தாலி கட்டியிருக்க போல சரி அதெல்லாம் விடு அவள சின்ன வயசுல இருந்து அவள காதலிச்சது எல்லாம் அவள ஏமாத்தற ஐடியாவா இல்ல அவள காதலிக்கிற மாதிரி நடிச்சியா..?" என கேட்க.

"அந்த கருமத்தை ஏன் பண்ணோம்னு இப்போ வரைக்கும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்..." என்க.

"நீ தப்பு பன்ற இந்தர் நாங்க உன் நல்லதுக்குதான் சொல்வோம் அந்த வர்ஷினி நல்லவ இல்ல சொன்னா புரிஞ்சிக்க..." என்க.

"உன் அறிவுரை எதுவுமே எனக்கு தேவையில்ல இத்தன நாளா நாம பழகன பழக்கத்துக்கு மரியாதை கொடுக்கற மாதிரி இருந்தா அவள கொண்டு போய் ஊருல விட்டுட்டு வா..." என்க.

"இந்தர் வர்ஷினிகிட்ட ஏதாச்சும் பிரச்சனையா அவளால உனக்கு ஏதாச்சும் பிரச்சனையா எதுவா இருந்தாலும் சொல்லுடா..." என சுந்தர் என்க.

அவன் அதிர்ந்து பார்க்க அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த வாசுவின் கண்களுக்குப்பட்டது.

அவன் மூளையில் மணியடிக்க ஆரம்பித்தது.

அவர்களின் பேச்சை கேட்ட அருவி மயங்கி விழுந்து இருந்தாள்.....





Leave a comment


Comments


Related Post