Total Views: 84
பாரிஸ் - இந்தியா விமானம்
பிரணவ், "சின்ன வயசுல நம்ம பாட்டி ஊருக்கு போவோமே! நியாபகம் இருக்கா?"
கௌதமி, "ம் நல்லா நியாபகம் இருக்கு. நீ கூட இனிமே பாட்டிக்கூட தான் இருப்பேனு சொல்லி அடம் பண்ணி அங்க இருக்குற ஸ்கூல்ல சேர்ந்தியே!"
"ஆமா அந்த ஸ்கூல்ல கிடச்ச பிரண்ட்ஸ் தான்!"
"என்னாட சொல்ற ஒரு வருசம் தான் அங்க படிச்ச அவங்களோட இப்பவும் டச்ல இருக்கியா? நாம வர்ரோம்னு இன்பார்ம் பண்ணுனியா?"
"ம்… லெட்டர் போட்டேன்"
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள்.
"என்ன லெட்டர் போட்டியா! டேய் உலகம் மெயில் வீடியோ கால்னு எவ்ளோ அட்வான்ஸா போய்கிட்டு இருக்கு. இந்த காலத்துல போய் லெட்டர் போட்டேனு சொல்ற!"
"போடி! லூசு அந்த ஊர்ல யார்கிட்டையும் போன் கிடையாது."
"என்ன? நான் லூசா!" என்று நெஞ்சில் கை வைத்தவள் "போன் கிடையாதா! என்னடா சொல்ற? எனக்கு போன் தாண்டா உலகமே!"
"அப்போ அதை இப்பவே மறந்துரு அங்க வந்தா உன்னாலையும் போன் யூஸ் பண்ண முடியாது"
"இதெல்லாம் அநியாயம் நான் எதுக்கு போன் யூஸ் பண்ணக் கூடாது?"
"ஏன்னா அங்க டவர் கிடைக்காது"
"என்னது! டேய் பைலட் பிளைட்ட நிப்பாட்டுங்கடா நான் கீழ இறங்கிக்குறேன்" என்று கத்தி ஆர்பாட்டம் போட்டாள்.
"ஏய், கத்தாதடி!"
"மேம் வாட்ஸ் யுவர் ப்ராப்ளம். மே ஐ ஹெல்ப் யூ" என்று ஏர்ஹோஸ்டர்ஸ் வந்து கேட்க
"நத்திங்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான் பிரணவ்.
அந்த பெண் சென்றதும் அருகில் இருந்தவளை திரும்பி பார்த்து முறைத்தான் பிரணவ்.
சுற்று வட்டார நான்கு கிராமங்களுக்கும் சேர்த்து அந்த ஒரு பள்ளிக்கூடம் தான்.
பள்ளியின் ஒரு மரத்தடியில் நின்று அழுது கொண்டிருந்தாள் எட்டாம் வகுப்பில் படிக்கும் அந்த சிறுமி.
"அழுவாத பாப்பா நான் சீக்கிரம் வந்துருவேன்" என்று அவளை தேற்றிக் கொண்டிருந்தான் பத்தாவது படிக்கும் அந்த பதின்பருவ இளைஞன்.
"சீக்கிரம் வந்துரு. நான் உன்ன நினச்சுட்டே இருப்பேன்!"
அவளை சமாதானம் செய்தவன் திரும்பி தன் அருகில் நின்றிருப்பவனை பார்த்தான். அவன் அவளுக்கு மேல் அழுது கொண்டிருந்தான்.
"டேய்! அவள் தான் சின்னப் பொண்ணு அழுவுறா நீ எதுக்குடா அழுவுற?"
"எனக்கு மட்டும் உம்மேல பாசம் இல்லையா!"
அவ்வாறு அவன் கூறவும் அவனை தாவி அணைத்துக் கொண்டான். இருவரும் சிறிது நேரம் கண்ணீர் வடித்தனர்.
பின் அவனிடமிருந்து விலகியவன் அருகில் நின்றிருந்தவளை பார்க்க அவள் இன்னமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அவளையும் அணைத்துக் கொண்டான்.
'சீக்கிரம் வந்து உன்ன என்னோட கூட்டிப் போயிருவேன் பாப்பு' என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
அவனை அணைத்து இருந்தவள் அவனை விலக்கி வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள்.
பதறி போய் இருவரும் அருகில் வந்து விசாரிக்க "வயிறு வலிக்குது மாமா" என்று அருகில் இருந்தவனிடம் கூற அவன் அவளை அழைத்துக் கொண்டு அன்று ஊருக்கு கிளம்ப இருக்கும் மற்றவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
போகும் இருவரையும் கண்ணில் நீர் நிறைய பார்த்துக் கொண்டிருந்தான் மற்றவன்.
அப்படி பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் இருந்த ஒருவர் அவனை உழுக்க திரும்பி பார்த்தான் அவன்.
கௌதமி தான் உழுக்கிக் கொண்டிருந்தாள்.
"டேய்! கண்ண துறந்து வச்சுட்டே கனவு காணுறைய பிளைட் லேண்ட் ஆகிருச்சு வா!"
அப்பொழுது தான் கடந்த காலத்தில் இருந்து வெளிவந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் பின்னோடு கௌதமியும் தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
பிரணவ்வும் கௌதமியும் விமான நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் மாறி வந்தாயிற்று.
பஸ் ஸ்டாண்டின் வெளிபுறம் நின்றிருந்த ஆட்டோ அருகில் சென்றனர் இருவரும்.
"அண்ணா! மதிமறையூர் போகனும்!"
அவன் அப்பெயரைக் கூறியதும் சுற்றியிருந்த ஆட்டோகாரர்கள் அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர்.
அதில் ஒருவர் அவர்களிடம் வந்து "தம்பி உங்கள இதுக்கு முன்னாடி இந்த ஏரியால பார்த்தது இல்லையே! என்ன விஷயமா அங்க போகனும்?"
கௌதமி, "ஹலோ ஆட்டோ வருமானுதான் கேட்டோம். நாங்க எதுக்கு போனா உங்களுக்கு என்ன?"
பிரணவ், "கௌதமி அமைதியா இரு."
ஆட்டோக்காரர், "இத பாரு பாப்பா! காரணம் தெரியாம இங்க இருந்து யாரும் வர மாட்டோம்!"
"ஓ! அப்படியா எங்க ரிலேடிவ்ஸ்ச பாக்க போறோம்." என்று நக்கலாக கூறினாள்.
"நம்புற மாதிரி ஏதாவது சொல்லு பாப்பா. அந்த ஊருல பல வருசமா வெளியூர் காரனுக்கு பொண்ணு குடுக்குறதும் இல்ல பொண்ணு எடுக்குறதும் இல்ல அப்படி இருக்கையில எப்படி சொந்தகாரங்களா இருக்க முடியும்"
"நீங்க எங்கள கூட்டிட்டு போறதுக்கு காசு குடுக்குறோம்ல. என்ன எதுக்குனு இப்படி கேள்வி கேட்க கூடாது எங்ககிட்ட!"
பிரணவ், "கௌதமி கொஞ்ச நேரம் உன்னோட வாய மூடு"
"அண்ணா அவ பேசுனதுக்கு மன்னுச்சுருங்க. அவ தெரியாம பேசிட்டா. அதோ தெரியுது பாருங்க அந்த ஸ்கூல்ல தான் நான் படிச்சேன். என்னோட பிரண்ட்ஸ் அந்த ஊர்ல தான் இருக்காங்க அவங்கள பாக்க தான் வந்து இருக்கோம். ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்பதா இங்க வர முடிஞ்சது"
"சரி தம்பி இவ்ளோ சொல்ற நம்புறேன் ஏறு!"
"தாங்க்ஸ் அண்ணே!" என்று கூறியவன் கௌதமியின் புறம் திரும்பி உள்ளே ஏறுமாறு கூறினான்.
அவனை முறைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தாள் கௌதமி. 'இந்தாள நம்ப வைக்க எல்லா கதையும் சொல்ல அவசியமா நமக்கு. இவனும் எல்லாத்தையும் சொல்றான் பாரு' என்று ஆட்டோகாரரையும் பிரணவ்வையும் மனதில் திட்டிக் கொண்டே வந்தாள்.
ஆட்டோ அந்த நீண்ட சாலையில் இருந்து பிரிந்து பக்கவாட்டு குறுகிய சாலைக்குள் நுழைந்தது. அழகான ஊர் மதிமறையூர். எங்கும் பச்ச பசேலேன்று இருக்கும் அதன் அழகை ரசிக்க ஆரம்பித்தாள் கௌதமி.
பிரணவ்வின் மனமோ ஆட்டோக்காரர் கூறிய 'அந்த ஊருல பல வருசமா வெளியூர் காரனுக்கு பொண்ணு குடுக்குறதும் இல்ல பொண்ணு எடுக்குறதும் இல்ல' என்ற வார்த்தையை சுற்றிக் கொண்டிருந்தது.
ஆட்டோ அந்த சாலையின் மேடு பள்ளத்தின் காரணமாக சற்று குழுங்கியபடியே சென்றது.
வரிசையாக வீடுகள் கண்ணுக்கு புலப்படவும் கௌதமி புரிந்து கொண்டாள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டோம் என்பதை.
ஊரின் தொடக்கத்தில் அமைந்து இருந்த ஒரு டீ கடையின் முன்பு வண்டியை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர்.
கீழே இறங்கி கொண்டனர் இருவரும். ஆட்டோக்கான பணத்தை கொடுக்க சில்லரை இல்லாததன் காரணமாக கடையின் அருகே சென்றனர் ஆட்டோகாரரும் பிரணவ்வும்.
ஆட்டோவின் பின்புறம் சாய்ந்து நின்று கொண்டிருந்த கௌதமி அந்த கிராமத்தை சுற்றி இருந்த இடங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் நின்று இருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஒரு சிறுவன் நின்று இருந்தான். அவனுக்கு அருகில் அவனை போலவே மற்றும் ஒருவனும் நின்று இருக்க இரட்டையர்களோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அவன் பார்வை சற்று வித்தியாசமாக தெரிந்தது அவளுக்கு. அந்த சிறுவன் பார்வை இருந்த திசை பக்கம் திரும்பினாள். அங்கே பிரணவ் தான் நின்று இருந்தான்.
பின் மீண்டும் திரும்பி சிறுவனை காண அவன் அங்கு இல்லை. 'என்ன காணோம், சரி போயிருப்பான்' என்று எண்ணியவள் மீண்டும் பார்வையை சுழற்ற இம்முறையில் அவள் பார்வையில் விழுந்தான் கனியின்பன்.
அவளுக்கு சற்றுத் தூரத்தில் இருந்த தென்னை தோப்பின் ஆரம்ப புள்ளியில் நின்று இருந்தான்.
கருப்பு நிற கையில்லா பனியன், அடர் பச்சை நிற லுங்கி, இடது கையில் காப்பு, வலது கையில் பல வண்ண கயிர்கள் கட்டியிருந்தான். சற்று கரிய நிறம் தான் ஆனால் அவள் இதுவரை பார்த்தவர்களை விட இவன் பேரழகாக தெரிந்தான்.
அருகில் இருந்த மூதாட்டியிடம் எதையோ கத்தி கத்தி பேசிக் கொண்டிருந்தான். அந்த மூதாட்டிக்கு கேட்கும் திறன் சற்று குறைவு போல அவருக்கு புரிய வைப்பதற்காக கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தான்.
அவனையே சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியில் அவர் என்னக் கூறினாறோ பற்கள் தெரிய அழகாக சிரித்தான்.
அவ்வளவு அழகாக இருப்பான் சிரிக்கையில் அவன். ஆனால் சிரிக்க மறந்தான் கடந்த சில ஆண்டுகளாக. இப்பொழுது மீண்டும் சிரிப்பு எனும் அத்தியாயம் அவன் வாழ்வில் வருவதற்கு காரணம் அவன் ஆருயிர் நண்பன் தான் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை.
அந்த பெரிய மனுசி அவ்விடம் விட்டு அகன்றதும் பார்வையை இவள் புறம் திருப்பினான்.
திருப்பிய மாத்திரத்தில் அவனது முகத்தில் பல கலவையான உணர்வுகள். அப்படி ஒரு பிரகாசம். அவளை நோக்கி புன்னகையுடன் கைகளை ஆட்டினான்.
இவளோ திருதிருவென்று விழித்தாள். சற்று நேரத்தில் இதயதுடிப்பு எகிறியது. அவன் அவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.
தொடரும்