இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-49 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 29-01-2025

Total Views: 137

அத்தியாயம் 49

கார் அந்த தார்ச்சாலையில் சீறிப்பாய்ந்தது.

அடிக்கடி நெற்றியை அழுந்த துடைத்து கொண்டான் இந்தர்.

அவனின் மனையாட்டியை இப்போதே பார்க்க வேண்டும் என அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்துக் கொண்டு இருக்க அவன் மனமோ தர்மன் கூறியதிலேயே இருந்தது.

அவனுக்கு காலையில் தர்மனும் அருணாவும் பேசியது நினைவில் வந்து நின்றது.

"அம்மா இவங்க எப்படி இங்க..?" என காளியை பார்த்து கேட்க.

"ஏன் உன் அப்பாதான் கூட்டிட்டு வர சொன்னாரு..." என்க.

"ஏன்...?" என அவன் கேட்க.

"ஏன்னா அவரோட பசங்க ரெண்டு பேரும் இங்க உன் பிரிச்சனைய சரி பன்ற வேலைய செஞ்சிட்டு இருந்தாங்க அவங்கள அங்க தனியா விட முடியாது இல்ல அதான்..." என்றார்.

"நான் கூட பழைய காதல புதுப்பிக்கிறாரோன்னு நினைச்சிட்டேன்..." என நினைத்தான். 

அவனை ஒரு மாதிரியாக பார்த்த சக்கரவர்த்தி "அருணா உன் மவன் இப்ப என்ன நினைச்சான்னு நான் சொல்லட்டுமா..." என கேட்க.

"ஐயோ ரெண்டு பேரும் இன்னும் சண்டை போட்டுட்டு இருங்க போதும் உங்க சண்டை காளி நீங்க வாங்க உங்க அறைய காட்டறேன் போய் பிரெஷாகுங்க..." என்றபடி அவரை அழைத்துக் கொண்டு முன்னால் நகர அம்மா என்றபடி வந்தனர் திகம்பரனும் பரமனும் அவர்கள் நின்ற கோலத்தை பார்த்து "என்னடா மூஞ்செல்லாம் மாவு பூசிட்டு நிக்குறீங்க..."என அவர் கேட்க.

"ம்ம்ம்ம் உங்களுக்கு சாப்பாடு செய்யறோம்..."என்றனர்.

"அதான் உங்கள பார்த்தாவே தெரியுதே நீங்க சமைக்கிற லட்சணம்..." என்க.

"உனக்கு எப்படி ருசியா செஞ்சு போடறோம் பாரு..."என்றனர்.

"போதும் போதும் நீங்க வெளிய நாங்களே சமைக்கிறோம்..."என்க.

இந்தரோ "அம்மா அருவி வரலயா உங்கக்கூட..?" என கேட்க.

"இல்ல அவ இங்க வரலன்னு சொல்லிட்டா..." என கூற.

"ஏன்..?" என கேட்டான் அவன் அதிர்ச்சியாக.

"ஏன்னா...என்ன கேள்வி இது நீதான பிடிவாதமா விவாகரத்து பேப்பர்ல கையெழுத்து போடுன்னு ஒத்தக்காலுல நின்ன இப்ப வந்து ஏன் வரலன்னு கேக்கற அவ இனி இங்க வர மாட்டா நாங்களும் அங்கயே போய்டலாம்னு இருக்கோம் நீ தனியா இங்கயே இரு..." என்க.

"அது சும்மா போட சொன்னது..." என்றவன் விறுவிறுவென மாடி ஏறியவன் திரும்பி வரும்போது ஒரு பேப்பரோடு வந்தான்.


சக்கரவர்த்தியின் முன் நீட்டியவன் "இந்தாங்க அவ கையெழுத்து போட்ட பேப்பர் இத இப்பவே உங்க கண்ணு முன்னாடியே கிழிச்சிப் போடறேன் போதுமா..." என்றவன் சொன்ன மாதிரியே அதை கிழித்தும் போட்டான்.

சக்கரவர்த்தியோ "உன் பையனுக்கு இன்னும் பைத்தியம்தான் பிடிக்கல..." என்க.

"கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்னடா பண்ணிட்டு இருக்க..?"என கேட்க.

"அம்மா இப்ப சொல்றதுதான் அருவிதான் என்னோட வாழ்க்கை அவ இல்லாத நான் ஒரு ஜடம் அவள அழ வைக்கனும்னு நான் நினைக்கல ஆனா நான் அப்படி பண்ணலன்னா...?" என அவன் இழுக்க.

"என்ன அந்த மகிழா வந்து உன்ன உயிரோட எரிச்சிடுவாளா சமாளிக்காதடா நீ பழச மனசுல வச்சிட்டு அவள என்ன பாடுபடுத்துன..?"  என சக்கரவர்த்தி கேட்க.

"அதெல்லாம் பழைய விஷயம் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் நாங்க அப்படி இல்ல..." என்றான் அவன்.

"அதான் டெய்லி அவள அழவச்சிட்டு இருந்த இல்லையா..?" என கேட்க. 
 

 திகம்பரனோ "அது என்னடா உப்பு சப்பு இல்லாத 
பழைய பழி வாங்கற காரணம்..?" என சுந்தரை கேட்க.

"ஏன் நீ அந்த ஊர்தான உனக்கு தெரியாதா..?" என கேட்க.

"தெரியாது சொல்லுடா.." என்றான் அவன்.

"அது அந்த அருவி பெரிய பொண்ணா ஆனப்ப இவன் யாருக்கும் தெரியாம அவள பாக்க போனானாம் ஆனா அந்த பொண்ணு இவன திருடன்னு நினைச்சு அவ அப்பாகிட்ட மாட்டி விட்டுருச்சாம் அதானல ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய பிரச்சனையாகிடுச்சாம் அதனால ஐயா ரொம்ப உடைஞ்சு போய் அவள கடைசி வரைக்கும் மன்னிக்க கூடாதுன்னு இருந்தாராம் ஆனா விதிய பார்த்த இல்ல அவகிட்டயே இவன தள்ளிவிட்டுருச்சு..." என்க.

"டேய் இது நீ பேசற நேரம் அத
நான் கேக்கற நேரம் என்றவன் அம்மா நான் போய் அவள கூட்டிட்டு வரேன்..." என கிளம்ப.

"எந்த மூஞ்சிய வச்சுட்டு போவாரு துரை அவ மனச சுக்கு நூறா உடைச்சிட்டு டைவர்ஸ் பேப்பர்லயும் கையெழுத்து வாங்கிட்டு இப்ப எந்த உரிமைல போய் என் கூட வாழ வான்னு கூப்டுவான்..." என சக்கரவர்த்தி கேட்க.

"அம்மா அவள நான் சமதானப்படுத்தி அழைச்சுட்டு வரேன்..."என்க.

"இந்தர்..." என பத்மா.

"அம்மா அவர்ட்ட சொல்லுங்க நான் வேணும்னு எதையும் பண்ணல அவர குத்தி காட்ட வேணாம்னு சொல்லுங்க..." என்க.

"இந்தர் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆனா உன் அப்பா சொல்றது சரிதான்..."

"அம்மா அப்பா யாரும் இல்லாம நம்மள நம்பி இந்த வீட்டுக்கு வாழ வந்தா எங்கள நம்பி வந்தான்னு நினைக்கிறியா இல்லவே இல்ல உன்ன நம்பி உன் காதல நம்பி அவ இங்க வந்தா அவளுக்கு நாம திருப்பி செஞ்சது என்ன..?" என கேட்க.

"ஆமாடா நீ பேசின பேச்சுல எங்க எல்லோருக்கும் கூட வருத்தம் இருந்துச்சு ஆனா அவ மாமாவுக்கு ஏதோ பிரச்சனை அவரால நம்மகிட்ட சொல்ல முடியாம தவிக்கிறாருன்னு கரெக்ட்டா சொன்னா அதே மாதிரியே உனக்கு பிரச்சனை என்றவர் வாசுக்கூட உன் பேச்சுல மனசு உடைஞ்சு போய்ட்டான் ஆனா அருவி மாமா சந்தோஷமா இருக்கும்போது கூட இழுந்துட்டு அவருக்கு ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்ச உடனே வேணாம்னு விலகிப் போறதுக்கு பேர் உண்மையான அன்பு இல்ல என்ன ஆனாலும் நான் மாமா பிரச்சனைய சரிபண்ணாம வரமாட்டேன்னு சொன்னா அப்படி அவ எங்கக்கிட்ட பேசிட்டு உன்ன பாக்க வரும்போதுதான் அவள கடத்திட்டு போய்ட்டாங்க..." என்றான் பரமனும்.

"ஆமாம்மா அவளுக்கு இதோ இந்தர் மேலதான் ரொம்ப அன்பும்மா..." என்றான் திகம்பரன்.

"ஆமாப்பா நீ அவளுக்கு கொடுத்த அத்தனை கொடுமையும் தாங்கிட்டா எங்கக்கிட்ட ஒரு வார்த்தை உன்னை பத்தி தப்பா பேசல என்ன அப்படி பன்றாரு இப்படி பன்றாருருன்னு குறை சொல்லல ஆனா நீ அவள வார்த்தையால கொன்னுட்ட..." என்க.

அவனுக்கு தானாக கண்களில் இருந்து கண்ணீர் வழிய.

"அவள மாதிரி ஒருத்திலாம் வாழ்க்கை துணையா வரது வரம்டா அவ அருமை எங்க புரிய போகுது அவனுக்கு..." என சக்கரவர்த்தியும் கூற.

"அம்மா நான் போறேன் அவகிட்ட மன்னிப்பு கேக்கறேன் என்ன மன்னுச்சு ஏத்துக்கிட்டா அவளோட திரும்பி வரேன் இல்லனா  அவளுக்கு பாதுகாப்பா அங்கயே இருக்கேன் வாழ்வோ சாவோ அது அவக்கூடத்தான்..." என்றவன் யாரையும் கேட்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.

"என்னப்பா அவன்பாட்டுக்கும் எதும் சொல்லாம கிளம்பிட்டான்..." என சுந்தர் கேட்க.

"ம்ம்ம்ம் போய்ட்டு அவ வெளக்குமாறுல ரெண்டு வச்சு அனுப்புவா வாங்கிட்டு வரட்டும்..."என சக்கரவர்த்தி கூற.

"என்ன இப்படி பேசுறீங்க அதெல்லாம் அவ அப்படி பண்ண மாட்டா நீங்க ஒருத்தர் போதும் தெரியாதவளுக்கு கூட சொல்லி கொடுத்துடுவீங்க போங்க போய் வேலை ஏதாச்சும் இருந்தா பாருங்க..." என அருணா கூற.

"எது நடந்தாலும் அத ஏத்துக்கற மனப்பக்குவத்துக்கு வா அருணா நம்மள விட அதிகமா பாதிக்கப்பட்டவ அவதான் அவ என்ன முடிவு எடுக்கறாளோ அதுக்கு நாம கட்டுப்பட்டுதான் ஆகனும்..." என்க.

"நல்லதே நடக்கும்னு நம்புவோம் மாமா..." என்றார் பத்மினி.

"ம்ம்ம்ம்..." என்றார் அவர்.

அடுத்தநாள் காலை அவனுக்கு அருவியின் முகத்தில்தான் விடிந்தது.

நாளை இறுதி அத்தியாயம் மக்களே  



Leave a comment


Comments


Related Post