இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -88 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 22-07-2024

Total Views: 1769

“அம்மு போய் தூங்கு”

“கிச்சனை சுத்தம் பண்ணிட்டு போறேன்ம்மா”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ போ” என அவள் கையில் பால் டம்ளாரை திணிக்க, வேறு வழியின்று மாடிப் படியை ஏறினாள்.

நேற்று இருந்த படபடப்பு, பயம், வெட்கம் எல்லாம் இன்றும் வந்து ஒட்டிக் கொண்டது.

ரயில் ஓடும் பாதையில் கூட இவ்வளவு சத்தம் கேக்காது,நிலாவின் நெஞ்சில் கேக்க.. கால்கள் மேலே போக மாட்டேன் என பின்னிக் கொண்டு அவளுக்கு துரோகம் செய்தது.

“போய் தான் ஆகணுமா?” என்று மீண்டும் கீழே இறங்கப் போனவளை நந்தன் கையைக் கட்டிக் கொண்டு மாடி படி திண்டில் சாய்ந்து இருந்தவன்

மேடம் எங்க திரும்ப போறீங்க?”என்றான்.

அவன் கேட்டப் பின்னாடி எப்படி போறது எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான், என கீழே பால்ல சக்கரை என வார்த்தைகளை வரிகளாக்க பெரும் பாடு பட்டாள்.

நந்தனின் நிலை நிலாவின் நிலையைக் காட்டிலும் மோசமில்ல இருந்தாலும் அவனுக்குள்ளும் ஒருவித பதட்டம் இருந்தது என்னவோ உண்மை தான்.

“வா..”

“நீங்க அங்க உங்க வீட்டுல வெச்சிக்கலாம்னு”

“ஆமா அங்க தான் போகப் போறோம்” என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.

“ஐயோ விடுங்க”

“நம்ப ரூமில போய் விடறேன் உனக்கு கஷ்டமா இருந்தா கண்ணை மூடிக்கோ”

அடுத்த நொடி கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

யாரும் அறியாமல் பின் வாசல் வழியாக போனான். மார்த்தி ஏற்கனவே கதவை திறந்து வைத்திருக்க

“இந்த பையன் அப்பனையே மாமா வேலையைப் பாக்க வெச்சிடுவான் போலையே எத்தனை தான் இவனுக்குன்னு செய்யறது.” என நொந்துக் கொண்டார்.

!எனக்கு அப்பாவா இருந்தாலும் இவளுக்கு மாமா தானே” என நந்தனின் குரல் அருகில் கேக்க

“நீ இருக்கறப்ப ஒத்த வார்த்தை பேசுனது தப்பு தான்” என விலகி இடம் கொடுக்க நிலாவிற்கு தான் வெட்கமாக போய்விட்டது.

நிலாவை அவன் அறையின் படுக்கையில் தான் இறக்கி விட்டான்.

“மாமா என்ன நினைச்சிருப்பாரு” என வெட்கமும் தயக்கமும் போட்டிப் போட.. தலைக் குனிந்தவாறே கேட்டாள்.

“இதெல்லாம் நம்ப மிஸ் பண்ணிட்டோமேன்னு நினைச்சிப்பாரு” 

அவன் கூற்றில் நிலாவின் இதழ்கள் விரிய.. கதவை அடைத்தவன். அவள் இதழை ஆட்க் கொண்டு விட்டான்.

அவன் வேகத்தில் நாணிப் போனவள் உருகி அவன் கையில்லையே விழ,அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து நாக்கால் நிமிண்டினான்.

“கூசுதுங்க” என்றாள் கிசுகிசுப்பான குரலில்

“குட்டி.... “ என்றவனின் தாபக் குரல் அவளை மேலும் அவனுடன் ஒன்றச் செய்தது.

நந்தனால் உடைகள் யாவும் விடுதலைப் பெற்று சுதந்திரமாக அறையெங்கும் விழ முகத்தை இருக்கைகளாலும் மூடிக் கொண்டாள் நிலா

“என்னைய பாருடி”

“ஹும்ஹும்”

“பாரு வியா..”

“மாட்டேன் எனக்கு வெட்கமா இருக்கு”

“உன்னைய நிலாக் குட்டின்னு சொல்றாங்க” என்று நிறுத்தியவன் நமட்டு புன்னகை சிந்த

அவனை விரல் இடுக்கில் பார்த்தாள்.

“பார்த்தா குட்டி மாதிரி தெரியலையே” என்றான் அவளை அங்கங்களில் லயித்துக்கொண்டே.

அவன் கூற்றில் முகம் செவ்வானம் ஆகிவிட.. நிலாவின் ஒவ்வொரு செயலுமே நந்தனின் உணர்வு குவியலில் வெள்ளம் ஊற்றெடுக்க அவளை சுண்டி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், நரம்புகள் நொறுங்க இறுக அணைத்தான்.

தேகங்களின் சங்கம் இருவரையும் வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது.

தேடலைத் தொடங்கியவனுக்கு அவன் தேடும் தேடல் கிடைக்கும் வரை இருவரின் உடலும் சண்டையிட்டுக் கொண்டன.

அதற்கு பரிசாக நகக் கீறல்கலும், பற்தடமும் உடலின் ஒவ்வொரு இடத்திலும் தடம் பதித்திருந்தது.

“விஜய் சொல்லுடி. “ என கேட்டு வாங்கினான். அவனும் குட்டி குட்டி என கொண்டாடினான். 

உணர்வின் தழும்பலில் விஜய் விஜய் என அறை சுவர்களின் பட்டு தெறித்து மீண்டும் அவன் செவிகளில் சென்று அடைய.. தேனாக இனித்தது.

அவள் விஜய் என்று சொல்வதை நிறுத்திவிட்டால் இவனும் அவள் முகம் பார்த்து நின்றிருப்பான்.

அவளே அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவன் பெயரை மந்திரமாக ஜெபித்தாள்.

அவன் வாங்கிக் கொடுத்த கொலுசு கூடலில் அதீத ஓசை எழுப்ப அதுகூட ராகமாக இசைத்தது நந்தனின் செவிகளில்..

குட்டி குட்டி என அவன் முனங்க அதை கேக்கும் நிலையில் நிலா இல்லை அவள் ஏதோ காற்றில் மிதப்பது போல் உணர்ந்தாள்.

நிலாவை எவ்வளவு மென்மையாக கையாள முடியுமோ அவ்வளவு மென்மையாக கையாண்டான். 

நந்தனின் குணத்திற்கும் இப்போது அவன் நடந்துக் கொள்வதற்கும் கோடி வித்தியாசம்.

சில இடங்களில் நிலா கத்திவிட..

“அவ்வளவு தாண்டி குட்டி, அம்முல்ல என்னோட செல்லம்ல கொஞ்சம் பொறுத்துக்கோ” என செல்லம் கொஞ்சவும் நிலாவிற்கு வலிகள் கூட இனிமையான உணர்வைக் கொடுத்தது.

வெளியே தான் முரட்டு பையன், நிலா நினைத்தால் அவனை முந்தானையில் சொருகிவிடலாம், அந்த அளவிற்கு குழந்தையாக இருந்தான்.

அவனின் குணங்களை அனைத்தும் பார்த்தவள் இனி பார்க்கப் போறவளும் தான் மட்டும் தான் என்ற கர்வம் தோன்றியது.

நிலா நினைக்கும் அளவிற்கு நந்தன் டெடர் இல்லை என்பதை ஒரு கூடல் உணர்த்திவிட்டது.

அவன் கண்ணில் தான் எத்தனை எத்தனை காதல். அப்படியே கண்ணில் இருந்து ததும்பி வழிந்தது காதல்..

இவ்வளவு நாளும் நந்தனின் கோவ முகத்தையே பார்த்திருந்தவளுக்கு முதன் முறை அவனின் இயல்பு தன்மையைப் பார்க்கிறாள்.

இனி நந்தனை விட்டுச் செல்லும் எண்ணம் தோன்றுமா? அவன் முகத்தைப் பார்த்தவளை என்ன என்று புருவம் உயர்த்தினான்.

ஹும்ஹும்.

அவனது ரோமங்கள் கூட அவளுள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

“என்னடி இவ்வளவு சாப்ட்டா இருக்க? “:என கேட்டுக் கேட்டே கொண்டாடினான்.

குளிரும், வெப்பமும் ஒருசேர அடுத்தவர்களுக்கு கடத்தும் வித்தை லாவகமாக செய்துக் கற்றுக் கொண்டனர்.

தேடல் முடிந்து ஓய்ந்து அருகில் படுத்தவன். அவள் நெற்றில் இதழ் பதித்து “தேங்க்ஸ்டி குட்டி “என்றான்.

அவனைப் பார்க்கவே கூச போர்வையை தலை வரைக்கும் இழுத்துப் போர்த்தி தன்னை மூடி மறைத்துக் கொண்டாள்..

என்ன செய்தாலும் நந்தனிடம் எடுபடுமா என்ன? அவள் போர்வையை இழுத்து வீசியவன், அவள் மீது மீண்டும் படர மீசை முடிகள் கன்னத்தில் குத்த, மீண்டும் ஒரு சங்கமம் நடந்தேற அவளை இழுத்து மார்பில் போட்டுக்கொண்டு படுத்து உறங்கிவிட்டான்.

கூச்சத்தில் நெளிந்துக் கொண்டே இருந்தாள்

“என்னடி?” தூக்கக் கலக்கத்தில் நந்தன் கேக்க

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் தள் தள்ளிப் படுத்துக்குவா.?”

“இன்னும் என்னடி”

“கூச்சமா இருக்கு விலகி படுத்துக்கவா?”

“எவ்வளவு நாளைக்கு கூச்சம் வரும்னு பார்க்கறேன்” என்றவன் அவளை விட்டு விலகிப் படுக்க, நிலாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அவளே அவன் முதுகில் சென்று ஒட்ட

“என்னடி தூக்கம் வருது இம்சை பண்ணாம தூங்கு வியா”.

“கோவிச்சிட்டீங்களா.?”

“உன்கிட்ட கோவப்பட்டா நான் தான் எங்கையாவது போய் முட்டிக்கணும்” என நினைத்தவன் “அதெல்லாம் இல்லை” என்றான் ..

அவன் இல்லை என்றாலும் அவன் முதுகை ஒட்டியவாறே படுத்திருந்தவள் அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டாள்.

காலையில் அவனுக்கு முன்பு எழுந்து விட வேண்டும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருந்ததால் கண்கள் உறங்கினாலும் மூளை விழித்துக் கிடக்க, விடியற் காலையில்லையே முழிப்பு வந்து விட்டது.

கண் திறந்தவளின் முன்பு நந்தனின் மார்பு தென்பட சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள்.

“நேத்து நைட் படுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ அவர் மேல தான் தூங்கிட்டு இருந்துருக்கேன் ச்சை என்ன நினைச்சிருப்பாரு?”என்றவள் வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் எழுந்த சத்தத்தில் நந்தனும் எழுந்துக் கொண்டவன். நிலா சங்கடப்படுவாள் என்பதற்காகவே தூங்குவது போல் கண்களை மூடி இருக்க குளித்துவிட்டு வந்தவள் நந்தன் தூங்கும் தைரியத்தில் அறையில்லையே உடை மாற்றினாள்.

“சும்மா இருந்தாலும் இவ விட மாட்டாப் போலையே” என கண்களை இறுக மூடியவனால் உணர்வுகளை அடக்க முடியவில்லை.

அவன் காணாத பெண்கள் இல்லை. நிலாவை விட மாடனாக, வெள்ளையாக, அழகாக என ஆயிரம் பெண்களைப் பார்த்திருக்கிறான், இவளிடம் தோன்றும் காதல் உணர்வு கூட வேறப் பெண்ணிடம் தோன்றியதில்லை. அதனால் தானே உஷாவை வேண்டாம் என்றான்.

சிறுவயதில் அகந்தை பிடித்து திமிராக திரிந்தவன், இப்போதும் இல்லை என்று சொல்லிவிட முடியாது நிலாவிடம் மட்டும் அவன் அகந்தை அடிபணிந்து விடுகிறது. இது தான் காதல் என்று புரியவே பல வருடங்களை தொலைத்து நின்றான்.

தாய் பேசவில்லை என்றாலும் கவலையில்லை, சகோதரன் பேசவில்லை என்றாலும் கவலையில்லை,ஆனால் நிலா பேசவில்லை என்றால் அவனின் உயிரில் பாதி இழந்ததுப் போல் இருந்தது.

அவளைப் பார்த்துக்கொண்டே பலவற்றையும் நினைத்தான்.

நிலாவின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது, உதடுகள் புன்னகையில் உறைந்திருந்தன. பார்க்கவே அவ்வளவு அழகா இருக்க இப்போதே அவளை அள்ளி அணைக்க துடித்த மனதை அடக்கிக் கொண்டு திரும்பி படுத்துவிட்டான்.

நிலா நந்தனை ஒருமுறைப் பார்த்துவிட்டு கிளம்பி கீழேச் சென்று விட்டாள்.

“என்ன நிலாம்மா இங்க இருந்து வர..?”

“நைட் இங்க வந்துட்டோம் அத்தை இருங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.! என்றவள் அவசர அவசரமாக அவளுடைய வீட்டிற்கு ஓடினாள்.

போகும் அவளை மனநிறைவுடன் பார்த்தார். மூன்று குழந்தைக்கு தாய் அவருக்கு தெரியாதா அவளின் மலர்ந் முகம் எதை உணர்த்துகிறது என்று.

“அம்மா அம்மா..”

“வா அம்மு காபி கலக்கவா.?”

“நைட் அவருக்கு ஏதோ பைல் எடுக்கணும்னு சொன்னார்ன்னு அங்க போனோம், அப்படியே தூங்கிட்டோம் அங்க தான் அவர் இருக்காரு, காலையில டிபனுக்கு கறி ரெடியாகிடும்ன்னு அத்தை சொல்ல சொன்னாங்க நீ அங்கையே வந்துடும்மா நைட் நான் அவரை இங்க கூட்டிட்டு வரேன்”

“சரி”

“இதைச் சொல்ல தான் வந்தேன் அங்க நிறைய வேலை இருக்கு , சீக்கிரம் வந்துடும்மா”

“வரேன்டி”

“சரி “என்று ஓடினாள்.

அப்போதுதான் காலை 5.30 மணி ஆகியிருந்தது. நந்தன் வீட்டின் வெளிப்புறம் நான்கு கெடாவை வெட்டி தலைகீழாக தொங்கப் போட்டு உரித்துக் கொண்டிருந்தனர்.

“நிலாம்மா”

“சொல்லுங்க அத்தை.”

“ஆயா எழுந்துட்டாங்களான்னு பார்த்து அவங்களுக்கு இந்த காபியைக் கொடுத்துடும்மா”

“ம்ம் குடுங்க” என்று வாங்கிக் கொண்டு கிருஷ்ணம்மாளின் அறை நோக்கிச் சென்றாள் 

அந்த நேரம் நந்தன் நடைப்பயிற்சி செல்ல கீழே இறங்கி வர.. அவனைப் பார்த்ததும் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

கை நடுங்கி காபித் தட்டை கீழேப் போட இருந்தவளின் இடையை ஒரு கையிலும், தட்டை ஒருக் கையிலும் பிடித்தவன்

“வி”யா என்றான் அழுத்தமாக

அவன் முகம் பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடி இருந்தவள் மெதுவாக திறந்து பார்க்க

“பார்த்துப் போ” என சாதாரணமாக சொல்லியவன் அவளை நேராக நிற்க வைத்துவிட்டு சென்று விட்டான். வெளியே போனதும் நிலாவின் செயலில் புன்னகை அரும்ப தலைமுடியைக் கோதிக்கொண்டான்.

அவன் போனதும் தான் மூச்சே வந்தது நிலாவிற்கு.



Leave a comment


Comments


Related Post