Total Views: 80
அத்தியாயம் 7
கிளைன்ட் ஒருவரை சந்தித்துவிட்டு திரும்பி செல்கையில்தான் மதனை பார்த்தான் தீனா.
யாருக்கோ காத்திருப்பது அவன் அடிக்கடி வாட்ச்சை பார்ப்பதில் தெரிய
"இவனை வாழ்நாளில் பார்க்கவே கூடாதுன்னு இல்ல நினைச்சிட்டு இருந்தேன்... ச்சே... இன்னைக்கு பாக்கற மாதிரி ஆயிடுச்சு..." என எண்ணியனின் மனக்கண்ணில் பழைய விஷங்கள் எல்லாம் வந்து போக ச்சே இங்கிருந்து முதல்ல போகனும் என எண்ணியவனுக்கு போன் கால் ஒன்று வர அதை எடுத்து பேசிவிட்டு திரும்புகையில்தான் மதன் கையில் தூங்கி வழிந்த குழந்தையும் அவனுடன் இணைந்து பேசி சிரித்தபடி ஒரு பெண்ணும் செல்வது தெரிந்தது.
முதலில் அவன் அவள் யாரென்று உணரவில்லை.
அவளது முதுகும் அவளது நீண்ட கூந்தலும் அவனுக்கு யாரையோ நினைவுபடுத்த உள்ளுக்குள் அதிர்ந்து போனவன் மீண்டும் அந்த குழந்தையை பார்க்க குப்பென வியர்த்து கொட்டியது அவனுக்கு... பின்னே...மதனின் கையில் உறங்கிக் கொண்டு இருந்த சித்தார்த் அச்சு அசல் தீனாவின் சிறுவயது ஜெராக்ஸ் காப்பியை போல அல்லவா இருந்தான்.
அப்படியனா இந்த குழந்தை கிட்டத்தட்ட நாலரை வயசுக்கு மேல இருக்கும்போல இருக்கே "ஓ...காட்..." என நெற்றியில் தட்டிக் கொண்டவனிடம் ட்ரைவர் வண்டிய நிறுத்துங்க என கிட்டத்தட்ட கத்தினான் என்றுதான் கூற வேண்டும்.
முதலாளியின் இந்த திடீர்மாற்றத்தில் அதிர்ந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்த புயல் வேகத்தில் இறங்கி ஓடியவனின் கண்களில் அந்தோ பரிதாபம் அவர்கள் இருவரும் அகப்படவில்லை.
வேகமாக துடிக்கும் இதயத்திற்கு நேராக கையை வைத்துக் கொண்டவன் பெரிய பெரிய மூச்சுகளாக விட காரில் இருந்து இறங்கிய ட்ரைவர் அவன் நின்ற தோற்றம் கண்டு வேகமாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
"ஏன் இப்படி தவிக்கிறேன்..." மூளை ஒருமாதிரி யோசிக்க மனமோ கண்டிப்பாக அவன் உன் மகன்தான் என அடித்து சொன்னது.
கடைசியாக அவள் வீட்டை விட்டு செல்லும்போது கண்ணீரோடு தன் வயிற்றை காட்டி ஏதோ கூறி வந்தாளே அவள்மேல் இருந்த கண்மூடித்தனமான கோபத்தில் அவள் கூற வருவதை அவன் செவிசாய்க்கவில்லையே கடவுளே என நெற்றியில் அறைந்து கொண்டான்.
முதலாளியின் இந்த விநோத நடவடிக்கை அவனது ட்ரைவருக்கு பயமாக இருக்க "சா... சார்...." என அழைத்தவன் தீனா பார்த்ததும் "வீட்டுக்கு போலாம் சார்..." என்க.
"ஆமா முதல்ல என்ன கொண்டு போய் வீட்டுல விடுங்க..." என்க.
பின் இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
இங்கு காரில் ஏறி அமர்ந்த இருவரும் ஏதேதோ பேசியபடி வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தாள் பூரணி.
"அண்ணி..." என அன்பு கத்திக் கொண்டே ஓட "நீ நகரு... உனக்கு யாரு இங்க காத்திருந்தா..." என்றபடி அவளை ஒரு ஓரமாக தள்ளியவள் மதனுடன் இறங்கிய சித்தார்த்தை அணைத்து முத்தமிட்டு தூக்கிக் கொண்டாள்.
அவனும் உறக்கம் கலைந்து சென்னையின் சாலைகளை அதிசயமாக பார்த்துக் கொண்டு வந்தவன் பூரணியை கண்டு அத்தை என குதித்து ஓடி ஒரே தாவலில் அவள் கரம் சேர்ந்தான்.
மதனோ "ஏய் பார்த்துடி..." என்க.
"உங்க வேலைய பாருங்க எத்தன நாள் ஆச்சு என் தங்கத்தை பார்த்து..." என அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
"அண்ணி நானும் இங்கதான் இருக்கேன்..." என்றாள் அன்பு.
"உன்னோட நான் பேசற ஐடியால இல்ல உன்மேல கோபமா இருக்கேன்..." என்க.
"சரி கோபமா இருந்துக்கோங்க இப்படி அத்தனை தூரத்துல இருந்து வந்தவள இப்படித்தான் வாசல்லயே நிக்க வச்சி பேசுவீங்களா...?" என கேட்க.
"ஏங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிய வீட்டுக்குள்ள கூட்டிட்டு வாங்க..."என்றபடி சித்துவை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல "மதன்... உன் பொண்டாட்டிக்கு கொஞ்சம் ஓவர்தான்..."என்றாள் அவள்.
"ஏய் உங்க சண்டைல என்ன இழுக்காதீங்க...அப்பறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன கலாய்ப்பீங்க..." என்றபடி காரில் இருந்த அன்புவின் லக்கேஜை தூக்கிக் கொண்டு வந்தான்.
அதற்குள் பூரணி சித்துவிற்கு வாங்கி வைத்த பொருட்களை எல்லாத்தையும் அவனிடம் காட்டிக் கொண்டிருக்க அவர்கள் தனி உலகத்திற்கு சென்றுவிட்டனர் என இருவருக்கும் புரிய "ம்ம்ம்ம்... இனி அதுங்க கண்ணுக்கு நாம தெரிய மாட்டோம்... மேல ரூம உனக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன்... நீ போய் குளிச்சுட்டு வா நான் போய் சாப்பாடு ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..." என்க.
"வேணாம் மதன் நானே ஏதாச்சும் செய்யறேன்..." என்க.
"ஏய் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீயே களைப்பா இருப்ப இன்னைக்கு ஒருநாள் கடையில சாப்பிடறதால ஒன்னும் ஆகிட போறது இல்ல நீ அமைதியா இரு அதுங்க எப்போ முடிக்கனுமோ அப்ப முடிக்கட்டும்..." என்க.
"சரி..." என்றவள் அவள் கொண்டு வந்திருந்த பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள்.
அந்த வீட்டின் மாடிக்கு வெளிப்புறமாகத்தான் படிகள் இருந்தது.
வாடகைக்கு விடும் நோக்கில் கட்டி இருந்தது.
இப்போது அதில் அன்பு வந்து தங்கிக்கொள்ள தயார் செய்து வைத்திருந்தான் மதன்.
மதன் கூறியபடி சாப்பாடு வாங்க சென்றுவிட அன்பு குளித்துவிட்டு வரும் வரையிலும் பூரணியும் சித்துவும் அவர்கள் நிலையில் இருந்து மாறவில்லை.
"ஏய்..." இன்னுமா நீங்க விளையாடிட்டு இருக்கீங்க அண்ணி என்ன இது சின்ன பையனாட்டம் இன்னும் விளையாடிட்டு இருக்கீங்க நேரத்துக்கு சாப்பிட வேணாமா எழுந்திரிங்க சித்து வா குளிக்கலாம்..." என்க.
"ம்மா... ப்ளீஸ்மா... அத்தை கூட இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்..." என்க.
"சித்து... என்ன பிடிவாதம் இது..." என அவள் கேட்க.
"இப்ப எதுக்கு பையன திட்டிட்டு இருக்க நீ போ நாங்க வரோம்..." என்க.
"என்னமோ பண்ணுங்க..." என வெளியேறியவள் தலைக்கு கட்டி இருந்த துண்டை அவிழ்த்து முடியை உணர்த்த தொடங்க எதிர்திசையில் இருந்து விசிலடிக்கும் சத்தம் கேட்டது.
அதில் திடுக்கிட்டு திரும்பியவள் அவர்களது கேட்டிற்கு நேர் எதிர் வீட்டில் இருந்து ஒருவன் அவளையே முழுங்குவது போல பார்த்து வைத்தான்.
அவன் பார்வை அவளுக்கு அருவெறுப்பை தர முகத்தை சுழித்தவள் உள்ளே செல்ல முற்பட "ஓய்.... வாவ்...வாட் எ பியூட்டி...கிராமத்து பியூட்டின்னு நல்லாவே தெரியுது புதுசா..." என கேட்க.
அவளோ அவனை முறைத்து பார்க்க முறைக்காதம்மா "நீ முறைக்கறதுகூட அழுகுதான் கரும்பு ரொம்ப செழிப்பா இருக்கும் போலவே எப்ப அத உறிஞ்சி சாரெடுக்கறது..." என உதட்டை உள்ளும் புறமுமாக சப்புக் கொட்டி காட்ட.
"ச்சே..."என்றவள் வீட்டினுள் நுழையும் நேரம் "ஏய்... இங்க என்ன பன்ற...?"என்றபடி வந்தாள் பூரணி.
"முடி காய வைக்கலாம்னு வந்தேன்..." என அவள் பதிலுரைக்க "ஹாய் சிஸ்டர்..." என்ற குரலில் திரும்பி பார்த்தவள் "ஹாய் அண்ணா எப்போ வந்தீங்க...?" என கேட்க.
"காலையிலதான் வந்ததும் கண்ணுக்கு குளிர்ச்சியா திவ்வியமா தரிசனம் கிடைச்சது...." என்றான்.
வார்த்தைகள் பூரணிக்கா இருந்தாலும் பார்வை என்னவோ அன்புவை முழுங்கிவிடும் பார்வையாக இருந்தது.
அவன் பார்வையில் அன்பு முகம் சுழிக்க "இது யாருன்னு நீ சொல்லவே இல்லையே சிஸ்டர்..."என அவன் கேட்க.
"இது அன்பு என் ஹஸ்பண்ட்டோட சிஸ்டர் ஊருல இருந்து வந்து இருக்காங்க... இனி இங்கதான் இருக்க போறாங்க..."என்க.
"அப்படியா வசதியா போச்சு..." என்றான் அவளை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே.
"நீ பேசிட்டு வா நான் உள்ள போறேன்...." என அன்பு கிளம்ப.
"ஏய்... இரு... இது சரவணன் நம்ம வீட்டு ஓனரோட பையன் ரொம்ப நல்ல மாதிரி... பாரின்ல இருந்து இப்போதான் வந்து இருக்கான் சிஸ்டர் சிஸ்டர்னு உயிரை விடுவான்..." என்க.
"ஹாய்..."அன்புவை பார்த்து கை நீட்ட அவனை பார்த்து முறைத்தவள் "நான் உள்ள போறேன்..." பூரணி என கிளம்பினாள்.
அங்கு ஒருவனோ அவள்தான் என முழுதாக தெரியாத போதும் அவளது நினைவுகளில் உழன்று கொண்டிருந்தான்...