இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 05-07-2024

Total Views: 1017


பாகம்- 32

வழக்கம்போலவே முதல் பேருந்தில் இருந்து இறங்கியவள் அடுத்த பேருந்துக்காக காத்திருந்தாள் . அவள் பேருந்து வந்தும் ஏறவில்லை. சந்தேகமாக பேருந்து நிலையத்தின் அருகில் காரை செலுத்தியவன் பார்த்தபோது அவள் அழுது கொண்டிருந்தாள் .
இறங்கியவன் அவள் அருகில் வந்ததுமே அவனைக் கட்டிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
"ரேணு என்ன ஆச்சு. ப்ளீஸ் சொல்லு" 
அவள்  தோளை  அணைத்தவனுக்கு உடை கிழிந்த இடத்தில் பதிந்தது.
"முதல்ல நீ வா. அணைத்தவளை  கைபிடி நகராமல் காரில் ஏற்றிக் கொண்டான்.
சற்று தூரம் சென்று ஒரு சந்தில் நிறுத்தினான்.
"என்னம்மா என்ன ஆச்சு?"
இப்போதும் அழுது கொண்டே தான் இருந்தாள் .
"ரேணு! என்னோட மூஞ்சிய பாரு. அவளை சற்று நீரை பருக வைத்து சமாதானம் செய்து விட்டு விஷயத்தைக் கேட்டு கொண்டான்.
பேருந்தில் ஏறும்போது ஷாலில் போட்டிருந்த பின் மாட்டி சட்டை  கிழிந்திருந்தது. அவளுக்கு தெரியாமல் இருந்ததை தெரிய வைத்திருந்தான் ஒருவன். 
கடைக்குச் சென்று வேறு ஒரு துணி வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தான்.
அன்று முதல் இவளை பேருந்தில் ஏற விடாமல் அவன் தான் அழைத்துச் செல்கிறான். மாலையிலும் தான். 
'"நான் இந்த மாசத்தோட வேலைய விட்டுடப் போறேன் சார்"
எதுக்கு?"
" என்னால உங்களுக்கு தான் ரொம்ப கஷ்டம்.  இனிமே நீங்க  வர வேணாம்"
"ஏன் ரேணு என் கூட தனியா வர பயமா இருக்கா ?"
"எதுக்கு பயம்?"
"நான் உன்ன ரேப் பண்ணிட்டா ?"
"நீங்க  பண்ண மாட்டீங்க "
''நான் ஆம்பிளைத்தாண்டி. என்னால பண்ண முடியும்"
"நீங்க  ஆம்பிளைதான். ரொம்ப ஸ்மார்ட்டான ஆம்பிளை .அதே சமயம் ரொம்ப நல்லவரு நீங்க"
சற்று நேரம் அமைதி....
"சாரட்டு வண்டியில பாட்டை  ஆன்  செய்தான்"
அதில் சில ஏடாகூடமான  வரிகள் வந்தன.
"அப்படியா  ரேணு " ஒன்றும் தெரியாதது போல கேட்டான்.
"சீ சீ!  என்ன பாட்டு போட்டு என்கிட்டே என்ன கேள்வி கேக்கறீங்க?"
"சரி! சரி! அவள் திட்டுவதை அமைதியாக ஏற்றுக் கொண்டவன், வேறு பாட்டு வைத்தான்.
"இந்த காதலை நான் அடைய எத்தனை தூரம் பறந்து வந்தேன்" வித்யாசாகரின் இசை மயக்கியது. சுவேதா குரல் கொஞ்சியது. கார்த்திக் இவளுக்கு பிடிக்காது.
பாடல் முடிந்ததும்,
"ரேணு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" 
ஸ்டியரிங் வீலை திரும்பியவன் சர்வ சாதாரணமாகக் கேட்டான்.
"அது..."
"ஒனக்கு என்ன ரொம்ப பிடிக்குன்னு எனக்கு தெரியும்"
"இருந்தாலும் ..."
"ப்ளீஸ் பணம் வசதி அது இதுன்னு ஏதாவது ஒரு மொக்க ரீசன் சொல்லாத. பணம் எங்கிட்ட நிறையவே இருக்கு"
"ஆனா  அண்ணி பிரச்சனை சரியாகம நாம  எப்படி?
"என்ன நம்பு. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்"
"நீங்க  சொல்லற மாதிரி அது அவ்ளோ ஈஸி இல்ல. அண்ணாவுக்கு அண்ணியை  பிடிக்கவே இல்ல"
"இன்னுமா உங்க அண்ணாவோட முகமூடியை நீ நம்பற"
"அப்டின்னா?
உங்க அண்ணாவுக்கும் அண்ணிக்கும் பார்த்த பர்ஸ்ட் ஸைட்லயே லவ். ஒத்துக்க மனசு இல்லாம தான் அவரு தவிக்கறாரு. என்ன கொஞ்சம் ஈகோ ஜாஸ்தி யா இருக்கு. அதுக்கு சின்னதா ஒரு ஷாக் ட்ரீட் மென்ட் கொடுத்தா போதும். என்ன கட்டிக்கிறியா ? "
"இதே கேள்வியைத்தான் அண்ணிக்கும் கேட்டீங்க. இந்த விளையாட்டு விளையாடாதீங்க. ப்ளீஸ்"
'லூசு! அன்னிக்கும் உன்கிட்ட நான் சீரியஸா தான் கேட்டேன். நான் உன்ன நீரு  வீட்டுல பாக்கறதுக்கு ரொம்ப முன்னாடியே உன்ன சைட் அடிச்சுகிட்டு இருக்கேன். உன்ன பாக்கற ஆர்வத்துல சில சமயம் ஞாயித்து கிழமைல கூட கிளம்பி வந்துடுவேன்"
"எத்தனை பொண்ணுங்க உங்களை  சுத்தி சுத்தி வராங்க. அப்புறம் என்ன எப்படி உங்களுக்கு புடிச்சுது?"
" ஆக்சுவலா இதே கேள்வியைத்தான் உங்க அண்ணிகிட்டையும் உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணும்  போது  கேட்டேன். அவ சொன்ன பதில் தான் நான் உனக்கும் சொல்லறேன். அதெல்லாம் தெரியாது. புடிச்சுருக்குன்னா புடிச்சிருக்கு. அவ்வளவுதான்"
"கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா வேற ஒரு விஷயம் " சொல்லாத தயங்கினாள் .
"என்ன ஹைட்  தானே  பிரச்சனை?அதுக்கெல்லாம் வேற வழி இருக்கு, மெதுவாக அவள் காதில் கிசுகிசுத்தான்"
"சீ பொறுக்கி பொறுக்கி! எப்படி அசிங்கமா பேசுது பாரு" அவள் கொடுத்த பலமான அடிகளை வாங்கிக்  கொண்டாலும் அவனுக்கு சிரிப்பே  வந்தது.
அவளோ அவனால் வந்த வெட்கத்தை அவன்  தோளிலேயே முகம் புதைத்து மறைக்கப் பார்த்தாள் .
================================================================================
அன்று இரவில் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தான் செந்தில் கைகளில் சில பைகள் இருந்தன. நீரு  மாமியாருக்கு கால் பிடித்துக் கொண்டிருந்தாள் .
"என்னன்னா இது? வந்தவனுக்கு பருக நீரை கொடுத்துவிட்டு  பைகளை வாங்கி கொண்டாள்  பவி .
அது உனக்கும் ரேணுவுக்கும் பிறந்தநாள் வருதில்ல. அதான் சுடிதார் துணி வாங்கிட்டு வந்தேன். நாளைக்கு அளவு துணி குடுங்க. வீட்டை பாக்க போகும்போது கொடுத்துட்டு வந்துடறேன்"
'ரொம்ப அழகா இருக்குன்னா . பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ரேணுவும் வந்து பார்த்தாள் 
"சூப்பரா இருக்குண்ணா . இது என்ன எக்ஸ்டரா ஒன்னு இருக்கு. அண்ணிக்கா ?
"அது நம்ம மாதவிக்கு. உங்களுக்கு வாங்கும்போது அவளுக்கு எப்படி வாங்காம இருக்க முடியும்"
"சூப்பரா இருக்கு மாமா! பார்த்துக் கொண்டிருந்த  மாதவியின் கைகளில் இருந்து அதைப் பிடித்து தூக்கி விட்டெறிந்தாள்  நிரஞ்சனா. அவளின் இந்த கோபம் யாரும் அறியாதது. 
"என்ன நீங்க என்ன பண்ணாலும் நான்  சும்மா இருக்கணுமா? அவ மூஞ்சி நினைவுக்கு வந்த உங்களுக்கு என் மூஞ்சி நினைவுக்கு வரலியா? ச !"
தன்னையும் அறியாமல் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் .
"இப்ப இல்ல இன்னும் எத்தனைவருஷம் ஆனாலும் உங்க நினைவுக்கு நான் வரவே மாட்டேன். உங்க மனசு முழுக்க அவ தான் இருப்பா . என்னோட முழுக்க காதலையும்  கொட்டிக் குடுத்தா நீங்க  மாறுவீங்கன்னு நினைச்சேன் . அது தப்பு. 
எப்பவும் நான் வேண்டான்னு இவருதான் சொல்லுவாரு. இப்ப நான் சொல்லறேன் அத்தை. எனக்கு இவரு வேண்டாம். முப்பது வருஷம் இல்ல நாப்பது வருஷம் கழிச்சு நான் இவரு முகத்தை பார்த்தாலும் என்னோட வாழ்க்கைல எதுவுமே இருக்கப்  போகறது இல்ல. இனிமே என்ன நானே ஏமாத்திக்கறது அர்த்தமே இல்ல அத்தை . நா பாஸ்கர் வீட்டுக்குப் போறேன். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா  எனக்கு மண்டை வெடிச்சுடும். உங்க வீடும் ரெடி. அவரை நாளைக்கு போய்  பார்த்துட்டு எப்ப போகணுமா மாதவியோட அங்க போகச் சொல்லுங்க. 
"நிரஞ்சனா"
 "ஐயம் சாரி அத்தை "
"இருங்க அண்ணி! அவ்ளோ ஈஸியா எல்லாம் உங்களை போக விட மாட்டோம்.  அம்மா இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லா விஷயத்தையும் நான் சொல்லறேன். அண்ணா ஏதோ இவங்க அழகா இருக்கவும் ஆச பட்டு கல்யாணம் பண்ணிக்கிச்சு. அவங்க  என்னதன் பணக்காரர்களா இருந்தாலும் பொம்பள தானே. ஆம்பிளைக்கு கீழதான் எப்பவும் இருப்பான்னு நினைச்சாங்க. அதுவே அண்ணி  மாலைய கழட்டி வச்சுட்டுப் போனதும் எல்லாம் சொந்த தொழில் செய்யற திமிருனு   நினைச்சுகிட்டு அண்ணிகிட்ட நீ தொழிலை விட்டுட்டு வந்திறனும்னு சொன்னாங்க. அண்ணி அதுக்கு ஓகே சொல்லல. அது என்னோட குழந்தை , என்னால அப்படியே அனாதையா விட்டுட்டு வர முடியாதுன்னு அழுதாங்க. தெரியுமா?நாத்தனார்கள் இருவருமே மாத்தி  மாத்தி அண்ணிக்காக பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இது நல்லா  இருக்கே! அண்ணி பணக்காரின்னா ஒடனே நல்லா  ஒட்டிக்கிட்டிங்க. இத்தனை வருஷமா உங்கள கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கின அண்ணா  வேணாம்.இந்த  வீட்டுல  ஆம்பிளைக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல, எல்லாம் இவளால நீருவின்  தலை முடியை கொத்தாக பிடித்தாள்  மாதவி. வளர்ப்பு நன்றாகவே வேலை செய்தது.
அவள் கன்னத்தில்  பளீரென அறை  விழுந்தது மீனாட்சியின் கையால். 
"எங்க வீட்டு பொண்ணுங்க மேலா யார் கையாவது பட்டுது  கைய ஒடைச்சுடுவேன் ராஸ்கல் "
"அவ சொன்னதுல என்ன தப்பு? அங்க இருந்த வரைக்கும் எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தீங்க. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் இந்த வீட்டுல ஆம்பிளைங்கற பயமே இல்லாம போச்சு"
இப்போது அடுத்த அறை  அவனுக்கு விழுந்தது.
"என்னடா! நீ ஆம்பிளைதான். நான் பொம்பளைதான் . அதுக்காக இப்ப என்ன பதிலுக்கு அடிக்கப் போறியா . அடி டா ! என்னவோ எப்ப பார்த்தாலும் ஆம்பிளை ஆம்பிளன்னு. உங்களுக்கு எல்லாம் சொகம் கொடுக்க மட்டும்தான் பொண்ணுங்களா ? உங்க அப்பாவை தான் மாத்த முடியல. உன்னையாவது ஒழுங்கா வளக்கனுன்னு தானே இவ்ளோ கஷ்ட ப்பட்டேன். நீயும் அதே வாரிசா வந்து நிக்கற. அன்னிக்கு உங்க அம்மா ரோட்டுல இட்லி வித்து ஸ்கூல் பீஸ் கட்டினப்போ அம்மா வேலை பாக்கிறது ஒனக்கு தெரியல. இட்லி வித்தா  ஓகே . இன்டீரியர் டிசைனர்னா  வேண்டாம். ஏன்னா அவ உன்னை விட படிச்சவ. நிறைய சம்பாதிக்கறா .
 உங்கள மாதிரி ஆம்பிளைங்களுக்கு , பொண்டாட்டி வேலைக்கு போகக் கூடாது. ஏன்னா ரோட்டுல போகற  ஆம்பிளைங்க எல்லாம் பார்ப்பாங்க. மூஞ்சிய பார்ப்பாங்க. ரவிக்கைக்கு இடுக்குல  பாப்பாங்க. ஆனா அவ சம்பாதிக்கற பணம் மட்டும் டாஸ்மாக்குல கொட்ட வேணும். இப்படி வாழ்ந்ததவன்தானடா உங்க அப்பா. அவனுக்கு பொறந்தவன் நீ மட்டும் எப்படி இருப்ப? 
நானே சொல்லறேன் நிரஞ்சனா. இந்த மாதிரி ஆம்பிளை ஒனக்கு வேணாம். உன்னோட நண்பர்கள் இருக்காங்களே அந்த மாதிரி பொண்ணுங்கள மதிக்க தெரிஞ்ச நல்ல ஆம்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கைல சந்தோஷமாவாவது இருப்ப"
"என்ன விட்டா பேசிக்கிட்டே போறீங்க?"
"இங்க பாருடா. இன்னொரு தடவை இந்த மாதிரி ஆம்பிளை பொம்பளை நீ ஒசத்தி பொண்ணுங்கன்னா கேவலம்னு ஏதாவது நினைப்பு வந்துச்சு,  உங்க அம்மா இல்லன்னு நினைச்சுக்கோ"
அத்தையின் பேயாட்டத்தில் பம்மி இருந்தாள்  மாதவி.
"ஏ மாதவி இது என்  மருமகளோட வீடு. உன்ன வீட்டை விட்டு வெளியில போன்னு  அவ சொல்ல மாட்டா   இங்கிதம் தெரிஞ்சவ. அதனால நீயே மூட்டையை கட்டிக்கிட்டு காலைல கிளம்பு"
"அண்ணி நீங்க  எங்க ரூமுக்கு வாங்க"  ரேணுதான் அழைத்துக் கொண்டு சென்றாள் . 
இரவு வெகு நேரம் அழுதாள் . மாதவி தன்னை அடிக்க வரும்போது கணவன் ஏன் தனக்காக வரவில்லை. எத்தனை முயற்சி செய்தும் ஏன்  இந்த திருமண பந்தம் நிலைக்கவில்லை? தன்னிடம் என்ன தப்பு? "
மீனாட்சி தான் அவளை நெஞ்சில் சாய்த்து சமாதானம் செய்து உறங்க வைத்தார். 
மாமிருக்கும் மருமகளுக்கும் ஒரே கேள்விதான். பதில் சொல்லக் கூடியவன் மனைவி இல்லாமல் தவித்துக் கொண்டிருதான்.
வாழ்க்கையிலேயே முதல் முறையாக தன்னிடம் என்ன தவறு என்று யோசிக்க ஆரம்பித்தான்....
தொடரும்.......


Leave a comment


Comments


Related Post