Total Views: 78
நேரங்கள் செல்ல. நல்ல நேரத்தில் மணமக்களை முகிலன் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அனைவரையும் வெளியே நிற்க சொல்லிவிட்டு நித்யா வேகமாக உள்ளே சென்று ஆலம் கரைத்து எடுத்துக் கொண்டு வந்தவள், மணமக்களுக்கு ஆலம் சுற்றிவிட்டு" டேய் அண்ணா ஆலம் சுற்றி இருக்கேன் காசு போடு "என்றாள்.
சிரித்துக் கொண்டே முகிலன் தனது சட்டை பாக்கெட்டை தடவ, அதில் காசு இல்லை என்றவுடன் அமுதனை திரும்பிப் பார்த்தான்.
அவன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க. "டேய் அண்ணா, அது என் காசு "என்றாள்.
"எது உன் காசு ,அது என் நண்பன் காசு" சிரித்துக் கொண்டே முகிலன் சொன்னான்.
உனக்கு நண்பனா இருந்தாலும் ,என் புருஷன் .என் புருஷன் காசு என் காசு தான் .
"என் புருஷன் காசை எடுத்து எனக்கு தரலாம் என்று பார்க்கிறாயா? நல்ல ஓசிலே வாழலாம்னு பாக்குற டா "அண்ணா என்று சிரித்தாள்.
அவள் அப்படி ஒரு வார்த்தை சொன்னவுடன் இதுவரை சிரித்தை முகமாக இருந்த அமுதன் "நித்யா" என்றான்.
" நான் என் அண்ணன் கிட்ட பேசிட்டு இருக்கேன் .அப்போ உங்க காசு என் காசு இல்லையா ?"என்று முறைத்துக் கொண்டு நின்றாள்.
அமுதன் சிரித்துக் கொண்டே அமைதியாகிவிட்டான்.
அவள் தன்னை கணவன் என்றும் ,தன்னுடைய காசு அவளுடைய காசு என்றும் சொன்னவுடன் சிரிப்புதான்.
ஒரு சில நொடி அமைதியாக இருந்த முகிலன் தனது கழுத்தில் இருந்த செயினை நித்யாவின் கழுத்தில் போட்டுவிட்டு "இப்போ சந்தோஷமா" என்று சிரித்து விட்டு அவளது தலையில் கை வைத்து ஆட்ட .
சரி இருங்க என்று விட்டு ஆலம் வெளியே ஊற்றி விட்டு வந்தவள் இருவரையும் ஒரு ஒரே நேரத்தில் வலது கால் எடுத்து வைத்து வருமாறு சொன்னாள் .
உள்ளே வந்தவுடன், "வாங்க அண்ணி பூஜை அறையில் வந்து விளக்கு ஏத்துங்க "என்றாள்.
அப்பொழுது சாந்தி தான் "இது எங்க வீடு டி என் மருமகளை என்ன பண்ண சொல்லணும்னு எனக்கு தெரியும் "என்றார் சிரித்துக் கொண்டே .
"இது என்னோட பொறந்த வீடும்" தான் என்று முறைத்துவிட்டு இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கு ஏற்ற வைத்தாள் .
பிறகு ஹாலுக்கு அழைத்துக் கொண்டு வந்து பாலும் ,பழமும் கொடுத்துவிட்டு "அண்ணி கொஞ்ச நேரம் முகிலன் ரூம்ல ரெஸ்ட் எடுக்குறீங்களா ?" என்று கேட்டாள்.
அப்பொழுது ஜெயா தான் "நித்யா நீ முகிலன் கிட்ட எப்படி வேணா பேசு .ஆனா அடுத்தவங்க கிட்ட பேசும்போது அண்ணன் என்று சொல்லி பேச பழகு. அவன் இவன் என்று பேசாத அப்படி பழகாத"என்றார் .
அமுதன் சிரித்துக் கொண்டே ஜெயாவின் தோளில் கையை போட. 'கூட்டு களவாணிகள் 'என்று மனதிற்குள் எண்ணியவள் .
சரி அத்தை என்று விட்டு மேல போறீங்களா அண்ணி என்றாள்.
இல்ல நித்யா இங்கவே இருக்கேன் என்று சொல்ல .எவ்வளவு நேரம் இந்த பட்டுப்புடவை யோட இருப்பீங்க நார்மல் புடவை கட்டிக்கலாம் இல்ல .
யாரும் எதும் சொல்ல மாட்டாங்க அண்ணி என்று சிரித்தாள் .
வினிதா சுற்றி உள்ளவர்களை பார்க்க சிரித்த முகமாக அனைவரும் தலையாட்ட .
நித்யா உடன் முகிலன் ரூமுக்கு சென்றாள். என்னோட பேக் கீழே இருக்கிறது நித்யா என்றாள்.
அதை அப்புறமா எடுத்துக்கலாம் அண்ணி .அண்ணா உங்களுக்காக புடவை ,சுடிதார் எடுத்து வச்சிருக்கான் பிளவுஸ் ஸ்டிச் பண்ணி தான் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, இருங்க என்று விட்டு கப்போர்ட் திறந்தவள்.
அங்கு இருக்கும் ஒரு நாலஞ்சு புடவைகளை எடுத்து அவளிடம் நீட்டி எது வேணுமோ கட்டிக்கோங்க உங்க சாய்ஸ் என்று கையை நீட்டினாள்.
எ.. எ..என்ன அ..அவரு ..எனக்காக புடவை வாங்கினாரா..என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
சிரித்த நித்யா அவன் உங்களுக்காக என்ன வேன செய்வான் அண்ணி உங்க மேல அம்முட்டு பாசம் என்றாள்.
ஆமாம் ,ரொம்ப அக்கறை ,பாசம் தான் என்று முறைத்த வினிதா "அவ்ளோ பாசம் இருகிறவரு நான் வேணாம்னு சொல்லியும் என்ன இங்க நிக்க வச்சு இருக்க வேணாம்" என்றாள் தழுதழுத்த குரலுடன்..
அவளை பாவமாக பார்த்த நித்யா அண்ணி அது ..என்று பேச வர..
வேணாம் விடு நித்யா இனி பேசியும் எந்த பயனும் இல்லை.நல்லதோ கெட்டதோ இது தான் என் வாழ்க்கை..போக போக சரி ஆகிடுவேன் .ஆன இப்போ மனம் ஆறல அதான் அப்போ அப்போ புலம்புறேன் என்று கண்ணீரை துடைத்தாள்.
நித்யாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், அமைதியாக எதுவும் சொல்லாமல் புடவையை நீட்டிக் கொண்டு நிற்க .அதிலிருந்து ஒன்றை எடுத்து கட்டிக் கொண்டாள்.
இங்கே இருக்கீங்களா அண்ணி.இல்ல நானும் கீழே வரேன் என்று அனைவருடனும் உட்கார்ந்து கொண்டாள்.
அப்படியே நேரங்கள் சென்று இரவு சடங்குக்கு தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு வினிதாவுக்கு தான் கை, கால் உதறல் எடுக்க ஆரம்பித்து.
உள்ளுக்குள் பயபந்து உருளியது.
'திருமணத்திற்கே தன் சம்மதம் தேவைப்படலை .இப்பொழுது அடுத்தபடியாக இரவு சடங்குக்கும் தன்னுடைய சம்மதம் தேவையில்லையோ ,இவர்களுக்கு' என்று எண்ணியவள் அங்கு போனில் பேசிவிட்டு திரும்பிய முகிலனை தான் முறைத்துக் கொண்டு நின்றாள்.
' இவன் இதற்கும் தன்னுடைய சம்மதத்தை எதிர்பார்க்க மாட்டானோ' என்று மனதிற்குள் என்னை அஞ்சினாள் .
அவளது எண்ணத்தை அறிந்தவன் .சிரித்துக்கொண்டே அவளது அருகில் வந்து நின்று விட்டு "கல்யாணத்துக்கு மட்டும் தான் உன் சம்மதம் வேணான்னு சொன்னேன். அதுக்குன்னு மொத்தமாக உன் சம்மதமே இல்லாம உன்னை எடுத்துக்க மாட்டேன் "நம்பலாம்.
நான் ஒன்னும் அவ்வளவு வில்லன் இல்ல என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இரவு உணவு ரெடியாக அனைவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டுவிட்டு நல்ல நேரத்தில் வினிதாவை முகிலனின் ரூமுக்கு அனுப்பி விட்டார்கள்.
உள்ளே சென்றவுடன் கீழே இருக்கும் பூச்செடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள் ஜன்னல் வழியாக .
அப்பொழுது உள்ளே வந்த முகிலன் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு சிரித்து கொண்டே அவளது அருகில் சிறிது இடைவெளி வந்து நின்றவன் "என்ன பலத்த யோசனை போல" என்றான்.
யோசனை எல்லாம் எதும் இல்ல .கீழ இருக்க செடியை தான் பார்த்திட்டு இருந்தேன் .நல்லா இருக்கு.
"பூ எல்லாம் பூத்துக் குலுங்குது. ஏன் பறிக்கலையா " .
நித்யாவுக்கு ரோஸ் செடினா ரொம்ப பிடிக்கும். அதும் அதுல அப்படியே பூ விட சொல்லவா அப்பதான் அழகா இருக்கும்ன்னு சொல்லுவா.
என்னைக்காச்சி ஒன்னு ரெண்டு பெரிப்பாங்க. அம்மா சாமிக்கு தனியா பூ வச்சிருக்காங்க .இது அப்படியே இருந்தா சந்தோஷமா இருக்கும் அத பாத்துட்டு இருக்கும் போது நம்ப மனசுல கஷ்டம் இருந்தாலும் அந்த இடத்தில் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து எழுந்தா சந்தோஷமாவும், மனசுக்கு நிம்மதியாவும் இருக்கும்னு சொல்லுவா அவ வச்சது தான் அதான் என்று அவனோடு சேர்த்து அவனது கண்களும் சிரித்தது தங்கையின் நினைவில்.. .
கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அவனது சிரிப்பை ரசித்தால என்பது அவளுக்கே வெளிச்சம்.என்ன இப்படியே நிக்கிறதா உத்தேசமா என்று விட்டு தூங்கலாமா ரொம்ப அசதியா இருக்கு என்றவுடன்..
கை,கால் உதறல் எடுக்க உதடுகள் துடிக்க. இ.. இ...இல்..இல்ல நீங்க தூங்குங்க எனக்கு தூக்கம் வரல என்று திக்கி திணறினாள் .
"ஏற்கனவே சொல்லிட்டேன். உன் சம்மதம் இல்லாம உன்ன முழுசா எடுத்துக்க மாட்டேன் சரியா ?".
உன்ன என் கை வளைவுக்குள்ள கொண்டு வரணும்னு நினைச்சேன் அவ்வளவுதான். வந்து தூங்கு என்று விட்டு ஒரு பக்கம் சென்று படுத்து விட்டான்.
சிறிது நேரம் கழித்து திரும்பி பார்க்க.
போர்வை, தலையணை எடுத்து கீழே போட்டாள். என்ன பண்ண போற என்றான்.
இ..இ..இல்ல நான் இங்க கீழ படுத்துகிறேன் என்றாள்
ஓவரா ..சினிமாட்டிக்கா எதுவும் பண்ணாத. நம்பிக்கை இருந்தா மேல படு அவ்ளோதான் சொல்லுவேன் .அதுக்கப்புறம் உன் விருப்பம் என்று விட்டு கோபத்துடன் திரும்பிக் கொண்டான் .
சிறிது நேரத்திற்கு பிறகு அவன் சத்தம் கேட்டு திரும்ப கட்டிலில் இருவருக்கும் இடையில் தலையணைகளை அடுக்கி வைத்தாள்.
"இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா ?"என்று எழுந்து உட்கார்ந்து வேதனையாக கேட்டான்.
இவளுக்கு தன் மீது நம்பிக்கையே வராதோ.. இவளுக்காக தான எல்லாம்..என் மொத்த வாழ்க்கையும் இவள் தானே..என்று எண்ணி கண்கள் இடுக்க அவளை பார்த்தான்.
நம்பிக்கை இல்லாம இல்ல எனக்கு தலைகாணி மேல கை ,கால் போட்டு தூங்கி பழக்கம் ஆயிடுச்சு அதான் என்று லேசாக நெளிந்தாள்.
சத்தமாக சிரித்தவன். தலையணைகளை தூக்கி போட்டுவிட்டு "என் மேல கை கால் போட்டுக்கலாம் .நான் எதும் சொல்ல மாட்டேன். உன் அளவுக்கு எல்லாம் கிடையாது நானு "என்று சிரித்தான் .
தலையணையை அவன் மேல் தூக்கி எறிந்தவள் ஒன்றும் வேண்டாம் என்று விட்டு அவனிடமிருந்து தலையணையை பிடுங்கினாள்.
" அமைதியா படுத்து தூங்கு "என்றான்.
எ..என..எனக்கு தலைகாணி இல்லமா வசதியா இருக்காது என்றாள்.
சிரித்து விட்டு அதுலாம் வசதியா இருக்கும் வா என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
பயத்துடன் நிமிர்ந்து அவனை பார்க்க "ஒன்னும் பண்ண மாட்டேன்டி பால்கோவா" என்றான் .
அப்பவே கேட்கணும் என்று நினைச்சேன் அது என்ன பால்கோவா என்று கேட்டு கொண்டே அவனிடமிருந்து விடுபட போராடினாள்.
"பரவா இல்ல டி சீக்கிரம் கேட்டுட்டா ..ஆன சொல்லுவேன் இப்போ இல்ல நீயா தெரிஞ்சிக்கிற காலம் வரும் இப்போ எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு" என்றான்.
ஒன்றும் புரியாமல் 'எதே நானே தெரிஞ்சுக்குவேன 'என்று கண்கள் இடுக்க அவனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் வினிதா.