இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -90 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-07-2024

Total Views: 1429

அந்த சிரிப்பில் ஏதோ ஒரு விஷயம் இருக்க ,இவனிடம் நின்றால் எரிச்சல் தான் உண்டாகும் என வளவன் அங்கிருந்து சென்று விட்டான்.

நிலா தலைவாரி  பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு ஓடி வந்தாள்

“சாப்புட்டு வா”

“மதியம் வந்து சாப்புட்டுக்கவா?” என மெதுவாக கேட்டவளை இழுத்து இடுப்போடு கைக் கோர்த்துக் கட்டிக் கொண்டவன்

“எப்பதாண்டி சத்தமாக பேசுவ..”

“உங்கிட்ட வர மாட்டிங்குதே..”என தலைக் குனிந்தவளை ஒற்றை விரலால் நிமிர்த்தியவன்

“சாப்புட்டு வா டைம் ஆகுது”

“ம்ம்”

“இங்கையே இரு கொண்டு வர சொல்றேன்”

“இல்லை நானே”

“அங்க போனா லேட் பண்ணுவ,என் பக்கத்துல இருந்தாதா சீக்கிரம் சாப்பிடுவ” என்றவன் ஷாலினியை அழைத்து உணவைக் கொண்டு வர சொன்னான்.

அவளும் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி நிலாவிற்கு ஊட்டப் போக.

“இல்ல நானே சாப்புட்டுக்குவேன்” என அவனிடம் பிடுங்காதக் குறையாக வாங்கி சாப்பிட்டாள்.

அவள் சாப்பிடும் போது எந்த தொந்தரவு செய்யாமல் விலகி நின்று நிலா சாப்பிடும் அழகைப் பார்த்தான்.

சாப்புட்டு முடித்து கை கழுவி வந்தவள் “போலாங்க”  என்றாள்.

“ம்ம் யார்கிட்டையாவது சொன்னியா?”

“இல்லைங்க”

“அப்பா பார்த்துப்பாரு கிளம்பு” என்று காரை எடுக்கப் போக.

“நிலா எங்கையோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு “ என மணி வரவும் சொல்வதா? வேண்டாமா? என தெரியாமல் கையை பிசைந்தாள்.

“அத்தை”

“சொல்லும்மா”

“அது”

“ம்ம்”

“அவங்க எங்கையோ வெளிய போலாம்னு”

“இன்னைக்கு விருந்து இருக்கும்மா வர சொந்தக்காரங்ககிட்ட என்னன்னு சொல்ல?”

“போனதும் வந்துடுவோம் அத்தை.”

“அது இன்னொரு நாள் போகக்கூடாதா?”

“அவர் தான் இன்னைக்கு போலாம்னு” என்றவளுக்கே இது தவறு என்று புரிய பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினாள்.

சரி விடு உனக்கு என்ன  தெரியும்?போய்ட்டு சீக்கிரம் வரப் பாருங்க “ என அனுப்பி வைத்து விட்டார்.

காரில் ஏறியதும் “ஏங்க?”  என்றாள்

“ம்ம்”

“இன்னொரு நாள் போகலாமா?”

“முடியாது..”

“அது.இன்னைக்கு”

“முடியாதுன்னு சொல்லிட்டேன்” என சொல்லியவன் காரை எடுத்ததுமே உயர் வேகத்தில் பறக்க விட்டான்.

“ஐயோ மெதுவா போங்க”

“அப்போ வாய் பேசாம வா” என வேகத்தை குறைத்தவன், நேராக நீதிமன்றத்தில் கொண்டுப் போய் நிறுத்தினான்.

வெளியேப் பார்த்த நிலா

“இங்க எதுக்கு வந்துருக்கோம்” என தயங்கி தயங்கி கேக்க..

“சொல்றேன்” என அவள் அருகில் போனவன், அவளை இழுத்து இதழோடு இதழ் சேர்த்து ஆழமான முத்தம் ஒன்றை பதித்தவன்.

“நான் எது செஞ்சாலும் காரணம் இருக்கும்ன்னு நம்பறியா?” என்றான்.

முத்த மயக்கத்தில் இருந்து வெளியே வராதவள் “ம்ம்” என தலையை ஆட்ட.. அவள் தலையை  நீவி விட்டவன்,  “வா போலாம்”  என உள்ளே அழைத்துச் சென்றான்.

“சார் இன்னும் திரு வரல”  என்றார்  ஏட்டு

“வந்துடுவான் கமிஷ்னர்  எங்க இருக்காரு.?!

“ஆன் தி வே ன்னு மெசேஜ் அனுப்பிருக்காரு”

“இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு செக்யூரிட்டிலா டைட்டா இருக்கான்னு செக் பண்ணிட்டீங்களா?”

“ம்ம் பண்ணிட்டேன் சார். எக்ஸ் மினிஸ்டர் வண்டியை மட்டும் செக் பண்ணி உள்ளே அனுப்பிருக்கோம் மத்த வண்டியிலா உள்ளே விடல சார்”

“இந்த கேஸ் முடிஞ்சி ரோகன் மறுபடியும் ஜெயிலுக்கு போற வரைக்கும் எந்த வண்டியும் உள்ளே வரக்கூடாது அதுல கவனமா இருந்துக்கோங்க”

“சரிங்க சார்..”

“வா வியா”  என அவளது கையைப் பிடித்துக் கொண்டு நீதிமன்றத்தின உள்ளே நுழைந்தான்.

நிலாவிற்கு எதுமே புரியவில்லை  இவனுடைய வேலைக்காக வந்திருக்கிறோம் என்று புரிகிறது அதற்கு அவள் எதற்கு? என்று தான் புரியவில்லை.

“ஏங்க”

“ம்ம்”

“இங்க நான் எதுக்கு?”

“போக போக தெரியும்”

“என்னவோ இருக்கு”  என அமைதியாக நின்றுவிட்டாள்.

நீதிமன்றம் தொடங்கி விட்டது கந்தவேல் ரோகனுடன் வந்துவிட்டான். ரோகனைப் பார்த்ததும் அமர்ந்திருந்த நிலா எழுந்து நின்று விட்டாள்.

“என்னடி?”

“இவன் இவன்.?”

“நீ அடிச்ச அதே ஆளு தான்  ரோகன் எக்ஸ் மினிஸ்டர் சூர்யராஜோட பையன்”

“நான் அடிச்சது எப்படி.?”

“எல்லாமே எனக்கு தெரியும் உக்காரு” என அவள் கையைப் பிடித்து அமர வைத்தான்.

“இவனை நானே போலீஸ்ல புடிச்சி குடுக்கணும்னு நினைச்சேன்”

ம்ம் என்ற நந்தன் அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டான்.அவன் முகத்தில் ஒரு கலவரம் இருந்துக் கொண்டே இருந்தது.

“நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“இல்ல நீ அங்க கவனி” என்றான்.

வக்கீல் ரோகனுக்கு ஆதரவாக வாதடிக் கொண்டிருந்தார்.

“மிஸ்டர் நந்தன் இவருக்கு எதிரா ஆதாரம் இருக்குன்னு சொன்னிங்களே எங்க?” என நீதிபதியே கேக்க..

அவ்வளவு நேரமும் வாசலையும் வழக்கையும் மாறி மாறிப் பார்த்தவன். இதற்கு மேல் வாய்ப்பில்லை என்றதும் நிலாவின் கையைத் தூக்கி விட்டான்.

“இவங்களா?”

“ஆமா”

“கோர்ட்ல ஏற்கனவே  பதிவு பண்ணிருக்கீங்களா மிஸ்டர் நந்தன்?”

“ஆமா  சார்.”

“நிலவியா நிலவியா நிலவியா”  என மூன்று முறை அழைக்க, பேயறைந்த நிலையில் இருந்தவளை

“உன்னைய தான் கூப்பிடறாங்க போ” என்றான் அழுத்தமாக.

“ம்ம்” என்றவள் முன்னால் இரண்டு எட்டு எடுத்து வைக்க,  அதற்குள் திரு வந்துவிட்டான்

“ஐயா இந்த ரோகனுக்கு எதிராவும், எக்ஸ் மினிஸ்டர் சூர்யராஜிக்கு எதிராவும் எவிடென்ஸ் இதுல இருக்குங்க”  என  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஒரு பைலை நீட்ட ,அப்போது தான் நந்தனின் முகம் தெளிந்தது.அவன் உதட்டின் ஓரம் நக்கலாக புன்னகை ஒன்று தோன்ற அதைப் பார்த்த ரோகனிற்கு அவனை கொல்ல வேண்டும் என்ற வெறி அனல் பூத்த நெருப்பாக உள்ளே கனன்றுக் கொண்டிருந்தது.

திருவிடம் இருந்து ஆதாரங்களை வாங்கிய நீதிபதி நிலாவையும்  ஒரு பார்வைப் பார்த்தவர்  திரும்பி நந்தனைப் பார்க்க அவனோ தலையை இருப்பக்கமும் அசைத்து மறுப்புக் கூறினான்.

நொடியில் நடந்த மறைமுக உரையாடலை யாரும் பார்த்திருக்க முடியாது. நீதிபதி. ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய சூர்யராஜிற்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.

அதில் அனைத்து தவறுமே மகன் செய்ததாக தான் இருக்கும், அரசியலில் இருப்பவர் தன் மீது தவறை வைத்துக் கொண்டால் நாளை தன் அரசியல் வாழ்க்கை பாதிக்கப் படும் என்றும், மகன் மீது இருந்தால் அவனுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லையென்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்  என்று தான் அனைத்து தவறுகளின் ஆதாரங்களையும் ரோகனின் பெயரில் வைத்திருந்தார்., இப்போது அதுவே அவனுக்கு தண்டனை வாங்கிக் குடுக்க ஏதுவாக இருந்தது.

முழு ஆதாரங்களையும் பார்த்த நீதிபதி..  ரோகனுக்கு தூக்குத் தண்டனையைத் தீர்ப்பாகக் கொடுத்தார்.

எல்லாம் முடிந்து விட்டது சூர்யராஜை உள்ளே தள்ள நினைத்த நந்தனுக்கு ரோகன் மட்டும் உள்ளேப் போனது சற்று வருத்தம் தான்.

“டேய் ஆசிஸ்டன்ட் கமிஷ்னரே உன்னய சும்மா விட மாட்டேன்டா.எதுக்கு என்கிட்ட பகைச்சிட்டோம்ன்னு தினம் தினம் நீ அழுகல நான் சூர்யராஜ் இல்லடா”

“பார்க்கலாம் தலைவரே  சீக்கிரம் உங்களையும் உங்க பையனோடவே அனுப்பி வைக்கறேன்” என்று கழட்டி இருந்த கூலரை  கண்ணில் மாட்டிக் கொண்டான்.

“சார்”

“ம்ம்”

“ரோகனை மத்திய சிறைச்சாலை சேலத்துக்கு கூட்டிட்டுப் போறாங்களா உங்களை சைன் பண்ண கூப்பிட்டாங்க.”

“ம்ம் வரேன்” என்றவன் திரும்பி நிலாவை  ஒருமுறைப் பார்த்துக்கொண்டான்.

அவளோ என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருக்க. அவள் அருகில் சென்றவன்.

“இங்கையே வைட் பண்ணு நான் சைன் பண்ணிட்டு வந்துடறேன்” என்றான்

“ம்ம் சரிங்க” என அவள் தலையை ஆட்ட, “ என்ன சொன்னாலும் தலையை ஆட்டும் தலையாட்டி பொம்மைடி நீ “ என சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்துவிட.. அவள் அருகில் ஏட்டு  ஒருத்தர் வந்து நின்றார்.

“அம்மா.. என்னய தெரியுதுங்களா.?” என அவர் தன்னை அடியாளப்படுத்த முயன்றார்.

“ம்ம் நீங்க தானே என்னோட வண்டியைக் கொண்டு வந்து கொடுத்தீங்க”

“ஆமா அம்மா..”

“எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்ம்மா, சார் நினைச்சது மாதிரி கேஸ் நல்லபடியா முடிஞ்சிடுச்சி. திரு சார் வரலைன்னா உங்களை தான் சாட்சி சொல்ல சொல்லிருப்பாங்க, நல்ல வேளை அவர் வந்துட்டாரு”என்றார்

அதற்கு நிலா புன்னகைக்க.

“நீங்க சாட்சி சொல்லணும்ன்னு தானே சார் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டாரு”  என நிறுத்த நிலாவின் முகத்தில் இருந்த புன்னகை. மறைந்து விட்டது

“என்ன அண்ணா சொல்றிங்க எனக்கு புரியல.?”

“ஆமா அம்மா உங்களை சார் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணமே நீங்க ரோகனுக்கு எதிரா சாட்சி சொல்லணும்ன்னு தான்”.

“ஹா காமெடி பண்ணாதீங்க அண்ணா சாட்சி சொல்லல்ல யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா?, சும்மா வந்து சாட்சி சொல்லுன்னு அவர் சொல்லிருந்தாலே நான் சொல்லிருப்பேன்”

“நான் காமெடி பண்ணலம்மா உண்மை  தான் சொல்றேன் சார் கமிஷ்னர் ஆகணும்னா இந்த கேஸ்ல ஜெயிக்கணும், அதுக்கு நீங்க அவர் பக்கத்துலயே இருக்கனும். அதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு”

“சரி நீங்க சொல்றதே கரெக்ட்ன்னு வெச்சிக்கிட்டாலும் இப்போ நான் சாட்சி சொல்லலையே”

“இப்போதான் திரு சார் எவிடென்சைக் கொண்டு வந்துட்டாரே நேத்து வரைக்கும் இந்த எவிடென்ஸ் நந்தன் சார்கிட்ட இல்லை நீங்க தான் அவர்கிட்ட இருந்திங்க”.

“அதுக்கு என்னைய கல்யாணம் பண்ணனும் அவசியமில்லை அண்ணா”

“உங்க கூட டூ வீக்ஸ் நைட் டைம் ஸ்பென்ட் பண்ணாரு தானே” என்றதும் நிலாவின் கண்கள் இடுங்கியது.

அதையும் உணராமல்  அவர் சொல்லிக்கொண்டே போனார்.

“அதுக் கூட சூர்யராஜ் உங்களை எதும் பண்ணிடக் கூடாதுன்னு  சேப்ட்டிக்கு தான்,நந்தன் சாரை மீறி உங்களைத் தொட முடியாது அதனால தான் நைட்  முழுக்க உங்கக் கூட இருந்தாங்க”.என என்னவோ நந்தன் மனதில் புகுந்து பார்த்ததுப் போல் பேசினார்.

“இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க.?”

“நந்தன் சார் ரொம்ப நல்லவரு,அவர் உங்களை எந்த சூழ்நிலையில வேணும்னாலும் கல்யாணம் பண்ணியிருக்கலாம் , ஆனா கடைசி வரைக்கும் நல்லா வெச்சிப் பார்த்துப்பாரு, அவர் கூட நீங்க சந்தோசமா இருக்கனும்ன்னு தான் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னேன்”. என்றவர் நந்தன் வருவதைப் பார்த்ததும் “அப்போ நான் வரேம்மா” என அங்கிருந்து சென்று விட்டார்.

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு சென்று விட்டார் நிலா குழம்பி தவித்தாள்.

அவளுக்கு தெரியும் ஏதோ காரணத்திற்காக தான் தன்னை மிரட்டி திருமணம் செய்துக் கொண்டான் என்று ஆனால் அது இதுவாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை இப்போதும் கூட முழுசாக நம்ப முடியவில்லை.

‘சாட்சி சொல்றதுக்காக யாராவது கல்யாணம்  பண்ணிப்பாங்களா..?அவருக்கு இது முதல் கேசும் இல்ல, கடைசி கேசும் இல்ல. இப்படி கேசுக்கும் சாட்சி சொல்லனுங்கறதுக்காக கல்யாணம் பண்ணிப்பாரா? “ என அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டாள்,தெளிந்திருந்தவளை நன்றாக குழப்பி விட்டு சென்றிருந்தார் அந்த  ஏட்டு.

“என்ன சார் நான் சொன்ன மாதிரி சொன்னிங்களா?”

“ம்ம் சொல்லிட்டேன் சரஸ்வதி மேடம்”

“இதுல பத்தாயிரம் இருக்கு எடுத்துகோங்க,  நாலுநாள் லீவ் போட்டுட்டு குடும்பத்தோட எங்கையாவது போய்ட்டு வாங்க மீதி பணத்தை அக்கௌன்ட்ல போட்டுவிட்டுடறேன்”

“சரி சரஸ் மேம் . அந்த பொண்ணு நான்தான் சொன்னேன்னு நந்தன் சார்கிட்ட சொல்லிடுச்சின்னா என்ன பண்றது.?”

“அவ சொல்ல மாட்டா, தெளிஞ்சா தானே சொல்லுவா , தெளிய தெளிய அடிப்பேன் அப்பறம் எப்படி சொல்லுவான்னு பார்க்கறேன்?” என கேலியாக புன்னகைத்தாள்.

சரஸ்வதி தான் நிலாவின் மனதை  கலைக்க ஏட்டுவை ஏவி விட்டது. நிலா நந்தனோடு  ஒரு இரவுக் கூட நிம்மதியாக வாழக் கூடாது எப்படியாவது நிலாவை துரத்திவிட்டு அவள் இடத்தைப் பிடித்தே ஆக வேண்டும் என்பது ஒன்று தான் குறி.

நந்தன் நிலாவின் அருகில் வர அவனின் அலைபேசி அடித்தது.

உஷா தான் அழைத்திருந்தாள் . எடுத்து காதில் வைத்தவன்

“சொல்லு உஷா..” என்க 



“நான் இருக்கும் போது நீ எதுக்கு அதெல்லாம் யோசிக்கற?. அப்பார்ட் பண்ணாத பெத்துக்கோ,”



“யாரும் எதும் சொல்ல மாட்டாங்க  நான் வந்து பேசிக்கறேன் வை” என அழைப்பைத் துண்டிக்க,நிலா விக்கித்துப் போய் நின்றாள்.

உஷா என்றப் பெயரைக் கேட்டதுமே வியர்க்கத் தொடங்கிவிட்டது. அதில் அவள் மாசமாக இருக்கிறாள் என்றதும் உடலில்  நடுக்கம் தோன்ற நந்தனைப் பார்த்தாள்.

“வியா கார்ல ஏறு உன்னைய விட்டுல விட்டுட்டு நான் வெளிய போகணும்” என்றவாறே காரில் ஏறி அமர்ந்தான்.

“என்னைய விட்டுட்டு எங்கப் போறிங்க?” என தட்டு தடுமாறி கேட்டுவிட்டாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன். “லுக் வியா எனக்கு ஆயிரம் வேலை இருக்கும் ஒவ்வொரு தடவையும் எங்க போறேன்னு சொல்லிட்டே இருக்க முடியாது “

“இல்ல இன்னைக்கு விருந்து”

“அதை நான் பார்த்துப்பேன்” என  பட்டென்று அவனிடம் இருந்து பதில் வரவும், சோர்ந்து போய்விட்டாள். அவளுக்கு தான் நன்கு தெரியுமே அவன் உஷாவைப் பார்க்கப்போகிறான் என்று.

அதன்பிறகு எதுவும் பேசாமல்  வீடு வந்து சேர்ந்தாள்.





Leave a comment


Comments


Related Post