Total Views: 71
அத்தியாயம் 6
"என்னடி என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம இப்படி பேசற...?" என அஞ்சலி கேட்க.
"பின்ன அந்த சிடுமூஞ்சிய நான் மறந்தே போய்ட்டேன்... இப்ப வந்து அவனப்பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்டா நான் என்ன சொல்றது...?" என மாலினி கேட்க.
"ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் உன்ன வர சொன்னேன்..." என அஞ்சலி கூற.
"ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லிடாத அஞ்சுக்கா..." என்றாள் முன்னெச்சரிக்கையாக.
"மாலு நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு..." என்க.
"ம்ம்ம்ம்... என ஒரு பெருமூச்சுவிட்டவள் "சரி சொல்லு..." என்றாள்.
"தீனாவ உனக்கு பாக்கலாம்னு எங்க அத்தை நினைக்கிறாங்க..." என்க.
அதிர்ச்சியாக எழுந்தவள் "என்னக்கா விளையாடுறியா யாரு யாருக்கு மாப்பிளையாகறது...?' என கத்த ஆரம்பிக்க.
சுற்றிலும் பார்வையை திருப்பியவள் "ஏய்... அமைதியா பேசுடி எல்லோருமே நம்மளத்தான் பாக்கறாங்க..." என்க.
அவளும் பார்வையை சுழற்றிவிட்டு கடித்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பினாள்.
"என்ன நினைச்சிட்டு வந்து கேக்கற நீ உன் தங்கச்சியா என்னை நினைச்சு இருந்தா இப்படி ரெண்டாந்தாரமா கேட்டு வந்து இருப்பியா இதுக்குத்தான் யாருக்கும் தெரியாம என்ன தனியா மீட் பண்ணனும்னு சொன்னியா இதெல்லாம் சரியில்லைக்கா அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க..." என பொரிய.
"ஏய்... என்னடி இப்படி கேட்டுட்ட என்னைக்காவது உன்னை தனியா பிரிச்சு பார்த்து இருப்பனா நானு...." என கண்களில் நீர்க் கோர்க்க கேட்டாள்.
"ம்ப்ப்ச்ச்... நீ போயும் போயும் அந்த மலமாட்டுக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கியே அத நினைச்சா இன்னும் எனக்கு பத்திக்கிட்டு வருது..." என்றாள்.
"ஏய் உனக்கும் அவன்மேல ஒரு இது இருக்குதான...?" என கேட்க.
"அக்கா அதெல்லாம் ஏதோ விவரம் தெரியாத வயசுல பண்ணது இப்பவும் அப்படியே இருப்பேன்னு நீ எப்படி நினைச்ச அவன்கூடலாம் ஒரு பொண்ணு வாழவே முடியாது சரியான சைக்கோ அவன் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சேன் என்ன ஒரு மனுஷியாவே மதிக்கல அவன் அதும் இல்லாம யாரோ ஊரு பேரு தெரியாத ஒரு அநாதைய கூட்டிட்டு வந்து என் கண்ணு முன்னாடியே எப்படிலாம் கூத்தடிச்சான் அதெல்லாம் மறந்துட மாட்டேன் அவனவிட ஒரு நல்ல பணக்கார பையனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி அவன் கண்ணு முன்னாடி போய் கெத்தா நிக்கனும்..." என்க.
"ஏய் பைத்தியம் அவனே பெரிய பணக்காரன்னு உனக்கு தெரியாதா நீ ஏன் ரெண்டாம்தாரம்னு நீ நினைக்கிற உனக்கு ஒரு பணக்காரன் புருஷனா வேணும் நீ ஆசைப்பட்ட தீனாவும் கிடைச்சிடுவான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அவன் பொண்டாட்டி உயிரோட. இருக்காளோ இல்லையோ அவ உயிரோட இருக்கறதுக்கான எந்த அடையாளமும் இல்ல அவன் பேர்ல மட்டும் ஐநூறு கோடி சொத்து இருக்குடி நீ அவன கட்டிக்கிட்டா அந்த பணம் அத்தனையும் உனக்குத்தான் ஏன்டி உனக்கு புரிய மாட்டீங்குது பணம்டி பணம் அவன் உடம்பு முழுசும் பணம் அவன் இறந்தா அவனோட ஒவ்வொரு செல்லும் பணத்தால ஆனதுன்னு சொல்லலாம்டி இது புரியலயா உனக்கு..." என கேட்க.
"அக்கா அதுக்கு எவளோ தின்னு போட்ட எச்சிய என்ன திங்க சொல்றியா...?" என மாலினி கேட்க.
"ஏய்... ச்சீ... என்னடி உதாரணம் இது எச்சில் அது இதுன்னு இங்கப்பாரு நீ சொகுசா வாழப் பழகிட்ட உன்னால பணம் இல்லாம வாழ முடியாது நீ ஏன்டி அவன எச்சில் பண்டம்னு நினைக்கிற உனக்கு பொன்முட்டை இடற வாத்துன்னு நினைச்சிக்க ஏன்னா அவன் பார்வை பட்டாவே அது பொன்னா மாறுதுடி அந்த சொத்து எல்லாமே நமக்கு வந்தா நம்மள அடிச்சிக்க ஆள் இல்ல நான் சொல்றத நல்லா யோசி இது ஒரு நல்ல வாய்ப்பு தவற விட்டுடாத ஒருமுறை தவறவிட்டா அது எதேச்சையா நடந்துச்சுன்னு விட்டுடலாம் ஒவ்வொரு முறையும் தவறவிட்டா அது நம்மோட முட்டாள்தனம்டி மாலு இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து யோசி இவன கல்யாணம் பண்ணிக்க உனக்கு பிடிச்ச ஒருத்தனோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போ வாழ்க்கைல உனக்கு கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பு மாலு அத தெரிஞ்சே தவற விட்டுடாத..."என நீண்ட சொற்பொழிவு ஒன்றை ஆற்ற சற்றே யோசிக்க ஆரம்பித்தாள் மாலினி.
பார்ப்பவர்கள் அவள் அழகில் மயங்கித்தான் போவர்.
அழகும் பணக்காரத்திமிரும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள் பணம் மட்டுமே அவளது குறிக்கோள் மற்ற அனைத்தும் அவளுக்கு இரண்டாம்பட்சம்தான் அஞ்சலி சொல்வது சரிவருமா என்ற கோணத்தில் அவள் யோசிக்க ஆரம்பிக்க.
தங்கை யோசிக்க ஆரம்பித்ததில் மேலும் பல விஷயங்களை பேசி அவள் மனதை கரைத்தாள் அஞ்சலி.
நீண்ட யோசனைக்கு பிறகு எல்லாம் "சரி அந்த ஓடிப் போனவள பத்தி இன்னும் எதும் தெரியலயே அவ ஒருவேளை திடீர்னு வந்து நின்னுட்டா...?'என அவள் கேட்கும் அதே நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கி இருந்தாள் அன்பு.
அவளுக்காக மதன் காத்திருக்க அவனை பார்த்ததும் புன்னகை பூத்தவள் கையில் குழந்தையும் மற்றொரு கையில் ஒரு சிறு பேக்கும் மாட்டிக்கொண்டு அவள் அருகில் வேகமாக வந்த மதன் முதலில் சித்துவை கையில் வாங்கிக் கொண்டான்.
"ட்ராவல்லாம் ஓகேவா..?" என அவன் கேட்க.
"எல்லாம் ஓகேதான் சித்துதான் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான் சரி அண்ணி எப்படி இருக்காங்க செக்கப் கூட்டிட்டு போனியா..?" என கேட்க.
"அத நீயே அவகிட்ட கேட்டுக்க மேல உனக்கு ரூம் ரெடி பண்ணியிருக்கேன் நீ தனியா சமைச்சு சாப்பிட்ட கொன்னுடுவேன் பார்த்துக்க..." என்க.
"வீட்ல போய் பேசிக்கலாம்..." என அவள் முடித்துவிட அப்போதே அவனுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.
"நான் என்ன சொன்னாலும் கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கியா...?" என அவன் கேட்க.
"இப்ப எதுக்கு வந்ததும் வராததும் சண்ட போட்டுட்டு இருக்க உன் கண்ணுமுன்னாடிதான இருக்க போறேன்..." என்க.
"நான் சொன்னா கேட்க மாட்ட உன் அண்ணி சொன்னா மறுவார்த்தை பேச மாட்ட சரி வா..." என அவன் முன்னால் நடக்க அவனை பின் தொடர்ந்தாள் அவள்.
அவர்களை தாண்டி ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ சென்றது.
கண்களில் கூலிங்கிளாஸுடன் தீனா அந்த காரில் அமர்ந்து இருந்தான்.
ஓட்டுனர் அவனிடம் ஏதோ கேட்க அதற்கு பதில் சொல்லியவன் எதேச்சையாக திரும்பி பார்க்க அன்புவின் முதுகு மட்டுமே தெரிந்தது.
அவனுக்கு சட்டென ஏதோ தோன்ற ட்ரைவரை காரை நிறுத்த சொன்னவன் காரில் இருந்து இறங்கி மதனும் அன்புவும் சென்ற திசையில் சென்றான்.
அந்தோ பரிதாபம் அவர்களை நெருங்கும் முன்னரே அவர்களின் கார் அவனைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தது...
அன்புவை கண்டால் தீனாவின் நிலை....?