Total Views: 114
ஆறுமுகம் தான் பேச ஆரம்பித்தார். "நாங்க வீட்டில் பேசிவிட்டு யோசிச்சு சொல்றோம்" என்றார்.
"சரி கொஞ்சம் நல்ல முடிவு சீக்கிரம் சொல்லுங்க" என்றவர் தனது குடும்பத்தை பார்க்க. நித்யா தான் "மாமா நான் கொஞ்சம் பேசட்டா "என்று கேட்டாள்.
" பேசுமா என்று" விட்டு ராமு அமைதியாக இருக்க, நான் முகிலனுடைய தங்கச்சி வினிதா வேலை செய்ற கம்பெனியோட எம்டி "என்றாள்.
வீட்டில் உள்ள அனைவரும் இவள் எதுக்காக இப்போ இதெல்லாம் சொல்லிட்டு இருக்கா என்பது போல் பார்த்தார்கள்.
"எனக்கு வினிதாவை ரொம்ப புடிச்சிருக்கு ,எனக்கு அண்ணியா ,,என் அண்ணனுக்கு பொண்டாட்டியா,என் குடும்பத்துக்கு மருமகளா வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
உங்க வீட்டு பொண்ண எங்க அண்ணன் நல்லா வச்சு பார்த்துப்பான் வசதியிலும் சரி, வேற எதுலயும் சரி அந்த குறையும் வைக்க மாட்டான் அவனை நம்பி உங்க பொண்ண நீங்க கொடுக்கலாம்" என்றாள்.
ஜானகி தான் அவளை மேல் இருந்து கீழே வரை பார்க்க சிரித்த முகமாக "சரி வரோம் மா" என்றாள்.
"அம்மா வா "என்றார் ஜனாகி.
"உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கோம், உங்க வீட்ட பத்தி விசாரிச்ச அப்போ நீங்க அவங்களோட அத்தைனு கேள்விப்பட்டேன் "என்றால் சிரித்தை முகமாக நித்யா .
"ஓ" என்று விட்டு ஜானகி அமைதியாகிவிட்டார்.
போகும்பொழுது வினிதாவை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்த நித்யா எதுவும் பேசாமல் தன் குடும்பத்தாருடன் கிளம்பிவிட்டாள் .
வினிதா முகிலனை பார்த்தாள். ஆனால் அவன் திரும்பியும் பாராமல் கிளம்பிவிட்டான் .அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.
மறுநாள் ஆபீசுக்கு வந்திருந்த வினிதா வேலை விஷயத்தைத் தாண்டி இருவரிடமும் எதுவும் பேசவில்லை. நித்யா காலேஜ் முடிந்து ஆபீஸுக்கு வந்தவுடன் நேராக பர்மிஷன் கேட்டு விட்டு சிஇஓ ரூமுக்கு சென்று இருந்தாள் வினிதா.
நேராக நித்யா விடம் சென்று என்ன நெனச்சிட்டு இருக்க உங்க அண்ணன் என்கிட்ட வந்து பேசுனதுக்கு இந்த நிமிஷம் வரைக்கும் நான் எந்த பதிலும் சொல்லல.
"என்கிட்ட அதை பத்தி உங்க அண்ணனும் எதுவும் கேட்கல. ஆனா, நீங்களாவே முடிவு பண்ணி என் வீட்ல வந்து பேசுவீங்களா ?என்னோட விருப்பம் தேவையே இல்லையா ?என்னோட மன நிலை என்னனு யோசிக்கவே மாட்டிங்களா?" .
" பணம்,காசிருந்தா அத உங்களோடு வச்சுக்கணும் ,அதை அடுத்தவங்க வாழ்க்கையில் திணிக்க கூடாது என்றால், படபட பட்டாசாக அமைதியாக கையைக் கட்டிக் கொண்டு வினிதா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நித்யா அமுதனை பார்த்தாள்.
அவன் தனக்கு என்ன வந்தது, யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் தன் வேலையில் கவனத்தை வைத்துக்கொண்டு ஓர பார்வையில் தனது மனைவியையும் ,வினிதாவையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது செய்கையை பார்த்தவர்களுக்கு எரிச்சல் மண்டினாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் வினிதாவின் பக்கம் பார்வையை திருப்பி "முடிச்சிட்டீங்களா இப்போ நான் பேசலாமா".
" உங்க விருப்பம் இல்லாம இப்ப கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லல ,இன்னொரு விஷயம் இங்கே நாங்க பணத்தை கொண்டு வரவே இல்லையே, எங்க கிட்ட பணம் இருக்கு அதனால உங்க வீட்டு பொண்ண தாங்கன்னு வந்து நாங்க கேட்டோமா ?,எங்க அண்ணனுக்கு புடிச்சிருக்கு எங்களுக்கும் புடிச்சிருக்கு பொண்ணு தாங்கன்னு தான் கேட்டோம் இது எந்த வகையில் தப்பு. ஊர் உலகத்துல இருக்குற எல்லாரும் அவங்க வீட்டு புள்ளைக்கு கல்யாணம் பண்ணனும்னா பொண்ணு வீடு தேடி போயி கேட்க தானே செய்றாங்க, அதையே தான் நாங்களும் செஞ்சிருக்கோம்".
"அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா ?".
அப்படி எதுவும் நாங்க வரைமுறை தவறி கேட்கலனு நினைக்கிறேன் என்றாள்.
"நித்யா எத பேசினாலும் யோசிச்சு பேசு" நான் இப்ப ஏதும் தப்பா பேசலையே எங்க அண்ணா உங்ககிட்ட வந்து நீங்க சொன்ன மாதிரி ப்ரொபோஸ் பண்ணாரு இதுவரைக்கும் நீங்க எந்த பதிலும் சொல்லல.
"பதில் சொல்லலைன்னா அதுக்குன்னு வீடு தேடி வருவீங்களா ?".
"பதில் சொல்லல அப்படின்னா அதுக்கு அர்த்தம் விருப்பம் இல்லைன்னு மட்டும் ஆகிடாதே ".
முறைத்த வினிதா "விருப்பம் இருக்கா இல்லையான்னு நான் சொல்லனும் மா நீங்களாவே முடிவு பண்ணி விடக்கூடாது அண்ணனும் தங்கச்சியும் "என்று முனகினால் .
அமுதனுக்கு சிரிப்பு வந்துவிட சிரித்து விட்டான் .இருவருமே அமுதனை பார்த்து முறைக்க ,எழுந்து வந்து தனது மனைவியின் அருகில் வந்து நித்து இது ஆபீஸ் டி கத்தாம மெதுவா பேசுங்க ,இல்லனா உங்க பஞ்சாயத்தை வெளியே போயி வச்சுக்கோங்க என்றான்.
வினிதா இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக ஆப்போசிடில் உள்ள சேரில் உட்கார ,நித்யாவும் உட்கார்ந்து கொண்டால், அமுதன் அமைதியாக தன்னிடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான் .
"நேரடியா உங்க முகத்துக்கு நேராவே கேட்கிறேன். எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு விருப்பமா ?".
"எனக்கு விருப்பம் இல்லை" என்று பட்டென்று வினிதா விடம் இருந்து பதில் வர .
அமுதன்,நித்யா இருவரும் அவளை தான் பார்த்தார்கள் .ஏன் என்று தெரிஞ்சுக்கலாமா?.
"எங்க அண்ணனை புடிக்கலையா ?இல்ல இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா ?"என்றால்.
நேருக்கு நேராக நித்யாவை பார்த்தவள். நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியாவில் இல்லை. இதுல உங்க அண்ணனை புடிச்சிருக்கா ?இல்லையான்னு சொல்ற அளவுக்கு எல்லாம் நான் கிடையாது.
அந்த அளவுக்கு எல்லாம் நான் இதுவரைக்கும் யோசித்தது இல்ல சரியா? ஒரு வார்த்தை உங்க அண்ணன் இத பத்தி என்கிட்ட இன்னொரு டைம் கேட்டு இருந்தா நான் பதில் சொல்லி இருக்க போறேன்.
எங்க வீட்ல இப்படி நீங்க குடும்பத்தோட வந்து நின்று இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
குடும்பத்தோட வந்து நின்னதால கொஞ்சம் சங்கடமா இருக்கு.
"இப்ப நீங்க சங்கடப்படுற அளவுக்கு இங்கு எதுவும் நடக்கல , நீங்க இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?" .
அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல நித்யா .
இல்ல அது ..
வேணாம் இதுக்கு மேல இதை பத்தி பேச நான் விரும்பல என்று விட்டு வினிதா எழுந்து நிற்க.
இதை நீங்க உங்க வீட்டிலேயே பேசி இருந்திருக்கலாமே நேத்து நாங்க பொண்ணு கேட்டு வரும்போது..
அவளை முறைத்தவள் நீங்க வந்து பேசுனதிலிருந்து எங்க அத்தை நான் ஏதோ உங்க அண்ணனை விரும்புற மாதிரியும், நான் தான் உங்களை பொண்ணு கேட்க வர சொன்ன மாதிரியும் யோசிச்சிட்டு இருக்காங்க .
நாங்க தான் எங்க அண்ணனை நீங்க விரும்பலன்னு சொல்லிட்டோமே ,
நீங்க சொன்னா எல்லாரும் வீட்டில் நம்பிடுவாங்களா?
எந்த உலகத்தில இருக்கீங்க என்று இருவரையும் முறைத்து விட்டு வெளியே சென்று விட்டாள் .
தன் இடத்தில் சென்று உட்கார்ந்து தன்னை சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொண்டு தண்ணி குடித்தவள் நேராக முகிலன் ரூமுக்கு சென்று இருந்தாள்.
முகிலன் அவளை உள்ளே வர சொல்லிவிட்டு வேளையில் கவனத்தை பதித்திருக்க ,"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள்.
"சொல்லுங்க வினிதா" என்று விட்டு அமைதியாக இருந்தான் .கொஞ்சம் பர்சனலா பேச வேண்டி இருக்கு .
பர்சனலா ஆபீஸ் டைம்ல பேச உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு அன்னைக்கு இதே ஆபீஸ்ல தான் நீங்க பேசினீங்கன்றத நீங்களும் மறந்துட வேணாம்னு நினைக்கிறன் சார் என்று நக்கலாகவே சொன்னாள் .
நிமிர்ந்து அவளை பார்த்தவன் உதட்டில் லேசான சிரிப்பு தோன்றி மறைந்தது. அவனை முறைத்துக் கொண்டு நின்றவள் .யாரை கேட்டு என் வீட்ல வந்து பொண்ணு கேட்டீங்க .
பொண்ணு கேக்குறதுக்கு எல்லாம் நாலு பேத்துட்டு பர்மிஷன் கேட்டுட்டா வர முடியும் என்று சிரித்தான் .
'அண்ணனுக்கும் ,தங்கச்சிக்கும் இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என்று மனதிற்குள் எண்ணி விட்டு மரியாதையா அமைதியா என் வாழ்க்கையில் இருந்து வெளியே போறது நல்லதுனு நினைக்கிறேன், எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் உங்க மேல எந்த ஒரு விருப்பமும் இல்லை.
"நான் உங்களை பார்த்தது கூட கோயம்புத்தூர்ல பார்த்தோமே நம்மள தெரியலையா? அப்படிங்கற ஒரு எதிர்பார்ப்பு தான் ,மத்தபடி உங்க மேல எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பு விருப்பமோ இந்த நிமிஷம் வரைக்கும் தோனியது இல்ல ,நல்ல முறையில் தான் சொல்றேன் என் வாழ்க்கைக்குள்ள வரணும்னு நினைக்காதீங்க" .
"இருக்கிறத சமாளிச்சு நான் என் வாழ்க்கையை கொண்டு போனாலே போதும் "என்றால் லேசாக கண்கள் கலங்க .
"அத ஏன் தனியா சமாளிக்கணும்னு நினைக்கிற, என் கூட சேர்ந்து சமாளிக்கணும்னு நினை" என்றான்.
வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு அவனது கண்களில் குறும்பு இல்லை தெளிவாகத்தான் பேசுகிறான் என்பதை உணர்ந்தவள். முறைத்துவிட்டு என் வாழ்க்கையில் என்ன இருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதும் இல்ல ,நான் என்ன செய்யணும் என்று நினைக்கிறேனோ அதை நான் பாத்துப்பேன் என்று விட்டு வெளியே செல்ல வெளியில் செல்ல திரும்பினாள் .
ஒரு நிமிஷம் என்றவன், "இன்னும் ஒரு மாசத்துல உன்ன என் பொண்டாட்டியை ஆக்கி காட்டுறேன். என்ன சமாளிக்கணும்னு நினைக்கிறியோ ,அதை சேர்ந்தே சமாளிப்போம், அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் வருவதை ஒன்றாக சேர்ந்து நின்னு பாத்துக்கலாம் "என்றான்.
ஏய் என்று விரல் நீட்டி எச்சரித்தவள், சுற்றி கண்ணாடி தடுப்பு சுவர் இருப்பதை உணர்ந்து விட்டு சை என்று கையை உதறிவிட்டு எதுவும் பேசாமல் கதவில் கை வைத்தாள்.
லேசாக விசில் அடித்தான் திரும்பி நின்று முறைக்க "ஐ லவ் யூ விது குட்டி "என்று சிரித்தான். அவனுடன் சேர்ந்து அவனது கண்களும் சிரிக்க ,ஒரு சில நொடி தடுமாறியவள் ,எதுவும் பேசாமல் முறைத்து விட்டு வெளியில் சென்று விட்டாள்.
இங்கு அவள் சென்றவுடன் எல்லாத்தையும் சேர்ந்தே சமாளிப்போம் டி என்று வாய்விட்டு சொல்லியவன் தன்னிடத்தில் உட்கார்ந்து விட்டு தன்னுடைய வேலையில் கவனத்தை பதித்தான்.
ஆஃபீஸ் டைம் முடிந்து அனைவரும் கீழே இறங்கி இருந்தார்கள்.
வினிதா மூவருக்காக காத்துக் கொண்டு நின்றாள், படிகளில் முதலில் இறங்கி வந்த நித்யா வினிதாவை பார்த்துவிட்டு டேய் ஆடு தான வந்து நிக்குது என்று சிரித்தாள்.
இருவருமே அவளது தலையில் கொட்டி விட்டு" இந்த மரியாதைனா என்ன அப்படின்னு உனக்கு அர்த்தமே தெரியாது இல்ல" என்றார்கள். இருவரும் ஒரே போல் சொல்ல அவர்களை பார்த்து பழுப்பு காட்டியவள் நேராக வினிதாவின் முன்பு வந்து நின்றாள்.
எங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க நினைக்கிற செப்பும் செப்பும் என்றாள் சிரித்த முகமாக ..மூவரையும் முறைத்துக் கொண்டு நின்றாள் வினிதா.