Total Views: 185
அத்தியாயம் 50
"ஏங்க... ஏங்க..."என உலுக்கிக் கொண்டு இருந்தாள் சுசிலா.
"என்னடி... எதுக்கு இப்படி காலையிலயே கத்திட்டு இருக்க...?" என கேட்ட வாசு மீண்டும் கவிழ்ந்து படுத்தவன் போர்வையில் மீண்டும் சுருண்டு கொண்டான்.
"ஏங்க இப்ப எழுந்திரிக்கல மூஞ்சில தண்ணிய ஊத்திடுவேன்...." என்றாள்.
"இப்ப என்னடி உனக்கு வேணும்..." என அவளையும் போர்வையில் இழுத்துக் கொண்டான்.
"ஐயோ என்ன பன்றீங்க உங்கள எழுப்பினா என்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டீங்க விடுங்க முதல்ல..." என துள்ளியவள் அவனிடம் இருந்து விடுபட போராட அவனது பிடியோ இரும்பு பிடியாக இருந்தது.
"அமைதியா கொஞ்ச நேரம் அப்படியே இருடி..." என்றவன் அவளை தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்ள.
அவனுக்கு வாகாக அவளும் அவனுடன் இணங்கினாள்.
"ஏங்க..." என அவன் ஹஸ்கி குரலில் அழைக்க.
"ஏன்டி இப்படி கூப்ட்டு காலையிலயே டெம்ப்ட் பன்ற இந்த மாமா அத்தான்னுலாம் கூப்பிட தோணாதா உனக்கு...?!" என அவனும் அதே குரலில் கேட்க.
"இப்ப அதான் முக்கியமா நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்..." என்க.
"என்ன முக்கியமான விஷயம்...?" என கேட்டான் அவன்.
"உங்க அண்ணாவோட கார் வெளிய நிக்குதுங்க..." என்க.
"ஓ..." என்றவன் மீண்டும் அவள் கூந்தலில் வாசனை பிடிக்க ஆரம்பித்தான் சீயக்காயின் வாசமும் உடலுக்கு பூசி குளித்து இருந்த கஸ்தூரி மஞ்சளின் வாசமும் அவனை தடுமாற வைத்தது.
அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் "சுசி..." என அழைக்க அவனது குரலே அவளை மயக்க செய்தது.
ஆனாலும் அதை அவனிடம் காட்டாது "இப்ப நான் சொல்றத கேக்கப் போறீங்களா இல்லையா...?" என கேட்க.
"என்ன வேணா கேக்கறேன் ஆனா இப்ப இல்ல நீ என்னய ரொம்ப ஏங்க வைக்கற..." என்றான் அவளது கூந்தலின் வாசத்தை பிடித்துக் கொண்டு.
"நான் உங்க அண்ணாவோட கார் நம்ம வாசல்ல நிக்குதுன்னு சொன்னேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..." என்க.
"ம்ம்ம்ம் என் ஆசை பொண்டாட்டியோட கூந்தல்ல வாசம் பிடிச்சிட்டு இருக்கேன் அது அப்படியே ஆளை மயக்குது தெரியுமா..."என்க.
அவன் வாயிலேயே அடித்தவள் "வாய் வாய் காலையிலயே என்ன பேச்சு முதல்ல எதுக்கு வந்துருக்காருன்னு கேளுங்க..." என்க.
"அவன் எங்க இங்க இருக்கான்..." என அவன் கேட்க.
பட்டென அவனிடம் இருந்து விலகியவள் "இங்க இல்லையா அப்ப எங்க போயிருப்பாரு...?"என கேட்டாள்.
"இதக்கூட புரிஞ்சிக்காம இருக்க மக்கு பொண்டாட்டி அவன் பொண்டாட்டிய பாக்க வந்தான் அவள பாக்க போய்ட்டான்..." என்க.
"ஐயோ ஏன் குழ்பபுறீங்க....?" என கேட்டாள் அவள்.
அவனும் படுக்கையில் இருந்து எழுந்தவன் "ஏய் மக்கு அவன் பொண்டாட்டி கூட்டிட்டு போக வந்தான் அவ எங்க இருக்காளோ அவள தேடி போயிருக்கான் போதுமா இப்ப நீ படு..." என அவளை படுக்கையில் தள்ள அவள் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து அவனை அடித்தவள் "இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா..."என அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
"ஏய் அடிக்காதடி அவன் நைட்டே வந்துட்டான்..." என்க.
"என்ன நிஜமாவா..." என கேட்க.
"ஆமா நீ வா..."என்றவன் அவளை இழுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவன் "அவன் நேத்து நைட் பதினோரு மணிபோல வந்தான் அவன் வரதுக்கு முன்னாடியே அப்பா போன் பண்ணிட்டாரு அவன் வரான்னு சரி வரட்டும் பாத்துக்கலாம்னு நானும் தூங்கிட்டேன் வந்து எழுப்பினான்..." என்க.
"அண்ணன பார்த்த உடனே அப்படியே பாசத்த பொழிஞ்சு இருப்பீங்களே..." என்றாள் அவள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல சாரி சொன்னான்..." என்க.
"பன்றது எல்லாத்தையும் பண்ணிட்டு சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா சரியாச்சா என்னால இத ஏத்துக்கவே முடியல என்ன வார்த்தை சொல்லிட்டாரு என்னால இன்னும் அவரு பேசினத ஏத்துக்க முடியல..." என்றாள்.
"ஏய் எதுக்கு இவ்ளோ கோபம் உனக்கு அவன் எதனால இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியும்தான அப்பறம் ஏன் இப்படி கோபப்படுற இத்தனை நாளா பேசாம இருந்த இந்த வாய் இப்ப எவ்ளோ பேசுது..." என அவளது உதட்டை இருவிரல்களால் இழுத்து பிடித்தவன் அப்படியே அவனது வாயருகே கொண்டு செல்ல அவனது கையை தட்டிவிட்டவள் "காலையில என்ன பண்ணிட்டு இருக்கீங்க வாங்க என்ன நடக்குதுன்னு போய் பாக்கலாம்..." என்க.
"அடியே விவஸ்தை கெட்டவளே அவன் அவன் பொண்டாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு போக வந்துருக்கான் புருஷன் பொண்டாட்டிய எப்படி சமாதானப்படுத்துவான்னு உனக்கு தெரியாதா..."என கேட்க.
"எப்படி கேப்பாங்க...?"என அவள் திரும்ப கேட்க.
"ஐயோ என தலையில் அடித்துக் கொண்டவன் ஏன்டி உனக்கு நிஜமாவே புரியலயா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா..." என கேட்டவன் அவளை தனக்கு நெருக்கமாக இழுத்தவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவளோ அதிர்ச்சியாக "அப்படியா..." என கண்களை விரிக்க.
"ஆமான்டி...." என்றவன் அவளையும் தன்னோடு இழுத்துக் கொண்டே படுக்கையில் விழுந்தான்.
அழகான புரிதலோடு கூடிய தாம்பத்யம் இனிதே ஆரம்பித்தது.
தன் அம்மாவின் வீட்டில் இருந்தாள் அருவி.
நேற்றே வந்தவள் தூசி படிந்து இருந்த வீட்டை சுத்தப்படுத்தினாள்.
சுசிலாவும் வாசுவும் எத்தனையோ முறை வேணாம் என கூறியும் கேளாதவள் "அங்க போனா அம்மா மடியில படுத்துக்கிற ஒரு பீல் கிடைக்கும் வாசு இன்னைக்கு ஒருநாள்தான நாளைக்கு வந்துடறேன்..." என்றவள் அவர்களையும் வேணாம் என மறுத்துவிட்டு சென்றாள்.
இரவு உணவை முடித்துவிட்டு அவளையும் அங்கு கொண்டு விட்டுவிட்டே வந்தான் வாசு.
அவனுக்கு அப்போதே தர்மன் அழைத்து இந்தர் வரும் தகவலை கூற அவனும் இந்தருக்காக காத்திருந்தான்.
வாசுவிற்காக காத்திருந்து சுசிலாவும் உறங்கி இருக்க ஹாலிலேயே காத்திருந்தான் வாசு.
வந்தவன் வாசு அவனுக்காக காத்திருப்பதை பார்த்து கண்கள் கனிந்தது இந்தருக்கு.
வேகமாக அவனை நெருங்கியவன் அவனை இறுக்கி அணைத்து ஆயிரம் முறை மன்னிப்பு வேண்ட வாசுவே போதும் விடுடா எனும் அளவிற்கு இருந்தது அவனது செயல்.
பின் நேரம் போவது தெரியாது இருவரும் பேசியவர்கள் அருவி அவளது அம்மா வீட்டில் இருக்கிறாள் என்ற தகவலை கூறியவன் அவனே அழைத்து செல்ல விழைய "நானே போய்க்கிறேன் இனி நீ உன் வாழ்க்கைய பாரு அருவி உண்டாயிருக்கா நீயும் சீக்கிரமா நல்ல சேதி சொல்லு..." என்றவன் அவளின் மனைவியை தேடி சென்றான்.
வாசு அதிகாலை சென்று உறங்க ஆரம்பித்த சில நிமிடங்களில்தான் சுசிலா அவனை எழுப்பியது.
எப்போதும் போல அதிகாலை எழுந்த அருவி தலைக்கு குளித்துவிட்டு அவளுக்கு பிடித்த ஆகாய நிற தாவணியை அணிந்து கொண்டு வாசலை தெளித்துக் கொண்டு இருக்க அவளின் முன் நின்ற அவளது கணவனை கண்டவள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை அப்படியே போட்டவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க.
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு நின்றான்.
இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி இருந்தது.
கிட்டத்தட்ட பத்துநாட்கள் கழித்து இருவரும் சந்தித்து கொண்டனர்.
இருவரின் பார்வையும் சிறிதும் விலகாமல் நிலைத்து நின்றது.
விடிவெள்ளியின் வெளிச்சத்தில் அவளது முகம்
நிலவாய் ஜொலிக்க அந்த நேரத்தில் அவனை எதிர்பாராதவள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை கீழே போட்டவள் உள்ளே ஓடினாள்.
அவளின் செயலில் அதிர்ந்தவன் அவனும் உள்ளே ஓடியவன் மறக்காது வாசல் கதவை அடைத்து இருந்தான்.
நொடியில் தாமதிக்காமல் அவளை தேடி சென்றவன் அவளை பின்னோடு அணைத்து பின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தவனின் கண்களில் கண்ணீர்த்துளிகள்.
இந்தப்புறமாக அவளது கண்களிலும் கண்ணீர் துளிகள் இருக்க.
அவளை இறுக்கி அணைத்தவனுக்கு இத்தனை நாட்கள் அவன் அவளை பிரிந்து இருந்து பட்ட துன்பத்திற்கு வடிகாலாய் இருந்தது அவனது அணைப்பு...