Total Views: 52
வினிதா அவன் சொன்னது போல மயில் பச்சை கலர் புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றாள்.
பந்தக்கால் மற்றும் முதல் நாள் நலங்கு பங்க்ஷன் இரண்டும் நல்ல முறையில் நடந்தேறியது.
மறுநாள் மாலை பெண் அழைப்பதற்கு நித்யா ,அமுதன், ஜெயா ,முருகன், சாந்தி ஐவரும் வந்திருந்தார்கள்.
மண்டபத்தில் ராமு திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.
நித்யா வந்தவள் நேராக வினிதா இருக்கும் அறைக்குச் சென்று அண்ணி என்று அவளை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு சூப்பரா இருக்கீங்க என்று அவலது சோல்டரில் தாடையை பதித்து விட்டு கண்ணாடியில் இருவரது பிம்பத்தையும் காண்பித்தாள் .
சூப்பரா இருக்கீங்க என் அண்ணன் மட்டும் பார்த்தா டோட்டல் பிளாட் என்று சிரித்து விட்டு அவளின் முன்பக்கம் வந்து நெட்டி முறித்து தன் கண்ணில் இருக்கும் மையை எடுத்து அவளின் காதின் ஓரம் இட்டு விட ..லேசாக கண்கள் கலங்கியது வினிதாவிற்கு இருந்தாலும் அடுத்த நொடி கோபத்துடன் அவளை முறைத்து விட்டு தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு அமைதியாக இருந்தாள் m
நித்யா தான் நான் கொஞ்சம் எங்க அண்ணி கிட்ட தனியா பேசனுமே என்று சிரித்தாள்
சுற்றி இருந்த பெண்களும் சிரித்த முகத்துடன் அமைதியாக நகர்ந்து விட்டார்கள் .உனக்கு என்ன என் கிட்ட தனியா பேசணும் .இவ்ளோ நாள் இல்லாமா ?
ப்ளீஸ் அண்ணி ஒன்னே ஒன்னு கேட்டுக்குறேன். உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்று எனக்கு தெரியும். ஆனா,
நீங்க எங்க அண்ணனை மட்டும் தப்பா நினைச்சுக்காதீங்க .
அவர் ஒன்னும் கெட்டவரும் ,தப்பானவரும் இல்ல. ஆனா, உங்க கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தா எல்லாமே தப்பா தான் தெரியும். ஒரு காரணத்தோடு தான் எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்கு. அது மட்டும் உங்க மனசுல பதிய வச்சுக்கோங்க.
அவர தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதீங்க பிளீஸ்.
லேசாக சிரித்த வினிதா நான் அவரை தப்புன்னு சொல்லல நித்யா .ஆனா ஒரு பொண்ணா என்னோட மனநிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. விருப்பம் இல்லாம ஒரு வாழ்க்கை குள்ள போனா அந்த வாழ்க்கை எப்படி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையா அமையும்.
எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணி. இருந்தாலும் , அவனை போக போக நீங்க புரிஞ்சிப்பீங்க என்று நம்புறேன்.
ஆக மொத்தம் கடைசி வரைக்கும் விருப்பமே இல்லாம தான் என்ன கல்யாணம் என்ற பந்தத்துக்குள்ள இழுத்துட்டு போக தான் அண்ணனும், தங்கச்சியும் முடிவு பண்ணி இருக்கீங்க அப்படித்தானே என்று விருத்தியாக சிரித்தாள்.
இல்ல அண்ணி என்று அவள் பேசு வரும் போது வேண்டாம் என்பது போல் கை காண்பித்து விட்டு அமைதியாகிவிட்டாள்.
வெளியே இருந்து ஜானகி குரல் கொடுக்க. அடுத்தடுத்து நடக்க வேண்டிய ஒவ்வொன்றும் நல்ல முறையில் நடந்தேறியது.
பெண் அழைப்பு முடிந்து, மணப்பெண்ணை மண்டபத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு இரவு நிச்சயதார்த்தமும் நல்ல முறையில் நடந்து முடிந்தது .
ரிசப்ஷன் போது வினிதா முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு பட்டும் படாமல் முகிலனின் அருகில் நிற்க.
"கொஞ்சம் சிரிச்ச மாதிரி நில்லு" என்றான். "அது மட்டும் தான் இப்போ இங்க குறைச்சல் பாருங்க" என்றாள்.
"அது குறைச்சல் என்று சொல்லவில்லை .ஆனால் நீ இப்படி மூஞ்சியை சுடு சுடுனு வச்சிட்டு இருந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க "என்றான்.
எதையோ நினைச்சுட்டு போகட்டும். எனக்கு என்ன என்றால் ,ஆனாலும் சிரித்த முகமாக நின்றாள். சுற்றி வந்திருக்கும் உறவினர்களையும், தன் ஆபீசில் வேலை செய்பவர்களையும் பார்த்து விட்டு, மறுநாள் திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்தது.
விடியற்காலை 7 டூ 9 முகூர்த்தமாக இருக்க, ஆறு மணி போல் வினிதாவின் அறைக்கு வந்த நித்யா அவளுக்கு என்னென்ன தேவை என்பதை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.
பெண் அழைத்துக் கொண்டு மணமடைக்கு செல்லும் பொழுது வினிதா நித்யாவின் கையை கெட்டியாக பிடித்தாள்.
அண்ணி ஒன்னும் இல்லை பயப்பட வேண்டாம். என் அண்ணன் அப்படி ஒன்னும் மோசமானவன் இல்ல. உங்கள படுகுழியில யாருங்க தள்ள, நினைக்கல. அவனை நம்பி உங்க கழுத்தை நீட்டலாம் என்று மெதுவாக அவளது காதில் சொல்லி கொண்டே கையில் அழுத்தம் கொடுத்தாள் நித்யா.
மணமேடைக்கு வந்தவுடன் முகிலனின் அருகில் உட்கார வைத்தாள். வினிதாவிற்கு உள்ளுக்குள் பயம் ஏன் என்று தெரியாமலே நடுக்கத்துடன் உட்கார்ந்து இருந்தாள்.
அவளை மணமேடையில் உட்கார வைத்துவிட்டு நித்யா ஐயர் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு சென்று அனைவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது ஒருவன் மீது மோத, சாரி என்று சொல்லிக்கொண்டே திரும்ப அவனை பார்த்தவள் .ஒரு நொடி நின்று இவனை எங்கே பார்த்திருக்கிறோமே என்று யோசித்தால்.
வேகமாக அவளது அருகில் வந்த அமுதன் "வாடி நேரம் ஆகுது" என்றான் ."இ..இல்ல அ..அமுதா "என்று திக்கி திணறினால்.
" ஒன்னும் இல்ல வா" என்று அவளது கையில் அழுத்தம் கொடுக்க. மோதியவனை திரும்பி பார்த்துக் கொண்டே மணமேடைக்கு சென்று ஐயரிடம் தாலியை கொடுத்தாள்.
அவரும் நேரமாகுவதை உணர்ந்து முகிலன் கையில் தாலியை கொடுத்து விட்டு கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல .முகிலன் தான் நித்யா என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழைக்க திரும்பினாள்.
அண்ணா அது என்றால், கண்ணை மூடி திறந்தவன் .தன் கையில் இருக்கும் தாலியை தன் தங்கையிடம் கண் காமிக்க. அதை உணர்ந்த நித்யா சிரித்து முகமாக தனது அண்ணனின் சரிபாதி ஆன வினிதாவின் பின்னாடி வந்து நின்றாள் .
வினிதா பதற்றத்துடன் உட்கார்ந்திருக்க. "பால்கோவா என்ன பாரு டி " என்றான்.
" நேங்.. "என்று வேகமாக திரும்பி இருந்தாள். ஏன் என்று தெரியாமலே வினிதா அவனது கண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.தன்னுடைய மொத்த காதலையும் தன் கண்ணில் தேக்கி வைத்தவன் அவளை பார்த்து லேசாக கண்ணடித்து விட்டு சிரித்து முகமாக அவளது கழுத்தில் இரண்டு முடிச்சு இட்டான்.
தாலி கட்டும் போது அவளது கண்கள் கலங்க கண்ணீர் அவனது கையில் பட்டுத் தெரித்தது.
இரண்டு முடிச்சு போட்டவன் மூன்றாவது முடிச்சு போட, நித்யாவை பார்க்க .
அவளும் கிழே குனிந்து மூன்றாவது முடிச்சு போட,வினிதாவின் கண்ணீரை துடைத்து விட்டவன்.
ஐயர் கொடுத்த குங்குமத்தை நெற்றி வகிட்டிலும் , தாலியிலும் வைத்து விட்டு , சேலை மறைவில் தெரிந்த இடுப்பில் லேசாக கிள்ளி விட்டான்.
கூச்சத்தில் துள்ளியவள். அவனை முறைத்து விட்டு சுற்றி இருப்பவர்களை பார்த்து நெளிந்தாள் .
முகிலன் சிரித்து விட்டு ஐயர் சொன்ன அடுத்தடுத்து சடங்குகளை ஒவ்வொன்றாக அவலது கையை பிடித்துக் கொண்டு செய்ய .
மெட்டியை அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு கையிலும் லேசாக கிள்ளிவிட்டு போட்டு விட்டான் .
'என்னதான் நினைச்சுட்டு இருக்காரு' என்று முனகினாள். அடுத்தபடியாக ஒவ்வொன்றும் நல்லா முறையில் நடந்தேறியது.
சாப்பிட அழைத்து கொண்டு செல்ல,நித்யா இருவரையும் மாற்றி மாற்றி ஊட்டி கொள்ள சொன்னாள்.
வினிதா முறைத்தாள்."உங்க புருஷன் தான் அண்ணி கூச்ச படமா ஊட்டி விடுங்க" என்றால் ,சிரித்துக் கொண்டே.
அவளை முறைத்து கொண்டே அவனைப் பார்க்க. கண்ணடித்து விட்டு வாய் திறந்தான்.
முனகி கொண்டே ஊட்டி விட்டாள். அவனும் ஊட்டி விட ,கைதட்டி சிரித்தால் நித்யா
முகிலன் சாப்பிட்டு முடித்தவுடன் தனது அண்ணனின் சட்டையை கொத்தாக பிடித்தவள் ..
"அ...அவன் அ.. அவனை..என்று திக்கி திணறினாள்".அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்ட முகிலன்" ஒன்னும் இல்ல நித்து மா " கொஞ்ச நேரம் அமைதியா இரு.
" இப்ப கூட சொல்ல மாட்டீங்க இல்ல ரெண்டு பேரும்" என்று அழுகையுடனே கேட்டாள்.
வேகமாக அருகில் வந்த அமுதன் "நித்யா என்ன பண்ணிட்டு இருக்க,
சுத்தி ஆளுங்க இருக்காங்க,
இப்பதான் உன் அண்ணன் தாலி கட்டி இருக்கான் "என்று லேசாக குரலை உயர்த்தி சொன்னான்.
"இவன் என்னோட அண்ணன் என்றாள் சட்டமாக," இப்போது உனக்கு அண்ணன் மட்டும் கிடையாது ,உன் அண்ணிக்கு புருஷன் அதை மறந்திடாதே" என்றவுடன் வேகமாக நிமிர்ந்து வினிதாவை பார்க்க.
அவள் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த பேந்த முழித்துக் கொண்டு இருந்தாள்.
"உனக்கான விளக்கத்தை நான் தறேன்.
உன் அண்ணா தரவேண்டிய அவசியம் கிடையாது. நான் சொல்லுவேன் என்ற நம்பிக்கை இருக்கா ?இல்லையா?டி" என்றான் பல்லை கடித்து கொண்டு.
"அத தவிர எனக்கு வேற வழி இல்ல" என்று லேசாக முனகி விட்டு முகிலனிடம் இருந்து நகர்ந்து நின்றாள்.