இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -73 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 04-07-2024

Total Views: 5230


வளவன் ஷாலினி  பல வருடக் காதல் திருமணத்தில் முடியப் போகிறதே என்ற மகிழ்வில் இல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்துப் பார்த்தனர்

“இவன் அண்ணன்ங்க பண்ணதுக்கு இவ என்னமோ நான்தான் குற்றவாளி மாதிரி பார்க்குறா? எல்லாம் என் நேரம் எதை சொல்ல” நொந்துக்கொண்டான் வளவன்

மொத்தத்தில் நந்தனை தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு கவலையில் தான் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

மேடைக்கு அருகில் நின்று சொந்தங்களின் நலனை விசாரித்துக் கொண்டிருந்த மார்த்தியை 

“மார்த்தி மாமா.. “என்று மேடையில்  நின்ற நிலா    சத்தமாக அழைத்தாள்.

“எதுக்குடி அவரைக் கூப்பிடற?”

“சும்மா தான்,  இருங்க, நான் பேசிட்டு வந்தரேன்” என அவனை விட்டு  பத்து அடி தள்ளி வந்து அவரிடம் பேசுனாள்.

“என்னம்மா ஏதாவது வேணுமா..?”

“மாமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க மாமா”

“சொல்லும்மா”

“யுகிக்கு  எப்படியாவது போதையை தெளிய வெச்சி கூட்டிட்டு வாங்க மாமா..”

“எதுக்கும்மா ரிஸ்க் எடுக்கணும்னு நினைக்கற அவன் எழுந்தா மறுபடியும் பிரச்சனை பண்ணுவான் நிலாம்மா”

“அவன் இல்லாம என்னோட வாழ்க்கையில  எந்த முக்கியமான நிகழ்ச்சியும் நடந்ததில்ல மாமா.இனி ஒரு கல்யாணம் நடக்கவா போகுது. என்னோட வாழ்க்கையில முதலும் கடைசியுமா நடக்கற கல்யாணத்துல அவன் இல்லாம எப்படி மாமா. ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க, இல்லனா என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுடும் ப்ளீஸ் மாமா.”

“அவன் அடிச்சிருக்க சரக்குக்கு இன்னும் நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்டான்ம்மா”

“ஏதாவது பண்ணுங்க.. லெமன் புழிஞ்சிக் குடுங்க, குளிக்க வைங்க  இல்லனா கல்லைத் தூக்கிப் போட்டாவது எழுப்பி விடுங்க, அவன் வேணும் மாமா ப்ளீஸ்” என்றாள் கண்ணீருடன்

“சரிம்மா அழாத அப்புறம் பார்க்கறவீங்க ஒன்னுக்கு ரெண்டா கதையை கட்டி விட்டுருவாங்க” என்றவர் “நான் ஏதாவது பண்ணி கூட்டிட்டு வரேன்”  என அங்கிருந்து செல்ல..நந்தன் அருகில் செல்ல திரும்பியவள்  இதயம் வெடித்துவிடுவது போல் அதிர்ச்சியாகி நின்றாள்.

நிலா பேசிய அனைத்தையும் நந்தன் கேட்டுக் கொண்டிருந்தான் அவன் வந்ததைப் பார்த்த மார்த்தி அதை நிலாவுக்கு புரிய வைக்க கண் ஜாடைக் காட்ட, நந்தன் வாயில் விரல் வைத்து மிரட்டவும்   அமைதியாகி விட்டார்.

“இல்லங்க..  அது” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை. என்ன சொல்லி அவனை சமாளிப்பது என பாவமாகப் பார்க்க..

நந்தனின் முகமோ பாறைப்போல் இறுகி இருந்தது.

“யுகி யுகி யுகி  எப்போ பாரு யுகி தான் இவ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறாளா? இல்லை அந்த நாய கல்யாணம் பண்ணிக்கிறாளா.?” என மனம் கேள்வி எழுப்ப 

‘அவனை ஏதாவது பண்ணிடுவேன்னு சொன்னதால தானே கல்யாணத்துக்கே சம்மதம் சொன்னா உன்னைய  விட அவளுக்கு அவன் தான் எப்போதுமே முக்கியம்’  என மனசாட்சி நேரம் கெட்ட நேரத்தில் முன்னால் வந்து அவன் மனதை குழப்பி விட..முகம் இறுகி நின்றான் 

அடுத்த அடுத்த ஆட்கள் வரும் போது நந்தனிடம் முன்பு இருந்த இலகுத் தன்மை அவனிடம் இல்லாமல் போக..நிலா அவன் முகத்தை அடிக்கடி பாவமாக பார்த்தாள், ஆனால் அவனிடம் பேச முயலவில்லை.

யுகியைத் தேடிச் சென்ற மார்த்தி அவனை இழுத்துச் சென்று குளியலறையில் ஷவருக்கு கீழே நிற்க வைத்தார்.

“பூனை என்னைய விட்டுட்டு போயிடாதடி.. நீ இல்லாம என்னால உயிரோட வாழ முடியாது,அவன் நம்பலை பிரிச்சிடுவான் பூனை, நான் உன்னைய லவ் கூடப்  பண்ணலடி நீ என்னோட இருந்தாவே போதும் அவன் மட்டும் வேண்டாடி” என உளறியவாறே ஷவருக்கு அடியில் அழுவது மார்த்திக்கு தெரிந்தது.

அவ்வளவு போதையிலும் பூனைக்காக அவன் சிந்தும் கண்ணீர் சொன்னது யுகி நிலாவின் மீது வைத்திருக்கும்  அன்பை.

ஒரு மகனின் ஆசையை நிறைவேற்றுகிறோம் என இன்னொரு மகனின் ஆசைகளையும் உணர்வுகளையும் உயிரோடு கொன்றுவிட்டோமோ என தாமதமாக தான் ஞானோதயம் வந்தது மார்த்தாண்டத்திற்கு. யுகியின் நிலையைப் பார்த்து கண் கலங்கிவிட்டது அவருக்கே.

“ஏண்டா இந்த அளவுக்கு அந்த புள்ள மேல பைத்தியமா இருக்க. லவ் பன்றேன்னு முன்னாடியே சொல்லிருந்தா கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேனே..”  என புலம்பிக் கொண்டே தலையை தேய்த்துவிட்டவர்,  இதற்கு மேல் விட்டால் ஜன்னி வந்துவிடும் என்ற நிலை தான் படுக்கைக்கு அழைத்து வந்தது அவன் உடையை மாற்றி  தலையை   துவட்டி விட்டார்.

“அப்பா... “ இப்போது தான் போதை சிறிது தெளியத் தொடங்கியதால் யுகியின் பேச்சில் தெளிவாக வந்தது.

உடனே எலுமிச்சை பழத்தை பிளிந்து எடுத்து வந்து அதை யுகியிடம் கொடுத்தார்

“அப்பா என்ன பண்ணேன் நான், இது எந்த இடம்.?’

“மண்டபத்துக்கு வந்துட்டோம் குடிச்சிட்டு வெளியே வந்து நில்லு”

“மண்டபமா? கல்யாணம் ஆகிடுச்சா? எவ்வளவு நேரம் இப்படி போதையில இருந்தேன்னு தெரியலையே என தலையை தட்ட

“மண்டபம் தான் ஆனா கல்யாணம் ஆகல,காலையில தான் கல்யாணம், இப்போ வா வெளியே போலாம்”

“அவ வர சொன்னாளா?, நான் வரல”

“ஏன் வரல?”

“அவ அந்த நாயை கல்யாணம் பண்ணிக்கறதை என்னால பார்க்க. முடியாது”.

“அதுக்கு  தான் குடிச்சியா?”

“ஆமா நான் சொல்லிப் பார்த்துட்டேன் கேக்கற மாதிரி இல்ல. அவ கல்யாணத்தைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சி எங்கையாவது போனா, நான் இல்லைன்னு தெரிஞ்சா  அவ கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணி வெச்சிடுவா,  இல்லனா தேடிப் பிடிச்சி கூட்டிட்டு வந்துடுவா”

“சரிடா அதுக்குன்னு குடிப்பியா?”

“அப்போதான என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது”

“நிலா கூட்டிட்டு வர சொன்னா இப்போ என்கிட்ட சொன்னதை வந்து அவகிட்டயும் சொல்லு.”

“அவகிட்ட நான் எதுக்கு சொல்லணும் எனக்கு அவகிட்ட பேச புடிக்கல.நீங்க போங்க, நான் வர மாட்டேன்” என்று மார்த்தியை அனுப்பி வைத்துவிட்டான்

அறையை விட்டு வெளியே வந்தவர், நிலாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்ட..அவள் பார்த்தாளோ இல்லையோ நந்தன் அதை பார்த்துவிட்டான்

மார்த்தி சொன்னதை நிலாவும் பார்த்துவிட்டாள். அவள் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் குறைந்து நிம்மதி பரவியதையும் நந்தன் கவனிக்கத் தவறவில்லை.

நிலாவின் ஒவ்வொரு செய்கையிலும் உள்ளுக்குள்ளையே உறங்கும் எரிமலையாகக் கொதித்திக் கொண்டிருந்தான்.என்று வெடிக்கும் என்று தான் தெரியவில்லை.

வெடித்து வெளியே வழியும் எரிமலையின் வேகத்தைக் காட்டிலும்,உள்ளுக்குள் வெப்பத்தை அடக்கி வைத்து திடீரெண்டு வெடிக்கும் எரிமலையின் வேகமும் அதிகமாக இருக்கும், சேதமும் அதிகமாக இருக்கும். நந்தனின் எரிமலை சேதம் நிலாவை தவிர வேறு யாரையும் பாதிக்காது.

வரவேற்பு முடிந்ததும். நந்தனை அவனுடைய  துறையைச் சேர்ந்த ஆட்கள் சூழ்ந்து கொண்டனர்.

“சார் உங்களுக்கு கல்யாணம்ன்னு சொல்லவே இல்லையே”

“திடீர்ன்னு முடிவு பண்ணிட்டாங்க, மறுக்க முடியல” என்றவனின் கண் நிலாவைத் தேடியது.

வளவனும் ஷாலினியும் சாப்பிட சென்று விட்டனர். அவர்களுடன் தான் நந்தனும் நிலாவும் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் பேச வரவும் சாப்பிட செல்ல முடியாமல் போய்விட.. நிலா நந்தனிடம் இருந்து பிரிந்து யுகி தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றாள்.

அதையும் பார்த்துக்கொண்டு தான் பதில்  சொல்லிக் கொண்டிருந்தான் நந்தன்.

நிலா கதவை தட்ட, உள்ளே தாழிட்டு அமர்ந்திருந்த  
யுகி, “அப்பா ப்ளீஸ் கொஞ்சநேரம் டிஸ்டர்ப் பண்ணாம இருங்க, ஆல்ரெடி பயங்கரமா தலை வலிக்குது” என சொல்லிக் கொண்டிருக்க கதவு வேகமாக தட்டப்பட்டது.

“யாரு சொல்லிட்டேன் இருக்கேன்ல” என யுகி கதவை திறக்க, அங்கு நிலா நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் கதவை அடித்து மூடப் போக,  கதவுக்கு இடையே காலை வைத்துவிட்டாள் நிலா.

இதுவரைக்கும் அவளை காயப்படுத்தி பார்த்திராதவனுக்கு புதிதாக மட்டும் அந்த எண்ணம் வந்து விடுமா என்ன? காலை தரையில் உதைத்துவிட்டு உள்ளே செல்ல, கதவை நன்கு திறந்து வைத்துவிட்டு நிலாவும் யுகியின் பின்னால் சென்றாள். அவள் போனதை  அவளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கும் நந்தன் பார்க்காமல் இருந்தால் தான் அதிசயம்.

“யுகி”



“என்னைய பார்த்து திரும்புடா”



அவளே அவனின் தோளைத் தொட்டு திருப்பியவள்,அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“ஏய்”

“என்ன ஏய் பல்லை தட்டிடுவேன் ராஸ்கல்.. என்ன புது பழக்கம் பழகிட்டு இருக்க. எனக்கு கல்யாணம்னா சார் குடிப்பிங்களோ..”

“குடிப்பேன்.நான் என்ன பண்ணா உனக்கு என்ன?”

“குடிப்ப குடிப்ப  செருப்பால அடிப்பேன் நாயே. இன்னொரு தடவை குடிச்சின்னா இந்த நிலாவோட உயிர் அதோட போயிரும். போகணும்னு ஆசைப்பட்டினா குடி, அப்படியே நான் செத்தா கூடவே செத்துட மாதிரி, நாலு நாள் போதையில் இருப்ப அதானே பண்ணுவ, இனி குடிச்சனா நான் சொன்னதை செய்வேன் யுகி நியாபகத்துல வெச்சிக்கோ” ,என்றவள் அவன் பதிலுக்கு எதிர்ப்பார்க்காமல் திரும்ப, அங்கு யார் நிற்பார்கள் என்று சொல்லவா வேண்டும்?.

நந்தன் தான் நின்றிருந்தான்.

“இவனா?”. என்று முதலில் அதிர்ச்சியானவள், பிறகு ‘இவன் ஒருத்தன் பொசுக்கு பொசுக்குன்னு  வந்து நிற்பான்’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டே  அவனை நோக்கிச் செல்ல.நந்தன் எதுவும் பேசாமல் அவளைக் கடந்து சென்று விட்டான்.


Leave a comment


Comments 1

  • D Devi Alaggapan
  • 1 year ago

    Hi sis accidentally I read this novel in Kindle really interesting ... I liked so much... Within 2 days I finished all the 4parts... Did you published the 5th part anywhere Yugi and Kavinila story? I searched in Kindle but nowhere I found...


    Related Post