Total Views: 184
அத்தியாயம் 52 (இறுதி அத்தியாயம்)
கதவு தட்டும் ஓசையில் மெல்ல விலகியவள் "மாமா யாரோ கதவ தட்டறாங்க..." என்க.
"தட்டட்டும்டி நீ படு.." என்க.
"மாமா மணி எட்டுக்கும் மேல இருக்கும்..." என்க.
"இருந்துட்டு போகட்டும்டி எத்தனை நாள் ஏக்கம் தெரியுமா பேசாம படு..." என மேலும் அவளை நெருங்கி படுத்தான்
"மாமா இந்த கட்டில் ஒரு ஆளு படுக்கற கட்டில்தான் ஏற்கனவே இடம் பத்தல இதுல நீங்க வேற இன்னும் இறுக்கிக்கிட்டே இருக்கீங்க..." என்க.
"இந்த நெருக்கமும் உன் வாசனையும் இல்லாம இத்தன நாளா எத்தனை தவிப்பு தெரியுமாடி பேசாம படு இல்ல டென்ஷன் ஆகிடுவேன்..." என்க.
"கதவ தட்டிட்டே இருக்காங்க மாமா நானாவாது போய் பாக்கறேன்..." என்க.
"சரி போடி..." என்றவன் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.
"டேய் இந்தர் இன்னுமா நீ எழுந்திரிக்கல..." என கத்த
அருவி கதவை திறந்தவள் "ஏன்டா இப்படி கத்திட்டு இருக்க...?" என கேட்க.
"அப்பா வந்துருக்காருடி..." என்றான் அவன்.
மெல்ல எழுந்து வந்தவனை நோட்டம் விட்டான் வாசு.
அவனின் தோற்றமே அங்கு நடந்ததை கூறாமல் கூற.
"என்னடா எதுக்குடா இப்படி கத்திட்டு இருக்க..?" என கேட்க.
"அப்பா உன்ன உடனே கூட்டிட்டு வர சொன்னாரு கோவிலுக்கு போகனுமாம் நீ என்ன வீட்டுக்கு வர ஐடியாவே இல்லயா உன் பொண்டாட்டி வீட்டுலயே டேரா போட்டுட்ட..." என கேட்க.
"ஏன் இனி நான் இங்கதான் இருக்க போறேன்..." என்றான் அவன்.
"ரெண்டு பேரும் நிறுத்துங்க நீங்க வர்றீங்களா இல்ல நான் கிளம்பட்டா..." என கேட்க.
"இருடி சட்டை போட்டுட்டு வரேன்.." என்றவன் உள்ளே நுழைந்து சட்டையை அணிந்து கொண்டவன் அங்கிருந்த கயிற்று கட்டிலை பார்க்க அவனுக்கு அருவி அதில் அவனுடன் ஒன்றாக இருந்த நினைவுகள் வர அதை பார்த்து கொண்டே சட்டையை அணிந்து கொண்டவன் இந்த கட்டிலை ஊருக்கு கொண்டு போகனும் என நினைத்து கொண்டான்.
வாசு வண்டியில் வந்திருக்க அதை பார்த்தவள் "ஏன்டா இங்க இருக்க வீட்டுக்கு போக வண்டி கொண்டு வந்தியா நீ..." என கேட்க.
"ஏய் இப்ப உன்ன நடக்க வச்சு கூட்டிட்டு போனா என் அம்மா என்ன ஒரு வழி ஆக்கிடும் நீ வாம்மா நாம போகலாம்..." என்க.
வாசு வண்டியை ஓட்ட அவன் பின்னால் இந்தரும் அவன் பின்னால் அருவியும் அமர்ந்து கொண்டனர்.
அவள் எப்போதும் காற்றில் அசையும் அவன் சிகையை ஒரு கையால் கோதிவிடுவதை ரசிப்பாள்,இப்போதும் அவனது செய்கையை ரசித்தவள் அவன் இடுப்பில் கையை போட அவளை திரும்பி பார்த்தவனின் கண்களை காண முடியாமல் திரும்பிக் கொள்ள "ரொம்ப சிவக்காதடி அப்பறம் அவ்ளோதான்..." என கிசுகிசுவென கூற.
"டேய் உங்க அழிச்சாட்டியத்தெல்லாம் வீட்டுல போய் வச்சிக்கங்க வண்டிய இப்ப ஓட்ட விடுங்க..." என்க.
"டேய் முன்னாடி பார்த்து போடா..." என்றான் இந்தர்.
மூவரும் வீட்டிற்கு வர கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார் ஜானகி.
அவரை பார்த்து அவள் புன்னகைக்க அவள் அருகில் சென்றவர் அவள் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தவர் "ராசாத்தி உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லாதாவே நடக்கும்.." என்றவர் இந்தரையும் அருவியையும் அருகருகே நிற்க வைத்து ஆரத்தி சுத்தி உள்ளே அனுப்ப அருவி என அணைத்துக் கொண்டார் ஜானகி "நீ உண்டாயிருக்கேன்னு சொன்னாங்க கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்க.
"உங்க ஆசிர்வாதம்மா..." என்றாள் அவள்.
"சரி சரி கிளம்புங்க எல்லோருமே கோவிலுக்கு போகனும்..." என்றார் தர்மன்.
"நான் வரலாம்மான்னு தெரியல தெரியலயே..." என அருவி கூற.
"அதெல்லாம் வரலாம் அது நம்ம சாமி நம்மள இத்தன துன்பத்துல இருந்து காப்பாத்தி இருக்கு இனியும் காப்பாத்தும் நீ போய் கிளம்பு..." என அவளது தலையை வருடியபடி கூறினார் காளி.
அவரது காலில் விழப்போக
அவளது எண்ணம் புரிந்தவர் அவள் கீழே விழாமல் தடுத்து "இந்த மாதிரி நேரத்துல சும்மா சும்மா குனியக் கூடாது சரியா மூணு மாசம் முடியற வரைக்கும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்..." என்றவர் அவள் தலையை வருடி "என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும் நல்லா இரு..." என்க.
இவர்களை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் திகம்பரன்.
என்ன முயன்றும் அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.
அதை மறைக்க வேறுபுறம் திரும்பிக் கொள்ள வாசு அவனை சரியாக கவனித்து அவன் முதுகில் கை வைத்து தடவியவன் "எல்லாம் சரியாகும் உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு இனிமேலாவது அத வாழப்பாரு பெரியம்மா மனசு கஷ்டப்படற மாதிரி இனி ஒருக்காலமும் நடந்துக்க கூடாது நிறைய நடந்துப் போயிடுச்சு இனி அதெல்லாம் திரும்பி வராது இனி இருக்கற காலமாச்சும் நல்லா வாழனும்னு நினை..." என்றவன் முதுகில் தட்டினான் இந்தர்.
"ரொம்ப அறுக்காத அவனுக்கு தெரியாததையா நீ சொல்லிட போற என்றவன் உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்க பரமனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடு இந்த பழி வாங்கற வெறி மனசுல வஞ்சம்னு இதையெல்லாம் வச்சுட்டு இத்தன நாள் என்ன நீ சந்தோஷமா இருந்த சொல்லு உனக்குன்னு நிறைய கடமை இருக்கு அதையெல்லாம் செய் அம்மாவுக்கு ஒரு மூத்த பையனா எல்லாம் செஞ்சு கொடு..." என்றவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் திகம்பரன்.
பரமனும் அவர்கள் அருகில் வந்து "என்ன என்னைய விட்டுட்டு நீங்க மட்டும் தனியா பேசிட்டு இருக்கீங்க இந்த குடும்பத்துல நானும்தான்டா ஒருத்தன் எதுவா இருந்தாலும் எங்கிட்டயும் சொல்லுங்க..." என்க.
"ம்ம்ம்ம் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சோம்..." என்றான் வாசு.
அவனுக்கோ வெட்கம் வர "அவன் இருக்கும் போது எனக்கு எப்படிடா..." என கேட்க.
"அடங்கொய்யால உனக்கு முன்னாடி ஒருத்தன் இருக்கான்டா முதல்ல அவனுக்கு பார்ப்போம் அப்பறம்தான் உனக்கு என வாசு அவன் தலையில் ரெண்டு கொட்ட இதுக்கு எதுக்குடா மண்டைல கொட்ற வாய்ல சொன்னா கேட்டுக்க மாட்டோமா..." என வாசுவை துரத்தினான் பரமன்.
வேகமாக ஓடி தர்மன்மேல் விழ "ஏழு கழுதை வயசாகுது இப்ப வந்து ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கு பாரு..." என்க.
வாசுவோ "ஆமா சின்னப் பையனா இருக்கும் போது அவன் எதிரியோட பையன் உனக்கும் எதிரின்னு பள்ளிக்கூடத்துல கூட சேர்ந்து விளையாட விடல இப்ப வந்து பேசறத பாரு..."என்றவன் அவர் முறைக்க ஆரம்பித்த உடன் அங்கிருந்து ஓடினான்.
அவர்கள் ஓடிப்பிடித்து விளையாடியதை பார்த்து பெரியவர்களும் சிரித்து மகிழ்ந்தனர்.
"முதல்ல எனக்கு ஒரு வழிய சொல்லிட்டு அப்பறம் என்ன வேணா பண்ணுங்க..." என்றபடி உள்ளே வந்தான் சுந்தர் கூடவே கீர்த்தனாவும் அவளுடன் இரண்டு தோழிகளும்.
"நீ என்னடா இப்படி வந்து நிக்கற...?"என சக்கரவர்த்தி கேட்க.
"அப்பா நான் கீர்த்தனாவ விரும்பறேன் அவ வீட்டுல இதுக்கு சம்மதிக்க மாட்டேன்றாங்க..." என்க.
"ஏன்டா..."என தர்மன் கேட்க.
"அது நாங்க வேற ஆளுங்கலாம் அதனால எனக்கு பொண்ணு கிடையாதாம்..." என்க.
"இந்த காலத்துலயும் எவன்டா அப்படி சொல்லிட்டு திரியறவன்..."என தம்கட்டி நெஞ்சை விரித்து கொண்டு வேகமாக எழுந்தான் திகம்பரன்.
"டேய் எப்பா ஆரம்பத்துலயே என் லவ்வுக்கு என்டு கார்டு போட்றாதடா நீ கொஞ்சம் ஷோல்டரை இறக்கு உன்ன கட்டிக்கப்போற பொண்ணு பாவம்...." என அவன் கூறி முடிக்கவும் வனிதா வந்து அவன் மீது மோதவும் சரியாக இருக்க திகம்பரன் அப்படியே ப்ரீஸாகி நின்றான்.
"அடுத்து இவனுக்கு போலடா..." என்க.
"டேய் போய் குளிச்சுட்டு ரெடியாகுங்கடா..." என சக்கரவர்த்தி சத்தம் போட ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
"இந்த வீட்டுல உங்க ஒரு வார்த்தைக்குத்தான் மாமா இந்த பயலுவக எல்லாமே அடங்குறானுங்க...." பத்மினி கூற.
"ஏங்க சுந்தருக்கு கீர்த்தனாவ ரொம்ப பிடிச்சு இருக்கு போலவே...." என அருணா கூற.
"கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டு பேசலாம்மா அவன மட்டும் அப்படியே விட்டுருவோமா என்ன...?" என கேட்க.
"சரிதான் மாமா நம்ம பையன் அவன்...." என்றார் பத்மினி.
பின் அனைவரும் கிளம்பி அவர்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அங்கேயே பொங்கலும் வைத்து உண்டு மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
சிறியவர்கள் அவர்களது ஜோடிகளோடு ஐக்கியம் ஆகி விட திகம்பரன் வனிதாவுடனும் பரமன் அவளது தோழியுடனும் ஏதோ பேசியபடி இருந்தனர்.
பெரியவர்களின் கண்ணுக்கு இது விழுந்தாலும் கண்டுகொள்ளாதவாறு பேசியபடி இருக்க சக்கரவர்த்தி சற்று மேடாக இருந்த கல்லின் மேல் அமர்ந்து சற்று தொலைவில் இருந்த காளி கோவிலை பார்த்து கொண்டு இருந்தார்.
"எங்கிட்ட இருந்து எவ்வளவோ எடுத்துக்கிட்ட இனி இழக்க ஒன்னும் இல்ல இந்த பிள்ளைங்க வாழ்க்கைல சந்தோஷமா இருக்கனும் நீதான் எப்பவுமே அவங்களுக்கு துணையா இருக்கனும்..." என வேண்டியபடி இருக்க.
அவரின் நிழல்போல ஒருபக்கம் தர்மனும் இன்னொரு பக்கம் அருணாவும் வந்து நின்றனர்.
சக்கரவர்த்தியின் கவனம் தூரத்தில் தெரிந்த காளி கோவிலின் மேல் இருக்க அதை உணர்ந்தவகள் அவரின் தோளில் கைவைத்து அழுத்த அவர்களை பார்த்தவரின் இதழ்களிலும் புன்னகை.
அருவியும் இந்தரும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை பற்றி பேசியபடி இருக்க
வாசுவோ தனக்கு பெண் குழந்தை வேணும் என அடம்பிடித்துக் கொண்டு இருந்தான்.
அவர்களின் மகிழ்ச்சி அப்படியே நிலைத்து இருக்க நாமளும் வாழ்த்தி விடைபெறுவோமே....
நன்றி