Total Views: 178
அத்தியாயம் 43
கண்களை மெல்ல திறந்து பார்த்தான் இந்தர்.
முதலில் எரிச்சலாக இருக்க சற்றுநேரம் பொறுத்தே கண்களை திறந்தவனுக்கு சுற்றி இருந்த இடம் புதிதாக இருக்க மெல்ல கண்களை சுழலவிட்டவனுக்கு இது தன்னுடைய வீடும் இல்லை அவன் படுத்து உறங்கும் தன் மெத்தையும் இல்லை என்ற உண்மை புரிய வேகமாக எழுந்தவனுக்கு நேற்று நடந்தது நினைவில் வந்து போனது.
"ஐயோ...இப்ப நாம இருக்கறது அந்த வர்ஷினியோட வீடா...?" என நினைத்தவன் சூடு கண்ட பூனைபோல விருட்டென அந்த படுக்கையில் இருந்து எழுந்தான்.
"ச்சே...." என நினைத்து சுவற்றில் தன் பலங்கொண்ட மட்டும் குத்தினான்.
"ஆஆஆஆஆ...." என கத்தியவனின் சத்தத்தில் "ஏய் இந்தர்...ஏன் இப்படி கத்திட்டு இருக்க டார்லிங்..." என்றபடி அறைக்குள் வந்தாள் வர்ஷினி.
அவள் அணிந்து இருந்த உடை அத்தனை நாகரிகமாக இல்லை.
அவள் உள்ளாடையகள் தெரியும்படி அவள் அணிந்து வந்திருந்த உடை அவன் கண்களை கூச செய்தது.
சட்டென பார்வையை விலக்கிக் கொண்டவன் "என்ன ட்ரஸ் இது ஒரு பொண்ணு மாதிரியா ட்ரஸ் பன்ற முதல்ல வெளிய போ..." என்க.
"இது என்னோட பங்களா இங்க நான் வச்சதுதான் சட்டம் நீ என்னோட பொருள் இந்தர் எனக்கு மட்டும் சொந்தமான பொருள் நான் உனக்கு சொந்ததான பொருள் என்ன இப்படி பாக்கற உரிமை உனக்கு மட்டும்தான் இருக்கு டார்லிங்..." என அவன் கன்னத்தை வருட.
"ச்சீ..." தள்ளிப்போ..." என்றவன் "இப்ப எதுக்கு இங்க என்னைய மயக்கமடைய வச்சு கொண்டு வந்துருக்க இது நல்லதுக்கு இல்ல நீ எல்லைய தாண்டி போற ஓர் அளவுக்கு மேல எனக்கும் பொறுமை இல்ல என் அப்பாவோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம் அது ஒரு விஷயத்துக்காகத்தான் நீ பன்ற எல்லா விஷயத்துக்கும் நான் பொறுத்து போறேன் இல்ல உன்னய அன்னைக்கே கொன்னு போட்டுருப்பேன்..." என்க.
"என்ன பயம் விட்டு போச்சா உன் குடும்பம் உனக்கு வேணாமா உன் ஆசை பொண்டாட்டி வயித்துல குழந்தையோட இருக்காளே அவ உனக்கு உயிரோட வேணாமா டார்லிங்..."என்றவள் அவனை நெருங்க.
"என் பக்கத்துல வராத உனக்கு பைத்தியம்தான் புடிச்சு இருக்கு நான் இன்னொருத்தியோட புருஷன்னு தெரிஞ்சும் என்னய அடைய நினைக்கிற நீயெல்லாம் ஒரு பொண்ணா ச்சே..." என்றவன் உன் பார்வை பட்டாக்கூட அந்த இடமே விஷமா மாறிடும் நீ என்ன திட்டம் போட்டாலும் நான் உனக்கு கிடைக்கவே மாட்டேன்..." என்றான். அத்தனை ஆத்திரமாக
அவளோ அவன் கோபத்தை தூசியாக தட்டியவள் "நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு வாக்கு குடுத்து இருக்க இப்ப போய் வெட்டி நியாயம் பேசிட்டு இருக்க அதக்கூட விடு கனடாவுல நமக்கு இடையில நடந்தது மறந்து போச்சா..." என கேட்க.
"எனக்கு உன்மேல டவுட்டா இருக்கு நீதான் ஏதோ செஞ்சிருக்க நான் அப்படிலாம் என்னோட சுயத்த இழந்து அப்படிலாம் நடந்துக்கற ஆள் இல்ல அன்னைக்கு என்ன நடந்துச்சு ஒழுங்கா உண்மைய சொல்லு..." என்க.
"சூ...எதுக்கு இப்படி ஆர்க்கியூ பண்ணிட்டு இருக்க எனக்கு இப்ப உங்கூட லவ்மேக் பண்ணனும் நல்ல மூடுல இருக்கைன் அத ஸ்பாயில் பண்ணாத வா... என அவன் நெஞ்சில் கை வைக்க போக
"ஏய் ச்சீ தொடாத..." என இரண்டு அடி பின்னால் நகன்றான்.
"டேய்..."என கோபமாக கத்தியவள் தன்னை சமன்படுத்தியவள் "பொறுமை பொறுமையா இரு வர்ஷினி என்றவள் இங்கபாரு இந்தர் நான் என்னோட கோபத்தை எல்லாம் குறைச்சிட்டு உங்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன் என் கோபத்தை கிளறாத எனக்கு நீ வேணும் உன்னோட பிசிக் ச்சே... செம்ம ஸ்ட்ரக்சர்டா வாவ் உன்ன பாக்கும்போது அப்படி இருக்கும் தெரியுமா..?!"என கண்களை மூடி லயித்தாள்.
" ச்சே... என்ன பெண் இவள்..." என நினைத்தாள்.
"நீயெல்லாம் ஒரு பொண்ணாடி ஏதாச்சும் ஒரு பொண்ணு மாதிரியா நடந்துக்கற நீயெல்லாம் நிஜமா டாக்டருக்குத்தான் படிச்சியா..." என கேட்டான்.
"பேசிட்டு இருக்க டைம் இல்ல இந்தர் ஓகே நீ என்ன பத்தி பேசினதெல்லாம் நான் மன்னிச்சிடறேன் இப்ப வா நாம ஏற்கனவே மயக்கத்தில நடந்தத நாம இப்ப நல்ல நினைவோடு பண்ணலாம்..." என அழைக்க.
"ஐயோ நீ ஒரு சைக்கோடி ஒரு பொண்ணு மாதிரியா பேசற நல்ல குடும்பத்துல பொறந்த எந்த பொண்ணாவது இப்படி அசிங்கமா நடந்துக்குவாளாடி என் அருவிக்கிட்ட நிக்க கூட உனக்கு தகுதியில்லடி முதல்ல நான் எப்படி இங்க வந்தேன் அதுக்கு பதில் சொல்லு..." என்க.
அவன் சட்டையை பிடித்து இழுத்தவள் "என்னடா விட்டா ஓவரா பேசிட்டு இருக்க எப்ப என்னய கட்டிக்க சம்மதிச்சியோ அப்போல இருந்து நீ என் ப்ராப்பர்டி வேற எதப்பத்தியும் எனக்கு கவல இல்ல எனக்கு என் சந்தோஷம்தான் முக்கியம் ஒழுங்கா நான் சொல்றத கேட்டா உனக்கும் உன்ன சேர்ந்தவங்களுக்கும் நல்லது இல்ல உன் குடும்பமே அழிஞ்சு போய்டும்..." என்க.
"எந்த குடும்ப பொண்ணாவது இப்படி பேசுவாளாடி உன்ன மாதிரி ஒருத்திய கட்டிக்க எவனும் விருப்பப்பட மாட்டானுங்க என் குடும்பத்தை பத்தி உனக்கு ஒன்னும் தெரியல நான் இப்படி ஒரு பிரச்சனைல இருக்கேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சா இந்நேரம் உன் சாம்ராஜ்யத்தையே கூண்டோடு அழிச்சிருவாறு என்றவன் நான் இங்க இருந்து உடனே போயாகனும் உன்ன பத்தி தெரிஞ்சி போச்சு நீ ஒரு கேடு கெட்டவ என் பொண்டாட்டிய பாக்கனும்..." என வேகமாக அவ்விடம் விட்டு அகல
"நீ அங்க போறதுக்கு முன்னாடி உன் பொண்டாட்டி உயிர் போய்டும் பரவால்லையா..." என அவள் தெளிவாக கூறியவள் அங்கிருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவள் அவனை தெனாவட்டாக பார்க்க.
"என்ன உளறிட்டு இருக்க என் குடும்பத்துக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உன்ன உயிரோட கொளுத்திடுவேன் இத்தன நாளா நான்தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன்னு குற்றவுணர்ச்சியில வாழ்ந்துட்டு இருந்தேன் ஆனா இப்ப நீ நடந்துக்குறத எல்லாத்தையும் பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு கண்டிப்பா கனடாவுல நமக்கு இடையில எதும் நடந்து இருக்காதுன்னு நான் நூறு சதவீதம் நம்பறேன் இனி நான் உனக்கு பயப்பட போறது இல்ல என்னால என் பொண்டாட்டி இனி ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க முடியாது..." என்றவன் விறுவிறுவென அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க
"போறதுக்கு முன்னாடி இந்த வீடியோவ பார்த்துட்டு போடா இந்தர்..."என்றவள் அவனிடம் ஒரு வீடியோவை காட்ட அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
அது கிராமத்தில் இருக்கும் சக்கரவர்த்திக்கும் தர்மனுக்கும் உணவு பரிமாற அதில் யாரோ விஷம் கலப்பது தெரிந்தது.
"ஏய்..." என கத்தியவனிடம்
" அதுக்குள்ள ஏன் அதிர்ச்சியாகற டார்லிங் இன்னும் நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு..." என்க
"வேணாம் வர்ஷினி நீ உன் லிமிட்ட கிராஸ் பன்ற நாலுபேருக்கு நல்லது பன்ற தொழில செஞ்சிட்டு எப்படி ஒரு உயிரோட மதிப்பு தெரியாம இருக்க..?" என அவன் கேட்க.
"நான் எப்போடா டாக்டருக்கு படிச்சேன்..." என்றவள் கலகவென சிரிக்க.
அதில் உறைந்து நின்றவன் "ஏய் நீ என்ன சொல்ற நீ டாக்டருக்கு படிக்கலயா அப்ப என்கூட ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணது கான்ப்ரஸுக்கு வந்தது இதெல்லாம்...?"என அவன் கேட்க.
அவளின் சிரிப்பு நின்றபாடில்லை.
அதில் ஆத்திரமுற்றவன் "ஏய் முதல்ல சிரிக்கறத நிறுத்து..." என அவள் தொண்டையை இருகரம் கொண்டு நெருக்க போக.
என்ன நினைத்தானோ பட்டென அவன் கரத்தை விடுவித்துக் கொண்டவன் "உன்மேல என் கை பட்டாவே அது ஏதாச்சும் பாவம் பண்ணுச்சுன்னு அர்த்தம்டி என்றவனுக்கு தெரியவில்லை..." அவள் இன்னும் அதிகமான அதிர்ச்சி தகவல்களை வைத்திருக்கிறாள் அவனுக்கு என....