இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -86 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 20-07-2024

Total Views: 1386

அனைவரையும் வீட்டில் விட்டவன் வளவன் காரும், மார்த்தியின் காரும் வந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு .

“வியா கிளம்பறேன்” என்றான்.

“மறுவீடு”

“என்னடி நீ ஒவ்வொன்னா சொல்லிட்டே இருக்க”

“நான் சொன்னா நீ செய்யறில அப்போ சொல்ல வேண்டியது தான்” என நினைத்துக் கொண்டவள், “போகணும்ல இல்லனா அம்மா பீல் பண்ணுவாங்க”.

“சரி ரெடியாகி இரு, வேலையை முடிச்சிட்டு வரேன்”.என்றவன் “நாளைக்கு மறுவீட்டுக்கு போனா ஆகாதா?” என்றான் சுதி இறங்கிய குரலில்.

“ஏன்?” என்பது போல் அவள் பார்க்க

“இன்னைக்கு தான் நம்ப லைப்பை ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தேன். அது நம்ப வீட்டுல நடக்கணும்”.

“அதுவும் நம்ப வீடு தான்ங்க”

“அது மிஸ்டர் வளவன் வீடு.”

“மிஸஸ் நிலவியா விஜயநந்தனும் அங்க தான் பொறந்தா”. என மெலிதாக சொல்ல 

அவளை கூர்ந்துப் பார்த்தவன். “பார்க்கலாம்”என்று சென்று விட்டான்.

நந்தனின் செயலும் பார்வையிலும் பயங்கர மாற்றம் தான் இதை நம்புவதா? என பயமாக இருந்தது.

“என்ன நிலாம்மா இங்க நிற்கர?உள்ளே வா.” என்றார் மார்த்தி.

“இப்போதான் மாமா அவங்க கிளம்புனாங்க, அதான் பார்த்துட்டு இருந்தேன்” என்றவள் உள்ளேச் சென்று அனைவருக்கும் மதிய உணவை எடுத்து வைத்தாள்.

கோவிலுக்கு செல்வதால் மதிய உணவை ஹோட்டலில் இருந்து வரவைத்திருந்தார் மார்த்தி.

“நீ போய் ரெஸ்ட் எடு நான் பார்த்துக்கறேன்” என ஷாலினியை ஓய்வுக்கு அனுப்ப,அவள் நிலாவின் கையையும் சேர்த்து பிடித்தவள் “நீயும் வா..நேத்து உனக்கும் செம வேலையா தானே இருந்துருக்கும்.” என்றாள் கண் சிமிட்டி.

அவள் சொன்ன விதத்தில் வெட்கம் தானாக வந்துவிட அவளைப் பார்த்த மணிக்கு மனம் பிசைந்தது.

“எப்படி பட்ட பொண்ணு.. எல்லோரையும் சகிச்சி தன் வாழ்க்கையையும் விட்டுக் குடுத்துட்டுப் போகுது, இதுக் கூட ஒழுங்கா வாழாம வாழ்க்கையை கெடுத்துக்கறானே” என கவலையாக இருந்தது.

“எனக்கு ரெஸ்ட் வேண்டா அண்ணி அப்புறம் பெரிம்மாவும் ஆயாவும் சத்தம் போடுவாங்க, அதுமில்லாம அத்தை மட்டும் தனியா வேலை செய்யணும் நீ போய் தூங்கு.. நான் அப்புறம் வந்து கூப்பிடறேன்” என மழுப்பி பேசி அனுப்பி வைத்துவிட்டாள்.

மதிய விருந்து முடிந்து அவரவர் வீட்டிற்கு கிளம்பி விட மறுவீட்டிற்கு செல்ல காத்திருந்தாள் நிலா.

நேற்று இரவு போல் ஆகிவிடுமோ என்ற பயமும் மனதில் அவ்வவ்வப் போது வந்துப் போனது.

மாலை நான்கு மணியை நெருங்கும் போது வீடு வந்து சேர்ந்தான் நந்தன்

“ஹப்பா லேட்டா வந்தாலும் வந்துட்டான்,நேத்து மாதிரி பண்ணல அதுவே போதும்” என ஓடிச் சென்று அவன் அருகில் நின்றவள், “சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” என்றாள் ஆர்வமாக.

“ம்ம் குளிச்சிட்டு வரேன் நீ ரெடியா?”

“இங்கப் போறதுக்கு என்னனு ரெடியாக, இதுவே போதுங்க”

அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன்,”நாட் பேட். நைட் அங்க தங்க மாட்டேன்” என்றவன் அறைக்குச் சென்று விட.

“தங்கறதுக்கு தான் மறுவீடு போவாங்க, போனதும் வரத்துக்கு எதுக்கு போகணும்?” என மலர்ந்து இருந்தவளின் முகம் வாடி விட்டது.

மறுவீடு செல்வது ஒரு சம்பிரதாயம் அதைக் கூட போராடி தான் பெற வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்பதை யாரிடம் சொல்லி அழுவது.

குளித்து விட்டு வந்தவன் நிலா உணவை எடுத்து வைத்திருக்க..

“அங்க வந்து சாப்பிட தேவையில்லையா?”என்றான்

புரியாமல் பார்த்தவளை இழுத்து மடியில் அமர வைத்தவன்.

“இங்க இவ்வளவு சாப்புட்டு போனா அங்க எப்படிடி சாப்புடுவேன்? அப்புறம் மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளை சாப்பிடாம போட்டாருன்னு ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவீங்க.”

“அப்போ அங்க வந்தே சாப்பிடுங்க” என்றவளின் கவனம் முழுவதும் தங்களை யாராவது பார்த்து விடுவார்களோ என சுற்றதை நோக்கியே இருந்தது.

“அங்க என்னடி பார்வை என்னயப் பாரு” என்றவன் இடையில் விரலைக் கொண்டு தடவ நிலா சிலிர்த்து அடங்கினாள்.

“ப்ளீஸ்ங்க யாராவது பார்த்தா சங்கடமா போய்டும்..”. 

“என்னோட பொண்டாட்டியை தாண்டி கொஞ்சறேன் என்னவோ அடுத்தவன் பொண்டாட்டியை கொஞ்சற மாதிரி இவ்வளவு பயப்படற.”

“சொந்தப் பொண்டாட்டியாவே இருந்தாலும் ரூமுக்குள்ள மட்டும் தான் வெச்சிக்கணும்ங்க”

“நந்தனுக்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு வந்துட்ட “ என்றதும் தப்பா நினைத்துக் கொண்டானோ என பயத்துடன் அவனைப் பார்க்க அவனோ அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் சிவந்தவிட்டவள் “வீட்டுக்குப் போலாங்க” என்றாள்.

“ம்ம் போலாம் ஆனா ஒரு கண்டிஷன் இருக்கே”

“என்ன?”

“இப்படியே தூக்கிட்டு போவேன் ஓகேன்னா நைட் தங்கறேன் எப்படி வசதி?”.

“பார்க்கறவீங்க பொறாமையில பொங்கிடுவாங்க இவளுக்கு வந்த வாழ்க்கையைப் பாருன்னு சொன்னா,நம்ப எப்படி சந்தோசமா இருக்க முடியும்?” என அவன் என்ன சொல்லுவானோ என்ற தயக்கத்துடன் சொன்னாள்.

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.
“கிளம்பு” என கீழே இறக்கிவிட்டு வீட்டின் பின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.

“இருங்க அத்தைகிட்ட சொல்லிட்டு வந்தறேன் இல்லனா தேடுவாங்க” என வேகமாக மணியின் அறையை நோக்கி ஓட.

பின் வாசலில் இருந்த செருப்பை மாட்டிக் கொண்டே யாருக்கோ அழைத்தான் நந்தன்.

“எப்படி சேபிட்டி இருக்கு”.

“படு சேப்பா தான் இருக்கு இருந்தாலும் அந்த ஆளு கம்முனு இருக்க மாட்டான். நாளைக்கு தீர்ப்பு வந்ததும் உன் வீட்டுல யாரையாவது தூக்கிடுவான் அது நிலாவாக் கூட இருக்கலாம்”.

“அவளைத் தூக்க வாய்ப்பு கம்மி”

“எப்படி சொல்ற?”

“அவக் கூட நான் இருப்பேன், அதனால யாராலயும் அவளை நெருங்க முடியாது”

“அப்போ வீட்டுல இருக்கவீங்க யாரையாவது?” என அந்த பக்கம் இழுக்கவும்

“வீட்டுல வெளியன்னு இருக்கறது அந்த நாய் மட்டும் தான் அவனை வரச் சொன்னாலும் வர மாட்டேனே” என நெற்றியை நீவியபடி நினைத்துக் கொண்டிருக்க..

“அத்தைக்கிட்ட சொல்லிட்டேன் போலாங்க “ என்றவாறே நிலா வரவும்

“ஓகே சேப்பா பார்த்துக்கோங்க நான் திரும்ப கூப்பிடறேன்” என அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

“போன் பேசிட்டு இருந்திங்களா?”

“ஹா ம்ம் நாளைக்கு எங்கையாவது வெளியே போலாமா?”

“வெளியவா, நாளைக்கு கெடாவெட்டு இருக்கே”. என்றவளுக்கும் அவனுடன் வெளியே செல்ல கொள்ளை ஆசை

“மதியம் விருந்துக்கு வந்துடுவோம், காலையில நேரமாக போலாம்” என்றான்.

“எங்கன்னு?”

“போனா நீ தெரிஞ்சிப்ப% எனப் பேசிக் கொண்டே இருவரும் நிலாவின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

நந்தன் மறுவீட்டிற்கு வருவான் என ராஜி எதிர்ப்பார்க்கவில்லை.

வீட்டின் வெளியே வந்து நின்றுப் பேசிக் கொண்டிருந்தார்.

இருவரையும் பார்த்து பதறிக் கொண்டு ஓடி வந்தவர்.

“வாங்க வாங்க.. இல்ல இருங்க ஒரு நிமிஷம் பூங்கொடி “

“சொல்லுக்கா”

“புள்ளைங்க மறுவீட்டுக்கு வந்துருக்காங்க, வந்து ஆரத்தி எடுடி”. என சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினார்.

“உங்க அம்மா என்ன சின்னப் புள்ளையாட்டம் ஓடுறாங்க.”

“அவங்க நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சாங்க, திடீர்னு வந்து நின்னா சந்தோசமா தானே இருக்கும்.”

“அதுக்குன்னு எத்தனை தடவை ஆரத்தி சுத்துவீங்க”

“அவங்க ஆசைக்கு பன்றாங்க பண்ணிட்டுப் போகட்டுமே.”

“எனக்கும் என் ஆசைக்கு என்ன என்னமோ பண்ணனும்ன்னு இருக்கு பண்ணிக்கட்டுமா?” என அவன் உயரத்தை குறைத்து நிலாவின் காதில் ரகசியம் பேச. நிலாவின் காதுமடல் கூட செந்தாமரையாக சிவந்து போனது.

“வாழ்க்கை முழுக்க ரகசியம் பேசலாம் இப்போ தள்ளி நில்லுங்க ஆரத்தி சுத்துறேன்”: என்றார் பூங்கொடி 

“அக்கா சூர்யா எங்க ஆளையேக் காணல. பூங்கொடியின் ஒரே மகன் இவர்களின் சம வயதுக்காரன் திருமணத்தில் ஒரு தடவை தான் சூர்யாவைப் பார்த்தாள்.அதனால் இப்போது கேக்க.

“அவனும் யுகியோட பெங்களூரு போய்ட்டான் நிலா”. என்று சொல்லும் போதே நந்தன் அங்கு நிற்காமல் உள்ளே சென்று விட்டான்.

“இவனுக்கு யுகின்னு பேர் எடுத்துடக் கூடாது உடனே கோவம் பொத்துகிட்டு வந்துடும்,சொந்த தம்பி மாதிரியா ட்ரீட் பன்றான் ஏதோ எதிரியைப் பார்க்கற மாதிரி பார்க்கறான்” என்று போகும் அவனைப் பார்த்துவிட்டு பூங்கொடியிடம் சற்று நேரம் பேசிவிட்டே உள்ளேச் சென்றாள்.

அவள் போகும் போது நந்தன் முன்பு பல பலகாரங்கள் அடுக்கி வைக்கப்படிருந்தது.

“அம்மா என்னது இது?”.

“பலகாரம் அம்மு..”

“அதுக்குன்னு ஒரே நாள்ல இவ்வளவும் சாப்புட்டா வயிறு என்னத்துக்கு ஆகறது.?அவருக்கு சாப்பாடு மட்டும் வைம்மா இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அப்புறம் சாப்புட்டுக்குவாரு” என்றவள்.. இரண்டு இனிப்பு முறுக்கு இதை மட்டும் வைத்துவிட்டு மற்றதை எடுத்துச் சென்று விட்டாள்.

“வாங்க தம்பி சாப்பாடு வைக்கிறேன்”.

“நீங்க ரெஸ்ட் எடுங்க அவ வைப்பா”என்றவன் கையைக் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்து விட்டான்.

நிலா தான் சாப்பாடு போட வேண்டும் என்று நினைக்கிறான் என புரிந்துக் கொண்ட ராஜி, சமையலறைக்குச் சென்று.

“அம்மு நீங்க வரீங்கன்னு சொல்லலையே, நான் எனக்குன்னு அரிசியும் பருப்பும் தான் செஞ்சேன்” என்றார் தயக்கமாக.

“இருக்கட்டுமா நைட் வேற ஏதாவது செஞ்சிக்கலாம். இருக்கறதைப் போடறேன்.”

“நீ சாப்பாடு போடு நான் அதுக்குள்ள அப்பளம் பொரிக்கிறேன்’.

“சரி” என்றவள் வெளியே வந்து நந்தனுக்கு அரிசி பருப்பு சாதத்தை வைத்து தயிறு ஊற்றினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன். “இதுக்கு தான் அங்கிருந்து இங்க கூட்டிட்டு வந்தியா?” என்பது போல் அவன் பார்வை இருக்க.

“நீங்க வரது அம்மாவுக்கு தெரியாதுல. வெளிய போனவீங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், அதான் அவங்ககிட்ட சொல்லி அவங்களையும் எதிர்பார்க்க வைக்க வேண்டாமேன்னு சொல்லல”. என குனிந்த தலையுடன் சொன்னாள்.

அவன் எதுவும் பேசவில்லை கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டான், இடையில் அப்பளம் சட்டினி ஊறுகாய் வெள்ளை சாதம் ரசம் என வந்துக் கொண்டே இருந்தது.

அவசரத்திற்கு கலக்கிய பச்சைப் புளி ரசம் நந்தனுக்கு மிகவும் பிடித்திருக்க அதை வெளியே சொல்லாமல் உண்டு முடித்திருந்தான்.

“நீ சாப்புட்டியா?” அவள் சாப்பிட்டிருப்பாள் என்ற எண்ணத்தில் கேக்க.

“சாப்புடறேன்ங்க” என்றாள்.

“இவ்வளவு நேரம் சாப்பிடாம என்ன பண்ண? போய் சாப்பிடு” என அவளுக்காக உணவுகளை தட்டில் எடுத்து வைத்து அவனேக் கொடுக்க சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்.

இருவரும் ஒன்றாக நேரம் செலவளிக்கும் போது நிலாவின் மனதில் நந்தன் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தான்.



Leave a comment


Comments


Related Post