இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -106 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 12-08-2024

Total Views: 1705

அவன் போனதும் சோபாவில் அமர்ந்தவள்,!என்ன நிலா இந்த அளவுக்கு சீப்பா இறங்கிட்ட.. இதுலாம் உனக்கு தேவையா.? “

“எனக்கு தேவை இல்லை, அவருக்கு தேவை. வாய் தான் என்னய வேண்டா வேண்டான்னு சொல்லுது. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் கண்ணு என்னய தான் தேடுது.. இவ்வளவு நாள் பயத்துல தள்ளிப் போனேன் இப்போதான் எனக்கு பயமே இல்லையே, அப்புறம் எதுக்கு நான் தள்ளிப் போகணும், அவரே வந்து வாடின்னு சொல்ற வரைக்கும் விடப் போறதில்ல” என முடிவு செய்தவள் உதட்டில் இருந்த பாலை துடித்துக் கொண்டாள்.

இது அவளாக கொடுக்கும் இரண்டாவது முத்தம். இருவருக்குமே தித்திப்பாக தான் இருந்தது.

அவள் மனம், ‘அப்போ அந்த உஷா.. அவ சொன்னதை நீ நம்பலையா.?’என கேள்வி கேக்க

“நம்பலை, நந்தனுக்கு என்ன தேவைன்னு புரிஞ்சிகிட்டேன், உஷா தேவையா இருந்தா கண்டிப்பா என்னைய வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டே இருந்துருப்பாரு, இப்படி ஒரு கல்யாண ட்ராமா பண்ணி என்னைய கட்டிக்கணும்ன்னு அவசியமில்லை,  அவன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன், அவன் கண்ணும் மனசும், உடம்பும் என்னைய  மட்டும் தான் தேடுது.சின்ன வயசுல இருந்து பார்த்த நந்தனை எனக்கு தெரியாதா..?பழைய நந்தனா இருந்திருந்தா கண்டிப்பா  எங்க கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி அண்ணன் ஷாலினியை கல்யாணமே நடந்துருக்காது.அவரால அவர் ஜாதியில இருந்து இறங்கி வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்க முடியுதுன்னா அவர் மனசுல நான் இருக்கேனு தானே அர்த்தம்,

அப்புறம் இந்நேரம் நான் வாடா போடான்னு சொன்னதுக்கு பல்லு நாலு இல்லாம இருந்துருப்பேன்.  இன்னும் எத்தனையோ மாற்றம் அவர்கிட்ட இருக்கு. அதும் அந்த  ஒரு நாள் நைட் என்னய ஹேண்டில் பண்ண விதமே இது புது நந்தன்னு சொல்லுவேன், இதுக்கு  மேல என்ன வேணும் சொல்லு, அவர் மாறுனதுக்கு காரணம் நானா கூடாது இருக்கலாம் என்மேல அவர் வெச்ச காதலாக் கூட இருக்கலாம்”

“இருக்கலாம் இருக்கலாம்ன்னு தானே சொல்ற.? ஒருவேளை இல்லாம போயிட்டா”

“அதுக்கு வாய்ப்பே இல்ல அவர் மேல நம்பிக்கை இருக்கு பாப்போம்” என வீட்டிற்குச் சென்று விட்டாள்.

நிலாவும் ஷாலினியும் ஒரே அறையில் படுத்துக் கொண்டனர்.வளவன் யுகியுடன் தங்கிக் கொண்டதால் ஷாலினி தனியாக இருக்க வேண்டுமே என நிலாவை உடன் அழைத்துப் படுக்க வைத்துக் கொள்ள.

நிலாவிற்கு மன்னவனின் அறையைப் பார்த்துக்கொண்டே தூங்க வேண்டும் போல் இருந்தது.

உடனே ஷாலினியை திரும்பிப் பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மெதுவாக பூனை போல் பதுங்கி பதுங்கி எழுந்து மேலே அவளது அறைக்குப் போய்விட்டாள்.

நந்தனின் அறையில் விளக்கு எரி யவில்லை. உறங்கி விட்டான் போல என நினைத்தவள், காலையில் இருந்து செய்த வேலையின் அலுப்பின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்ச படுத்து விட்டாள்.

நண்பகல் இரண்டு மணியை தாண்டி இருக்கும் போது நந்தன் மெதுவாக நிலாவின் அறைக்கு வந்தான்.

நந்தனின் அறையைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் கதவை தாழிடாமல் அப்படியே படுத்துவிட்டாள்.

நந்தன் வீடு இருக்கும் ஏரியா என்பதால் அந்தப் பகுதியில் கூர்கா நடமாட்டம் எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். அதையும் தாண்டி காவல் அதிகாரிகள் வேறு அடிக்கடி ரோந்து போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் திருடர்கள் பயமெம்பது இல்லை. அந்த எண்ணத்திலும் நிலா அப்படியே உறங்கி இருக்க.

உள்ளே வந்த நந்தன். நிலாவை ஆழ்ந்து பார்த்தான்.

“ராட்சசி, கதவை கூட லாக் பண்ணாம தூங்கறதைப் பாரு, என்னடி பண்ணி தொலைச்ச என்னைய, உன்னோட மொத்த லவ்வும் எனக்கு மட்டும் தான் வேணும்னு செல்பிஸா இருக்கேன். இன்னைக்கு காரைக் கொண்டுபோய் லாரியில்லையே அடிச்சி சாத்திரிப்பேன். அந்த அளவுக்கு என்னோட  ஒவ்வொரு அணுவுலையும் நீதான்டி இருக்க” என்றவன் அவள் பாதத்தின் அருகில் அமர்ந்தான்.

கால் கொலுசு அவன் பெயரைத் தாங்கியவாறு அவனைப் பார்த்து சிரிக்க.

“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னைய உன் காலுக்கு கீழே கொண்டு வந்துட்டடி.”  என அந்த கொலுசை வருடிவிட்டான்.

ஆம் அன்று அவன் போட்டு விட்ட கொலுசுவில் அவன் பெயர் பதிக்கப்பட்டிருந்தது. நந்தனே விரும்பி தான் இதுப் போல். தயாரிக்கச் சொன்னான். அவன் காலைக் கூட அவன் பெயர் தான் வருடிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும்  காதல் தீவிரவாதி இவன்.

அவள் முத்தம் கேட்டு  இல்லை என்று சொன்னால் அவன் எப்படி சிறந்த காதலனாக இருக்க முடியும்.

அவள் பாதத்தில் தன் தடித்த இதழைப் பதித்து முத்தமிட்டான்.

நிலாவின் பாதங்களுக்கு பிறகு நாளை அவன் குழந்தையின் பாதங்கள் தான் அவன் இதழை தீண்டும்.

அவனின் அகந்தையை அழித்தது இந்த பூந்தளிர்..

நிலா தூக்கத்திலும் அவன் மீசை முடி உரசலில் கூச்சம் கொண்டு நெளிய.. மீண்டும் மீண்டும் முத்தம் வாங்கியது அந்த பாதங்கள்..

“விஜய் கூசுதுடா...” தூக்கத்தில் உளறினாள். அவனின் பரிசத்தை உணர்ந்தவளை அவனை அன்றி யார் தீண்டிட முடியும்.

அவள் பேசும் கொஞ்சும் மொழியை கேட்பதற்காக அவனது காதுகளை கூர்மையாக்கி காத்திருந்தான் மீமிகு காதலன்.

அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை என்றதும் மீண்டும் ஒரு முத்தம் பதித்து விட்டு வந்த சுவடே தெரியாததுப் போல் சென்று விட்டான் இந்த காவல் கள்ளன்.

விடியல் யாருக்கு எதை வைத்திருந்ததோ நிலாவிற்கு சிறப்பாக வைத்திருந்தது.

காலை எழுந்ததும் குளித்துவிட்டு ஷாலினியும் நிலாவும் மீண்டும் நந்தன் வீட்டிற்கு வந்து விட்டனர்.

“வந்துட்டீங்களா... இன்னைக்கும் சொந்தக்காரங்க தெரிஞ்சவீங்கலாம் வந்த வண்ணமா இருப்பாங்க, நிலா நீ போய் சரசு அக்காகிட்ட நாலு லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடு”. என்று காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார் மணி.

“சரிங்க அத்தை”  என்றவள் பால் வாங்கப் போய்விட்டாள்.

வீட்டில் ஆளுக்கு ஒரு வேலையை செய்ய,நந்தன் எழுந்ததும் யுகியின் அறைக்குச் சென்று அவனை சக்கர நாற்காலியில் வைத்து வெளியே அழைத்துச் சென்று விட்டான்.

“டேய் அண்ணா இவ்வளவு காலையில என்னைய எதுக்குடா கூட்டிட்டு வந்த.?”

“வாக்கிங் போக”

“வீல் சேர்ல இருந்துட்டு நான் என்னடா வாக்கிங் போகப் போறேன்”.

“சும்மா ரூமுக்குல்லையே அடைஞ்சு கிடக்கக் கூடாது. காலையில இப்படி காத்தாட வந்தா தான் உடம்பு நல்லா இருக்கும்” என்றவனின் முகம் என்றும் இல்லாமல் இன்று பரவசமாக இருந்தது.

“ஏதாவது விசேஷமா?” 

“யாரை கேக்கற?” என்றவாறே தன் உடலை அசைத்து நெற்றி முறித்தவன் அங்கையே நின்று உடற்பயிற்சி செய்தான்.

“உன்னோட மூஞ்சி ரொம்ப பிரைட்டா இருக்கே அதான் கேட்டேன்..” என்றதும், நேற்று இரவு நிலா செய்த பால் இடமாற்றச் சேட்டைகள் நினைவிற்கு வந்து விட்டது.அதில் இன்னும் முகம் பிரகாசம் ஆக.

யுகி அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“என்னடா.?”

“இத்தனை வருசத்துல உன்னோட முகம் இவ்வளவு பிரைட்டா இருந்து இப்போதான் பார்க்கறேன், எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?. இப்படியே இருடா”.

அவனது ராட்சசியை தவிர வேற யாரால் இந்த பொலிவு கிடைத்துவிடப் போகிறது.

“அது நம்ப கையில இல்லை”.

“பூனை கையில இருக்குன்னு சொல்றியா?”

“மேபி. “ என்றவனின் மீசை துடித்தது. அவள் பாதம் தொடும் போது எந்த கர்வமும் இல்லை, அகந்தை எங்கு போனது என்றுக் கூட தெரியவில்லை, மற்றவர்களிடம் தான் தான் பெரியவன் என காட்டும் திமிரு கூட அவள் பாதம் தொட்டப் போது இல்லை.

சொல்லப்போனால் மீண்டும் மீண்டும் அவளின் பாத மென்மையை இதழ்கள் தீண்ட வேண்டும் போல் இருந்தது. அவளிடம் அடிபணிந்து போக ஆசை, அவள் குருவாகி இவன் சிஷ்சினாக அவளிடம் கொட்டு வாங்க ஆசை, ஒரேப் போர்வையில் இரு தூக்கம் தூங்க ஆசை , சில நேரம் ஒரே ஆடைக்குள் இருவரும் புகுந்துக் கொள்ளக் கூட ஆசை தான் இதெல்லாம் அவன் மணாளினியிடம் இருக்கிறதே.

நந்தனின் சந்தோசத்தைப் பார்த்தப் பிறகு நிலாவை விட்டுக் கொடுத்தது சரி தான் என்று தோன்றியது யுகிக்கு.

“கடவுளே இவன் சிரிக்கக் கூட மறந்து போற அளவுக்கு அழுத்தமா இருந்ததுக்கு நான் கூட ஒரு காரணம் தானே.குடும்பத்துல அத்தனை பேர் இருந்தும் தனியா இருக்கறது எவ்வளவு கொடுமைன்னு பெங்களூருல இருந்த நாலு நாளையே தெரிஞ்சிடுச்சி. இவன் வருசக்கணக்கா தனிமையில் இருந்துருக்கான், எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பான்.இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்குலா ஒரு தீர்வுன்னா அது பூனை மட்டும் தான்.அவக் கூட சந்தோசமா இருக்கனும். என  முதன் முதலாக அண்ணனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.

“என்னடா பண்ணிட்டு இருக்க.?” யுகி யோசனையில் இருப்பதைப் பார்த்து நந்தன் கேக்க 

“ஒன்னுமில்ல. வீட்டுக்குப் போவோமா?” என்றான்.

“இரு போலாம்” என்றவன் பால் வாங்க போயிருந்த நிலா திரும்பி வருவதைப் பார்த்ததும்.

“ம்ம் போலாம்” என்றான்.

அதைப் புரிந்துக் கொண்ட யுகிக்கு குற்றஉணர்வாக இருந்தது. அவன் நிலாவை நேசித்தது இருவருக்கும் தெரிந்து விட்டால் இதே நிம்மதியும் சந்தோசமும் அவர்களிடம் இருக்குமா? என்ற கவலை, காதல் செய்தது எதோ பெரும் குற்றம் என்பது போல் குற்றவுணர்வு குத்தகை எடுத்துக் கொண்டது போல் அவனை இம்சை செய்தது.



Leave a comment


Comments


Related Post