இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 5 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-03-2025

Total Views: 79

அத்தியாயம் 5

அவளின் அமைதி அவர்களுக்கு சற்றே பயத்தை கொடுத்தது.

எங்கே முடியாது என்று கூறிவிடுவாளோ என.

"என்ன அமைதியா இருக்க அன்பு... மதனும் நீயும் சின்ன வயசுல இருந்து பழக்கமானவங்க... உன்னை தனியா விட்டுட்டு எங்களாலயும் நிம்மதியா இருக்க முடியாது...இதுவே நீ மதன் கூட இருந்தா எங்களுக்கு உன்ன பத்தின பயம் இல்லாம இருக்கும்... நீ பூரணி கூட இருக்க தைரியத்துல மதனும் பயப்படாம வேலைக்கு போய்ட்டு வருவான்..."என்க.

மீண்டும் அமைதியாக இருந்தவள் மூச்சை ஆழ இழுத்துவிட்டு "நான் போகல மாமி..." என்றாள்.

நீலகண்டன்  எதிர்பார்த்த பதில்தான்.

"அப்போ நீ எங்கக்கூட வந்து எங்க வீட்டுல தங்கு... உன்ன தனியா விட்டதாலதான் கண்டவங்களும் உன்ன அசிங்கமா பேசறாங்க... இனி அதுக்கு வாய்ப்பு கொடுக்க வேணாம்... நீயும் சித்துவும் நாளைக்கே உங்க பொருளை எல்லாத்தையும் எடுத்துட்டு எங்கக்கூட வந்துடனும்... இனியும் உங்கள தனியா விட்டுட்டு எங்களால அங்க நிம்மதியா கஞ்சி குடிக்க முடியாது... நீ ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்துதான் ஆகனும் அன்பு...இதுக்கும் நீ ஒத்து வரல்லன்னா இனி எப்போதும் எங்க மூஞ்சியில முழிக்க வேணாம்..." என்க.

"மாமா....." என அதிர்ச்சியாக அழைக்க.

"உனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு நாங்களும் நினைக்கிறோம்... ஆனா... நீதான் அதுக்கு விடமாட்டேங்கிற... சரி... உன் புருஷன பார்த்து பேசலாம்னு சொன்னாலும் அதுக்கும் வேணாம்னு சொல்ற... இதுவே உன் அப்பா உயிரோடு இருந்து கேட்டு இருந்தா இந்நேரம் நீ மறுத்து பேச மாட்டதான... என்னை வேத்து மனுஷன்னு நீ நினைச்சதாலதான் நான் சொல்றது எதையும் நீ காதுல வாங்க மாட்டிங்கிற..." என நீலகண்டன் கூற.

"ஐயோ மாமா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..." என்க.

"மாமா சொல்றதுல என்ன தப்பு இருக்கு சொல்லு பார்ப்போம் உன் ஆம்படையான்னு பார்த்து பேசலாம்னு நானும் உன் மாமாவும் எத்தனை தடவ கேட்டோம் ஒரு வார்த்தை பதில் சொன்னியாடி நீ...?"என பங்கஜமும் கேட்க.

"மாமி இன்னைக்கு சொல்றதுதான் இனி என் வாழ்க்கைல சித்து மட்டும்தான்  எனக்கு வாழ்க்கைய பிச்சை போட சொல்லி நீங்க யாரும் போய் அவன் முன்னாடி கைக்கட்டி நிக்க வேணாம் அப்படி மானங்கெட்ட வாழ்க்கை வாழறதுக்கு நான் நாண்டுகிட்டு சாவேன்..." என்க.

"படுபாவி என்னடி வார்த்தை இது பையன வச்சிட்டு இப்படி கொறை வயசுல போறதுக்கா யாரும் இல்லாம தனியா கஷ்டப்பட்டு இவன பெத்துக்கிட்ட இப்ப உனக்கு என்ன இனி உன் ஆம்படையான்கூட சேர்ந்து வாழ மாட்ட அவ்ளோதான சரி பரவால்ல உன்ன நானோ இல்ல மதனோ இல்ல உன் மாமாவோ உன் புருஷன்கூட சேர்ந்து வாழறதபத்தி பேச மாட்டோம் ஆனா உன் பையனுக்கு எதிர்காலம்னு ஒன்னு இருக்குடி உனக்காக இல்லனாலும் சித்துவுக்காக நீ வாழ்ந்துதான ஆகனும் உடம்பு சரியில்லாத பையன் வேற மதன் அவனுக்கு தெரிஞ்ச பள்ளிக்கூடத்துல உனக்கு வேலை வாங்கித்தரேன்னு சொன்னான் நீ பூரணிக்கு உதவின மாதிரியும் ஆச்சு நீ பாதுகாப்பான ஒரு இடத்துல இருந்த மாதிரியும் ஆச்சு நாங்களும் மனசுல உன்ன பத்தின கவல இல்லாம இருப்போம்டி ராசாத்தி உனக்காக இல்லனாலும் சித்துவோட எதிர்காலத்துக்காகவாவது கொஞ்சம் யோசிடி..." என்க.

சரியாக நீலகண்டனுக்கு போன் ஒன்று வந்தது.

"ம்ம்ம்ம்... இங்கதான் இருக்கோம் அவ என்னைக்கு நாங்க சொன்னத கேட்டு இருக்கா நீ சொன்னாதான் மண்டைய ஆட்டுவா நீயாவது பேசிப்பாரு ஏதாச்சும் மாற்றம் இருக்கான்னு பார்ப்போம் என்றவர் அவள் முன் வந்து இந்தா மதனும் பூரணியும் உங்கிட்ட பேசனுமாம்...."என்க.

மிகுந்த தயக்கத்தோடு போனை கையில் வாங்கினாள் அவள்.

இவர்களிடம் மறுத்து பேசிவிடலாம் ஆனால் மதனிடம் இவளது வார்த்தைகள் எதுவுமே செல்லுபடியாகாது.

முதலில் நீங்கள் பேசுங்கள் அவள் சம்மதிக்கவில்லை என்றால் நான் பேசுகிறேன் என கூறிதான் பெற்றோர்களை ஊருக்கு அனுப்பி வைத்தான் அவன்.

அவன் கூறியது போலத்தான் ஆனது.

"மதன்..." என அவள் வாய்க்கு வலிக்கும்படி அழைக்க.

எதிர் முனையில் சரமாரியாக விழுந்த வார்த்தைகளில் பேச்சே எழாது அமர்ந்து இருந்தாள் அவள்.

பின் போன் கைமாறப்பட்டு மீண்டும் அதேமாதிரியான திட்டுகள் விழ.

"சரி வரேன்..." என்றபடி போனை பங்கஜத்தின் கையில் திணித்தாள் அவள்.

"ம்ம்ம்ம் பார்த்திங்களா யார் சொன்னா வேலை நடக்குமோ அங்க சொன்னாதான் இவ சரிபடுவா..." என்க.

"நான் ஒன்னும் மதனுக்காக சரின்னு சொல்லல மன்னிக்காகத்தான் சொன்னேன் மன்னி மனசு கஷ்டப்பட்டா உள்ள இருக்க குட்டிப்பாப்பாவும் கஷ்டப்படும் அதுக்காக மட்டும்தான்..." என்றாள்.

"யாருக்காகவோ நீ ஊருக்கு போக சம்மதிச்சியே அதுவே போதும் ஆனா இந்த வீட்டு ஓனரோட பொண்டாட்டிய நறுக்குன்னு நாலு கேள்வி நாக்கப்புடுங்கற மாதிரி கேக்காம விட மாட்டேன் நான் என்ன தைரியம் அவளுக்கு கேக்கறதுக்கு ஆள் இல்லன்னு நினைச்சு அப்படி பேசினாளா நான் இருக்கேன்டி..."என பொரிந்து தள்ள அவர் மடியில் சலுகையாக படுத்துக் கொண்டவள் "அதெல்லாம் வேணாம் மாமி அதான் இனிமே அந்தம்மா வந்து பேச நாம இடம் கொடுக்க போறது இல்லையே அப்பறம் என்ன விடுங்க அங்க போனதும் சித்துவ ஒரு நல்ல ஆஸ்பத்திரில காட்டனும் மாமி..." என்க.

"அதுக்கென்னடி அப்படியே பண்ணிடலாம் சித்து எழறதுக்குள்ள நீ கொஞ்சம் கண்ணசரு மாமாவ அந்த கயித்து கட்டில்ல படுக்க சொல்லிட்டு வரேன் என்றபடி அவள் தலையை தூக்க ம்ம்ம்ம் மாமி என்றவள் அவரையே உற்றுப்பார்க்க ஏன்டி அப்படி பாக்கற..." என அவளின் கன்னத்தை கிள்ளினார் பங்கஜம்.

அவரின் இருக்கரத்தையும் பிடித்துக் கொண்டவள் நீங்களும் இல்லனா என் நிலை என்ன ஆகியிருக்கும் மாமி..?" என கேட்க

"ஒன்னும் ஆகியிருக்காது கடவுள் நல்லவங்களுக்கு அதிகம் சோதனைய தரமாட்டான்டி குழந்த நீ போய் தூங்கு நான் வரேன்..." என்றவர் அவளை அனுப்பி படுக்க வைத்துவிட்டு சென்றார்.

நாளைய விடியலில் இருந்து அவளுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.

அது மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் அரைமணி நேரமாக அஞ்சலி யாருக்காகவோ காத்திருக்க அவள் எதிர்பார்த்திருந்த அந்த நபரோ இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

அரைமணி நேரத்தில் நான்கு முறை வெயிட்டர் வந்து ஆர்டர் கேட்க பிறகு சொல்வதாக கூறி அனுப்பிவிட்டாள்.

மீண்டும் தன் போனை எடுத்து யாருக்கோ அழைக்கப்போக "அக்கா..." என கீச்சுக்குரலில் ஒரு அழகிய யுவதி அவளை பின்புறமாக அணைத்து அவளது தோள்வளைவில் முகம் பதிக்க அவளை கண்ட மகழிச்சியில் திளைத்தவள் மாலு என கூவியபடி தன் தங்கையை அணைத்து கொண்டவள் "சாரிடி நீ ஊருல இருந்து வந்துட்டேன்னு தெரிஞ்சும் என்னால வந்து பாக்க முடியல..." என்க.

"அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன வீட்டு க்கு வராம இங்க வர சொல்லி இருக்க..." என கேட்க.

"ஏய்... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னுதான் வர சொன்னேன்..." என்க.

"ஏன் வீட்டுல வந்து சொன்னா நான் கேக்கமாட்டேனா...?" என அவள் கேட்க.

"அப்படி இல்லடி முதல்ல உங்கிட்ட பேசிட்டு அப்பறம் வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் என்றாள் அஞ்சலி சரி சொல்லு..."என மாலினி கேட்க.

"என் கொழுந்தனார் தீனாவ பத்தி என்ன நினைக்கிற...?" என கேட்க.

"அந்த சிடுமூஞ்சிய பத்தி நினைக்க என்ன இருக்கு...?" என அவள் கூறினாள்.

ஐயோ ஆரம்பிக்கும்போதே கேட்ட போடுறாளே என ஆயாசமாக இருந்தது அஞ்சலிக்கு. 

அஞ்சலியின் எண்ணம் தெரிந்தால் மாலினியின் பதில் என்னவாக இருக்கும்....?



Leave a comment


Comments


Related Post