Total Views: 1455
அவள் சாப்பிடும் நேரத்தைப் பயன்படுத்தி யாருக்கோ அழைத்துப் பேசினான்.
“நாளைக்கு காலையில பத்து மணிக்கு அங்க இருப்போம்”
“கண்டிப்பா நிலாவும் வரணுமா நந்து?”.
“அவ கூட இருக்கனும், நம்ப பிளான் கை மீறும் போது அவளை யூஸ் பண்ணிக்கலாம். எப்போமே இரண்டு ஆப்சன் வெச்சிக்கணும் இது இல்லனா அது. ஒன்னையே பிடிச்சித் தொங்கிட்டு இருந்தோம்ன்னா அது கைவிட்டு போய்டுச்சுனா மொத்த பிளானும் பிளாப் ஆகிடும்.”
“சரி நீ சொல்ற மாதிரி பண்ணுனா நிலாவுக்குப் ப்ரோப்லம் வராதா?”.
“வராது நான் பார்த்துப்பேன்” என்றவன் “அவ சாப்பிட்டு முடிச்சிட்டா அப்புறம் கூப்பிடறேன்” d என அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
நிலாவை கூண்டில் ஏற்றி தான் ரோகனை குற்றவாளியாகக் காட்ட வேண்டும் என்றால் சிறிதும் யோசிக்காமல் நந்தன் வேண்டாம் என்று விடுவான். சூழ்நிலை அவனுக்கு என்ன பரிசளிக்கப் போகிறதோ.
நிலா சாப்பிட்டு அனைத்து பொருளையும் சமையலறையில் எடுத்து வைத்து விட்டு மணியைப் பார்த்தாள்.
ஐந்தை தாண்டிக் காட்டியது. இரவு உணவுக்கு வெள்ளை சுண்டலை ஊற வைத்துவிட்டு.
“அம்மா நைட் சென்னா மசாலா செஞ்சி பூரி சுட்டுக்கலாம், நான் வந்து செய்யறேன் நீ செய்யாத”..
“தம்பிக்கு டீயா காபியா?”
“தெரியல கேக்கறேன்” என்றவள் “என்னங்க காபி போடட்டுங்களா?”
“ம்ம்”
“அம்மா காபி போடு, நான் குளிச்சிட்டு வரேன்”
“ம்ம் மல்லிப் பூ கட்டி வெச்சிருக்கேன் எடுத்து வெச்சிக்கோ.”
“இப்போவேவா?” என்று நினைத்தவள் நந்தனை எட்டிப்பார்க்க
அவன் அலைபேசியில் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டியிருந்தான்.
ஏதோ முன்னாள் அமைச்சர் கேஸை தான் எடுத்திருக்கிறான் என்று தெரியும்,ஆனால் அவள் பார்த்த கொலைக்கான கேஸும் அதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியாது.
வேகமாக அறைக்குப் போனவள் குளித்து வேற சுடிதார் போட்டு நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு தலை முடியை தளர்வாக பின்னி முடித்தவள்,தலையில் ராஜி கட்டிக் கொடுத்த பூவை வைத்துக் கொண்டு கீழேச் சென்றாள்.
வரிசையாக வந்த அழைப்புகளை பேசி முடித்தவன்,ராஜிக் கொடுத்த காபியை அருந்திக் கொண்டே திரும்ப, நிலா மேலே இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.
நிலாவின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறும் அவள் நெற்றி வகுட்டில் இருந்த குங்குமத்திற்கும் நான் தான் உரிமைக்காரன் என்று நினைத்தவன் மீசையை முறுக்கிக் கொண்டான்,அதில் அவனுக்கு தனி அகந்தை தான்.
கீழே வந்தவளின் அருகில் சென்றவன் “ஏண்டி சேலைக் கட்டல”
“எனக்கு இன்னும் பழக்கமாகலைங்க, எந்தப் பக்கம் சொருகனும், எத்தனை சுத்து சுத்தணும் எதுமே தெரிய மாட்டிங்குது”. என்றாள் தலைகுனிந்தவாறே மெதுவாக.
இப்போது தான் திக்காமல் பேசிபழகுகிறாள் கூடியவிரைவில் தலை நிமிர்ந்து பேசிவிடுவாள்.
“அதுக்கு தான் நான் இருக்கேன்லடி”என்றவனின் பார்வை அவளை விழுங்கிவிடுவது போல் இருக்க.
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்.
“என்னைய பாருடி”
“அம்மா இருக்காங்க ப்ளீஸ் சத்தமா பேசாதீங்க” என்றாள் கெஞ்சளாக
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. ராஜி, “அம்மு நான் கடை வரைக்கும் போய்ட்டு வந்தறேன்” என சொல்லிக்கொண்டே அவர் வெளியே சென்று விட..
அவர் போனதும் நிலாவை அப்படியே தூக்கிவிட்டான் நந்தன்.
“விடுங்க யாராவது பார்த்துடப் போறாங்க.”
“இதுக்கு மேல யார் இருக்கா?” என்றவன் அவளை சுற்றி இறக்கி விடும் போது மேனி முழுவதும் உரசுவது போல் இறக்கி விட்டான்.
அதில் நிலாவின் முகம் சிவந்து விட்டது.
“ஹோய்”
“ம்ம்”
“நான் தொட்டதும் எப்படிடி இப்படி சிவந்து போற?”
அவன் கேள்வியில் மேலும் சிவந்து போனவளின் இதழை சுண்டி இழுத்தவன் “இதை ஒருதடவை டேஸ்ட் பண்ணிக்கறேன் வித் யூர் பெர்மிஸ்ஸன்” என்றவனை விழியகலப் பார்த்தவள், கண் மூடி தன் சம்மதத்தைக் கொடுக்க, அடுத்த நொடி அவன் இதழ் வன்மையாக தீண்டியிருந்தது அவளது இதழ்களை.
அவன் அருகாமையும் அவனுக்கு மட்டுமே இருக்கும் பிரத்தியேக வாசனையும் நிலாவை கிறங்கடித்தது.
அவள் கை தானா நந்தனின் சட்டைக் காலரைப் பிடிக்க. அவளை விட்டு விலக வேண்டும் என்று எண்ணினாலும்,நிலாவின் செயலில் விலகத் தோன்றாமல் அவளுள் மூழ்கி முத்து எடுத்தான்.
“குட்டி.”
அவள் மேல் கிறக்கமாக இருக்கும் போது மட்டும் தான் குட்டி என்ற அழைப்பு வருகிறது மற்ற நேரங்களில் வியா தான்.
அதையும் இரண்டே நாளில் உணர்ந்து வைத்திருந்தாள். திருமணம் நடக்கும் முன்பே அவனைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தாள், இப்போது திருமணம் வேறு நடந்துவிட்டது சொல்லவா வேண்டும்.
அவன் கை எல்லை மீறி ஊர்வலம் செல்ல.. அதை பிடித்து நிறுத்த வழி தெரியாமல் துவண்டுப் போனாள்.
மூச்சுக் காற்றுக்கு ஏங்கியவளை விலக்கி விட்டவன்.
“நைட் கண்டிப்பா வேணும், எவ்வளவு வேலை இருந்தாலும் போக மாட்டேன்” என தலை முடியை இருக் கைகளால் கோதினான்.
சாதாரணமாகவே நிமிர்ந்து பேசமாட்டாள், இப்போது வேறு சீண்டியிருக்கிறான் எப்படி நிமிர்வாள் விட்டால் பூமியில் புதையல் எடுக்கும் நோக்கி இருக்க. அதற்குள் ராஜி வந்துவிட்டார்.
அவனிடம் இருந்து தப்பிக்க ராஜியிடம் அடைக்கலம் புகுந்துக் கொண்டாள்.
“அம்மா நான் சமைக்கறேன்”.
“நீ நாளைக்கு செய் அம்மு, இப்போ போய் மாப்பிளையை கவனிப் போ” என அங்கிருந்து நிலாவை அனுப்பி வைக்க.
அவனுடன் தனியாக இருக்க பயமாக இருக்க வாசலில் சென்று செடிக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த செடிகள் அனைத்தும், சாலையில் இருக்கிறது என நகராட்சி ஆட்களுக்கு அழைத்து அப்புறப்படுத்தச் சொல்லிருந்தான்.ஆனால் அவர்கள் வரவேயில்லை.
இதைப்பற்றி அவனிடம் கேக்க வேண்டும் என பல நாள் நினைத்திருக்கிறாள் எங்கு கேக்க அதற்குள் தான் பல பிரச்சனை ஓட ஆரம்பித்து விட்டதே..
மல்லிகைச் செடியில் ராஜி பறிக்காமல் விட்ட ஒன்னிரண்டு மொக்குகள் வெடித்து அந்த இடம் முழுவதும் ரம்மியமாக வாசம் வீச..அதை ரசித்தவாறு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“வியா”
“சொல்லுங்க”
“நைட் டின்னர் சாப்புட்டு வீட்டுக்கு கிளம்பனும்.”
ஏன் அதுக்குள்ள இப்போதானே கதை கதையாக பேசினான். அதுக்குள்ள என்ன வந்தது என்று தெரியாமல் முழிக்க.
“நீ என்னய கண்டுக்காம இந்த செடிகளை பார்த்துட்டு இருந்தா நான் வெட்டியா இங்க இருக்கணுமா?”
“அப்படியில்லங்க” என்றாள் அவசரமாக
“வேற எப்படிங்க.?”
“அது கல்யாண வேலையில செடியை மறந்துட்டாங்க போல, அதான்” என்று இழுக்க அவள் எப்படி பேசினாலும் பிடித்து தொலைக்கிறதே என வினோதமாகப் பார்த்து நின்றான்.
“உங்ககிட்ட ஒன்னு கேக்கவா?”
“ஏன் ரெண்டு கேட்டா நான் வேண்டான்னு சொல்லிடுவனா?%
‘திமிரு ஜாஸ்தி’ என முனவியவள்.. “இந்த செடியிலாம் எடுக்கச் சொல்லிருந்திங்கல. “
“எப்போ..?” அவனுக்கே நியாபகமில்ல எப்போது சொன்னோம் என்று.
அன்று அவன் சொன்னதை சொன்னவள், நந்தனின் முகம் பார்க்க.
“ஹாஹாஹா..” என வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“அது இந்த செடியை எடுக்கச் சொல்லி இல்லை. வாக்கிங் போன இடத்துல ரோட்டுல மேல நிறைய செடி வெச்சிருந்தாங்க, இதனால் வண்டி போக கஷ்டமா இருந்துச்சின்னு அதுக்கு சொன்னேன்”.
“ஒ நான் இதைன்னு நினைச்சேன்”.
“நினைச்சி மட்டுமா இருப்ப, எனக்கு ஸ்பெஷலா அர்ச்சனை பண்ணிருப்பியே” என அவளிடம் இயல்பாக பேசினான்.
“ம்ம் அதெல்லாம் சிறப்பா செஞ்சிட்டேன்” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“என்னடி?”
“நான் எதும் உங்களைப் பத்தி சொல்லல”
“நம்பிட்டேன்.. “என்றவன் “உள்ளே வந்து என்னைய கவனி அப்பறம் செடியை கவனிப்ப” என்று இழுத்துக் கொண்டு அவளது அறைக்குப் போனான்.
யுகி பெங்களூர் சென்று வேலையில் சேர்ந்துவிட்டான்.
அவன் பிறந்ததில் இருந்து நிலாவுடன் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருப்பது இதுவே முதல் தடவை என்பதால் வேலையே ஓட மாட்டேன் என அடம்பிடித்தது மனது.
எந்த வேலையிலும் மனம் லயிக்கவில்லை., ஜெபம் போல் மனம் நிலா நிலா என அவள் பெயரையே மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருக்க. கஷ்டப்பட்டு மனதை வேலையில் திருப்பப் பார்த்தான்.
“யுகி.”
“சொல்லு வெங்கட்”
“இனி கேன்டீன்ல தான் சாப்பிடப் போறியா?”
“ஆமா ஏன்?”
“கேட்டேன் உன் பெயரையும் எடுக்க சொன்னாங்க, அதான் டவுட் கிளியர் பண்ணிக்கலாமேன்னு கேட்டேன்.நீ வெளிய தானே சாப்பிடுவ” என்றான் மெதுவாக
இப்போது அவனுக்கு யுகியைப் பற்றி தெரிந்துக் கொண்டு அதை அலுவலகம் முழுவதும் பரப்பவில்லை என்றால் தலையே வெடித்து விடும்.
“நான் சாப்புட்டு இருந்தவீங்க வீடு காலிப் பண்ணிட்டு அவங்க ஊருக்கேப் போய்ட்டாங்க, சாப்புடறதுக்காக தினமும் ட்ரெயின் ஏறி போக முடியாதுல” என கேள்வியாக அவன் முகம் பார்க்க
“அப்கோர்ஸ் அப்கோர்ஸ்” என அங்கிருந்து சென்றவனை தலையில் அடித்துக் கொண்டு பார்த்தான்.
“அடுத்த வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்க்க நாயி எப்படி தவியா தவிக்குது பாரு” , என எண்ணியவனுக்கு வளவனிடம் இருந்து போன் வரவும் மனம் நிம்மதியடைந்தது.
வளவனும் ஷாலினியும் அவர்கள் உலகத்தில் இருந்தார்கள். நந்தனும் நிலாவும் சேரவில்லை என இவர்களும் தள்ளி இருந்தார்கள்,நேற்று இரவு அதுவும் முடிந்து விட்டது என்றதும் அவர்களுக்கு தடையேது இத்தனை நாள் காத்திருப்பை கொண்டாடி தீர்த்தனர். சாப்பிடக் கூட மணி அழைத்தால் கீழே வருவார்கள் இல்லை என்றால் அறையே கதி தான். நாளை கெடாவிருந்து இருந்ததால் அவர்களை வேற யாரும் தொந்தரவும் செய்யவில்லை.
ராஜி செய்த சென்னா மசாலா பூரியை சாப்பிட்டு விட்டு எட்டு மணிக்கெல்லாம் தூங்க அனுப்பிவிட்டார் ராஜி.