இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -109 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 16-08-2024

Total Views: 1755

"நீங்க அடிச்சதுக் கூட வலிக்கல. வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னது எவ்வளவு வலிச்சுது தெரியுமா?. என்னால உங்களைப் பார்க்காம இருக்க முடியல. நம்ப ஒன்னு சேர்ந்தே இருப்போமே ப்ளீஸ்" .

அவளை திரும்பி ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டான்.

"இன்னும் கோவம் போகலையோ என்ன பண்ணனுனா கோவம் போகும்ன்னு தெரியலையே" என எண்ணியவாறு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர. கார் மாரியம்மன் கோவிலில் நின்றது.

இந்த வாரம் கோவிலில் திருவிழாப் போடப்போகிறார்கள். கம்பம் நடுவதற்கான வேலைகளைக் கோவில் நிருவாகம் பார்த்துக்கொண்டிருக்க.

வண்டியை விட்டு இருவரும் இறங்க கோவில் தர்மகர்த்தா இவர்களைப் பார்த்ததும் அருகில் வந்தார்.

"வாங்க தம்பி. வாங்கம்மா. தம்பி எப்படி இருக்காரு.?"என நலம் விசாரித்தார்

நிலாவிற்கு அவரின் மரியாதை வியப்பூட்டுவதற்கு பதில் இகழ்ச்சியை தான் உருவாக்கியது.

அவளும் வளவனும் தனியாக வந்தால் இந்த மரியாதையோ,  ஏன்? வா என்ற வார்த்தையோக் கூட வராது. வந்தியா ஓரமா நின்னு சாமியைக் கும்பிட்டுப் போ' என்பது போல் தான் நடந்துக் கொள்வார்கள்.

இத்தனைக்கும் கோவில் ஊர் பொதுக்கோவில்,  அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் திருவிழாவில் ஒரு அங்கமாக இருப்பார்கள். அந்த அந்த பிரிவை சேர்ந்தவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு தான் கோவிலில் வேலைகள் நடக்கும். அப்படி இருந்தும் திருவிழா போட்டுவிட்டாலே  இந்த உயர்பிரிவை சேர்ந்தவர்களுக்கு என தனி கொம்பு முளைத்துவிடும் அவர்கள் இல்லாமல் திருவிழா நடக்காது என்பது செயலில் காட்டி மற்ற பிரிவினர்களை வெறுப்பேற்றுவார்கள்.

இன்று நந்தனுடன் அதும் அவர்கள் பிரிவைச் சேர்ந்த பணக்கார பதவிக் கொண்டப் பையனுடன் வந்ததால் நெல்லுக்கு இறைத்த நீர் சிறிது புல்லுக்கும் பாயிந்தது.

"ம்ம் நல்லா இருக்கான், நோம்பிக்கு போலீஸ் புரோடக்சன் வேணும்னு சொல்லிருந்திங்களே." என நந்தன் காரில் சாந்தவாறு கேட்டான்.

"ஆமா தம்பி."

"நோம்பிக்கு முந்துன நாள் அனுப்பி வைக்கிறேன். வேலையில எப்படி போய்ட்டு இருக்கு?" என அவருடன் பேசியவாறு நகர்ந்து விட..

நிலா கோவிலுக்குச் சென்று மனமுறுக வேண்டினாள். அவளது முதல் வேண்டுதல் யுகி விரைவில் குணமாக வேண்டும் என்பது தான். பிறகு கண் திறந்து நந்தனை ஒரு முறைப் பார்த்துவிட்டு என்ன வேண்டினாளோ கண்கள் ஈரம் கோர்த்திருக்க, ஐயர் கொடுத்த ஆராதனையை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.

அவன் கண் நிலாவை தான் பார்த்திருக்க, தர்மகர்த்தா இருக்கிறார் என்று கூட யோசிக்காமல் நந்தனின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டவள். அது கண்ணில் படாமல் இருக்க கைக் கொண்டு ஊதி விட்டாள்.

"என்ன பண்ற?" பற்களை கடித்துக் கொண்டு கேட்டான் 

"சரிங்க தம்பி பாருங்க நான் போன் பண்றேன். கொஞ்சம் வேலை இருக்கு நான் போய் பார்க்கறேன்" என அவர் இங்கிதம் கருதி கிளம்பி விட்டார்.

"ஆள் இருக்கும் போது இப்படி தான் பண்ணுவியா?".

"ஏன்? அவர் பொண்டாட்டி அவருக்கு வெச்சி விட்டுருக்க மாட்டாங்களா?யாரும் பண்ணாததை நான் பண்ண மாதிரி பேசறீங்க?. என் புருசனுக்கு திறுநீரு வைக்க நான் யாரையும் பார்க்கணும்ன்னு அவசியமில்ல". என்றாள்.

வெளியே அடுத்தவர்களுக்கு முன்பு பேசமாட்டான் என்ற நம்பிக்கையில் நிலா புகுந்து விளையாட.. உள்ளுக்குள் சுனாமி போல் சந்தோச ஊற்றுக் கொட்டினாலும்,வெளியே அதை துளிக் கூடக் காட்டாமல் இறுக்கமாக இருக்க, நந்தனிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

"அடுத்து ரெஸ்ட்ராண்டு போலாமா போலீஸ்கார்".

"அடிச்சி பல்லை கழட்டிடுவேன். ஒழுங்கா பேசிப் பழகு".

"எப்படி மச்சான்னா மாமான்னா எப்படி கூப்பிட்டா உங்களுக்கு புடிக்கும்ன்னு சொல்லுங்க அப்படியே கூப்பிட்டுடறேன்."

"குளிர் விட்டுப் போச்சிடி அந்த திமிருல தான ஆடுற".

"இருக்கலாம் நந்தன் பொண்டாட்டி பயந்து நடுங்குனா எப்படி?, உங்கள்ல பாதி தைரியமாவது எனக்கு இருக்க வேண்டாம்" என அவன் அருகில் அமர.. இந்த மாதிரி பொன்னான காலத்திற்கு தானே ஏங்கி தவித்தான், அது இப்போது கிடைக்கவும் அவ்வளவு ஆனந்தம்.

விட்டால் இப்போதே அனைத்து விளையாட்டையும் முடித்துக் கொள்வான்,ஆனால் கூடல் தரும் போதையை விட காதல் தரும் போதை அலாதியானது.

இன்னும் இன்னும் வேணும் என மனம் ஏங்கி தவித்தது இருபது வருடம் கிடைக்காத அன்பை இனி வாழ்நாள் முழுவதும் பெற ஆசைக் கொண்டதுவோ.

கார் நிலா கேட்டது போல் உயர்தர உணவகத்தில் நிற்க.

அதைப் பார்த்ததும் சந்தோசமாக அவனைப் பார்த்தவள். "நீங்க யூனிபார்ம்ல இருக்கீங்களே பரவாலையா?"என்றாள் துள்ளளாக.

அவன் எதும் பேசாமல் இறங்க.

காயமாவது ஒன்னாவது ஓடிச் சென்று அவனது கையைப் பிடித்துக் கொண்டாள் நிலா.

அவனும் விலக்கவில்லை அவளும் விலகவில்லை.

அங்கிருந்த பெண்களில் கண்கள் பொறாமையில் நிலாவைச் சீண்டியது, அதில் ஒரு ஜோடி கண் ஆராய்ச்சியாக இருவரையும் பார்த்துவிட்டு அலைபேசி எடுத்து யாருக்கோ அழைத்தது.

"சரஸ்"

"ம்ம் சொல்லு அமலா"

"அந்த நிலா நந்தன் சார் கூட ரெஸ்ட்ராண்ட் வந்துருக்கா."

"இவளை.. " என அந்தப் பக்கம் பல்லைக் கடித்த சரஸ்வதி.

"அவரோட தம்பி பிரச்சனையில இவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு கேள்விப் பட்டுதான், சரி கொஞ்ச நாள் போகட்டும் நம்ப வந்து ஒட்டிக்கலாம்ன்னு பார்த்தா.. இவங்க என்னைய சும்மா இருக்க விடமாட்டாங்க போல".

"நீ கவனிக்க சொன்னேன்னு தான் கவனிச்சி சொல்றேன் . இதுக்குமேல நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ. இவ்வளவு நாள் வெளியே வராம இருந்தாங்க இப்போ ஜோடியா வெளிய வர ஆரம்பிச்சிட்டாங்க.இதுக்கு மேல நீ ரிஸ்க் எடுத்து சாரை உன்பக்கம் கொண்டு வரதுலா சாதாரணமில்ல பார்த்துக்கோ ." 

"ம்ம் புரியுது, நாளைக்கே உஷாவை உள்ளே இறக்கிடறேன் விடு".

"அவ உனக்கு எதிரா ஏதாவது பண்ணிட்டா"

"பண்ண மாட்டா, அவ புடி என் கையில இருக்கு, நான் பார்த்துக்கறேன்" என அழைப்பைத் துண்டிக்க சரஸ்வதியால் அமலா என அழைக்கப்பட்டப் பெண் நந்தனையும் நிலாவையும் குரோதமாகப் பார்த்தாள்.

நந்தன் ஒரு மேஜைப் பார்த்து அமர்ந்து விட,அவனை ஒட்டி அமர ஆசைப்பட்டு அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

"அங்கப் போய் உக்காரு".

"இங்கயே உக்கார்ந்துக்கறேனே போலீஸ்கார்"

"டென்ஷன் பண்ணாத, ஒழுங்கா கூப்புட்டு பழகு" என பல்லைக் கடித்துக் கொண்டுச் சொல்ல,
எதற்கு வம்பு? என எழுந்து எதிரே சென்று அமர்ந்துக் கொண்டாள்.

காதல் கள்வனுக்கும் அருகில் அமர்ந்து சாப்பிடுவதை விட, எதிரே அவள் முகம் பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும் அப்போது தான் மனம் திருப்தி அடையும்

என்ன வேண்டும் என்றெல்லாம் கேக்கவில்லை.அவன் பாட்டுக்கு வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல் அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க.

"விஜய் எனக்கு ஒரு கொத்து."

'இதை தவிர வேற என்ன திங்கப் போறா?' என நினைத்தவன் அவனுக்கும் அதையே சொன்னான்.

"வேற ஏதாவது வெரைட்டியா ட்ரை பண்ணலாம்ன்னு பார்த்தா இங்க இருக்கற பாதி டிஸ்  பேர் கூடத் தெரியவே மாட்டிங்குது" என புலம்பிக் கொண்டிருந்தவளை, இப்போதே துடிக்க துடிக்க இதழ் அணைக்க வேண்டும் போல் இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

என்ன தான் நந்தன் காதல் மயக்கத்தில் இருந்தாலும், அவன் கண்கள் நாலாப் புறமும் பார்த்தது. யார் இருக்கிறார்கள் என்று.

அவன் நிலா, பாதுகாப்பாக இருக்க வேண்டுமே.

"விஜய்"

------

"விஜய் பேசுங்க ப்ளீஸ்".

"ம்"

"என்னைய மன்னிச்சி ஏத்துக்கணும்னா,  நான் என்ன பண்ணா ஏத்துப்பிங்க..?

"வாய்ப்பில்லை"

"கண்டிப்பா ஏதாவது சொல்லியூசன் இருக்கும்ல. யோசிச்சி சொல்லுங்க விஜய் ப்ளீஸ்" என கெஞ்சலாக அவனைப் பார்த்தாள்.

"அப்படிங்கற?"

"ம்ம்"

"யோசிச்சுட்டு சொல்றேன்" என்றவனின் கம்பீரம் எந்த இடத்திலும் குறையவே இல்லை. அவனின் மிடுக்கை சிறிதும் குறைக்காமல் காதல் கண்ணில் காட்டிவிடாமல். திமிராக அமர்ந்திருந்துக் கொண்டே காதல்  ரசத்தைப் பருகிக் கொண்டிருந்தான்.

அவனின் கம்பீரத்தை ரசித்த நிலா,. இவன் தன்னவன்,  தனக்கு மட்டுமே உரிமையவன் என நினைக்கும் போது ஒவ்வொரு நரம்பிலும் தேன் பாயிந்தது போல் இருந்தது.

சாப்பாடு வந்ததும் இருவரும் சாப்பிட்டு முடிக்க. "எவ்வளவு அண்ணா ஆச்சி?" என்றாள் உணவு வழங்கியவரிடம்.

அவன் நந்தனைப் பார்க்க.

"நீங்க போங்க நான் பேசிக்கறேன்"என அவரை அனுப்பி வைத்தவன் "என்ன?" என்றான்.

"பணம் குடுக்கணும்ல"

"நான் குடுத்துப்பேன்".

"பொண்டாட்டிக்கு குடுக்கலாம் உங்களுக்கு நான்தான் பொண்டாட்டி இல்லைன்னு சொன்னிங்கள்ள"

"கடுப்பை கிளப்பாம மூடிட்டு போய் கார்ல உக்காரு."

"ம்ம்" என முகத்தை சுருக்கி காட்டியவள் .

"டேய் விஜய் அப்படியே போற வழியில மல்லிப்பூவும் வாங்கிக் குடுடா" என்றாள் அனைவருக்கும் கேக்கும் குரலில்.

அவளை திரும்பி முறைத்தவன் 'மானத்தை வாங்குறாளே இவளை' என அவளை நோக்கி வர, அதற்குள் ஒருவர் குறுக்கே வந்து பேச ஆரம்பிக்கவும்,  நிலா தப்பித்து அங்கிருந்து காருக்கு ஓடிவிட்டாள்.

நிலா செய்யும் சேட்டைகள் அனைத்தும் நந்தனை வானில் மிதக்க செய்கிறது, அவளுக்கு பிறகு தான் அனைத்தும் என்றானப் பிறகு அவனின் பதவி மட்டும் முன்னாள் வந்தா நிற்கும்?.

பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் காரில் ஏறி அமர..

"பூ வாங்கல.?"

"உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.?"

"உங்களை தான்."

இந்த பதிலுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தான். இன்று கிடைத்து விட்டது, இனி என்றும் கிடைக்க வேண்டும்,அப்போது தான் அவன் மனம் சமாதானம் ஆகும்.

"ஓ நீ அப்படி வர". என்றவனின் குரலில் நிலாவிற்குள் குளிர் பரவியது.

"ம்ம்"

"உன்னோட வழியிலையே வரேன்.என்னைய லவ் பண்ற?"

"ம்ம்"

"எந்த அளவுக்கு?"

"எந்த அளவுக்குன்னா?"

"உன் அண்ணனையும்,  அந்த நாயையும் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு லவ் பண்ற?".

"இவனுக்கு அவங்க ரெண்டுப் பேரு தான் டார்க்கெட் போல".

"என்ன கேட்டதுக்கு பதில் வரல?".

"அவங்க வேற நீங்க வேற?".

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே"

"அவங்களை வேண்டாம்னு சொல்லி தானே உங்களைய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

"அது அப்போ நான் மிரட்டுனதால, இப்போவும் அவங்கள வேண்டாம்னு சொல்ற அளவுக்கு என் மேல் லவ் இருக்கா?"

அது நிலாவிற்கே தெரியவில்லை. காதலுக்காக அவர்களை இழக்கவும் விரும்பவில்லை,காதலையும் இழக்க விரும்பவில்லை.பாவமாக அவனைப் பார்க்க.

"இதைக் கூட உன்னால சொல்ல முடியல, நீ என்னைய லவ் பண்ற?".

"அது எனக்கு மூனுப்பேருமே வேணும்."

"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைங்கற மாதிரி,உனக்கு நானும் வேணும், அவங்களும் வேணும்ன்னு நினைக்கற"

"அதுல தப்பில்லையே"

"எனக்கு பத்தோடா பதின்னொன்னா இருக்க விரும்பமில்ல. இந்த நந்தன் என்னைக்கும்  உன்கிட்ட மட்டும் பர்ஸ்ட்டா  தான் இருக்கனும்."

"ஹா" என்றவள் முழிக்க.

அவள் முழியில் மயங்கியவன். அணைக்க கையை எடுத்துவிட்டு, அதை அப்படியே தலையைக் கோதி சமன் போல் செய்துக் கொண்டவன்.

"ஓகே இன்னைக்கு பேசிடலாம். நான் உன்னைய லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் லவ் சொன்னாலும், கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாலும், நீ ஒத்துக்க மாட்ட அதனால தான் மிரட்டி கல்யாணம் பண்ணிக்கலாம் போக போக சரியாகிடுவான்னு நினைச்சேன். நீயும் ஓகேவா தான் தெரிஞ்ச,

பட் இப்போ எனக்கு அது மட்டும் போதாது. லவ் வேணும், நான் மட்டும் போதுங்கற அளவுக்கு லவ் வேணும்,என்னைய தாண்டி நீ யாரையும் யோசிக்கக் கூட கூடாது, உன்னோட மூளையில முழு பங்கும் இந்த நந்தன் மட்டும் தான் இருக்கனும், இதுநாள் வரையிலும் உன்னால நான் இழந்த அத்தனையும் திரும்ப உன்னால தான் கிடைக்கணும்.உன்கிட்ட தான் கிடைக்கணும், அப்படி ஒரு லவ் தரேன்னு சொல்லு, உன்னைய ஏத்துக்க கன்சிடர் பண்றேன். இல்லனா போயிட்டே இரு, அந்த சரஸ்வதி, உஷாலாம் இதை தர ரெடியா இருக்காங்க. எந்தப் பொருள் எங்க விலை கம்மியா நல்லா குவாலிட்டியா கிடைக்குமோ, அங்க தானே வாங்குவோம் அதையும் கொடுக்க அவங்க ரெடியா இருக்கும் போது, உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறேன் யோசிச்சிக்கோ" என்றான் அவளை கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே

"நான் கொடுக்கலைன்னா உடனே அங்க போயிடுவீங்களா?"என அழுகை இப்போவோ அப்போவே வந்துவிடும் என்பது போல் கேக்க.

"அதான் சொல்லிட்டேனே எனக்கு தேவை இதுதான், அது எங்க கிடைக்குமோ அங்க போக வேண்டியது தான்". என்றவன் வண்டியை உயிர்பித்து மெதுவாக செலுத்த நிலா நகத்தை கடித்தாள்..

அவள் கையில்லையே ஒரு அடிப் போட்டவன் நக்கை மடக்கி மிரட்ட.

"ரொம்ப தான் போலீஸ் மாதிரி நடந்துக்கறது."

"போலீஸ் போலீஸ் மாதிரி தாண்டி நடந்துப்பான்".

"நம்ப ஒன்னா இருந்ததுல பேபி வந்துடுச்சினா?"

"அதுதான் வரலையே, அது ஒரு ஆக்சிடண்ட்ன்னு நினைச்சி மறந்துடு.."

"என்னது மறக்கணுமா?"

"நான் கேட்டது, கொடுக்கலைன்னா அது தான் செய்யணும்" என்றவன் பூக் கடையில் வண்டியை நிறுத்தினான்.

அவன் காரைப் பார்த்ததும் பூக் காரம்மா எட்டிப் பார்த்து "எத்தனை முழம்?" என்க

"நாலு குடுங்க"  என்றான்

"நாலு முழம் வைக்க தலையில இடம் இருக்குமா?.

"ஏன்? நீ மட்டும் தான் பொண்ணா?".

"வேற யாருக்கு வாங்குனீங்க?"

"உஷாவுக்கு".என மெலிதாக அவன் புன்னகைக்க.நிலாவின் வயிறு எரிந்தது.

"ஒரு முழம் கையிலக் குடுத்துடுங்க மீதியைக் கவர்ல போட்டுடுங்க" என்றவன் பணத்தை அவரிடம் நீட்டினான்.

"தாலிக் கட்டுன பொண்டாட்டிக்கு ஒரு முழம், கண்டவளுக்கு மூனு முழமா?"

அவள் கேள்வியில் நந்தனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"வேணும்னா மொத்தத்தையும் வெச்சிக்கோ", என்று நிறுத்தியவன்,

'ஏதோ சொல்லப் போகிறான்' என நிலா உணரும் போதே.

"நான் கேட்டதைக் கொடுத்துட்டு வெச்சிக்கோ".

"ஹா அதெப்படி முடியும்?"

"அப்போ அவளுக்கும் ரூட் விட்டா தான நான் கேட்டது கிடைக்கும்".

"அப்படிலாம் சொல்லாதீங்க விஜய்".

"உன்னால நான் கேட்டதை தர முடியாது தானே" என்றவனுக்கு அவளால், தான் தான் வேண்டும் என வாய் வார்த்தைக்குச் கூடச் சொல்ல முடியவில்லையே, தாலி கட்டிய பின்னும் இந்த தயக்கம் இருக்கிறது என்றால், அவனுடன் ஒரு நாள் என்றாலும் உயிரும் உடலுமாக வாழ்ந்த வாழ்க்கை கானல் நீராக தானே போனது"  என்ற வலி அவன் நாடி நரம்பில் பரவி சதையை பிய்த்து எறிந்தது.

"நீங்க அவங்கக் கூட முன்ன மாதிரி இல்லைல?. நல்லா தானே பேசறீங்க?,அப்புறம் ஏன் இப்படி கேக்கறீங்க?" என்றவளை உறுத்து விழித்தவன்.

"நான் சொன்னது செய்யறீயா?மாட்டியா?அதுக்கு மட்டும் பதில் சொல்லு".

அவன் சொன்னதும் நிலா அமைதியாகிவிட்டாள்.

காதல் வேறு, தாய்மை வேறு, அதை பிரித்து அறியும் அளவிற்கு நிலாவிற்கு அறிவு இருக்கிறது,காதலுக்காக அவர்களை விலக்கி வைக்கச் சொன்னால் எப்படி? பிறந்ததில் இருந்து உள்ளங்கையில் தாங்கும் அவர்களை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்க  முடியாது அல்லவா நிலா மட்டும் எப்படி விட்டுக் கொடுப்பாள்..

"எனக்கு நீங்களும் முக்கியம் அவங்களும் முக்கியம், லவ்ன்னா அது நீங்க தான், நான் இல்லனா இன்னொரு பொண்ணுனு நீங்க போற மாதிரி, என்னால அப்படி போக முடியாது.நீங்க இல்லைனாலும் உங்க நினைப்புல இருப்பேனே தவிர,  வேற ஒருத்தனை தேடிப் போக மாட்டேன். அதுக்காக யுகியையும் அண்ணாவையும்  எப்போவும் விடவும் மாட்டேன்".என்றாள் அழுத்தமாக.

"இது தான் உன்னோட முடிவா.?"

"ம்ம்"

"அப்போ என்னோட முடிவும் அதுதான்" . என்றவன் காரை வேகமாக ஓட்ட,

"இப்போ எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க.?"

"உஷாவைப் பார்க்க போகணும்.." என்றான்.

அவன் சொன்னதில் சுருக்கென்று ஊசிக் குத்தியது போல் வலித்தது.

கார் நேராக அவள் வீட்டின் முன் நிற்க,அதில் இருந்து இறங்கிக் கொண்டவள். "ப்ளீஸ் அங்கப் போகாதீங்க எனக்கு வலிக்குது" என்றாள் நெஞ்சை தொட்டு.

"ஹேய் போய்டு ஏதாவது சொல்லிடப் போறேன்".

"அவங்களை தவிர எது சொன்னாலும் கேக்கறேன்.ப்ளீஸ்ங்க" என அவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

அவளிடம் இருந்து கையை உருவிக்கொண்டவன், "உன்னால முடியாது"  என்றான்.

"இல்லை அவங்களை தவிர நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்."

"எது சொன்னாலும் கேக்கற"

"ம்ம்"

"கண்டிப்பா?"

"ம்ம்"

"சரி என்னோட லிவின் ரிலேஷன்ல இருக்கியா?"

தாலிக் கட்டியவளை லிவின்ல இருக்க சொல்பவனை புரியாமல் அவள் பார்க்க.

"உஷா வீட்டுக்குப் போகக் கூடாதுங்கறதுக்கு தான் இது, மத்தபடி நான் கேட்டது கொடுக்கலைன்னா கண்டிப்பா டிவோர்ஸ் தான்".

இப்போதைக்கு அவன் உஷாவை திரும்பிப் பார்க்கக் கூடாது. அதற்கு அவன் என்ன சொன்னாலும் கேக்கும் மனநிலையில் தான் இருக்கிறாள் நிலா..

"என்ன பதிலே வரல" என்றவனுக்கு அவள் காதலும் வேண்டும் அவளுடன் கூடலும் வேண்டும், கூடல் நடந்து விட்டால் அவள் காதலைக் காட்ட மாட்டாளோ என்றுத் தோன்ற, கூடலுக்கான வழியை வகுத்துவிட்டான்.

"ம்ம் இருக்கலாம்".

"இது உஷா வீட்டுக்கு போகக் கூடாதுங்கறதுக்காக மட்டும் தான், நியாபகம் வெச்சிக்கோ",என்றவன் காரை விட்டு இறங்கி அவளைத் தூக்கப் போக,

"நானே நடந்துக்கறேன்" என்றாள் முறைப்பாக.

அவள் சொன்னதைக் காதிலையே வாங்கவில்லை அவன். தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மேலே இறக்கி விட்டவன்.நாலு படி கீழே இறங்கி அவர்களையேப் பார்த்துக்கொண்டிருந்த ராஜியிடம்.

"இன்னைக்கு நைட் இங்க தான் இருப்பேன்"

"இருங்க தம்பி".

"ம்ம்". என்றவன் மேலே ஏறிவிட்டான்.யாரிடமும் இறங்கிப் போய் பேசுவதில்லை, ஒரு அனுசரணை என்பது அவன் வாழ்க்கையில்லையே கிடையாது.

"என்னோட டிரஸ் ஏதாவது இருக்கா?"

"இல்ல"

"அப்போ டவல் குடு".

"அது மட்டும் போதுமா?" என்பது போல் அவள் எச்சில் முழுங்க.

"என்னடி?"

"ஒன்னுமில்ல இந்தாங்க டவல்".

அதை வாங்கி உடை மாற்றிக் கொண்டு இடையில் துண்டை மட்டும் கட்ட.

"என்ன இங்க இது?" என :நிலா பதறியவாறு திரும்பி நின்றுக் கொள்ள.

அவளை திருப்பியவன்,"நீ பார்க்காத எதும் என்கிட்டயும் இல்ல, நான் பார்க்காத எதுவும் உங்கிட்டையும் இல்ல.அப்புறம் எதுக்கு இந்த பில்டப்?"

"இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு நீளமா பேசுறானே" என்று பார்த்தவளை, தூக்கிப் படுக்கையில் போட நிலாவிற்கு அன்றைய நினைவில் முகம் பூவாக மலர்ந்து விட்டது.


Leave a comment


Comments 2

  • K Kanimozhi K
  • 1 year ago

    Nejamavey enaku nila mela oru %kooda paavama ila really irritating ah iruku not even a small amount of dignity she has..... And as for the hero... At what point she is impressed and want to keep him even after saying he wants to go after other women......at every episode I see that the heroine is deteriorating her image.. just by pondering over hero... who is just a arrogant... And selfish... Really this is not love its a kind of sick relationship..... and nauseating

  • K Kanimozhi K
  • 1 year ago

    Nejamavey enaku nila mela oru %kooda paavama ila really irritating ah iruku not even a small amount of dignity she has..... And as for the hero... At what point she is impressed and want to keep him even after saying he wants to go after other women......at every episode I see that the heroine is deteriorating her image.. just by pondering over hero... who is just a arrogant... And selfish... Really this is not love its a kind of sick relationship..... and nauseating


    Related Post