Total Views: 1380
யுகி எழ முடியாமல் எழுந்து அமர்ந்தவன், படுக்கையில் இருந்து கீழே இறங்கப் பார்க்க, பிடிமானம் இல்லாமல் கைப் பட்டு குடிக்க வைத்திருந்த பாட்டில் கீழே விழ.. அந்த சத்தத்தில் திரும்பி நந்தன்
“கூப்பிட்டா உன் கிரீடம் இறங்கிடுமா?” என்றவாறே அவன் அருகில் சென்றான்.
“இறங்கி நடந்து பார்க்கலாம்ன்னு தான்.”
“முதல்ல பாத்ரூம் போ, டீ குடிச்சதுக்கு அப்புறம் நடக்கலாம்”. என்றவன் யுகியின் பேச்சைக் கேக்காமல் அவனைத் தூக்கிக் கொண்டு போய் குளியலறையில் விட்டான்.
“நீ போ நான் பார்த்துப்பேன்”,என்ற யுகிக்கு மார்த்தியோ,வளவனோ இருந்தால் இந்த தயக்கம் வருவதில்லை. நந்தன் இருந்தால் மட்டும் ஏதோ போல் இருந்தது. இவ்வளவு நாளும் பேசாமல் விலகி இருந்தவன் இன்று அனைத்தும் செய்தால் தடுமாற்றம் எழ தானே செய்யும்.
“ஏதாவது சொல்லிடப் போறேன் வந்த வேலையைப் பாருடா” என்றவன் நிலா திரும்பிப் படுக்கும் சத்தம் கேட்டதும், கதவை முழுவதுமாக மூடிவிட்டு அவனும் உள்ளே இருந்துக் கொண்டான்.
பலாப்பழம் பார்ப்பதற்கு கரடு முரடாகவும் முள்ளாகவும் தான் தெரியும், ஆனால் அதனுள் இருக்கும் சுளை தேனினும் இனிமையை வாரி வழங்கும், நந்தன் பலாப்பழம் போன்றவன், முள் என்று விலகிப் போனால் அவனுள் இருக்கும் இனிமையை அறிய முடியாமலே போய்விடும்.
யுகி நந்தனையேப் விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா சைட் அடிக்கிறியா?”.
“ஹும்ஹும்”
“பின்ன”
“உன்கிட்ட இதை எதிர்ப்பார்க்கல”
“எதை?” என்று நந்தனும் கேக்கவில்லை, யுகியும் சொல்லவில்லை.
மீண்டும் யுகியை தூக்கிக் கொண்டு படுக்கையில் படுக்க வைக்க, நிலா படுத்திருந்த படுக்கையை மடக்கி வைத்து அறையைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
“காபி வாங்கிட்டு வரேன்” என நந்தன் கிளம்ப
“எனக்கு அப்படியே மில்க் பிக்கிஸ் ஒன்னு” என அவசரமாக சொன்னாள் நிலா.
நந்தன் அவளை திரும்பி முறைக்க யுகிக்குத் தெரியாமல் நந்தனைப் பார்த்து கண் அடித்தாள்.
நந்தனுக்கு ஜிவென்று இருந்தது. “ஹப்பா எப்படி மயக்கறா..?”என உள்ளுக்குள் சிலிர்த்து அடங்கினாலும், வெளியே முகத்தை உர்ரென்று வைத்தவாறே சென்று விட்டான்.அந்த உணர்வு மிகவும் பிடித்திருந்தது. ஒரு கண் சிமிட்டலே இந்த அளவிற்கு கிக்கொடுத்தால் நிலா துரத்தி துரத்தி காதலித்தால் எந்த அளவிற்கு கிக்காக இருக்கும்.என்ற யோசனையிலையேகடைக்குப் போனான்.
“பூனை”
“ம்ம்”
“இன்னைக்கு கிளம்பிடலாம் தானே”
“இதையே ஆயிரம் தடவை கேட்டுட்டடா நீ என்ன சின்னக் குழந்தையா?”
“எனக்கு இங்க இருக்கவே புடிக்கல”.
“போய்டலாம் விடு” என பொருள்களை பைகளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“பூனை”
“இப்போ என்னடா?”
“நந்துவை கவனிச்சியா?”
“அவனை கவனிக்கறது மட்டும் தானே இப்போ முழு நேர டியூட்டியா பார்த்துட்டு இருக்கேன்”. என நினைத்தவள்.அதை வெளியே சொல்லாமல்.
“இல்லையே ஏன்”
“இந்த அளவிற்கு என்னைய கேர் பண்ணிப்பான்னு நான் நினைக்கல.எந்த இடத்துலயும் முகம் சுழிக்காம பார்க்கறான்”.
“அதுல என்ன இருக்கு தம்பிக்கு தானே செய்யறாரு.?”
“நம்ப செய்யறோம்ன்னா அது வேற. ஏனா நம்ப குணமே அது தான். அவன் செய்யறது தான் ஷாக்கா இருக்கு”.
“அவரும் மனுஷன் தானே”
“ஆறடி உடம்பை வெச்சு மனுஷன்னு சொல்லிட முடியாது, அதுக்காக அடிப்படை குணம் இருக்கனும்.”
“அவர்கிட்ட இல்லைன்னு சொல்றியா?”
“இவ்வளவு நாள் என் கண்ணுக்கு தெரியலைன்னு சொல்றேன்”.
“அப்படியும் சொல்லலாம் அவருக்கு கேர் பண்ண தெரியுது அதை ஓபனா சொல்ல தெரியல. எனக்கு நீ தான் உசுரு,நீ இல்லனா இருக்க மாட்டேன்னு இப்படிலாம் காதல் வசனம் பேசத் தெரியல. அதை செயல்ல காட்டுறாரு” என்றவளுக்கு அந்த ஒரு நாள் இரவு கண் முன் வந்துப் போனது.
நேற்று யுகியைப் பார்க்க வந்த கமிஷ்னர் நிலாவைப் பார்த்ததும், நந்தனின் புகழைப் பாட ஆரம்பித்துவிட்டார்.
அப்போது சரஸ்வதியை இடம் மாற்றியதைக் கதையைச் சொல்ல, அதற்கு காரணம் அவளுக்கு தான் தெரியுமே.
நந்தனின் மீதிருந்த காதல் அவன் செய்யும் செயலினால் சிறிது சிறிதாக இப்போது தான் வெளி வரத் தொடங்கியிருக்கிறது நிலாவிற்கு.
“என்ன நான் பேசிட்டே இருக்கேன் நீ சிலை மாதிரி நிற்கற?”என யுகி கத்தவும் , “கேக்குது யோசனையில் நின்னுட்டேன், சொல்லு”என்றவள் மாத்திரைகளை சரிப்பார்த்து எடுத்து வைத்தாள்.
“யுகி டேப்லெட்லா சரியா போடணும்”
“அதான் நீ இருக்கியே குடுக்காம விட்டுடுவியா?”
“வீட்டுக்கு போனதும் வேலை இருக்கும்டா”
“என்னய கவனிக்கறதை விட்டுட்டு வேற என்ன வேலை உனக்கு?”
யுகியின் கூற்றில் பழைய நிலாவாக இருந்தால் “அதானே” என்றிருப்பாள். புதிய நிலாவிற்கு நந்தனை அவள் பக்கம் திரும்ப வைக்கும் பெரிய வேலை இருக்கிறதே, பிறகு எப்படி யுகியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.
ஒரு மாதம் யுகியை தவிர வேற யாரைப் பற்றியுமே யோசிக்கவில்லை. நந்தனின் பாராமுகம் மனதை வாட்டினாலும், யுகியை சரி செய்வது மட்டுமே அவளது நோக்கமாக இருந்தது. வீட்டிற்குப் போனப் பிறகும் அப்படியே இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிடும்.அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதுவும் இல்லாமல் நந்தனின் பக்கம் மனம் சாய ஆரம்பித்து விட்டது அவனின் அருகாமை வேணும் என மனம் கெஞ்ச அனைத்தையும் யோசித்தாள்.
நந்தன் காபியுடன் உள்ளே வர யுகி அமைதியாகி விட்டான்.
“யுகி”
“ம்ம்”
“வருங்கால சிட்டி கமிஷ்னர் டீ கடைக்கு போய் நின்னு, காபி வாங்கிட்டு வரதுலாம் நல்லா இருக்குல்லடா.”என நிலா நந்தன் கையில் இருக்கும் காபியை வாங்கி பிரிக்க.
“இவ எதுக்கு என்னைய கோர்த்து விடறான்னு தெரியலையே”, என முழித்துக் கொண்டே நந்தனையும் நிலாவையும் மாறி மாறிப் பார்த்தான்.
நந்தன் அவள் பேச்சை அலட்டிக் கொள்ளவே இல்லை. அப்போது தான் அறைக்கு வந்த செய்திதாளை எடுத்தவன், படிப்பது போல் நிலா செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.
நந்தன் வாங்கி வந்த கவரில் நிலா கேட்ட பிஸ்கட்டு ஒரு கட்டே இருந்தது.
“அடப்பாவி ஒன்னு வாங்கிட்டு வாடான்னா ஒரு கட்டே வாங்கிட்டு வந்துருக்கான் இதுல என்மேல் கோவமா இருக்கானா. ம்ம் இதுக் கூட நல்லா தான் இருக்கு” என அவனைப் பார்க்க அவ்வளவு நேரமும் அவளுடைய முகப்பாவனைகளை ஒவ்வொரு சொட்டாக பருகிக் கொண்டிருந்தவன், நிலாப் பார்க்கிறாள் என்றதும் முகத்தை செய்தித்தாள் கொண்டு மறைத்து விட்டான்.
இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் யுகி இல்லை. அவன் மனம் முழுவதும் வீட்டிற்கு சென்றதும் நிலா என்ன கேக்கப் போகிறாள் அவளுக்கு உண்மை தெரிந்து விட்டதா? இல்லை தெரியவில்லையா? தெரிந்தால் என்ன சொல்லி சமாளிப்பது? என பலக் கேள்விகள் மனதில் செல்லாக அரித்துக் கொண்டிருந்தது.
மூவருக்கும் காபியை ஊற்றி அவரவர் கையில் கொடுக்க. நந்தன் மட்டும் வாங்காமல் பார்த்தான்.
“இந்தாங்க”.
அவள் என்ன பேசினாலும் பேசவில்லை.
“டேபிள் மேல வைக்கிறேன்” என நாயாக குரைத்தாள்..
அதில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன், மேஜையின் மீது இருந்த காபியை எடுத்துக் கொண்டான்.
“இவ்வளவு நாளும் தள்ளி தள்ளிப் போன்னில இனி நீயே நெருங்கி நெருங்கி வரணும். எனக்கு கொடுக்காத, எல்லாத்தையும் நீதான் கொடுக்கணும் அப்போதான் உங்கிட்ட பேசுவேன்” என அடம்பிடிக்கும் குழந்தையாக மாறி நின்றான் நந்தன்.
நிலா யுகியின் காபியில் பிஸ்கட்டை நனைத்து அவனுக்கு ஊட்டிவிட. அதைப் பார்த்த நந்தனால் அவளின் செயலை எளிதாக கடக்க முடிந்தது.
பத்து மணி வரையிலும் மருத்துவர் வரவில்லை. அதற்குள் முடிக்க வேண்டிய அனைத்தையும் நந்தன் முடித்து வைத்திருக்க. நிலா கிளம்பி தயாராக இருந்தாள்.
“எப்போ பூனை டாக்டர் வருவாங்க?”
“அடேய் கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா, எப்போ வருவாங்க வருவாங்கன்னா நான் என்ன மடியிலையா கட்டி வெச்சிருக்கேன், வரும்போது வருவாரு அவ்வளவு அவசரமாக வீட்டுக்குப் போய் என்ன பண்ண போறேன்னு தான் தெரியல.
“பேஸண்டா இங்க இருந்துப்பாரு அப்போ தெரியும்”.
“அது மட்டும் தாண்டா இருக்கல அதையும் இருக்க வெச்சிடுவீங்க” என்றவள்.மருத்துவர் உள்ளே வரவும் எழுந்து நின்றுக் கொண்டாள்.
அவர் பின்னால் நந்தன் உள்ளே வந்தான்.
அவன் அருகில் சென்று நின்றுக் கொண்டவள்.
“நேரா வீட்டுக்கு தானே போறோம்.என்னோட டிரஸ் எல்லாம் பழசு ஆகிடுச்சு நாலு செட் டிரஸ் எடுத்துட்டு போவமா விஜய்?”.
விஜய் என்றதும் அவன் முறைக்க.
“வாங்க போங்கன்னு இவ்வளவு நாளும் மிரட்டி கூப்பிட வெச்சீங்கள, இதுக்கு அப்புறம் நீங்க பேசற வரைக்கும் விஜய்ன்னு தான் கூப்பிடுவேன், அப்போ அப்போ ஒரு புஃலோல வாடா போடாலாம் வரும் கண்டுக்கக் கூடாது” என்றாள்
அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்து.
“என்னமோ கூப்புட்டு போ நான் பேசறதா இல்ல”. என்பது போல் அவன் சிலையாக நிற்க.
“வீட்டுக்குப் போய் வெச்சிக்கறேன்டா உன்னைய” என பல்லைக் கடித்தாள் நிலா.
🤣🤣🤣Enna dhillu unaku nilamai vaada poda level ku vandhuta future la nandhan nilamai🤣🤣