Total Views: 126
அத்தியாயம் 48
இந்தர் அவன் அப்பாவின் முன் நின்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் அமைதியாக டீ குடித்து கொண்டிருக்க.
"என் பொண்டாட்டி எங்க..?" என கேட்க.
அவர் இப்போதும் அமைதியாக இருந்தார்.
"உங்கக்கிட்டதான் கேக்கறேன்..." என அவன் நிறுத்த.
"வீட்டுல போய் பேசிக்கலாம்..." என்றார் அவர்.
"இல்ல அவ எங்கேன்னு எனக்கு தெரியனும்..." என்க.
"ஏன் இங்கயே எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமா... அதான் வீட்டுல போய் பேசிக்கலாம்னு சொல்றேன் இல்ல..." என அவரும் கோபமாக கேட்க.
"சண்டை போட்டுக்காதீங்க எல்லாருமே பயந்து போய் இருப்பாங்க... முதல்ல வீட்டுக்கு போகலாம்..."என்ற திகம்பரன் டீக்கான காசை கொடுத்து விட்டு காரை எடுத்தான்.
வர்ஷினியின் அன்னை தங்கள் வீட்டிற்கு செல்வதாக கூற தர்மன்தான் வீட்டிற்கு வந்துவிட்டு போகுமாறு கூறினார்.
மறுக்க முடியாமல் அவர்களும் உடன் செல்ல அங்கு வீட்டில் யாரும் இல்லை.
வர்ஷினிதான் "வீட்டுல யாருமே இல்லையே..." என கேட்க.
"எல்லோருமே ஊருக்கு போய் இருக்காங்கம்மா..." என சக்கரவர்த்தி கூறியவர் "நீங்க உள்ள வாங்கம்மா..." என அழைத்து சென்றார்.
உள்ளே அமரவைத்துவிட்டு "ஜானகி..." என அழைக்க "இதோ வந்துட்டேன் ஐயா..." என்றபடி அடுப்படியில் இருந்து வெளியே வந்தார் ஜானகி.
"சாப்பிட ஏதாச்சும் செய்ம்மா..." என தர்மன் கூற.
"சரிங்க..."என்றவர் அனைவருக்கும் குடிக்க ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டு மதிய உணவை செய்ய ஆரம்பித்தார்.
வெளியே அமர்ந்து இருந்த அனைவரும் அமைதியாக இருக்க.
சுந்தர்தான் "அப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்ட்டு அப்பறமா வரேன்..."என்க.
"சுந்தர் என்னை மன்னிச்சுடு..." என்றான் இந்தர்.
"உன்ன மன்னிக்க நான் யாரு இந்தர் ஒரு நிமிஷத்துல நம்ம இத்தன வருஷ பழக்க வழக்கத்தை இல்லன்னு முடிச்சிட்ட உன் வார்த்தையால..." என்றவனின் குரலில் அத்தனை வருத்தம்.
அவனை இறுக அணைத்துக் கொண்டவன் "என்னை மன்னிச்சுடு எனக்கு இத தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியல..." என்றவன் "உன் கோபம் போறவரை என்ன அடி..." என்றான்.
"மறக்க முயற்சி பன்றேன்... என்றவன் "வரேன்ப்பா..." என்க.
"டேய்... ஈவினிங் வந்துடு..." என திகம்பரன் கூற.
"நான் வரல..." என்றான் அவன்.
"டேய் எனக்கு தெரியாது நீ வர..." என திகம்பரன் உரிமையாக அவன் தோளில் கைப்போட்டு பேச இந்தருக்குத்தான் அத்தனை பொறாமை அவர்களின் நெருக்கத்தையும் உரிமையான பேச்சையும் கண்டு.
நாம இல்லாத இந்த கொஞ்ச நேரத்துல இதுங்கலாம் ஒன்னு சேர்ந்துடுச்சு போல என நினைத்தவன் சுந்தரிடம் இருந்து அவனை பிரித்து அவன் தோள்மேல் தன் கையை போட்டு இறுக்கிக் கொண்டான்.
அவனது செயல் அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.
வர்ஷினி கூட அவனின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயலில் கலகலவென சிரிக்க "உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா..." என அவளை முறைத்தவன் "நீ எனக்குத்தான் முதல்ல பிரண்டு இவன் நேத்து வந்தவன் அவனுக்காக என்னை ஒதுக்கிற என்றவன் நீ எங்க போகனும் வா நானும் உங்கூடவே வரேன்..." என்க.
தர்மன்தான் "டேய் போதும்டா உங்க அம்மாவ பஸ் ஸ்டேன்ட்ல இருந்து அழைச்சிட்டு வர போறான்..."என்க.
"ஓ..."என்றவன் அப்ப அவளும் கூடத்தான வருவா இங்க வரட்டும் பேசிக்கலாம் என நினைத்தான்.
சுந்தர் அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அகல.
சக்கரவர்த்தி "அம்மா வர்ஷினிய எப்படி கண்டுபிடிச்சிங்க...?" என கேட்க.
"நானும் ஆரம்பித்துல அந்த மகிழாதான் என் பொண்ணுன்னு நம்பிட்டேன் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அவ நடவடிக்கைல வித்தியாசம் தெரிஞ்சிது...
என் புருஷனும் அவளும் அடிக்கடி தனியா போய் பேசுவாங்க என்ன பேசுவாங்கன்னு தெரியாது எனக்கு கொஞ்ச நாளா என் புருஷன் மேலயும் சந்தேகம் இருந்துச்சு அதான் என் தம்பிய வச்சு விசாரிக்க ஆரம்பிச்சேன் அதுக்கப்பறம் ஒவ்வொன்னா வெளிய வர ஆரம்பிச்சது என் பொண்ணும் கேரளாவுல நல்லா இருக்கறதா தெரிஞ்சிது அதான் கையோடு போய் கூட்டிட்டு வந்துட்டேன் அப்பறம் இந்தர் தம்பிய பார்க்கனும்னு கேட்டா அதான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போற வழியில இந்தர் தம்பி வேகமா எங்கயோ போகறத பார்த்தோம் அவரு எங்க பண்ணை வீட்டுக்கு போறத பார்த்து அதிர்ச்சியாகி நாங்களும் உள்ள போனோம் அப்பதான் எங்களுக்கு உண்மை தெரிய ஆரம்பிச்சது
ஆனா ஒரு விஷயம்ணா என் பொண்ணு படிச்சவன்னு நிரூபிச்சா என் போன்ல அவங்க பேசறத வீடியோ எடுக்க சொன்னா நானும் என் பொண்ணும்தான் எடுத்தோம் அவ எல்லை மீறி போறான்னு தெரிஞ்ச பிறகுதான் நாங்க உள்ள போனோம்..." என்க
அவரின் காலில் விழுந்தான் இந்தர்.
"நீங்க எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சியிருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாதும்மா..." என அவர் முன் இருக்கரம் கூப்பியவன் கண்களில் கண்ணீரோடு
"என்னப்பா இது எழுந்திரி முதல்ல நான் அரசியல்வாதி இல்லப்பா என் புருஷன்தான் அவரு மாதிரி என்னால நடிக்க முடியாது எனக்கு என் பொண்ணு வாழ்க்கை ரொம்ப முக்கியம் அவளும் நல்லபடியா நடந்து இருந்தான்னா நானும் அவள என் சொந்த பொண்ணு மாதிரிய நடத்தியிருப்பேன் ஆனா அவ ச்சே.... பொம்பளங்கள கடவுளா கும்பிடற நம்ம நாட்டுலதான் இப்படிப்பட்ட பொண்ணுங்களும் இருக்கு யார சொல்லி என்ன பண்ண வரும்போது சுந்தர் தம்பி உங்கள பத்தியும் உங்க குடும்பத்தை பத்தியும் சொன்னுச்சு உங்கள மாதிரி நல்லவங்களுக்கு நல்லதுதான் தம்பி நடக்கனும் எனக்கு ஒரு பையன் இருந்து இருந்தா அவன் வாழ்க்கை கெட்டுப் போகறத வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா விடுங்க இதுக்கு மேலயாச்சும் சந்தோஷமா இருங்க உன் பொண்டாட்டி உண்டாயிருக்காமே இங்க இருந்தா வாழ்த்து சொல்லிட்டு போயிருப்பேன்..." என்க.
"அதனால என்னம்மா அவ ஊருல இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்..." என்க
"வீடுன்னதும்தான் நியாபகம் வருது தம்பி அந்த மனுஷனுக்கு இந்நேரம் எல்லாம் தெரிஞ்சு இருக்கும் நம்ம எல்லோரையும் ஆளுவிட்டு தேடிட்டு இருப்பாரு..." என்க.
"அதுக்குள்ள போலிஸ் அவர கைது பண்ணிடும்மா..." என்றான் பரமசிவன்.
அப்போது ஜானகி வந்து "ஐயா அம்மாலாம் இன்னைக்கு வராங்கதான..." என கேட்க.
"ஆமாம்மா வந்துட்டாங்க சுந்தர் அழைக்க போயிருக்கான் சாப்பாடு சேர்த்தே சமைங்க..." என்க.
"சரிங்கய்யா... என்றவரிடம் இரும்மா இத்தன பேருக்கு எப்படி நீங்க ஒத்தையில சமைப்பீங்க நாங்களும் வரோம் என்ற திகம்பரன் டேய் பரமா வாடா..."என்றவன் அவனையும் இழுத்து கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
இந்தரோ "ஆமா இவனுங்க எப்படி இங்க..?" என தர்மனிடம் கேட்க.
"அதுவா..." என அவர்கள் வந்த விஷயத்தையும் அதன்பிறகு நடந்ததையும் கூறினார்.
"ஓ..."என்றவனின் மனம் தானாக அவன் மனையாளின்பால் போனது.
"அப்பா..." என அழைத்தபடி சுந்தர் வந்தான்.
அவன் கையில் இரண்டு பைகள் இருக்க பத்மா அருணா மற்றம் காளி மூவரும் வந்தனர்.
காளியை பார்த்த சக்கரவர்த்தி "வாம்மா..." என அழைத்தவர் "அருவி எங்க..?"என கேட்டார்.
அவர்களை பார்த்தவன் "அம்மா..." என ஓடிச்சென்று பத்மாவை அணைத்துக் கொண்டான்.
அவனின் அணைப்பில் திகைத்தவர் அவன் முதுகை நீவி விட.
"மன்னிச்சுடுங்கம்மா..." என்றான்.
"விடு இந்தர் இப்படிலாம் நடக்கனும்னு இருக்கு அத யாரால மாத்த முடியும் சொல்லு இனிமே உனக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் எங்கக்கிட்ட சொல்லு..." என்க.
"ம்ம்ம்ம்..." என்றவன் சிறிது நேரம் அப்படியே நின்றான்.
அவர்களின் அன்பை பார்த்த அங்கு இருந்தவர்களுக்கு அவர்களின் இணைப்பு முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்து இருந்தது.
"ஆமா அருவி வரல..?" என சக்கரவர்த்தி கேட்க.
"அவ அங்கயே இருக்கா..." என்ற பதில் கிடைக்க பத்மாவிடம் இருந்து விலகியவன்.
அருணாவையும் அணைத்துக் கொண்டான்.
"விடுடா இனி இந்த மாதிரி நடந்துக்காத..." என்றார் அவர்.
"ஏம்மா அவ வரல..?" என அவன் கேட்க.
"ஏன்னா நீதான் அவகிட்ட டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்ட இல்ல இனி அவளுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு அவள தேடிட்டு இருக்க நீ...?" என சக்கரவர்த்தி கேட்க.
"அது சும்மா..." என்றான் அவன்.
"சும்மா விளையாட வாழ்க்கை ஒன்னும் விளையாட்டு பொருள் இல்ல அவளுக்கும் உனக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்ல இனி அவ எங்க பொண்ணு அவள நாங்க பாத்துக்கிறோம்..."என்க.
"அம்மா உன் வீட்டுக்காரர அமைதியா இருக்க சொல்லு..." என்றான் அவன்.
"அவரு ஏன்டா அமைதியா இருக்கனும் அவரு சொல்றதுல என்ன தப்பு இருக்கு...?" என தர்மன் கேட்க.
"அம்மா..." என இப்போது பத்மாவிடம் திரும்பினான்.
"நான் சொன்னா சொன்னதுதான்..." என சக்கரவர்த்தி திட்டவட்டமாக கூற.
அப்போதே தன் ஆசை மனைவியை பார்க்க கிளம்பி இருந்தான் இந்தர்....