Total Views: 114
அத்தியாயம் 47
மகிழாவின் கையில் இருந்த துப்பாக்கி சக்கரவர்த்தியை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும் முன்னரே சுதாரித்த இந்தர் அதை லாவகமாக தட்டிவிட்டவன் அதை நொடியில் கையிலும் எடுத்துக் கொண்டான்.
அவன் தள்ளிவிட்டதில் கீழே விழுந்தவள் எழுந்து நிற்கும் முன் அவளை தள்ளிவிட்ட வர்ஷினியின் தாய் "ஏன்டி... இன்னும் உனக்கு கொலைவெறி அடங்கலயா "ச்சே... ஒரு பொண்ணுக்கு இப்படிலாம் கூடவே ஆங்காரம் இருக்கும் உன்ன மாதிரி பொண்ணுங்கள விட்டா ஊருல ஒரு குடும்பத்தை நல்லா இருக்க விடமாட்டீங்க..." என்றவர் அவள் முடியை கொத்தாக பிடித்து தூக்கி அவளை கன்னத்தில் அறையப்போக "அம்மா... விடுங்க அவள போலிஸ்ல ஒப்படைச்சிடலாம் அவங்க பார்த்துப்பாங்க..." என்றாள் வர்ஷினி.
"ஆமாம்மா... உடனே அவள அவங்க சரியான தண்டனை கொடுப்பாங்க..." என இந்தரும் கூறினான்.
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்களிடம் இருந்து தப்பித்தவள் இந்தரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கியவள் அவனை நோக்கி நீட்டியவள் "எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது வாழ்ந்தாலும் என்கூடத்தான் வாழனும் செத்தாலும் என்கூடத்தான்...." என்றவள் அவனை நோக்கி சுட ஆரம்பிக்கும் முன் அவள் கையில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்தது.
அவள் அதிர்ந்து பார்க்க அட "என்னடா... பெரிய டாக்டர் நீ அவள நாலு அறைவிட்டு இழுத்துட்டு போய் போலிஸ்ல விடுவியா அதவிட்டுட்டு அவகிட்ட போய் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க..." என்றபடி உள்ளே வந்தான் திகம்பரன் கையில் ஏதோ கட்டைபோல இருந்தது.
அவன் பின்னால் பரமனும் சுந்தரும் வந்தனர்.
சக்கரவர்த்தி அவர்களை பார்த்து சிரித்தவர் "உன் அளவுக்கு அவனுக்கு புத்தி இல்ல திகம்பரா..." என்க.
போலிஸும் அவர்களின் பின்னால் வந்தனர்.
உள்ளே வந்தவர்கள் மகிழாவின் அருகில் சென்று "நீதான் மகிழாவா...?" என கேட்க.
"நான் வர்ஷினி..." என்றாள் அவள்.
"உன் வேஷம் கலைஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு இப்ப அவங்க கூட ஒழுங்கா போய் அவங்க காட்டற இடத்துல அமைதியா இரு..." என்றான் பரமசிவன்.
"நீயெல்லாம் ஒரு அண்ணனாடா... என் வாழ்க்கை நாசமா போகுது அத நீ வேடிக்கை பாக்குறீங்க..." என்றாள் கடித்த பற்களுக்கு இடையில்.
"நீ நல்லவளா இருந்து இருந்தா உனக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கும் நீதான் அடுத்தவ வாழ்க்கைய கெடுக்கனும்னே கங்கனம் கட்டிட்டு அலையிற அப்பறம் எப்படி நல்ல வாழ்க்கை அமையும் போ போய் ஒழுங்கா நல்லவளா மாறி வா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..." என்றான் திகம்பரன்.
"எனக்கு நீ பிச்சை போட வேணாம் உங்களால முடியாத விஷயத்தை நான் செஞ்சேன் நீங்க ஓடி ஒழிஞ்சிட்டு இப்ப இந்த கூட்டத்துல வந்து கும்மியடிங்க நீங்க ரெண்டு பேரும் அதுக்குத்தான் லாயக்கு பெத்த அப்பாவ பத்தி இதுவரைக்கும் ரெண்டு பேரும் கேட்டிங்களா ச்சே... நீங்கெல்லாம் என அவள் பேச ஆரம்பிக்கும் முன்
"போதும் உன் பிரச்சாரம் போய் வண்டியில ஏறு..." என்றான் இந்தர்.
"இப்ப தப்பிச்சிட்டேன்னு நினைக்காத இந்தர் திரும்பி வருவேன் அப்ப இன்னும் அதிகம் விளைவுகள சந்திப்பீங்க..." என்றாள் அவள்.
"நான் சந்திக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல மனுஷியா மாறற வழிய பாரு..." என்றான் இந்தர்.
சக்கரவர்த்தியிடம் திரும்பியவள் "இன்னும் என் பழிவாங்கல் முடியல இதுக்கும் சேர்த்து நான் திருப்பி செய்வேன்..." என்க.
"பொண்ணுங்கள தெய்வமா மதிக்கிறவன் நான் நான் கும்பிடற காளியில இருந்து இந்த உலகமே பெண்களாலதான் இயங்குது ஆனா உன்ன மாதிரி பொண்ணுங்க இந்த உலகத்துக்கே ஒரு சாபக்கேடு இனியாச்சும் திருந்தற வழிய பாரு...." என்க.
"என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் சாவு உங்களுக்கு..." என்றாள் அவள்.
"இப்ப எதுக்கு ஆள் ஆளுக்கு பேசிட்டு இருக்கீங்க எங்கள இங்க இருந்து போக விடுங்க..." என்றனர் போலிஸ்.
"சார் நீங்க கூட்டிட்டு போங்க நாங்க பின்னாடி வந்து நடந்தது சொல்றோம்..." என்க.
"இது பெரிய இடத்து விவகாரம் சார் இங்க இருக்க எல்லாருமே வர மாதிரி இருக்கும்..." என்க.
"சரி சார் நீங்க எப்போ கூப்டாலும் நாங்க வரோம்..."என சக்கரவர்த்தி கூறினார்.
"ஆமா சார் நானும் வரேன் என் புருஷன் மேல இந்த ஆள மாத்தின விஷயத்த பிராது கொடுக்கனும்..." என்றார் வர்ஷினியின் தாய் கூற.
"அம்மா எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்கம்மா..." என்றவர்கள் அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.
இந்தர் வேகமாக அங்கிருந்து "கிளம்ப எங்கடா போற..." என தர்மன் கேட்க.
"சாரி..." என்றவன் அவரை அணைத்துக் கொண்டான்.
"உன் மேல பயங்கர கோபம் இருக்கு இந்தர் ஆனா...என்றவர் இத நீ மனசறிஞ்சு செய்யலன்னு என்னால சொல்ல முடியும்..." என்றார்.
"அப்பா கொஞ்சினது போதும்..." என சுந்தர் கூறியவன் முன்னால் செல்ல.
அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன் "சாரிடா..."என்றான்.
"உன் சாரி யாருக்கு வேணும் உங்கூட பேச நாங்க யாரு அப்பா ஏன் இன்னும் இங்கயே வெயிட் பண்ணிட்டு இருக்கோம்..." என்க.
"டேய் அதான் சாரி சொல்றேன் இல்ல..." என இந்தர் கூற.
"இந்தர்,ப்ளீஸ் உனக்கு எங்கள நீ முக்கியபானவங்களா நினைச்சு இருந்தா உனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் எங்கக்கிட்ட சொல்லி இருப்ப உனக்குத்தான் நாங்களாம் தேவை இல்லையே என்றவன் திகம்பரா வா..." என்றான்.
இந்தர் கலங்கி நிற்க.
"நீ பண்ணதுக்கு இதுக்கே இப்படி நின்னுட்டா எப்படி இன்னும் வீட்ல இருக்கவங்க பத்தி நினைச்சு பார்த்தியா..." என கேட்க.
"ஐயோ பயமறுத்தாதீங்க நான் முதல்ல என் பொண்டாட்டிய பாக்கனும் என கார் அருகே சென்றவனிடம் யாருடா அவனுக்கு... பொண்டாட்டி...?"என சக்கரவர்த்தி கேட்க.
"ஏன் என் பொண்டாடிட்டியதான் சொன்னேன்..." என்க.
"அப்பா எல்லாமே இங்கயே நின்னு பேசனுமா வாங்க போலிஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு அப்பறம் எல்லாம் பேசிக்கலாம்..." என சுந்தர் கூறியவன் முன்னால் நின்றிருந்த அவனது காரை நோக்கி சென்றான்.
"இந்தர்..." என்ற குரலில் அப்படியே நின்றான் இந்தர்.
"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இந்தர்...?"என வர்ஷினி கேட்க.
அவளின் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளிகள் இப்போதோ அப்போதோ என வழிய தயாராக இருக்க.
"வ... வர்ஷினி.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு அருவி என்னோட அத்தை பொண்ணு சின்ன வயசுல இருந்து நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சோம் எங்களுக்கு இடையில் எவ்வளோ பிரச்சனை அதையெல்லாம் தாண்டி இப்போ கல்யாணம் பண்ணி இருக்கோம் உன் மனசுல சலனம் ஏற்பட நான் நடந்து இருந்தா என்னய மன்னிச்சுடு..." என்க.
"பரவால்ல இந்தர் நான் திரும்பி வர வரைக்கும் நீ காத்துட்டு இருப்பேன்னு நான் நினைச்சேன்..." என்க.
"வர்ஷினி விடு அந்த தம்பிக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சு இருக்கு சந்தோஷமா
வாழ்ந்துட்டு போகட்டும் உன் தலையில் என்ன நடக்கும்னு இருக்கோ அதுதான் நடக்கும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்துட்டு இருக்கும் அம்மா நான் இருக்கேன்..." என்க.
"அம்மா... அப்பா...?" என இழுத்தாள் அவள்.
"அவரு பண்ண தப்புக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் உன் அப்பா எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும் ஆனா என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிரச்ச பாவத்துக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும்..." என்க.
"முதல்ல போலிஸ் ஸ்டேஷன் போகனும்..." என்ற சக்கரவர்த்தியும் காரில் ஏறிக் கொள்ள கார் சீறிப்புறப்பட்டது.
போலிஸ் ஸ்டேஷன் சென்றவர்கள் நடந்த அத்தனையும் கூறி மகிழா அவளே அவள் வாயால் கூறிய விஷயங்களை வீடியோவாகவும் காட்டியவர் மயில்வாகனத்தின் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டே சென்றனர்.
போகும் வழியில் ஒரு டீ கடையில் வண்டி நிறுத்திய சக்கரவர்த்தி "டீ குடிங்க..." என்றவர் அனைவருக்கும் டீ வாங்கி கொடுக்க இங்கு ஒருவனுக்கோ எப்போதடா வீட்டுக்கு செல்வோம் என இருந்தது.
"ஏன்டா இப்படி நெண்டிக்கிட்டே இருக்க..."என திகம்பரன் கேட்க.
"நான் முதல்ல வீட்டுக்கு போய் என் பொண்டாட்டிய பாக்கனும்..." என்க.
"உன் பொண்டாட்டியா அவ எங்க இங்க இருக்கா..?" என தர்மன் கூற.
"ஏன் அவளுக்கு என்ன ஆச்சு எங்க அவ...?" என அவன் பதறியபடி கேட்க.
"அவ ஊருக்கு போய்ட்டா..." என திகம்பரன் கூற.
அதை கேட்ட இந்தர் அதிர்ச்சியானான்...