Total Views: 161
அத்தியாயம் 39
அன்றைய கான்ப்ரன்ஸை மிக நல்லபடியாகவே முடித்தான் இந்தர்.
அவன் வேலை நேரத்தை தவிர மீதி நேரங்களில் அவளின் தேவதையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
இருவருக்கும் அங்கு தங்க ஒரு பெரிய செவன் ஸ்டார் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது அந்த கான்ப்ரன்ஸ் நடத்தியவர்களின் மூலம்.
எதிரெதிர் அறை இருவருக்கும் ஒதுக்கப்பட்டு இருக்க முதல் நாள் மீட்டிங் முடித்துவிட்டு வந்தவன் அவளிடம் பை சொல்லிவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அடுத்தநாள் மீட்டிங் முடிந்ததும் அதற்கு அடுத்தநாள் விடியற்காலை அவர்கள் ப்ளைட் ஏற வேண்டும் அவளுக்கு இருந்தது இருபத்துநாலுமணி நேரம் அதற்குள் அவனை ஏதாவது செய்தால்தான் உண்டு ஊருக்கு சென்றுவிட்டால் அவனை தனியாக சந்திப்பது இயலாத காரியம் முக்கியமாக சுந்தர் இல்லாமல் தனியாக அவன் வந்திருப்பது இதுவே முதல்முறை அவனுடன் இருக்கும் போது இந்தருக்கு வேறு யாருமே கண்களுக்கு தெரிய மாட்டார்கள் அன்று இரவு அருவியிடம் வீடியோ காலில் பேசியவன் அவளது எண்ணங்களோடு அப்படியே உறங்கிவிட வர்ஷினிதான் நாளை ஒருநாளில் ஏதேனும் செய்து அவனை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூங்காமல் இருந்தவள் இறுதியாக ஒரு முடிவெடுத்தபடி அதிகாலை மூன்று மணி போலவே உறங்கினாள்.
வர்ஷினி மூலம் தனக்கு விரிக்கப்பட்டு இருக்கும் வலை பற்றி தெரியாது அடுத்தநாள் எல்லாம் இந்நேரத்திற்கு தன் குடும்பத்தோடு இருப்போன் என எண்ணியபடி உற்சாகமாக கிளம்பினான் கான்ப்ரன்ஸ் நடக்கும் இடத்திற்கு.
வர்ஷினியிடம் பேசியபடி அங்கு என்ன பேச வேண்டும் என்னலாம் குறிப்பெடுக்க வேண்டும் அவள் என்ன பேச வேண்டும் என்பதை பற்றி கூறியவனுக்கு கடுகளவும் அவள் பார்வையின் வித்தியாசம் தெரியவில்லை.
அவளோ அவனிடம் ம்ம்ம் போட்டுக் கொண்டிருந்தவளுக்கு இன்று இரவு நடக்க இருக்கும் விஷயம் நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என எண்ணமே முதலில் வந்து நின்றது.
அன்றைய நாளும் அவனுக்கு நல்லபடியாகவே சென்றது.
எல்லோருமே வியக்கும் வண்ணம் பேசியவனுக்கு கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது.
அதைத் தொடர்ந்து அவளும் பேச அன்றைய நாள் மீட்டிங்கில் இருவரையும் பாராட்டினர்.
சிலர் இருவரையும் கணவன் மனைவி என நினைத்து பேச உடனே அந்தப்பேச்சை வெட்டியவன் தன் மனைவி ஊரில் இருக்கிறார் என கூறியவன் கையோடு வர்ஷினியை தன்னுடன் பணி புரிபவள் என தெளிவாக உரைத்தான்.
அதில் இன்னும் அவளுக்கு கடுப்பானது.
அங்கு வந்திருக்கும் அனைவருக்கும் சின்னதாக பார்ட்டி ஒன்று அரேஞ்ச் செய்திருக்க சுந்தர் இல்லாது தனியாக பார்ட்டியில் கலந்து கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை எனவே "நான் அறைக்கு போகிறேன் நீ கேப்பில் வந்துவிடு..." என வர்ஷினியிடம் கூறிவிட்டு அவன் சென்றுவிட போகும் அவனையே உள்ளுக்குள் குரூரத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அறைக்குள் சென்றவன் வீட்டிற்கு அழைத்து பேசிவிட்டு அடுத்தநாள் அங்கு இருப்பேன் என்று கூறிவிட்டு அருவியிடம் தனியாக பேசி அவளை சிவக்க வைத்துவிட்டே உறங்க செல்ல அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.
யார் இந்த நேரத்தில் என நினைத்தவன் கதவை திறக்க அங்கு டை கட்டிய அந்த ஹோட்டலின் பணியாள் ஒருவன் நின்றிருந்தான்.
அவனது கையில் இரவு உணவு இருக்க "நான் ஆர்டர் கொடுக்கலயே..?" என்க.
அப்போது வர்ஷினி அவனுக்கு
அழைத்தாள்.
"இந்தர், நீ எதும் சாப்பிடாம போய்ட்ட உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கேன் ப்ளீஸ் எனக்காக சாப்பிடு..." என்க.
அவளது பேச்சை முதலில் ஏற்க மறுத்தவன் பின் என்ன நினைத்தானோ "சரி..." என்றுவிட்டு போனை வைத்தான்.
உணவு கொண்டு வந்தவன் உணவை இருப்பிடத்தில் வைத்துவிட்டு அகல அந்த உணவை பார்த்தவனுக்கு அனைத்தும் அவனுக்கு பிடித்த பதார்த்தங்களே இருந்ததை பார்த்து புன்னகைத்தவன் இந்த வர்ஷினிக்கு இன்னுமே நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு எண்ணமே இல்ல என நினைத்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் அந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
இறுதியாக ஒரு ஆப்பிள் ஜூஸ் இருக்க அதையும் எடுத்து குடித்தவன் சற்றுநேரம் போனில் நேரத்தை செலவு செய்ய நினைக்க ஏனோ கண்கள் என்றும் இல்லாது இன்று அதிகளவு இருட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.
சற்றுநேரம் எழுந்து நடந்தவனுக்கு சுத்தமாக கண்களை திறக்கவே முடியவில்லை.
நடந்தவன் தட்டுத்தடுமாறி பெட்டில் வந்து படுத்துக் கொண்டான்.
மீட்டிங்கில் இருந்து அவன் கிளம்பியதும் வர்ஷினியும் அவன் பின்னால் வந்தவள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவனை தன் பணத்திற்கு அடிமையாக்கி இந்தருக்கு கொடுக்கும் உணவிலும் ஜூஸிலும் அதிகமாக போதை தரும் வீரிய மாத்திரைகளை கலந்து கொடுக்க வைத்தாள்.
ஊரில் இருந்து வரும்போதே தன் கையோடு கொண்டு வந்திருந்தாள்.
அதிகமான போதையில் அவன் அறைக்கதவைக்கூட அடைக்காமல் உறங்கியவனின் அறைக்குள் மெல்ல வந்தவள் உறக்கத்திலும் கெத்தாக உறங்கும் அவனை பார்த்தவள் "இன்னைக்கு உனக்கும் எனக்கும் பர்ஸ்ட் நைட் இந்தர்... நோ... நோ...எனக்கு பர்ஸ்ட் நைட்... உனக்கு.... என இழுத்தவள் இது எத்தனையாவது நைட்டுன்னு தெரியாது... ஆனா... என்ன நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எதுவுமே நடக்காமையே எல்லாம் முடிஞ்சதா காட்டி உன்னை நம்ப வைக்கப் போறேன்... என்னை ஏமாத்தின உன்னை நம்ப வச்சு கழுத்தறுக்க போறேன்... இனி எப்பவுமே இந்த வர்ஷினி யோட அடிமைதான்..." என என்றவள் அவனது உடையை கலைக்க ஆரம்பித்தாள்.
அவனது உடலின் பாகங்களை தன் கரங்கொண்டு தடவியவள் "இப்ப உனக்கு தெரியாம உன்ன ரசிக்கிற நான்... இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு தெரிஞ்சே உன் அனுமதியோடு உன்ன ரசிப்பேன் உன்ன பொண்டாட்டியா..." என்றவள் அவனது ஆடைகள் அனைத்தையும் கலைத்தாள் அவனது உள்ளாடைகளை கழட்டும்போது மட்டும் எங்கிருந்தோ ஒரு நாணம் அவளுக்கு ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.
அதை புறந்தள்ளியவள் "ஒரு டாக்டரான எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.." என நினைத்து அவனது ஆடைகள் அனைத்தையும் கலைத்துவிட்டு தன்னுடையதையும் கலைத்துவிட்டு அவனுடன் மிக நெருக்கமாக படுத்து தன்னை புகைப்படமாக எடுத்துக் கொண்டாள்.
கொஞ்சமும் கூச்சப்படவும் இல்லை.
வெட்கப்படவும் இல்லை.
இன்னும் உச்சக்கட்டமாக அவர்கள் இருவரையும் அவளாக வீடியோ எடுத்து வைத்தாள்.
அதை பார்த்து அவள் மகிழ்ச்சியோடு இருக்க அவனோ இது எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவளுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டவள் அவனது உடையை அப்படியே போட்டுவிட்டு அவளது உடையை எடுத்து அணிந்து கொண்டு அவளது கால் கொலுசையும் அவளது உள்ளாடையும் அவன் விழித்தால் அவன் கண்களுக்கு படுமாறு வைத்தவள் அவன் தலையை கலைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு நாளையில இருந்து உன் வாழ்க்கைல நடக்க போற எதிர்பாராத விஷயங்களுக்கு தயாரா இரு இந்தர் இனி நீ இந்த வர்ஷினியோட சொத்து என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அடுத்தநாள் காலை எழுந்தவனுக்கு தன் நிலை குறித்து அதிர்ச்சியாக இருந்தது.
அதுவும் இன்றி வர்ஷினியோட கம்மல் கொலுசு உள்ளாடை என கிடக்க என்ன இது யோசித்து குளம்பியவனுக்கு எதுவுமே முதலில் புரிபடவில்லை.
அவன் விழித்தது அறிந்தவள் பிளைட்டுக்கு நேரமாகிவிட்டது என அவனை அவசரப்படுத்தி அவனை யோசிக்கவிடாது அங்கிருந்து கிளப்பினாள்.
அவனும் ஊரில் வர்ஷினியால் தனக்கு ஏற்பட போகும் ஆபத்தை அறியாமல் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண ஓடினான்...