Total Views: 49
முகிலன் எழுந்து நின்றவுடன் வினிதா அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்று கையை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றாள்.
"ஆபீஸ்ல மட்டும் அந்த வாய் பேசுற இங்க அமைதியான நின்னுட்டு இருக்க" என்றான்.
" நான் உங்களை பேச கூப்பிடலையே நீங்க தானே பேசணும்னு சொல்லி வந்திருக்கீங்க, நீங்க தான் சார் சொல்லணும் ".
"வெளியே தானே இருக்கோம். எதுக்கு இந்த சார் எல்லாம்" என்றான் சிரித்த முகமாக,.
"வந்த விஷயம் என்ன அத சொல்லுங்க "என்றாள் முகத்தை கடுகடு வென வைத்துக்கொண்டு .
"எந்த நேரம் பார்த்தாலும் மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சு கிட்டு இல்லாம கொஞ்சம் சிரிச்ச முகமாக இருந்தா தான் என்ன" என்றான்.
அவனை முறைத்தவள் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
" உனக்கு என்ன புடிச்சிருக்கா" என்று கேட்டான் .
"பரவாயில்லை, இப்ப வாச்சு கேக்குறீங்க ,ஏன் இவ்வளவும் சீக்கிரம் கேட்டுட்டீங்க, எனக்கு புடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க , இப்போ இந்த விஷயத்தை அப்படியே விட்டுட்டு உங்க வாழ்க்கைய பாத்துட்டு போயிடுவீங்களா ?" .
"நான் எப்போ அப்படி சொன்னேன். உனக்கு என்னை புடிச்சிருக்கா?" என்று மட்டும் தான் கேட்டேன்.
" உனக்கு புடிச்சாலும் ,புடிக்காட்டியும் இந்த கல்யாணம் நடக்கும் "என்று வில்லன் போல சொன்னான்.
"ஏன்? சார் ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சுக்க மாட்டீங்களா?".
" புரிஞ்சுகிட்டு தான் பொண்ணு கேட்டு வந்து இருக்கேன்",.
" நான் எப்பவாவது உங்க கிட்ட வந்து உங்கள லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனா ?உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா ?"என்று ஆதங்கமாக கண்கள் கலங்க கேட்டாள்.
அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு நின்றவன் ," பேசி முடிச்சிட்டியா இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ,ஒரு வாரத்துல நிச்சயம் அதுக்கு ரெடியாகிக்கோ "என்றவன் வேகமாக சிரித்தை முகமாக வெளியில் வந்து விட்டான்.
'அவ்வளவு தான் இல்லையா ?அவர் ம
மாட்டும் வந்தாரு, தனியா பேசணும்னு சொன்னாரு, இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு' என்று மனதிற்குள் எண்ணி புழுங்கிவிட்டு இது எங்க போய் முடியுமோ என்று எண்ணினாள்.
பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .அப்பொழுது முகிலன் தான் இன்னும் ஒரு வாரத்துல நிச்சயம் வச்சுக்கலாம், ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம் என்றான்.
சிரித்துக் கொண்டே ராமு தான் "எங்க வீட்டு பையனுக்கு கல்யாண வயசும் வந்துருச்சு , ஆசையும் வந்துருச்சு "மேற்கொண்டு பேச வேண்டியதை நாம் பெரியவர்களாக பேசிக்கொள்ளலாம் என்றார்.
ஜானகி தான் வினிதா இன்னும் வெளியில் வராமல் இருக்க இரண்டு முறை அழைத்தார்.
தனது கண்களை அழுத்தி துடைத்தவள் எப்பொழுதும் போல் வெளியில் வர ,அவள் அழுது இருக்கிறாள் என்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்றாலும் , அவளை நன்கு புரிந்து வைத்திருந்த முகிலனுக்கு தெரிந்தது.
இனி உன் வாழ்க்கையில அழுகை என்றால் என்னன்னு தெரியாத அளவுக்கு வாழ வைக்கணும்னு ஆசைப்படுறேன் டி. ஆனா என்னாலயே நீ அழ வேண்டிய நிலைமையில் இருக்கு, என் கைக்கு நீ வந்த உடனே முடிஞ்ச அளவுக்கு உன்னை கண்ணுக்குள்ள வச்சு பொத்தி பாதுகாக்க காப்பேன் என்று மனதிற்குள் எண்ணி விட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தன் குடும்பத்தாருடன் கிளம்பி விட்டான்.
அழகாக நாட்கள் செல்ல நிச்சயதார்த்தம் சிம்பிளாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வினிதா வீட்டில் நடைபெற்றது.
நிச்சயதார்த்தத்திற்கு முன்னாடி நாள் முகிலன் ஆபீஸில் இருக்கும் அனைத்து ஸ்டாப்பையும் ஈவினிங் பிரேக் டைமில் அழைத்தவன், எனக்கு நாளைக்கு எங்கேஜ்மென்ட் ,இன்னும் ஒன் மன்த் கழிச்சு மேரேஜ் என்றான்.
சிலர் சிரித்துக் கொண்டே என்ன சார் நாளைக்கு எங்கேஜ்மென்ட்னு இன்னைக்கு தான் வந்து சொல்றீங்க ,பொண்ணு எல்லாம் எங்க கண்ணுல காட்ட மாட்டீங்களா?பொண்ணு என்ன பண்றாங்க என்று கேட்டார்கள்
உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான் என்றான். அனைவரும் புரியாமல் பார்க்க சிரித்த முகமாக வினிதாவின் அருகில் வந்து நம் ஆபீஸ்ல நியூ வா ஜாயின் பண்ணி இருக்க வினிதாவை தான் மேரேஜ் பண்ணிக்க போறேன் என்றான்
சுற்றியுள்ள அனைவரும் சிரித்துக் கொண்டே சார் சொல்லவே இல்ல இவங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது லவ் மேரேஜ் ஜா கரெக்ட் பண்ணிட்டீங்களா என்று கேட்டார்கள் ஒரு சிலர்.
இல்லை நீங்க வேற, அரேஞ்ச் மேரேஜ் தான், வீட்ல தான் பார்த்து அரேஞ்ச் பண்ணி இருக்காங்க என்றான்.
ஒரு சிலர் தங்களுக்குள் ஒரு வேலை லவ் வா இருக்குமோ என்று கிசுகிசுக்க செய்தார்க்கள்.
ஒரு சிலர் அவர்கள் விஷயம் நமக்கு எதற்கு என்பது போல் ஒதுங்கிக் கொண்டார்கள்.
கல்யாணத்துக்கு எல்லாரையும் இன்வைட் பண்ணுவேன். இப்போ எங்கேஜ்மென்ட் சிம்பிளா தான் பண்ண போறோம். ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்றதலா உங்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் கொடுத்தலான்றதுக்காக இன்ஃபர்மேஷன் மட்டும் இப்போ கொடுக்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க.
பின்னால் நீங்க தப்பான விதத்தில் பேசக்கூடாது என்பதற்காக மட்டும் தான் என்று அனைவரையும் பார்த்து சொல்லி விட்டு நகர்ந்து விட்டான்.
மறுநாள் நிச்சயதார்த்தமும் வினிதா வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
ஆபீஸில் வேலை விஷயமாக வினிதாவுடன் பேசுபவன் .அதை தாண்டி வேறு எதுவும் பேசிக்கொள்ள மாட்டான்.
நாட்கள் வேகமாக சென்று திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு வந்து நின்றது.
திருமணத்திற்கு துணி எடுக்க சென்ற போது கூட வினிதாவை உடன் வர சொல்ல ,நீங்களே உங்களுக்கு பிடிச்சது போல எடுத்துட்டு வாங்க அத்தை நான் அங்க வந்து என்ன பண்ண போறேன். நீங்க எது எடுத்தாலும் எனக்கு ஓகே தான் என்று சொல்லிவிட்டு அமைதியாக விட்டாள்.
ஜானகியும் நாட்கள் குறைவாக இருப்பதால் சரி என்று அமைதியாக கிளம்பிவிட்டார்.
திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர்கள் ,அக்கம் பக்கம் இருப்பவர்களை மட்டும் அழைத்து இரு வீட்டிலும் பந்தகால் நட்டு முதல் நாள் நலங்கு பங்க்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்யாண பேச்சை ஆரம்பித்ததில் இருந்து முகிலன் வினிதாவிற்கு போன் செய்ததில்லை. ஆனால் ,இன்று முதல் முறையாக அவனது நம்பரில் இருந்து போன் வந்திருக்க, யோசனையாக ஃபோன் எடுத்தாள் வினிதா.
ஆபீஸ் விஷயமாக அவனது நம்பர் அவளுடைய ஃபோனில் சேவில் இருந்தது.ஒரு சில நொடி தயங்கியவள் இந்த நேரத்தில் எதுக்கு கூப்பிடுகிறார் என்று எண்ணிவிட்டு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
போன் அட்டென்ட் செய்துவிட்டு அமைதியாக இருக்கவும், போன் எடுத்தா பேசணும் அமைதியா இருக்க கூடாது என்றான்.
போன் போட்ட உங்களுக்கு பேச தெரியாதோ.
*நல்லா தான் பேசுற" .
"ஏன் எனக்கு பேச தெரியாதுன்னு உங்ககிட்ட வந்து சொல்லி இருந்தேனோ?" .
சிரித்துக் கொண்டவன்."சரி எதுக்கு போன் போட்டேன்னு சொல்லிடுறேன். ஒரு மயில் பச்சை கலர் புடவை இருக்கும் பாரு அதை இன்னைக்கு முதல் நாள் நலங்குக்கு கட்டிக்கோ" என்றான்.
எது என்று ஒரு நொடி அமைதி ஆகிவிட்டு," நீங்க சொல்றத நான் ஏன் கட்டணும் ,அந்த கலர்ல என்கிட்ட புடவை இருக்குனு உங்களுக்கு யார் முதல்ல சொன்னாங்க "
"எடுத்து கொடுத்த எனக்கு தெரியாதா ?என்று சிரித்து விட்டு ,உன்னுடைய ரூம்ல , உன்னோட செல்ஃப்ல இருக்க முகூர்த்த புடவையில் ஒன்னு தான் மயில் பச்சை கலர் புடவை அதை இப்போ கட்டிக்கோ".
" நான் நீங்க சொல்ற புடவை தான் கட்டணும்னு ஏதாவது அவசியமா என்ன ?".
அப்படி எல்லாம் நான் சொல்லல. ஆனா, அந்தப் புடவை கட்டுனா உனக்கு எடுப்பா , நல்லா இருக்கும்னு சொன்னேன்.
"ரொம்ப முக்கியம்" என்று முனகினாள்.
"இப்ப எதுக்கு போன் பண்ணீங்க அதை மட்டும் சொல்லுங்க ".
இதுக்கு தான் போன் பண்ணேன் என்ற உடன் வைத்து விட்டாள் .
இங்கு முகிலன் போனை தலையில் தட்டிக் கொண்டு சிரித்து விட்டு, நீ என்கிட்ட சாதாரணமா எப்பவும் போல பேச்சு வார்த்தை வச்சுக்குவ என்று எண்ணி எல்லாம் நான் உனக்கு போன் செய்யல டி. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை .
உன்ன என்னுடையவளாக என் அருகில் அழைத்து கொண்டு வந்த பிறகு எதுவாக இருந்தாலும் உன்னிடம் பேசிக் கொள்கிறேன் என்று எண்ணி அமைதி ஆகி விட்டான்.