இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-51 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-02-2025

Total Views: 139

அத்தியாயம் 51


எத்தனை நேரம் அப்படியே நின்றார்களோ நேரம் ஆக ஆக அவனது அணைப்பு இன்னும் இறுக ஒருகட்டத்திற்கு மேல் அவன் அணைப்பில் திணறியவள் "மாமா..." என அழைக்க.

அவன் இன்னும் இறுக்க அணைத்தான்.

"மாமா, பாப்பா உள்ள இருக்கா..." என்ற பின்னரே சற்று விலகியவன் அவளை அவன் உயரத்திற்கு மேல் தூக்க "மாமா போதும் விடுங்க..." என்க.

"கொஞ்ச நேரம் அப்படியே இருடி..." என்றான்.

"நான் அப்படியே இருப்பேன் உங்க பாப்பாவுக்கு வலிக்கும் இல்ல..." என்க.

அவளது தாவணியை விலக்கி அவளது வயிற்றில் கையை வைத்து தடவியவன் "பாப்பு... அப்பா கொஞ்ச நேரம் அம்மாவ கட்டிப்பிடிச்சிக்கிறேன் நீங்க சமத்தா அம்மாவ கஷ்டப்படுத்தாம இருங்க..." என்க.

"இனி நான் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேன் இல்ல மாமா..." என அவள் செல்லமாக கோபிக்க.

அவளை கையில் ஏந்தியவன் அப்படியே தூக்கிக் கொண்டு அங்கு இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர வைத்தவன் அவளுக்கு கீழே அமர்ந்து கொண்டான்.

"மாமா என்ன பன்றீங்க எழுந்திரிங்க..."என அவள் பதற.

"அருவி.. அமைதியா இரு... ப்ளீஸ்..." என்றவன் அவளை அமர வைத்து அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள.

"மா... மாமா... எ.. என்ன ஆச்சு அதான் எல்லாம் சரியாகிடுச்சே...?" என அவள் கேட்க.

அவனின் கண்ணீர்த் துளிகள் அவள் தொடையை நனைக்க.

அவன் கண்ணீர்த் துளியின் ஈரத்தில் பதறியவள் "மாமா இப்ப என்ன ஆச்சுன்னு இந்த அழுகை...?" என்க.

"நான் கொஞ்சம் அழுதுக்கிறேன் அருவி நீ எதும் சொல்லாத..."என்க.

அவன் தலையை மெல்ல வருடினாள் அவள்.

சற்றுநேரம் அமைதியாக கரைந்தது.

"என் மேல கோபம் இல்லையாடி உனக்கு..." என அவன் கேட்க.

"இருந்துச்சு மாமா..."என்றாள் அவள்.

சட்டென அவன் நிமிர்ந்து பார்க்க.

"ஆமா கோபம் இருந்துச்சுதான் ஆனா அது வாசுவையும் பத்மா அத்தையும் நீங்க கோபமா பேசறத பாக்கும் போது  எனக்கு சந்தேகமாதான் இருந்துச்சு உங்க மேல கோபம் வரல..." என்றாள்.

"தர்மாப்பா சொன்னாரு எல்லாருமே என் மேல கோபமா இருந்தப்ப நீ மட்டும்தான் என் மேல எதும் தப்பு இருக்காதுன்னு நம்பினியாம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இரு பீல் இருந்துச்சு..."என்றான் அவன்.

"முதல்ல நானும் கோபமாத்தான் மாமா இருந்தேன்... ஆனா... அவங்கள பேசும்போது எனக்கு நீங்க ஏதோ பிரச்சனையில இருக்கீங்கன்னு புரிய ஆரம்பிச்சது அதுக்கப்புறம் ஒவ்வொன்னா யோசிச்சு பார்த்தேன் எல்லாமே ஒரே கோட்டுல வந்து  இணைஞ்சது அதான் நான் யோசிக்க ஆரம்பிச்சேன் வாசுகிட்ட சொன்னேன்..." என்க.

"தேங்க்ஸ்டி லவ் யூ சோ மச் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல..." என கேட்க.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா மகிழாவ தனியா சமாளிக்க நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டீங்களோன்னு யோசிச்சேன்..." என்றாள் அவள்.

"ப்ளீஸ்டி என் மேல இவ்ளோ லவ் வைக்காத என்னால தாங்க முடியல  உனக்கு நான் ரொம்பவே துன்பத்தை மட்டும்தான் கொடுத்து இருக்கேன் பெட்டுல கூட.." என அவன் வாயைத் திறக்கும் முன் அவன் வாயில் வைத்தவள் "புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம் மாமா இதப்போய் பெருசா பேசுறீங்க..." என அவள் கேட்க. 

"இல்லடி ஊருல இருந்து வந்த ரெண்டாவது நாள் உங்கிட்ட நான் எப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கு தெரியும் உன் நடைய வச்சே கண்டுபிடிச்சிட்டேன் அம்மாக்கூட சந்தேகமாத்தான் பார்த்தாங்க..." என்றான்.

"விடுங்க மாமா அதெல்லாம் எதுக்கு இப்ப உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லதான மகிழாவ அரெஸ்ட் பண்ணிட்டாங்க வர்ஷினியோட அம்மா அவ  திருந்தி வந்தா அவளையும் என் பொண்ணா பாத்துக்கிறேன்னு சொல்லி இருக்காங்க ஆனா அவ திருந்தி வரனுமே..." என அவன் கூற.

"வர்ஷினி பாவம் மாமா..." என்க.

"அதுக்காக அவள கட்டிக்க முடியுமாடி நீதான் என்னோட வாழ்க்கைன்னு ஆனப்பிறகு இன்னொருத்திய எப்படி நான் நினைச்சு பார்ப்பேன்..." என்க.

அவள் கண்களில் கண்ணீர்.

அதை துடைத்தவன் "நீ எதுக்குடி அழற தப்பு பண்ணது நான்தான அப்ப நான்தான் அழனும்..." என்க.

"அப்படி இல்ல மாமா என்மேல இவ்ளோ அன்ப வச்சதுக்கு நான் திருப்பி என்ன பண்ண போறேன்..." என அவள் கேட்க.

"போடி பைத்தியம் உன்ன இவ்ளோ கஷ்டப்படுத்தியும் நீ என்ன கொஞ்சம்கூட விட்டுத்தரல அப்போ உன் காதல் பக்கத்துல நான் நிக்க முடியாதுடி இதுக்கு என்ன சொல்ற..." என அவன் கேட்க.

"போதும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிக்கிட்டது எதுக்கு இப்படி விடிஞ்சும் விடியாத பொழுதுல ஓடி வந்துருக்கீங்க நான் எங்க போய்ட போறேன்..." என்க.

"ஏன்டி பிரச்சனைலாம் சரியான பிறகு என் பொண்டாண்டிய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு பாக்க ஓடி வந்தா நீ என்ன இப்படி சொல்ற..." என அவன் கேட்க. 

"பொறுமையா வந்துருக்க வேண்டியதுதான..." என அவள் கேட்க.

"ஏன் சொல்ல மாட்டா இத்தன நாளா என் பொண்டாட்டிய அழ வச்சிட்டோம்னு வருத்தத்துல ஓடி வந்தா என்ன பேச்சு பேசற பாத்தியா நீ..."என்க.

"சரி சரி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்..." என்க.

"ஏன் இது மட்டும் யாரு வீடு..?" என கேட்டான் அவன்.

"இல்ல மாமா இது உங்களுக்கு ஒத்துவராது.." என்றாள் அவள்
கூற.

"இதும் நம்ம வீடுதான்டி நீ பிறந்து வளர்ந்த இந்த வீடு எனக்கு சொர்க்கம்..." என்றான் அவன்.

"இந்த வீட்டு மேல... என அவள் ஏதோ கூற வந்து பின் சங்கடப்பட்டடு நிறுத்த "இந்த வீட்டு மேல இருந்த கடன் உன் அம்மா ஹாஸ்பிடல் செலவுக்கு நீ வாங்கின கடன்னு எல்லாமே சரி பண்ணியாச்சு நம்ம கல்யாணத்து அப்பவே இந்த பிரச்சனை எல்லாத்தையும் அப்பா சரிபண்ணிட்டு இந்த வீட்டையும் உன் பேருல மாத்திட்டுதான்டி நமக்கு கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணாரு..."என்க. 

"நிஜமாவா மாமா..." என அவள் கேட்க.

"இதுல பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்னடி இருக்கு உனக்கு நம்பிக்கை இல்லனா உன் மாமனாரு வந்ததும் கேட்டுப்பாரு..." என்க.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் ரொம்ப சந்தோஷம் மாமா..." என்றாள் அவள்.

"ம்ம்ம்ம்... நம்ப பிள்ளைங்க ஊருக்கு வந்தா இந்த வீடு அவங்களோட பாட்டி வீடுன்னு சொல்லனும் அருவி..." என்க.

அவளோ அடுத்து அழ தயாராக "இங்கப்பாரு இன்னொரு தடவ அழுதா அப்பறம் என்ன நடக்குமோ தெரியாது..." என்க.

"என்ன நடக்குமாம்..."என கேட்டாள் அவள் மூக்கை உறிஞ்சியபடி.

"என்ன வேணா நடக்கும் மாமா ரொம்ப ஏங்கிப்போய் இருக்கேன்..." என்க.

"ஓகோ..." என்றாள் அவள்.

"ஆமாடி..." என்க.

"சரி வாங்க அங்க போலாம்..." என்றாள் அவள்.

"அப்பறமா போலாம் இப்ப என்ன அவசரம்..?"என்க.

"வாசுட்ட நீங்க வந்த விஷயத்தை சொல்ல வேணாமா..?" என அவள் கேட்க.

"அதெல்லாம் அவனுக்கு தெரியும்..." என்றான் அவன்.

"தெரியுமா... எப்படி...?" என அவள் கேட்க.

"எதுக்குடி இத்தன கேள்வி கேட்கற அங்க போய்ட்டுதான் இங்க வந்தேன் அவன்தான் நீ இங்க இருக்கன்னு சொன்னான்..." என்றான் அவன்.

"ஓ... வாசு பாவம் மாமா ரொம்ப அழுதான்..." என்க.

"ம்ம்ம்ம்... தெரியும்..."என்றான் அவன்.

"வாசுகிட்டாயாச்சும் நீங்க சொல்லி இருக்கலாம் மாமா..." என்க.

"வாசு அவள கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போனா பரவால்லையா உனக்கு..." என கேட்க.

"ஐயோ..." என்றாள் அவள்.

"ம்ம்ம்ம்... அதான் சொல்லல..." என்க.

"மனசுக்குள்ள வச்சிட்டு மருவிக்கிட்டு இருந்தீங்களா மாமா..."என அவள் கேட்க.

"அதுலாம் ஓகே ஆனா உன்ன கஷ்டப்படுத்தினததான் இன்னும் என்னால தாங்கிக்க முடியாத வலியா இருக்கு அத எப்படி நான் சரி பண்ணுவேன்னு தெரியல..."
என்க.

"விடுங்க மாமா ஏதோ கெட்ட நேரம் எல்லோருக்கும் அதான் இப்படி ஆயிடுச்சு நாளைக்கே கோவிலுக்கு போவனும் ஆமா அத்தை மாமாலாம்..." என அவள் இழுக்க. 

"இந்நேரம் கிளம்பி இருப்பாங்க..." என்றான் அவன்.

"சரி வாங்க கிளம்பலாம்..." என்க.

"வேணாம்டி சொன்னா கேளு..." என்க.

"ஏன் வேணாம்னு சொல்றீங்க..?" என அவள். கேட்க

"அடியே..." என்றவன் அவள் காதில் ஏதோ சொல்ல முகம் மலர்ந்து சிரித்தவள் "லூசு மாமா..." என அவன் கன்னத்தில் தட்ட "நாமளும்..." என அவன் இழுக்க "பாப்பா இருக்கு மாமா..." என்க.

அவள் வயிற்றை தடவியவன் "ரொம்ப தேங்க்ஸ்டி நான் அப்பா ஆகிட்டேன் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்க.

"நமக்குன்னு ஒரு உறவு ஒரு உயிர் நினைச்சு பார்க்கவே ஒருமாதிரி சந்தோஷமா இருக்கு மாமா.." என்றாள் அவள்.

"ஆமா எதுக்குடி தாவணி கட்டியிருக்க..?" என அவன் கேட்க.

"இது நியாபகம் இல்லையா மாமா..." என அவள் கேட்க.

"இல்லையே..." என்றான் அவன் யோசனையாக.

அவள் முகம் வாட "இது நீ எனக்கு எடுத்து கொடுத்தது மாமா அப்படியா உனக்கு நினைவுக்கு இல்ல..."என அவள் கோபிக்க. 

கெஞ்சி கொஞ்சியவன் அப்படியே எழுந்து அவளோடு தன்னையும் சாய்த்து கொண்டான்.

"மாமாவுக்கு வர்ஷினியாலதான் பிரச்சனைன்னு தெரியும் ஆனா நீங்க அவ பண்ணை வீட்டுல இருக்கீங்கன்னு எப்படி தெரியும்..?" என கேட்க.

"அவ மொபைல ட்ரேஸ் பண்ணி வந்துட்டாங்க அவ எதிர்பார்த்து இருக்க மாட்டா..." என்க.

"வர்ஷினி அம்மா எப்படி கரெக்ட்டா வந்தாங்க..." என கேட்க.

"எதுக்குடி இத்தன கேள்வி கேக்கற..." என அவன் கேட்க.

"தெரிஞ்சிக்கத்தான்..." என்றாள் அவள்.

"அவ அடிக்கடி அங்க போய் வர இருந்து இருக்கா அதான் அவங்க சரியா வந்துட்டாங்க..." என்றான் அவன்.

"ம்ம்ம்ம்..." என்றவன் "அருவி..." என அழைக்க "ம்ம்ம்ம்... சொல்லுங்க மாமா..." என்றாள் அவள்.

"தாவணியில ஒரு தினுசா இருக்க..." என்க.

"இதுக்கு முன்னாடி எத்தன தடவ இத கட்டியிருக்கேன் இப்ப என்ன தினுசா தெரியறேன்..." என அவள் கேட்க.

"சாரி..." என்றான் அவன்.

"எத்தன தடவ கேட்பீங்க விடுங்கன்னு சொன்னேன் இல்ல..."

"முடியலடி உள்ளையும் வச்சிக்க முடியாம உங்க யார்கிட்டயும் சொல்லவும் முடியாம நரக வேதனைடி..." என்க.

அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் "இனி நடந்து முடிஞ்சதப்பத்தி பேசாதீங்க மாமா  அத மறந்துட்டு அடுத்த என்ன பன்றதுன்னு யோசிங்க..." என்க.

"மறக்கணும்தான் ஆனா அதுக்கு நீதான் மனசு வைக்கனும்..."என்க.

"மாமா..." என அவள் இழுக்க.

"நீதான மறக்க சொன்ன நான் என்னையவே மறக்கனும்னா அதுக்கு நீதான் வேணும்..." என அவளை மையலாக பார்க்க.

"பாப்பா இருக்கு மாமா..." என அவளின் குரல் உள்ளே போனது.

"என் குட்டி சமத்து..." என அவள் வயிற்றில் தடவ உடல் சிலிர்த்தது அவளுக்கு.

அதை உணர்ந்தவன் மேலும் "அருவி ப்ளீஸ்..." என்க.

அவன் முகத்தை கையில் ஏந்தியவள் அவன் கண்களை ஊடுருவி பார்க்க அதில் பலநாள் ஏக்கமும் பல நாள் தூக்கமின்மையும் அப்பட்டமாக தெரிய அவன் நெற்றியில் முத்தமிட்டவள் தன் சம்மதத்தை மறைமுகமாக தெரிவிக்க அதுதான் சாக்கு என அவளோடு கட்டிலில் சரிந்தான் இந்தர். 



Leave a comment


Comments


Related Post