Total Views: 2176
ஷாலினியை செல்வராணி தயார் செய்துக் கொண்டிருக்க, வளவன் வேண்டாம் என்று சொன்னாலும் அங்கு எதும் நிற்கப் போவதில்லை என புரிந்துப் போக.
வளவா வா போய் பழம் வாங்கிட்டு வருவோம் என வெளியே அழைத்துச் சென்று விட்டான் யுகி.
“நிலாம்மா நீ போன் பண்ணா கண்டிப்பா வந்துடுவான் பண்ணும்மா” என்று நிலாவை வற்புறுத்திக் கொண்டிருந்தார் மணிமேகலை.
“மாட்டேன் அத்தை ப்ளீஸ் கம்பெல் பண்ணாதீங்க.”
“ஏம்மா நீயும் அடம்பிடிக்கிற.?”
“அவர் வரும்போது வரட்டும் அத்தை. கல்யாணத்துக்கு எல்லோரையும் வர சொல்லிட்டு மாப்பிள்ளை வரலைன்னா எங்க குடும்பம் தானே கேவலப்பட்டு நின்னுருக்கும்,அதுக்காக தான் நேத்து போன் பண்ணேன் இல்லனா நேத்தும் பண்ணிருக்க மாட்டேன். உங்கப் பையனுக்கு தெரியும் தானே கல்யாணம் ஆனா ஒருவாரத்துக்கு நிறைய சடங்கு சம்பிரதாயம் இருக்கும்ன்னு,ஏதோ கல்யாணத்துக்கு வந்த சொந்தப் பந்தம் மாதிரி நேத்து நைட் வந்தாரு இன்னிக்கு காலையில தாலியைக் கட்டிட்டு அவர்ப் பாட்டுக்கு போய்ட்டாரு. இதுக்கு தான் கல்யாணம் பண்ணி வைங்கன்னு உயிரை வாங்கனாரா?” என்று அடக்கி வைத்த கோவத்தை அனைத்தையும் கொட்டி விட்டாள் மணிமேகலையிடம்.
“குட்டி காம் டவுன்”
“ப்ளீஸ் அத்தை உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதீங்க பயங்கர எரிச்சலா இருக்கு” என்றவள் நந்தனின் அறைக்குச் சென்று விட்டாள்.
நேற்று நடந்த கூத்தே தான் இன்றும் நடந்தது. மார்த்தி விடாமல் நந்தனின் எண்ணிற்கு அழைக்க, முழு அழைப்பும் போய் கட்டானது.
நந்தனோ அலைபேசியை சைலண்டில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்க
“உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா.. இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு அதாவது நியாபகம் இருக்கா?” என்றான் கூடப் பணிப் புரியும் கந்தன் என்றவன்.
“ப்ச் என சலித்துக் கொண்டு வேலையில் கவனமாக இருந்தான்.
நந்தன் நிலாவின் மீது கொலை வெறியில் இருந்தான்.
மிரட்டி தான் திருமணம் செய்துக் கொண்டான் இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக எதற்கும் அவனை தேட மாட்டாளா?
‘நேத்தும் நைட் வரைக்கும் தேடணும்னு தோணல,இன்னைக்கும் சொல்லாம கிளம்பி வந்துட்டேன் ஏன் என்னன்னு ஒரு போன் பண்ணல. அந்த நாய் குடிச்சா இவளுக்கு என்ன வலிக்குது இனி குடிச்சா செத்துடுவாளா? அந்த அளவுக்கு அவன் வேணும் நான் வேண்டா..’ அனைத்தையும் நினைக்க நினைக்க கோவத்தில் கை முறுக்கேறியது.
அவன் கோவத்தை தணிக்க அவள் ஒற்றை வார்த்தைப் போதும். அதை அவள் செய்ய வேண்டுமே. வாங்க என போன் போட்டு அழைத்தால் போதும் ஓடி வந்துவிடுவான்.
அந்த அளவிற்கு நிலாவின் மனதை இன்னும் நந்தன் பாதிக்கவில்லை என்பது தான் உண்மை.
யுகி நிலாவின் மீது காட்டும் அக்கறை அன்பு இதில் பாதியை நந்தன் காட்டிருந்தாலும் கண்டிப்பாக அவளிடம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இரண்டு வாரம் இரவு நேரத்தைக் கழித்தப் போது நிலாவின் மனதில் மாற்றம் ஏற்படத்தான் செய்தது. அதையும் உஷாவிடம் பேசி கெடுத்துக் கொண்டான்.
இப்போது அவள் எந்த நிலையில் இருக்கிறாள் என அவளுக்கே தெரியவில்லை.
“நந்து”
“ம்ம்”
“வீட்டுக்குப் போடா இருக்கற மீதி வேலையை நான் பார்த்துக்கறேன் சிஸ்டர் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க”
“அவளா இந்நேரம் குறட்டை விட்டு தூங்கிருப்பா” என எண்ணிக் கொண்டு கைக் கடிகாரத்தில் மணியைப் பார்க்க அதுவோ இரவு 9 எனக் காட்டியது.
இங்கிருந்து வீட்டிற்குச் செல்ல எப்படியும் அரைமணி நேரம் ஆகும் அதுவரைக்கும் நிலா தூங்காமல் இருப்பாளா..?என யோசித்தவன் “சரிடா அந்த ரோகன் கஷ்டடடியை நான் வந்துப் பார்த்துக்கறேன், நீங்க விசாரிக்கறேன்னு ஏதாவது குழப்பி விட்டுடாதீங்க.”
“ம்ம்”
“கமிஷ்னர் சார்கிட்ட சொல்லிடு நாளைக்கு ஒருநாள் மட்டும் தான் லீவ்ன்னு”
“அப்போ ஹனிமூன்”
“என்னைய விட நீதான் ஆர்வமா இருப்ப போல”
“லைப்ல இதெல்லாம் ஒருதடவை தாண்டா கிடைக்கும். அதுக்கு அப்பறம் போனா அது டூர். ஒழுங்கா இப்பவே எல்லாத்தையும் என்ஜோய் பண்ணிட்டு வா”
“ம்ம் இவன் கேஸ் முடியட்டும் சேர்த்து வெச்சி கொண்டாடிக்கறேன்.”
“மச்சி”
“ம்ம் சொல்லு”.
“நேத்து உஷாவை மண்டபத்துல பார்த்தேன்”
“ஆமா அதுக்கு என்ன?”
“நான் பார்த்த மாதிரி சிஸ்டரும் பார்த்தாங்க”
“பார்த்துட்டு போகட்டும் அவ விஷயம் வியாக்கு முன்னாடியே தெரியும்”.
“இருந்தாலும் இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல அதான்”.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ என்னைய பத்தி கவலைப்படறதை விட்டுட்டு வேலையைப் பாரு” என்றவன் ஜீப்பில் தாவி ஏறி வண்டியை உயிர்பித்தான்.
நந்தன் மனம் முழுவதும் அவனது மாணாளினி தான். போனா ஒரு கிஸ்க்கு வழி இருக்குமா?.
‘ஆமா அப்படியே என்னய்யக் கண்டதும் ஓடி வந்து முகம் முழுக்க முத்தாடிட்டு தான் வதுலு வேலைப் பார்க்கப் போறா..’ என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன்..யுகியை ஊரில் இருந்து எப்படி கிளம்புவது என யோசனையுடன் காரை செலுத்தினான்.
கார் வீட்டின் வாசலில் வந்து நிற்க. வீட்டு ஆட்கள் அனைவரும் வாசலில் போடப்பட்ட பந்தலுக்கு அருகே அமர்ந்திருந்தனர். அதில் அவன் தர்ம பத்தினி மட்டும் மிஸ்ஸிங் என இறங்கும் போதேக் கண்டுக் கொண்டான் நந்தன்.
நந்தனின் வண்டியைப் பார்த்ததும் எழுந்து நின்ற மார்த்தி. அவன் இறங்கியதும் வேகமாக அவனிடம் சென்றவர்.
“நீ பண்ற எதுமே சரியில்ல நந்து. நேத்தும் இப்படி தான் பண்ணுன.. இன்னைக்கும் இப்படி தான் பண்ற..?”
“வேலை இருந்துச்சிப்பா”
“அதை ஒரு போன் எடுத்து சொன்னா என்ன?,அத்தனை தடவை கூப்பிடறேன்ல கேக்கறவீங்களுக்கு பதில் சொல்ல முடியலடா.ஏன் எங்களை இந்த பாடுபடுத்துற.?”
“கேக்க வேண்டியவீங்க கேக்கலையே”.என்றவனின் கண் மனைவியைத் தேடியது அதைப் புரிந்துக் கொண்ட மணி.
“நிலா ரூம்ல இருக்கா ரொம்பக் கோவமா இருக்கா” என்றார்.
அவரின் முதல் பாதியைக் கேட்டதுமே அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டான்.
வேகமாக அறைக்குப் போய் கதவை தட்ட, அது தாழிடாமல் இருக்கவும் திறந்துக் கொண்டது.
உடைகளை கூட மாற்றாமல் படுக்கையில் குறுக்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி..
அவன் எதிர்பார்த்தது தானே. நேற்று முழுவதும் உறங்காமல் நடமாடியதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தெரியாதா?
“இந்த புடவையோட யார் இவளைத் தூங்கச் சொன்னா.. டிரஸ் மாத்திட்டு படுக்கிறதுக்கு அவ்வளவு கஷ்டமா?” என்றவாறே அவளை நேராகப் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்று விட்டான்.
பலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இன்னும் அப்படியே இருக்கும் போதும் அவளுடன் கூடி உறவாட அவனுக்கும் விரும்பமில்லை.
குளித்துவிட்டு வந்தவன். இடையில் துண்டோடு இரவு உடையைத் தேட.. நிலா காலை தூக்கி நடு படுக்கையில் போட்டாள்.
அப்போது அவள் அணிந்திருந்த கொலுசு சத்தம் எழுப்பி அவளது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க, நந்தனுக்கு அந்த உணர்வு மிகவும் பிடித்தது.தனது அறையில் தன்னவள் என்னும் போதே உடல் சிலிர்த்து அடங்கியது.
அவள் வேண்டும் என உடலில் ஒவ்வொரு அணுவும் பேயாட்டம் போட.. இவ்வளவு நாள் அடக்க தெரிந்த உணர்வை இன்று அடக்க முடியாமல் தடுமாறிப் போனான்.
‘என்ன பண்றது ஒரு முத்தத்துக்காகவாது வழி இருக்கிறதா?’ என அவளை சுற்றிச் சுற்றிப் பார்த்தவன். ‘அதற்கு வாய்ப்பே இல்ல முருகேசா’ என்பது போல் அவள் உறங்கிக் கொண்டிருக்க, இரவு உடையை அணிந்துக் கொண்டு வெளியேச் சென்று விட்டான்.
“ராசா சாப்பிட வாப்பா”
“வேண்டா ஆயா பசிக்கல” என்றவன் டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு
“அப்பா” என்றான்.
“சொல்லு நந்து”
“ஷாலினிக்கு சடங்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா?”
“இங்க எதுவும் இல்லைனதும் அங்கேயும் மாப்பிள்ளையும் ஷாலினியும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க”
“எங்களுக்காக அவங்க எதுக்கு வேண்டாம்ன்னு சொல்லணும”
“நிலாவுக்கு கஷ்டமா இருக்கும்ல, இதெல்லாம் நீ யோசிச்சிருக்கணும் நந்து, கல்யாணத்துக்கு நேரத்துக்கு நீ வராம பலப் பிரச்சனை நடந்துச்சி. அதையும் தாண்டி இன்னைக்கு நைட் யாரைப் பத்தியும் கவலைப்படாம நீ பாட்டுக்குப் போய்ட்ட. இதனால மூனுப் பேரு வாழ்க்கை கேள்விக் குறியா நிற்குது. உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்கு நிலா பொறுத்துப் போலாம், மாப்பிள்ளையும் ஷாலினியும் எதுக்கு பொறுத்துப் போகணும்? அவங்களுக்குன்னு ஆசை கனவு இருக்காதா இல்ல இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறியா?” என வேகமாக கேக்க.. நெற்றி சுருங்க அவரைப் பார்த்தான் நந்தன்.
“சொல்லு நந்து”.
“டேய் அவனை எதுக்கு கேள்வி கேட்டு குடையுற. இன்னைக்கு நடக்கலைனா நடக்காமலையே போய்டுமா?”என கிருஷ்ணம்மாள் நந்தனுக்கு சாதகமாகப் பேச.
“நீ ஒன்னு போதும்மா அவனை கெடுக்க. எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டு நீயும் அவனும் மட்டும் சந்தோசமா இருங்க” என்றவர் “இன்னும் எதுக்குடா இங்க உக்கார்ந்து இருக்க எழுந்து போய் படுக்க வேண்டியது தானே” என கத்திவிட்டு சென்றார்.
என்ன கத்தினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் தான் நந்தனிடம் சொல்வது .
நந்தன் ஒரு தோள் குலுக்களுடன் அவர் பேசியதைக் கடந்து விட்டான்.
மேலே அறைக்குப் போனால் நிலாவினால் உண்டாகும் உணர்வுகளுடன் போராட முடியாது என அறையை தவிர்த்து விட்டு மாடிக்குச் சென்றவன், இரவு முழுவதும் அந்த வான்நிலவைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
அந்த நிலாவினால் கூடஅவன் மனதை குளிர்விக்க முடியவில்லை. வானத்தில் வீற்றிருக்கும் நிலவு எப்படி உலகிற்கே சொந்தமோ அதேபோல் தான் அவனின் நிலாவிற்கும் பல சொந்தம் உண்டு.
எந்த சொந்தமும் இருக்கக்கூடாது,தான் மட்டுமே எல்லா சொந்தமுமாக இருக்க வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?