Total Views: 1485
பூண்டு பொடி, பருப்பு பொடி, தக்காளி தொக்கு வடகம், சாப்பிட முந்திரி, பாதம், பேரிச்சை என அனைத்தும் இருந்தது.
பொடிகள் அனைத்தும் ராஜி மகளுக்காக செய்தது. வீடு விட்டு வீடு மாறுகிறாள் என்பதால் அவளுக்கு பிடித்ததை இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திருந்தார்
“பூனை.... “ என்று சொல்லிக் கொண்டான். இந்த அன்பு கடைசி வரைக்கும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என வேதனையாக இருந்தது, மனம் ரணமாகிப் போக கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டான்.
யுகி ஊருக்கு கிளம்பியதே சொந்தகங்களுக்கு இடையே பெரும் பேச்சாக இருந்தது.
“என்ன மணி?பையன் அதுக்குள்ள கிளம்பியிட்டான், இனி உங்கத் தொழிலை அவன் தான் பார்த்துக்குவான்னு சொன்னிங்க.”
“அது கம்பெனியில இருந்து கூப்பிட்டே இருந்தாங்க சித்தி, அதான் கிளம்பிட்டான். கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் அவனுக்கு கல்யாணம் ஆனா இங்கையே இருந்துடப் போறான்” என்று பேச்சை கத்தரித்துவிட்டார்.
அறைக்குப் போன நிலா தேம்பி தேம்பி அழ..நந்தன் அவளைக் கொலை வெறியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அழுதுக்கொண்டே அவனைப் பார்த்தவளின் அழுகை சிறிதுசிறிதாக மட்டுப் பட்டு இப்போது பயம் சூழ்ந்துக் கொண்டது.
யுகியிடம் பேசும்போது நந்தன் இருக்கிறான் என மனம் உரைத்தாலும் , யுகிடம் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் பேசிவிட்டாள். அவன் போனதும் தான் பயம் வந்தது.
“அது..” அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தாள்.உடல் நடுக்கத்தில் தூக்கிப் போட்டது.
“எந்திரிடி”
அடுத்த நொடி எழுந்து நின்று விட்டாள்.
“அவன்கூட பேசக்கூடாதுன்னு சொன்னதா நியாபகம்”
“அது “ அவள் வார்த்தைகள் வரிகளாக வர மாட்டேன் என அடம்பிடிக்க.
“நான் சொன்னதை மீறி தான் பண்ணிட்டு இருக்க. அவனைக் கொன்னுட்டா அடங்கி இருப்ப..”
“ஐயோஓஓ.. அப்படிலாம் எதும் பண்ணிடாதீங்க.”
“ஓ அவ்வளவு பாசம். ம்ம் அவன் மேல இருக்க பாசத்துல துளிக் கூடக் கட்டுன புருஷன் மேல இல்லையே..”
“அப்படிலாம் இல்லைங்க உங்க மேலையும் பாசம் இருக்குங்க, அவனை எதும் செஞ்சிடாதீங்க” என மீண்டும் அழ..
“ச்சீ வாயை மூடு.. எனக்கும் ஒரு அளவுக்கு தான் பொறுமை இருக்கும் இப்படியே நீ பண்ணிட்டு இருந்த யாரைப் பத்தியும் யோசிக்க மாட்டேன் போட்டுட்டு போயிட்டே இருப்பேன். எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம். இத்தனை வருஷம் அவன் பின்னாடி தானே சுத்துன இனி இருக்க வருசம் முழுக்க என் பின்னாடி சுத்து.. அதை மாத்தி செஞ்ச.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.”
“இனி பேச மாட்டேங்க.”
“இதையே தான் இரண்டு வாரமா சொல்ற.நானும் அவனை கொன்னுடுவேன்னு ரெண்டு வாரமா சொல்லிட்டு இருக்கேன், நீயும் சொன்னதை செய்யற மாதிரி தெரியல நானும் செய்ய மாதிரி தெரியல. இப்படியே போனா நீ செய்யலைனாலும் நான் செஞ்சிடுவேன் பார்த்துக்கோ”
“இல்லை இனி சரியா இருப்பேன்”
“இருக்கனும் இல்லனா”
“இருப்பேன் இருப்பேன்”.என அவசரமாக சொன்னாள்.
அவளை இழுத்து தன் அருகில் கொண்டு வந்தவன்.. அவள் எதிர்பாரா நேரம் பார்த்து இதழை வன்மையாக கவ்வினான்.
கோவம், தாபம், வெறி அனைத்தும் முத்தத்தில் காட்ட.. அவனின் வேகம் தாங்காமல் நிலா சோர்ந்து போய் அவன் மீதே சாய்ந்துவிட்டாள்.
“நான் சொன்னதை செய்யலையினா அவனுக்கு ஒரு தண்டனைக் கொடுத்தா, உனக்கு இது மாதிரி தண்டனைக் கொடுப்பேன்” என அவளது கன்னத்தை வலிக்க கிள்ளினான்.
“ஸ்ஆஆஆஆ.. வலிக்குது”
“எனக்கும் தாண்டி வலிக்குது, அவனுக்காக தான் என்னைய கல்யாணம் பண்ணியா?” என அவளது கழுத்தைப் பிடித்தான் அவன் குரலில் அவ்வளவு வலி. இப்படி தான் சொல்லுவாள் என தெரிந்து தானே அதை விரும்பி ஏற்றான் இன்று வலிக்கிறது என்றால் யார் என்ன செய்ய முடியும்.
அதுதானே உண்மை என்பது போல் நிலா அவனைப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் நெக்குறுகிப் போனவன்.. “ நான் உன்ன எந்த விதத்திலும் பாதிக்கவேயில்லையாடி” என மனம் தழும்ப கேட்டான்.
அவன் குரல் வேதனையுடன் வந்ததை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பாதித்திருக்கிறான் தான், அவன் இல்லாமல் நான்கு நாள் இரவை கடத்த மிகவும் கஷ்டப்பட்டாள். ஆனாலும் அவன் பக்கம் இருந்து இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
இவன் எதற்காக தன்னை மிரட்டி திருமணம் செய்துக் கொண்டான்?,அந்த உஷாவிற்கும் இவனுக்குமானா உறவு என்ன...?இந்த திருமணப்பந்தம் தொடருமா? இல்லை பாதியில்லையே சிதைந்து விடுமா? என்று எதுவும் தெரியாமல் அவள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை சொல்ல விரும்பவில்லை நிலா..
அவளின் அமைதி நந்தனை வெறியாக்கியது.
நந்தனுக்கு தெரியவில்லை புலி வருகிறது வருகிறது என பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் புலி வந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அதேபோல தான் கொன்றுவிடுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறான் நாளை யுகிக்கு ஏதாவது ஆனாலும் அது நந்தனால் ஆனது என்று தான் நிலா நினைப்பாள்.
அவளைப் பொறுத்தவரையிலும் யுகி அவளுடைய குழந்தை, சிறந்த தோழன். நந்தன் கணவன், விரைவில் காதலனாகக் கூட அவள் மனதில் இடம் பிடிக்கலாம்.
ஆனா யுகியா?நந்தனா? என்று வந்தால், கண்டிப்பாக யுகி பின் சென்று நின்று நந்தனுக்கு பலத்த அடியைக் கொடுத்துவிடுவாள் என நந்தன் அறியவில்லை.
அவளின் அமைதியைக் கண்டு தன்னுள் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்துக் கொண்டவன், “மாறுவடி அப்போ நான் இல்லாமக் கூடப் போயிருப்பேன் “ என்று அங்கிருந்து சென்று விட்டான்.
வளவன் ரயில் நிலையத்தில் இருந்து வர, அறையில் இருந்தவள் ஓடிச் சென்று அவனது கையைப் பிடித்தாள்.
“அண்ணா யுகி பத்திரமா ட்ரெயின் ஏறிட்டானா?, எப்போ வரேன்னு சொன்னான்?, ஏதாவது பேசுனானா?எனக்கு போன் பண்ணுவான்தானே?” என விடாமல் கேக்க.
“இவ்வளவு அக்கறை இருக்கிறவ அவன் மனசு கஷ்டப்படற மாதிரி நடந்துருக்கவே மாட்ட.. கொஞ்ச நாளைக்கு எங்களைய நிம்மதியா விட்டுரு, அப்பதான் உயிரோடவாது இருப்போம்” என்க.
“அண்ணா.” என்று கலங்கி நின்றாள்.
“ப்ளீஸ்” என்றவன் உள்ளுக்குள் சென்று விட
நிலாவிற்கு தான் பைத்தியம் பிடித்ததுப் போல் இருந்தது
உள்ளே வந்த வளவனுக்கு மணி மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
“சாப்பிடலாம் மாப்பிள்ளை”
“ஷாலுவையும் கூப்பிடறேன் நாங்க மறுவீடு அழைக்க தான் வந்தோம். அதுக்குள்ள என்ன என்னவோ ஆகிடுச்சு” என்றவன் ஷாலினிக்கு அழைத்தான்
“சொல்லுங்க..”
“உங்க வீட்டுக்கு வா”
“ம்ம் வரேன்”
“வரும் போது அந்த தேங்காய் பழத்தை எடுத்துட்டு வா.”
“சரிங்க” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வளவன் சொன்னதை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அதற்குள் வளவனிற்கு சாப்பிட பலகாரங்களைக் கொடுத்தாள் நிலா. அவள் கண்களில் ஜீவனில்லை. எதையோ இழந்த கவலை,அவளை வாட்டுவது போல் இருந்தது வளவனிற்கு.
வீட்டு தோட்டத்தில் இருந்த நந்தன் தன்னை சமன் செய்துகொண்டு உள்ளே வர..ஷாலினி தட்டோடு வர சரியாக இருந்தது.
“ஷாலு குடு.”
“ம்ம், அண்ணா” என நந்தனை நிறுத்தியவள் “நாளைக்கு மறுவீட்டுக்கு அழைக்க வந்துருக்கோம்”.
“நாளைக்கு ஒர்க் இருக்கு வர முடியாது”
“இப்படி சொன்னா எப்படிண்ணா?”
“வேற எப்படி சொல்லணும்?”. என்றவன் நிலாவின் முகம் பார்க்க,அதில் காலையில் இருந்த பொலிவு இல்லை, வாடி வந்தங்கிய காய்கறிப் போல் வதங்கி நின்றாள்.
‘எதா இருந்தாலும் இனி இவளா வந்து கேக்காம, எதும் பண்ண மாட்டேன். என்கிட்ட கேக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா, பார்க்கறேன் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பன்னு’ என எண்ணிக் கொண்டே.
“கேஸ் விஷயமா வெளியே போகணும்”
“அது அங்க இருந்துக் கூடப் போலாம்னு சொல்லு ஷாலு.
“அண்ணா இதுலாம் சம்பிராதயம், பண்ணி தான் ஆகணும், இப்படி வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? இதுக்கு நீ கல்யாணமே பண்ணிருக்கக் கூடாது” வளவன் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் அண்ணனை எதிர்த்துப் பேசிவிட்டாள்.
“கல்யாணம் நீங்களா பண்ணி வைக்கலையே நானா தான் பண்ணிக்கிட்டேன்”. என்றவன் நிலாவைப் பார்த்தான் அவனுக்கு அவள் கேக்க வேண்டும்.
“ அம்மா வீட்டுக்கு போலாங்க” என ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் போதும் முதல் ஆளாக கிளம்பிவிடுவான்.
“வெட்டியா பேச நேரமில்ல, வரப் பார்க்கறேன் விடு” என்று அறைக்குச் செல்லப் போக, ஐயர் வீட்டிற்குள் வந்தார்.
“வாங்க சாமி”
“நேத்து குறிச்சிக் குடுத்த நேரம் தள்ளிப் போயிடுச்சின்னு வர சொல்லிருந்திங்களா பையன் சொன்னான்.”
“ஆமா சாமி இன்னைக்காவது சடங்கை வெச்சிடலாம்ன்னு தான் உங்களை வர சொன்னோம்”. என மார்த்தி சொல்லிக்கொண்டே, உள்ள வந்தார்.அவருக்கு பின்னால் கிருஷ்ணம்மாள் செல்வராணியும் வந்தனர்.
மேலே அறைக்குப் போகப் போனவன் மார்த்தியின் குரலில் கீழே இறங்கி வர.
நிலாவின் இதயம் தாளம் தப்பி துடித்தது.நேற்று இரவு எதுவும் நடக்காது என்ற தைரியத்தில் தான் நிம்மதியாக உறங்கினாள். இன்று அந்த நிம்மதியும் பறந்து விடுமோ என பயம் உண்டாக.
“ஏன் அவனைப் பிடிக்கலையா?” என மனசாட்சி கேள்வி கேட்டது.
“பிடிக்காம இல்லை, பிடிக்குது தான், பலக் குழப்பம் இன்னும் தீராம இருக்கு, கடைசி வரைக்கும் ஒன்னா இருப்போமான்னு தெரியாம எப்படி என்னையக் குடுக்க முடியும்.என்றக் கேள்வி தான் அவளுள் திரும்ப திரும்பத் தோன்றியது.
“அப்போ முத்தம் மட்டும் குடுத்துக்கலாமா?” என நக்கலாக மனசாட்சிக் கேள்வி கேக்க.
“அது நானா குடுக்கலையே, அவர் தான்” என்றவளுக்கே காரணம் கேவலமாக இருக்க, “முத்தம் குடுத்ததுக்காக முழுசாக் கொடுக்க முடியாது” என முடித்துவிட்டாள்.
“இன்னைக்கு நல்லா நாள் தானே .சடங்கை வைக்கலாம் தானுங்களே சாமி”.
“நல்ல நாள் தான் நைட் 8 மணிக்கு மேல நல்ல நேரமிருக்கு குறிச்சிக் குடுத்துட்டுப் போறேன்”
“சரிங்க சாமி” என்றவர் நிலாவைப் பார்க்க, அவள் ஓடிச் சென்று குடிக்க மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
கொடுக்கும் போது ஐயரிடம் அவருக்கு மட்டும் கேக்கும் குரலில்.
“சாமி அவங்களுக்கு மட்டும் சடங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க,எங்களுக்கு வேண்டா.. உங்களுக்கு மாமா குடுக்கறதை விட மூனு மடங்கு பணம் தரேன்” என மெதுவாக சொல்லிப் பார்க்க..
நிலா சொன்ன விதத்தில் ஐயர் சத்தமாக சிரித்துவிட்டார்.
“என்ன சாமி..?” என மார்த்தாண்டம் கேக்க மற்றவர்கள் கேக்கவில்லை என்றாலும் என்ன என்பது போல் பார்த்தனர்.
“அது ஒன்னுமில்ல புள்ளையாண்டாள் ஜோக் சொன்னா அதான் சிரிச்சிப்புட்டேன் “ என்றவர்.
“பணத்தை விட நமக்கு சின்ன புள்ளைங்களோட எதிர்காலம் தான் முக்கியம் இல்லையா?,அதான் நல்ல நேரமா பார்த்து இதுல குறிச்சிக் குடுத்துருக்கேன், அந்த நேரத்தில வைங்கோ சேமமா இருப்பாங்க ரெண்டு ஜோடியும்% என்று சொல்லிவிட்டு நிலாக் கொடுத்த மோரை வாங்கி குடிக்க..நிலா வெறியாகிவிட்டாள்.
“இந்த ஆளு இப்படி காலை வாருவானு தெரிஞ்சிருந்தா மோர்ல பேதி மாத்திரை கலந்து குடுத்துருப்பேன்,நான் நல்லா இருக்கனும்னு நெனைச்சானாம் .. என்னடா இது எனக்கு வந்த சோதனை. இப்போ எப்படி இந்த நைட்டை நான் ஓட்டுவேன் ஏற்கனவே மேலே விழுந்து முத்தமா கொடுத்து வைப்பான். இதுல வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் போது வேண்டாம்னு சொல்லுவானா என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டேப் போக. அவளின் வாயசைவை வைத்தே என்ன பேசுகிறாள் என கண்டுக் கொண்டவனுக்கு புன்னகை அரும்பியது அதை இதழை மடக்கி கடித்து அடக்கிக் கொண்டான்.