Total Views: 1897
இவ்வளவு வருடங்கள் அவளை தாங்கியவர்கள், இப்போது இவன் கணவன் ஆனா ஒரேக் காரணத்திற்காக அனைவரையும் தூக்கிப் போட முடியுமா.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பலப் பெண்களில் நிலை அப்படி தான் இருக்கிறது. திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால் கணவனுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களிடம் மட்டும் தான் பேசவேண்டும். பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தாய் தந்தை சகோதரனாக இருந்தால் கூடப் பேசக்கூடாது. மீறிப் பேசினால் ‘உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு, கூட வாழணும்னு நெனப்பு இருந்தா பேசக்கூடாது அவ்வளவு தான்.’
தாய்வீட்டிற்குச் சென்று வாழாவெட்டி என்றப் பெயர் வாங்கி தாய் தந்தையை வேதனைப் படுத்துவதற்கு, தூரம் இருந்து அவர்களின் நலனையாவது பார்த்துக் கொள்ளலாமே என எத்தனைப் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டு உறவுகளை முறித்துக் கொண்டு நடைப் பிணமாக வாழ்கிறார்கள்.இதையே பெண் சொன்னால், ‘அப்படி தான்டி பேசுவேன் இஷ்டம் இருந்தா கூட வாழு இல்லையா கிளம்பிட்டே இரு’ என ஆண் என்பவன் அகந்தைக் கொண்டு அங்கும் பெண்களைத் துரத்த தான் செய்வார்கள்.
இதெல்லாம் இந்த காலத்திலும் நடக்கிறதா என்றால் கண்டிப்பா நடக்கிறது. என்ன?, முந்தைய காலங்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் நடந்தது என்றால் தற்போதைய காலங்களில் ஒரு முப்பது சதவிகிதம் குறைந்திருக்கிறதே தவிர முற்றிலும் மாறவில்லை. அறிவுரை சொல்லி யாரையும் மாற்ற முடியாது. அவர்கள் அவர்களாக திருந்தினால் தான் உண்டு.
என்ன மனக் குறை இருந்தாலும் அந்த நிலாவிற்கு பதில் இந்த நிலாவைப் பார்த்தால் நந்தனின் மனம் லேசாகிவிடுக் இன்று அதுவினால் கூடாது அவன் குறையை தீர்க்க முடியவில்லை.
அப்படி என்ன குறை. இந்த அளவிற்கு மனம் வெதும்பி கிடக்க என்று கேட்டால் அவன் நிலா யுகியை விட தன்னைத் தான் முக்கியம் என எண்ணம் வேண்டும் அவளை சுற்றி ஆயிரம் உறவு இருந்தாலும் அவள் மனமும் அவள் கண்களும் அவனை மட்டுமே தேட வேண்டும். இதில் ஒன்றுக் கூட நடக்கவில்லையே என்றக் கவலை. அவ்வளவு எளிதில் அது நடக்க வாய்ப்பில்லை என அவனுக்கு தெரியவில்லை.
விடியற்காலையை நெருங்கும் வேளையில் தனது அறைக்குச் சென்றான்.
நிலா சேலை விலகி இருப்பதுக் கூட அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உணர்வின் பேயாட்டத்தை இப்போது தான் அடக்கிவிட்டு வந்தான், மீண்டும் மீண்டும் அவனது உணர்வுகளை தூண்டிவிட்டால் அவனும் தான் என்ன செய்வான்?. அவளது உடையை சரி செய்துவிட்டு போர்வையை கழுத்து வரைக்கும் போர்த்தி விட்டவன், ஒரு பக்கம் சாய்ந்தவாறு படுத்து தலை வரைக்கும் போர்வையை இழுத்து மூடிக் கொண்டான்.
மனம் தறிக் கெட்டு ஓடியது. அடச்சை இந்த அளவுக்கு வெறி புடிச்சி திறிஞ்சியா செல்ப் கண்ட்ரோல் கூட இல்லாதவன் மனுஷனே இல்லை. ஒழுங்கா தூங்கு.என மனசாட்சி அதட்ட.
“29வருஷம் பிரம்மசாரியா இவளுக்காக வெயிட் பண்ணேன். இப்போ இவ பக்கத்துல இருந்தும் அப்படியே இருக்கனும்னா எப்படி முடியும், இதுக்கு கல்யாணம் பண்ணாம தூர இருந்தே பார்த்துருக்க வேண்டியது தானே”. அவனுக்கு அவனே காரித் துப்பிக் கொண்டான்.
அப்படி இப்படி என ஆறு மணிக்கு தான் தூங்க ஆரம்பித்தான் நந்தன்.
விடிந்து வெகுநேரம் ஆகியும் இருவரும் எழாமல் இருக்க கிருஷ்ணம்மாள் இங்கு சுப்ரபாதத்தை ஆரம்பித்துவிட்டார்.
“என்ன பொட்டப் புள்ள இவ.. காலையில நேரங்காலமா எந்திரிக்கச் சொல்லி, அவ அம்மா சொல்லித் தரலையா?, வூடு முழுக்க சொந்தமா இருக்குது கேக்கறவீங்களுக்கு என்ன பதில் சொல்றது? போய் உன்ற மருமகளை எழுப்பி கூட்டிட்டு வா” என மணிமேகலையை தாளித்துக் கொண்டிருந்தார்.
அதே சமயம் ஷாலினி குளித்துவிட்டு தலையில் கட்டிய துண்டோடு அங்கு வர
“ஷாலு எதுக்கு இப்போ இங்க வந்த?” என மாமியாரை அதட்ட முடியாமல் மகளை அதட்டினார்.
!நேத்து நைட் அண்ணா வந்ததை சொன்னிங்களே அதுக்கு அப்புறம் என்னாச்சின்னு சொன்னிங்களா?அதான் தெரிஞ்சிட்டுப் போக வந்தேன்”.
“மறுவீட்டுக்கு அழைக்க வராம வரக்கூடாது.. போ”
“என்னோட பேத்தி எப்படி குளிச்சி மங்களகரமா வந்து நிற்கரா, இவளைப் பார்த்து உன்ற மருமவளுக்குச் சொல்லிக்குடு. சீமையிலையே பொண்ணு சிக்கலைன்னு இந்த கும்பகரணியை கட்டிட்டு வந்துருக்கான் உன்ற மவன். நம்ப வீட்டு மதிப்பு மரியாதையை காப்பாத்துவாளான்னே தெரியல இப்படி போன சந்தி சிரிக்க வேண்டியது தான்”
“என்னாச்சிம்மா”
“உன்னைய யாருடி இங்க வரச் சொன்னா ஏற்கனவே எரியற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி வந்து நிற்குற. போடி.”
“இப்போவே வீட்டுக்கு வந்த பிள்ளையை துரத்துரையிலம்மா பேசிக்கறேன், போ” என முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு புகுந்த வீட்டிற்கு கிளம்ப.. நம்ப ஆளு இப்போது தான் தூக்கத்தில் இருந்து நெளிந்தது.
,“என்னது இது , ஏதோ மேலப் படுத்திருக்க மாதிரி இருக்கு” என பார்க்க அவளுக்கு அடியில் நந்தன் இருந்தான்.
“ஆஆஆஆஆஆஆ”:. எனக் கத்திக் கொண்டே எழுந்து ஓடிச் சென்று சுவற்றில் அருகில் போய் நின்றுக்கொண்டாள்.
“ஏண்டி கத்துற?”
“நீங்க எப்போ ரூமுக்குள்ள வந்தீங்க?”
“நான் வந்ததுக் கூட தெரியாம அப்படி என்னடி தூக்கம்?” என்றவன் எழுந்து அமர்ந்து சோம்பல் முறிக்க.
நேற்று அவன் மீது இருந்த கோவம் இன்று அவன் முகம் பார்த்ததும் காணாமல் போனதுப் போல் இருந்தது உடனே திரும்பி நின்றுக் கொண்டாள்.
“என்னடி வெக்கமா..நேத்து நான் வரதுக்குள்ள எதுக்குடி தூங்குன?”.
“நீங்க வரேன்னு சொல்லவே இல்லையே”. திரும்பாமலே பதில் சொல்ல அதற்குள் அவளது போன் கதறியது.
“யாரு?”
“அத்தை தான்”
“ம்ம்”
அழைப்பை ஏற்று காதில் வைக்க
“நிலாம்மா.”
“அத்தை சொல்லுங்க”
“மதியம் கூட தூங்கிக்கலாம்மா இப்போ கீழே இறங்கி வா, உன் ஆயாவுக்கு பதில் சொல்ல முடியல.”
“இப்போதான் அத்தை எழுந்தேன் குளிச்சிட்டு வரவா”
“குளிக்காம வந்துடாத தாயே”
“அப்போ என்னோட டிரஸ்” என்று நிலா சொல்லிக்கொண்டிருக்க அவளை இழுத்து படுக்கையில் போட்டு அவள் மடியில் தலை வைத்துக் கொண்டவன் “பேசு” என வாய் அசைக்க
“இப்படி படுத்திருந்தா எப்படிடா பேச?” என நெளிந்தாள்.
“ட்ரெஸ்லா நேத்தே ரூமில வெச்சிருக்குப் பாரு, சுடிதார் போடாம சேலைக் கட்டிட்டு வா” என்றார் நிலாவின் நிலைப் புரியாம அவள் நெளிவை புன்னகையுடன் பார்த்தவன், சேலையின் மறைப்பில் தெரிந்த இடையை நறுக்கென்று கிள்ளிவைத்தான்.
“ஆஆஆஆஆஆஆ”
“என்னாச்சி நிலா..?”
“ஆ ..அது...சேலையான்னு கேட்டேன் அத்தை” என்று சமாளித்தாள்.
“என்னம்மா சேலைக்கே இந்த ஷாக் குடுக்கற.?”
கிள்ளிய அவன் கையை இறுக பிடித்துக் கொண்டவள், “ப்ளீஸ் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க விஜய்” என ஹஸ்கி குரலில் சொல்ல அது அந்தப் பக்கம் இருந்த மணிக்கு தெளிவாக கேட்டது.
‘என்னடா இது நேத்து ராத்திரி நம்பகிட்ட அந்த கத்து கத்திட்டுப் போனா? இப்போ என்னடானா ரெண்டும் கொஞ்சுது ஏதாவது நடந்துருக்குமா.. நடந்தா சந்தோசம் தான் “ என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.
“அத்தை எனக்கு சேலைக் கட்ட தெரியாது.. நேத்தே நீங்க தானே கட்டிவிட்டிங்க” . என எப்படியோ திக்காமல் பேசிவிட்டாள்.
நந்தன் அவள் விஜய் என்றதுமே ஆப் ஆனவன் தான் அதன்பிறகு எந்த சேட்டையும் செய்யவில்லை.
“இப்போ என்ன நிலாம்மா பண்றது?”
“அத்தை நான் ஒன்னு சொல்லட்டுமா?”
“ம்ம்”
“நான் குளிச்சிட்டு பக்கத்து ரூமுக்கு வந்துடறேன் நீங்களும் அங்க வந்து கட்டி விடுங்க..”
“இன்னைக்கு கட்டிக்கலாம் நாளைக்கு கெடா விருந்து இருக்கு கோவில்க்கு பொங்கல் வைக்கப் போகணும் அப்போல்லாம் என்னப் பண்ணுவ?”
“அப்பவும் நீங்களே கட்டிவிடுங்க அத்தை ஏன் கட்ட மாட்டிங்களா?” என செல்லமாக சிணுங்க..
“பண்றேன் நீ சீக்கிரம் குளிச்சிட்டு ஓடி வா மறக்காம தலைக்கு குளிச்சிட்டு வா.”
“ம்ம்” என அழைப்பைத் துண்டித்தவள், “போன் பேசும் போது இப்படி தான் பண்ணுவீங்களா?” என்றாள் அதட்டலாக.
“இதுக்கு மேலையும் பண்ணுவேன்” என்றவன் அவளது கையை இரண்டையும் விரித்துப் பிடித்து .வெளியே தெரிந்த இடையில் தன் மீசைக் கொண்டு குறுகுறுப்பு ஏற்படுத்தினான்.
“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ மீ... மீ..சை குத் குத்துதுங்க..”
இடையில் நச்சென்று முத்தம் கொடுக்க
வெறும் சீண்டலுடன் விட்டு விடுவான் என நினைத்திருந்தவளுக்கு அவனின் ஒவ்வொரு செயலும் உள்ளுக்குள் உணர்வின் பேரலை பிரவாகமாக உடைப்பெடுக்க,நடுங்கிய குரலுடன்
“அத் அத்தை கீழே வரச் சொன்னாங்க” என்றாள்.
“போலாம்”
“ஏற்கனவே நேரமாகிடுச்சு.ஆயா சத்தம் போடறாங்களா” என மெலிதான குரலில் சொன்னாள் அந்த சத்தம் அவளுக்கு மட்டும் தான் கேட்டிருக்கும்.
இடையை நறுக்கென்று கடித்து வைத்தான்.
“ஆஆஆஆ வலிக்குது” என வலியில் கத்திவிட்டாள்.
“போய் குளி இதுக்குமேல இருந்தா உதட்டையும் கடிச்சி வெச்சிடுவேன்”
“ம்ம்” என துண்டை எடுத்துக்கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
நிலா ஓடுவதைப் பார்க்கும் போது நந்தனுக்கு மந்தகாசப் புன்னகை உண்டானது. நேற்று இரவு இருந்த மன வேதனை இப்போது இல்லாமல் போனது போல் மனம் லேசான உணர்வு.
அவளிடம் மட்டும் தோன்றும் உணர்வு, அவளிடம் மட்டும் அடங்கும் கோவம், அவளிடம் மட்டும் சாந்தமாகும் மனம், என நந்தனின் ஒவ்வொரு தேவைக்கும் நிலா தேவைப்பட்டாள். நந்தன் இல்லாமல் நிலா வாழ்க்கையை எளிதில் ஓட்டிவிட முடியும், ஆனால் நிலா இல்லாம நந்தனிடம் அணுவும் ஆசையாது. அதை உணரவே பல வருடம் தேவைப்பட்டது நந்தனுக்கு.
குளித்துக் கொண்டிருந்த நிலாவிற்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.
ஹாய் பிரண்ட்ஸ்.. ஸ்டோரி எப்படிப் போகுது . என்னோட கதையில ரொமான்ஸ் தூக்கலா இருக்கா என்ன வெளியே எல்லோரும் 18+ கதை எழுதரேன்னு சொல்லிட்டு சுத்தராங்க, 18+ க்கு அர்த்தம் தெரியுமான்னு சிரிப்பு தான் வருது. நீங்களே கேட்டாலும் என்கிட்ட இவ்வளவு தான் ரொமான்ஸ் வரும். இதைப் போய் 18+ன்னு சொல்லிட்டிங்கன்னு அழுகறதா சிரிக்கிறதான்னு தெரியல.
அப்புறம் நந்தன் கதை மொத்தம் 5 பார்ட். கதை நீளமா தான் போகும்ன்னு இப்போவே சொல்லிக்கறேன் அப்புறம் எதுக்கும்மா இப்படி இழுக்கறீங்கன்னு கேட்டுடாதீங்க.
யாரோ எப்படியோ பேசிட்டுப் போட்டு போகட்டும் நிலை இல்லாத இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லைன்னு நம்ப நம்ப வேலையைப் பார்த்துட்டுப் போவோம் எவ்வளவு நாள் பேசுவீங்கன்னு பார்க்கலாம்.
நீங்களும் என்னோட வழியை பின்பற்றுங்க பிரண்ட்ஸ் .. நிம்மதியா இருக்கலாம்.
நன்றி நாளை சந்திக்கலாம்.
Apdilam illa sis nijamavey story romba nalla irukku then 18+ maathurilam ila then enaku therinchi sanageeth nnu oru writer avanga story lam 18+ open ah irukum so neega apdilam ninakatheega thondratha eluthunga